Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கண்டி அசம்பாவிதம் : இதுவரை 146 பேர் கைது கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் இதுவரை 146 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 4 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின் போதே குறித்த 146 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/31459

  2. இன்றைய கண்டி நிலைவரம் ; திகனயில் மைதானத்தில் இடம்பெற்ற ஜும் ஆ தொழுகை கண்டியில் இயல்பு நிலைமையேற்பட்ட போதும் அச்சமான சூழ்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைகள் இடம்பெற்றன. திகனயில் பாடசாலை மைதானத்தில் பெரும்பான்மையினரின் உதவியுடன் இன்றைய ஜும் ஆ தொழுகைகள் இடம்பெற்றுள்ளன. வழமையாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குவரும் முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட குறைந்தளவானோரே இன்று தொழுகைக்கு வருகைதந்திருந்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் பெண்களை தனியே வீடுகளில் விட்டுச் செல்லமுடியாத காரணத்தாலும் சிலர் நிர்க்கதியான நிலையில் வெவ்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாலும் அச்சம் காரணமாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் ப…

  3. கிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு!!! நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 ஆவது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதியுமே இவ் பாதுகாப்பு இன்று காலைமுதல் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியின் கரைச்ச…

  4. அரசியல் கைதி கோமகன் கைது !! ?????????????????????????????????????????????????????????? அரசியல் கைதி கோமகன் கைது !! இந்தியா செல்ல முயன்ற போது கட்டுநாயக்காவில் வைத்து கைது தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகன் இன்று கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு பயணம் செய்வதற்காக வானூர்தி நிலையத்துக்குச் சென்ற போது, அவருக்கு பயணத் தடை…

  5. யாழ்- கொக்குவில் சந்தியில் கடைமீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்! யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் சற்று முன் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இன்று (09-03-2018) மதியம் (சற்று முன்) அப்பகுதிக்கு வந்த இளைஞர் குழு அந்த விற்பனை நிலையத்தில் நின்ற இளைஞர்களை தாக்கி விட்டு அங்குள்ள பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதன்போது விற்பனை நிலையத்துக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்களையும் அடித்து நொருக்கிவிட்டு சென்றுள்ளனர். இதில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த தாக்குதல…

  6. கண்டியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்.! கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல பகுதிகளுக்கும் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணிமுதல் அமுலில் இருக்கும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று மாலை அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மிகவும் பொறுப்புடன் கையாளுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இட…

  7. கோபப்படுத்த வேண்டாம்! அடிக்க நினைத்தால் மீள முடியாத அளவுக்கு அடிப்போம்: ஞானசாரர் எச்சரிக்கை தமிழரும் தமிழரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அது பெரிதாகாது. சிங்களவரும் சிங்களவரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அதுவும் பெரிதாகாது. ஆனால் ஒரு சிங்களவரும் தமிழரும் மோதிக்கொண்டு, அதனால் ஒரு மரணம் ஏற்பட்டால் அதை ஏன் இனவாதமாக்கி, இனக்கலவரத்தை ஏற்படுத்துகின்றீர்கள் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், ஒருவர் செய்யும் தவறுகளால் அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். …

    • 5 replies
    • 864 views
  8. கண்டியில் முப்படைகளும் குவிப்பு – திரும்பிய திசையெங்கும் கவசவாகனங்கள் கண்டி மாவட்டத்தில் முப்படைகளையும் சேர்ந்த 3000இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். “சிறிலங்கா இராணுவத்தினர் 2500 பேரும், கடற்படையினர் 600 பேரும், விமானப்படையினர் 30 பேரும், பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு உதவத் தயார் நிலையில் மேலும் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். படையினர் பாதுகாப்புக்கு நிறுது்தப்பட்ட பின்னர் வன்முறைகள் தணிந்துள்ளன. சட்டத்தை மீறுகின்ற எவர் மீதும் நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம். …

    • 3 replies
    • 541 views
  9. அரசு செய்ய வேண்டியதையே நான் செய்தேன் நாட்டில் தற்போது இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நான் செய்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். இன்று (09) காலை கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, சர்வ மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். முஸ்லிம் மக்கள் தன்னிடம் வேண்டிக்கொண்டதால் தான் இந்த கலந்துரையாடலுக்கு வந்ததாகவும் ஒரு மத்தியஸ்தராகவே இங்கு செயல்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் பொறுமையாக இருப்பதை போல் முஸ்லிம் மக்களும் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவ…

