ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
கலப்பு முறை தேர்தல் - ஆய்வு ; வெளிநாட்டுக்குழு இலங்கை வருகை விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரியிலான கலப்பு முறையில் முதல்முறையாக நடைபெறும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாடுகளிலிருந்து 10 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். இலங்கைக்கு வருகைதந்துள்ள குழுவினர் தேர்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய அதிகாரிகளாவர். இந்தியாவிலிருந்து 4 பேரும் , தென்கொரியாவிலிருந்து 2 பேரும் , மாலைதீவிலிருந்து 2 பேரும் இந்தோனேசியாவிலிருந்து 2 பேரும் வருகைதந்துள்ளனர். தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு விஜய…
-
- 0 replies
- 217 views
-
-
இராணுவம் நடத்தும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும் – ஐ.நா குழு வலியுறுத்தல் சிறிலங்கா இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று, ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது. சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா குழு, சிறிலங்கா தொடர்பான கண்டறிவுகள் குறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது. ஜெனிவாவில் ஜனவரி 15ஆம் நாள் தொடக்கம், பெப்ரவரி 02ஆம் நாள் வரை நடந்த சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா குழுவின் கூட்டம் இடம்பெற்றிருந்தது. இதில் சிறிலங்கா , குவாட்டமாலா, பனாமா, சிஷெல்ஸ், ஸ்பெய்ன், சொலமன் தீவுகள், பாலோ மற்றும் மார்ஷல் தீவுகளில் சிறுவர்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இந்தக்…
-
- 0 replies
- 218 views
-
-
ஒரே மேடையில் ‘அரசியல் முக்கோணம்’ உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளின் போது, ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்த சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் மூவரும் நேற்று ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். யானை தாக்கியதால் படுகாயமடைந்து, மாரடைப்பு ஏற்பட்டு மரணமான பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிச்சடங்கு நேற்று சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர். சில நாட்களுக்கு முன்னர், தேர்தல் …
-
- 0 replies
- 170 views
-
-
கூட்டமைப்பு 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் – சுமந்திரன் நம்பிக்கை நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரியளவிலான எதிர்ப்புகளைச் சந்திக்கவில்லை. பல்வேறு கூச்சல்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே இருக்கின்றனர். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் போட்டியிடுகின்ற 58 உள்ளூராட்சி சபைகளில், 46…
-
- 0 replies
- 166 views
-
-
உண்மையான அக்கறை கொண்ட வேட்பாளருக்கு வாக்களியுங்கள் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு பிரதேச அபிவிருத்தியில் உண்மையான அக்கறை கொண்ட வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் அனைத்து பீட மாணவர் ஒன்றியங்களதும் சந்திப்பு அதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சுக்களின் அடிப்படையில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கோரப்பட்டுள்ளது.(15) http://www.samakalam.com/செய்திகள்/உண்மையான-அக்கறை-கொண்ட-வே/
-
- 1 reply
- 331 views
-
-
வடக்கு முதலமைச்சரின் கருத்துக்கு மாவை சேனாதிராஜா தக்கபதிலடி! "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்திவரும் வட மாகாண முதலமைச்சர், தாம் அடிக்கடி குறிப்பிடும் மாற்றுத் தலைமை எது என்பதுபற்றியோ, அவர்களின் கொள்கை, இலக்கு வழிமுறை என்ன என்பதுபற்றியோ? அவ்விலக்கை அடைந்திடும் வழிமுறையென்ன என்பது பற்றியோ அறிவிக்க தவறி வருகிறார். இந்நிலைப்பாட்டினால் தமிழ் மக்களை ஓர் அநாதரவான அவலநிலைக்குத் தள்ளுகின்றார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, "உள்ளூராட்…
-
- 5 replies
- 673 views
-
-
மட்டு. மாநகரசபை, மூதூர் பிரதேச சபைக்கு மிகநீளமான வாக்குச்சீட்டு சிறிலங்காவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், மட்டக்களப்பு மாநகரசபைக்கும், மூதூர் பிரதேச சபைக்குமான வாக்குச்சீட்டுகளை மிகவும் நீளமானவையாக அச்சிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 33 உறுப்பினர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாநகரசபைக்கான தேர்தலில், 11 அரசியல் கட்சிகளும், 5 சுயேட்சைக் குழுக்களுமாக, மொத்தம் 16 அணிகள் போட்டியிடுகின்றன. 21 உறுப்பினர்களைக் கொண்ட மூதூர் பிரதேசசபைக்கான தேர்தலிலில், 14 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேச்சைக் குழுக்கள் என 16 அணிகள் போட்டியிடுகின்றன. எனவே, இந்த இரண்டு சபைகளுக்குமான வாக்குச் சீட்டுகளே மிகவும் நீளமானவைய…
-
- 0 replies
- 304 views
-
-
பொலிஸாரின் வித்தியாசமான வழக்கு!! பொலிஸாரின் வித்தியாசமான வழக்கு!! புங்குடுதீவில் கடற்படை வாகனம் மோதி சிறுமி உயிரிழந்த வழக்கில், சிறுமியின் மாமனாரையும் பொலிஸார் கொலை வழக்கில் இணைத்துள்ளனர். சிறுமிக்குத் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார் என்பதே பொலிஸாரின் குற்றச்சாட்டு. புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த மாதம் 24ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் புங்குடுதீவ…
-
- 0 replies
- 307 views
-
-
மன்னார் மாவட்டத்தில் ஒரு கோடியே 54 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு மன்னார் மாவட்டத்தில் ஒரு கோடியே 54 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேகநபர்களை மன்னார் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மன்னார் – சிலாவத்துறை பகுதியில் 154 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகள் நேற்று புதன்கிழமை மன்னார் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப் படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 276 views
