Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: VISHNU 23 FEB, 2025 | 09:06 PM யாழ்.மாவட்ட செயலரின் மகன் செலுத்திச் சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. விபத்தில் வாகனத்தை செலுத்திச் சென்ற மாவட்ட செயலரின் மகன் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த அவரின் நண்பர் கடும் காயங்களுக்கு உள்ளானதுடன் , அவரது கால்கள் வாகனத்தினுள் சி…

  2. Published By: DIGITAL DESK 3 23 FEB, 2025 | 03:53 PM எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தூய்மையான இலங்கை என்பதன் இலக்கை அப்போதே முழுமையாக அடையமுடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் ஓர் அங்கமான, 'அழகான கடற்கரையின் பங்குதாரரர்களாவோம்' என்னும் தொனிப்பொருளில் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கௌதாரிமுனை கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (23) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் தனது தலைமை உரையில், மாவட்டத்தில் 11 இ…

  3. Published By: DIGITAL DESK 7 23 FEB, 2025 | 04:09 PM (துரைநாயகம் சஞ்சீவன்) புல்மோட்டை – சாத்தனமடு பகுதியில் பௌத்த பிக்குவால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். புல்மோட்டை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட புல்மோட்டை சாத்தனமடு குளப்பகுதியின்கீழ் விவசாயத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகளின் காணியில் பௌத்த மதகுரு ஒருவர் புத்தர் சிலையை வைத்து அதனைச் சுற்றியுள்ள விவசாய காணிகளில் பல வருட காலமாக விவசாயம் மேற்கொண்டுவந்த விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு தடைவிதித்து வருவதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அதனை சுற்றியுள்ள 10 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும…

  4. Published By: RAJEEBAN 23 FEB, 2025 | 01:09 PM இவற்றை பயன்படுத்தி அரசியல் கொலைகளும் படிப்படியாக இடம்பெறலாம் யாருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற முடிவை பொலிஸார் எடுப்பதாகயிருந்தால் நாளை நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலைதான் உருவாகும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கொழும்பில் இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பான சில விடயங்களை நாங்கள் பேசவேண்டியுள்ளது. இந்த நாட்டில் முன்னரும் பொலிஸார் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் அல்லது உண்மையாக குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட நபர்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு சென்று கொலை செய்யக்கூடிய சில செயற்பாடுகளை…

  5. Published By: DIGITAL DESK 3 23 FEB, 2025 | 12:21 PM மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது, 18 வயதுடைய மாணவி ஒருவர் நிறைமாத கர்ப்பிணி என்பதை மறைத்து வயிற்று வலி என தெரிவித்து சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் மட்டு. போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியர் சரியான முறையில் சோதனையிடாத நிலையில் மாணவிக்கு ஊசி மூலமாக வயிற்று வலிக்கான வலிநிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் மாணவி மலசல கூடத்திற்கு சென்று குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசியுள்ளார். குழந்தை யன்னலி…

  6. விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் கல்வியில் சிறப்பு கவனம்! கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுடன் தொடர்புடைய குழுவினருடனான சந்திப்பொன்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளை கவனத்திற்கொண்டு விசேசட தேவைகள் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மொழிவை அவர்கள் முன்வைத்தனர். விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை வலுப்படுத்துதல், விசேட…

  7. ஒரு சிறுவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுகிறதா? இலங்கை முழுவதிலும் 379 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்குவதாகவும், இவற்றில் 47 நிலையங்கள் அரசாங்கத்திற்குரியது என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். ஏனைய அனைத்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் அரசுசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் அனுசரணையுடன் பராமரிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நாடு முழுவதிலும் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் திறன்களை மேம்படுத்தவும் அவற்றின் பௌதீக வள, மனிதவள மேம்பாட்டிற்கும் இந்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மகளிர் மற…

  8. சட்டவிரோத மீன்பிடி; தமிழக மீனவர்கள் 32 பேர் கைது! நாட்டின் கடற் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி பணிகளில் ஈடுபட்ட குற்றத்துக்காக 32 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்காக இந்திய மீனவர்கள் பயன்படுத்தி 05 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான மீனவர்கள் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னாருக்கு வடக்கே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட படகுகளு…

  9. மன்னார் மறை மாவட்டத்தின் 4வது ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் adminFebruary 22, 2025 மன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் இன்றைய தினம் சனிக்கிழமை (22) ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பேரருட்திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மடு திருத்தலத்தில் வைத்து ஆயராக அருட்பொழிவு செய்யும் நிகழ்வு நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அபிஷேக நிகழ்வு மற்றும் திருப்பலி இடம் பெற்றது. குற…

  10. இன்று ஜெனிவாவுக்கு செல்லும் விஜித தலைமையிலான குழு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (23) அன்று ஜெனிவாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் நாளை 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ள நிலையிலேயே குறித்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது, இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் குறித்து விசேட அறிக்கையை இலங்கை தரப்பு சமர்பிக்க உள்ளதுடன், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான நீண்ட தெளிவுப்படுத்தலை முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பங்கேற்பதற்காக ஜென…

  11. ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் மூவர் கைது யாழ்ப்பாணத்தில் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (22) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் ரயில்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. கல்வீச்சு தாக்குதலில் ரயில்களின் கண்ணாடிகள் சேதமடைந்தும், பயணி ஒருவர் காயமடைந்தும் இருந்தார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ரயில் நிலைய அதிபரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ரயில் பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளி ஒன்றில்…