    • 1 reply
    • 422 views
  10. கலவரங்களைத் தூண்டி விட்ட மகாசோஹோன் பலகாயவின் தலைவர் உள்ளிட்ட 10 பேர் கைது கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மகாசோஹோன் பலகாயவின் தலைவர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களும் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக வலைத்தளங்களின் ஊடாகவே, தூண்டி விடப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து, அதில் சூத்திரதாரிகளாகச் செயற்பட்ட 10 பேரை சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்தனர். அமித் ஜீவன் வீரசிங்க என்ற பிரதான சந்தேக நபரும், ஏனைய ஒன்பது பேரும், நேற்று திகண, பூஜாபிட்டிய ஆகிய இடங்களில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். …

    • 4 replies
    • 498 views
  11. கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு (படங்கள்) யாழ்ப்பாணம் முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து என கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இது தொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது, முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அந்தப் பகுதிகளில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன. அங்கு அள்ளப்படும் மணலை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு வந்து, அதற்குள் இருக்கும் வெடிபொருள்களை எடுத்து வீசுகின்றனர். அத்துடன், வெடிபொருள்களுடனும் மணலை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு சட்டவிரோத …

  12. கலவரத்தின் பின்னணியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் இருவர் யார்? : ஜே.வி.பி.யின் கேள்வியினால் சபையில் சர்ச்சை (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, திகன பகுதிகளில் இடம் பெற்ற கலவரத்திற்கு புதிய கட்சி ஒன்றுடன் தொடர்புடைய பாராளு மன்ற உறுப்பினர்கள் இருவர் தொடர்புபட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள நிலையில் அந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க எம்.பி சபையில் கோரிக்கை விடுத்ததை அடுத்து நேற்று கூட்டு எதிர்க்கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்க…

  13. கிளிநொச்சியில் தொடர்ச்சியாக வர்த்தக நிலையங்கள் உடைப்பு, காவற்துறை மீது வியாபாரிகள் அதிருப்தி.. கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருகின்ற போதும் காவற்துறையினரால் இது வரை எவ்வித முன்னேற்றகரமான நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிளிநொச்சி நகரின் ஏ9 பிரதான வீதி மற்றும் கனகபுரம் டிப்போ வீதியில் அமைந்துள்ள இருபதுக்கு மேற்பட்ட வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து பணமும் பெறுமதியான பொருட்களும் திருகப்பட்டுள்ளன. என வியாபாரிகள் குறிப்பிடுகின்றன. க…

  14. வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்ல அஞ்சும் முஸ்லிம்கள் கண்டியில் வன்முறைகளை ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்கு தாம் அச்சத்துடன் இருப்பதாக, முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். அல்-ஜசீரா செய்தி நிறுவனத்திடம் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட முஸ்லிம்கள் பலரும், ஊரடங்குச் சட்டம், அவசரகாலச்சட்டம் என்பன பிறப்பிக்கப்பட்ட போதிலும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர். “நான் அச்சத்துடன் வாழ்கிறேன்.இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. எமது வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும், எமக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக வெளியே நிற்கிறார்கள். நாங்கள் மட்டும் வீ…

  15. இன­வாத, அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களை உட­ன­டி­யாக தடை­செய்ய வேண்டும்.! இலங்கையில் உள்ள சகல இன­வாத, அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளும் உட­ன­டி­யாக தடை­செய்ய வேண்டும். சகல அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளையும் நாட்டில் தடை­செய்­யப்­பட்ட அமைப்­பு­க­ளாக அர­சாங்கம் அறி­விக்க வேண்டும் என அமைச்சர் தயா­சிறி ஜெய­சே­கர தெரி­வித்தார். இன­வா­தத்தை தூண்டும் நபர்­களை 10 ஆண்­டுகள் சிறையில் அடைக்கும் சட்­டத்­தையும் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். நேற்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­ற த்தில் வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் பின்னர் ஒழுங்குப் பிரச்­சினை ஒன்றை எழுப்பி கருத்துக் கூறும் போதே அவர் இதனைக் குறி…

  16. மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம், பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை மன்னாரிலுள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். மன்னார் பஸார் பகுதி மற்றும் ஏனைய இடங்களில் உள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதேவேளை, அப்பகுதியிலுள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் அதிக அளவில் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. மேலும் மன்னாரில் உள்ள முஸ்லிம்களின் பள்ளி வாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச தனியார் போக்குவரத்து…

    • 1 reply
    • 196 views
  17. முஸ்லிம்கள் இல்லாவிடின் யுத்தத்தை முடித்திருக்க முடியாது : பாதுகாப்பு படைகளின் பிரதானி (ரொபட் அன்டனி) முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. எனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நான் கவலையடைகின்றேன். என்று கூட்டுப்படைகளின் பிரதானி ரியல் எட்மிரல் ரவிந்தீர விஜயகுணவர்த்தன தெரிவித்தார். அவசரகால நிலையின் கீழ் இராணுவத்தினர் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்…

  18. வழமைக்கு திரும்புகிறது கண்டி.! கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த இனவாத வன்முறைகள் அனைத்தும் நேற்று முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. கடந்த 4 ஆம் திகதி இரவு முதல் கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் உருவான வன்முறைகள் மற்றும் பதற்றநிலை நேற்றுக் காலை 6 மணியாகும் போது முற்றாக கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவரப்பட்டதால், கண்டி மாவட்டம் மீண்டும் வழமைக்கு திரும்பி வருகின்றது. வன்முறைகளின் சேத விபரங்கள் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் குறித்த பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக நேற்று முதல் ஆரம்பமாகின. எவ்வாறாயினும் கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக அங்க…

  19. மட்டக்களப்பில் இரு கைக்குண்டுகள் மீட்பு மட்டக்களப்பு சந்திவெளி துறைமுகப்பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பிரதேசத்தின் விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைக்காக துப்புரவு பணியில் ஈடுபட்ட போது மர்மப் பொருள் ஒன்றை அவதானித்த நிலையில், பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பொலிசார் குறித்த இடத்திற்கு வருகை தந்து அவை கைக்குண்டுகள் என அடையாளம் கண்டு அவற்றினை குறித்த பிரதேசத்தில் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் பொலிசார் தெரிவித்தனர். http://www.vira…

  20. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றும் பள்ளிவாசல் மீது தாக்குதல் இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தில் நேற்று ஒரு சிறிய தாக்குதல் சம்பவம் மாத்திரமே இடம்பெற்றதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். “நேற்றுக்காலை ஒரே ஒரு வன்முறைச் சம்பவம் மாத்திரம் இடம்பெற்றுள்ளது. உந்துருளிகளில் வந்த சிலர், பள்ளிவாசல் மீது கற்களை வீசினர். காவல்துறையினர் அங்கு சென்றதும், அவர்கள் ஒரு உந்துருளியையும் கைவிட்டு தப்பியோடி விட்டனர். உந்துருளியின் உரிமையாளரை அடையாளம் கண்டு, இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கரந்தெனியவையும், ஒருவர், மீரிகமவையும் சேர்ந்தவர்கள். கொழ…

  21. கொழும்பு வந்தார் ஐ.நா உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாட்கள் பயணமாக, நேற்று மாலை சிறிலங்காவை வந்தடைந்துள்ளார் என்று, கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் தெரிவித்துள்ளது. இவர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் ஏனைய மூத்த அரசாங்க அதிகாரிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளையும் சந்திக்கவுள்ளார். அத்துடன், முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரங்கள் இடம்பெற்ற கண்டி மாவட்டத்துக்கும் ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.puthinappalakai.…

  22. இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளை அவசரமாகச் சந்தித்த மகிந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று இஸ்லாமிய நாடுகள் சிலவற்றின் தூதரகங்களின், இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையிலேயே, இதுகுறித்து விளக்கமளிப்பதற்காகவே மகிந்த ராஜபக்ச இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை அவசரமாகச் சந்தித்துள்ளார். எனினும்,இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியில், மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட…

  23. யாழ் நகரில் நெல்சன் மண்டேலாவின் சிலை தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை ஒன்றை யாழ்ப்பாணம் நகரில் நிர்மாணிக்க இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரோபீனா பீ மார்க்ஸ் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நெல்சன் மண்டேலா என்பது சமாதானத்தின் அடையாளம் எனவும் அவரது சிலையை யாழ் நகரில் நிர்மாணிக்க யோசனை முன்வைத்தமை தொடர்பில் ஆளுநர், உயர்ஸ்தானிகருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேச்சுவார்த்தையில் வடக்கு மாகாணத்தில் நடைபெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் சமய வேலைத்திட்டஙக்ள் …

    • 1 reply
    • 554 views
  24. வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிசார் குவிப்பு - நாளை கடையடைப்பு இல்லை! வவுனியா நகர பள்ளிவாசலுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மற்றும் அம்பாறை பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் முழு கதவடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவிருந்தது. இதற்கு வவுனியா நகர பள்ளிவாசல் நிர்வாகம், வவுனியா வர்த்தக சங்கத்திடம் ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், ஆதரவு வழங்குவதற்கு வவுனியா வர்த்தக சங்கம் மறு…

    • 1 reply
    • 355 views
  25. விபத்தில் வைத்தியர் பலி!!! கிளிநொச்சி - பூநகரி பகுதியில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A32 யாழ் - மன்னார் பிரதான வீதி, மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் யாழ் கரவெட்டி பகுதியை சேர்ந்த 41 வயதான அரவிந்தன் எனும் வைத்தியரே உயிரிழந்துள்ளார். சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://www.virakesari.lk/article/31370

    • 10 replies
    • 979 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.