  12. தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும் என்றும், அதனை அடக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cm7hao8q2001adpm4f49zbf8a

  13. எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி! தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் சுகயீனம் காரணமாக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். கொழும்புக்கு பயணித்த வேளையில், சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில், அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.co…

  14. Published By: DIGITAL DESK 2 22 FEB, 2025 | 05:17 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக சமத்துவத்தை அடிப்படையாக்கொண்ட சமூகத்தை எம்மால் உருவாக்க முடியாமல் போயுள்ளது. இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகியுள்ளது. இந்த முறைமையை முடிவுக்கு கொண்டு வர தற்போது எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டை ஜனநாயக ரீதியாக முன்னோக்கி நகர்த்த வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐடிசி ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை புத்தாக்க மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், கடந்த காலங்களை சிந்தித்தே நாம் எதிர்காலம் பற்றி நாம் சிந…

  15. 22 FEB, 2025 | 05:57 PM (அட்டன் கிளை) அட்டன் கப்ரியல் மகளிர் கல்லூரியின் தமிழ்ப் பிரிவுக்கு தமது பிள்ளைகளை தரம் 6 இற்கு உள்வாங்குவதில் கல்லூரி நிர்வாகம் அசமந்தமாக செயற்படுவதாக பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் வலயக்கல்வி பணிமனையின் உத்தரவுகளையும் மேற்படி கல்லூரி நிர்வாகம் அசட்டை செய்வதாகவும் காரணமின்றி தமது பிள்ளைகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். தரம் 6 இற்கு தமது பிள்ளைகளை சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் பிள்ளைகளை நேர்காணலுக்கு அழைக்காமல் எந்த காரணங்களும் கூறப்படாமல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு பெற்றோருக்கு அனுப்பப்பட்டுள்ளன. கல்லூரி அதிபரின் கையொப்பம் இல்லாது இலட்சிணை மாத்திரம் …

  16. 22 FEB, 2025 | 04:11 PM (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு, ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த 5 பேர் கொண்ட குழு ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை (20) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கோவில் ஒன்றில் காயமடைந்தவர்களுக்கும் வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்திய குழுவிற்கும் இடையே இடம்பெற்ற தகராற்றினையடுத்து பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்ப…

  17. தமிழகத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது சிவகங்கை கப்பல் ! Published By: DIGITAL DESK 7 22 FEB, 2025 | 02:16 PM நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இன்று சனிக்கிழமை (22) காலை இலங்கை காங்கேசன்துறையை , சிவகங்கை கப்பல் வந்தடைந்தது. இவ்வாறு தமிழகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலானது இன்று மதியம் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்தியா - இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை …

  18. Published By: DIGITAL DESK 7 22 FEB, 2025 | 03:44 PM யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தியை சேர்ந்த 30 வயதுடையவரே விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்று தகன கிரியைக்காக பூதவுடலை கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்து சென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த விபத…

  19. சிவராத்திரி தினம் வெடுக்குநாறிமலையில் மாலை 6 மணி வரை சிறப்பாக இடம்பெறும். நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசாரியார் மதிமுகராசா மற்றும் முக்கியஸ்தரான பூபாலசிங்கம் ஆகியோர் நெடுங்கேணி பொலிசாரால் அழைக்கப்பட்டு விபரங்கள் பெறப்பட்டுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் நெடுங்கேணி பொலிசாரால் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கோள்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்ப்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்ய முற்பட்ட 8 பேர் நெடுங்கேணி பொலிசாரால் அடாவடியான முறையில் கைதுச…

  20. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தொழிற்படுகின்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து பெறப்படுகின்ற உதவியுடன் அந்த அமைப்பை மீள் உருவாக்குவதற்கான எத்தனிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாத…

  21. மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு! கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை அண்மையிலுள்ளும் இங்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2025/1422517

  22. 22 FEB, 2025 | 10:48 AM கூட்டுப்பேச்சுவார்த்தை குறித்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/207346

  23. 22 FEB, 2025 | 11:14 AM நாட்டில் 57 பாதாள உலகக் கும்பல்கள் செயற்படுவதாகவும் அவற்றுக்கு சுமார் 1,400 பேர் உதவியாளர்களாக செயற்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டு 75 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 18 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். இதேவேளை, பயங்கரவாத தடைச்சட…

  24. 21 FEB, 2025 | 07:25 PM சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவரால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, படையினரை பொறுத்தவரையில் தமிழர் பிரதேசத்தில் நாட்டின் சட்டங்கள் அவர்களின் இரும்பு சப்பாத்தின் கீழ் என்பதற்கு இன்னொரு அடையாளமே அவர்களால் தையிட்டியில் தனியார் காணியில் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரையாகும். இந்த அநீதிக்கு எதிராக ஜனநாயக உரிமையோடு போராடுவோர்க்கு எதிராக பொலிஸாரும் செயற்பட்டு போராட்டம் த…

  25. Published By: DIGITAL DESK 2 21 FEB, 2025 | 07:34 PM (செ.சுபதர்ஷனி) யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நிலவிவரும் வைத்திய சேவை ஊழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சால் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் காணப்படும் மனிதவள தேவைகளை இனங்கண்டு, அவற்றிற்கு உரிய தீர்வுகளை பெற்று தரும் நோக்குடன் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது ஊர்காவற்றுறை பொது மருத்துவமனை, வேலணை மாவட்ட மருத்துவமனை, வேலணை சுகாதார மருத்துவ அத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.