-
-
தெல்லிப்பழை மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்புச் சிகிச்சைப் பிரிவு வருட இறுதியில் ஆரம்பிக்கப்படும் தெல்லிப்பழை மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்புச் சிகிச்சைப் பிரிவு வருட இறுதியில் ஆரம்பிக்கப்படும் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட புற்றுநோய் அதி சிறப்பு சிகிச்சைப் பிரிவு நடப்பு வருடத்தின் இறுதியில் ஆரம்பிப்பதற்கா…
-
- 0 replies
- 317 views
-
-
தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர் மீது தாக்குதல் குளோபல் தமிழ் செய்தியாளர் தமிழ் தேசிய பேரவையின் கரவெட்டி பிரதேச சபை வேட்பாளர் தாக்குதலுக்குள்ளான நிலையில் யாழ்.மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கரவெட்டி பிரதேச சபை வேட்பாளரான கந்தப்பு கிரிதரன் என்பவர் இராஜகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (07) இரவு தாக்குதலுக்கு உள்ளான நிலையில், யாழ்.மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/2018/65914/
-
- 0 replies
- 411 views
-
-
இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு விசாரணையில் தசநாயக்க கோரிக்கை!!! 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில் முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட நபர்களுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து விலக்கிக்கொள்ளுமாறு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று வழக்கு தவணை அழைக்கப்பட்ட போது பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இந்த கோரிக்கையை முன்வைத்தார். இந்த கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணியால் கடும் எதிர்ப்பு வௌியிடப்பட்டிருந்த நிலையில் அதன் படி பிரதிவாதி சட்டத்தரணியின் கோரிக்கை தொடர்பில் …
-
- 0 replies
- 332 views
-
-
பிடி இறுகும் பத்திரிகையாளரின் கொலை வழக்கு பிரபல பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக விளக்கமளிக்க முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன மற்றும் முன்னாள் உதவி பொலிஸ் மா அதிபர் ப்ரசன்ன நாணயக்கார ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பும் முயற்சியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லசந்த விக்மரதுங்க படுகொலை செய்யப்பட்ட காலப் பகுதியில், இவ்விருவருமே கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பு வகித்திருந்தனர். லசந்தவின் கொலை தொடர்பான முக்கிய தடயங்களைத் தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களிடமிருந்து விளக்கங்கள் பெறப்படவுள்ளது. ஏற்கனவே, மேற்படி கொலைச் சம்பவம் குற…
-
- 0 replies
- 336 views
-
-
மன்னாரில் இருந்து தனுஷ்கோடி சென்ற குடும்பத்துக்கு சிக்கல் பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கையிலிருந்து தனுஷ்கோடி சென்ற குடும்பத்தார்களிடம் பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதியில், இன்று (8) அதிகாலை பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து ‘ஃபைபர்கிளாஸ்’ படகில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரிடம் உளவுத்துறை, கியூ பிரிவு, சுங்கத்துறை மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார் பகுதியைச் சேர்ந்த நிரோஷன் (28), ஒன்பது மாத கர்ப்பிணியான அவரது மனைவி மேரிஸ்டெல்லா (23), அவர்களது குழந்தை ஜெஸ்மின் (5) மற்றும் சகோதரர் ரீகன் ஆகியோரே இ…
-
- 2 replies
- 557 views
-
-
கொழும்பிலும் மலையகத்திலும் கூட்டணியின் வெற்றி நிச்சயம் அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார். கொழும்பிலும், மலையகத்திலும் முற்போக்கு கூட்டணியின் வெற்றி நிச்சயம் என்று அக்கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான , மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு கொச்சிக் கடையில் நடைபெற்ற முற்போக்கு கூட்டணியின் இறுதி பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தனது உரையில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நாம் இந்த அரசாங்கத்தில் பலமான ஒரு பங்காளி கட்சி என்பது உண்மை. அந்த பலம், இந்த தேர்தலுடன் இன்னமும் அதிகரிக்க வேண்டும். அந்த அதிகரிப்பை நோக்கியே நான் காய் நகர்த்துகிறேன். இத…
-
- 0 replies
- 284 views
-
-
தொண்டர் ஆசிரியர்கள் 676 பேருக்கும் நியமனம்!! தொண்டர் ஆசிரியர்கள் 676 பேருக்கும் நியமனம்!! வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு வடக்கிலுள்ள தொண்டர் ஆசிரியர்களில் தெரிவு செய்யப்பட்ட 676 பேருக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு முதலமைச்சர் கூறியுள்ளார் என்று தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்தனர். அதை உறுதிப்படுத்தும் கடிதம் தரவில்லை என்றும் நாளை(இன்று) அது தரப்படும் என்று அவர் உறுதியளித்தார் என…
-
- 0 replies
- 409 views
-
-
வெளிநாட்டில் போராடுபவர்கள் உண்மையான தமிழர்கள் அல்ல : கெஹெலிய ரம்புக்வெல்ல தமிழர்கள் என்று வெளிநாடுகளில் போராடுபவர்கள் தமிழர்கள் என்ற போர்வையில் மாத்திரமே செயற்படுகின்றனர். இன,மத மொழி வேறுபாடுகள் இன்றி இலங்கையர் என்ற ஒருமைப்பாட்டுடன் எம்முடன் என்றும் இணைந்து செயற்படுபவர்களே தமிழர்கள் என கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பிரித்தானியாவின் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியின் பணி நீக்கம் மற்றும் மீள் பணியமர்த்தல் விவகாரம் குறித்து குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 297 views
-
-
புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்? ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக போராட்டங்களில் ஈடுபடும் புலம்பெயர் தமிழர்களுக்கு, போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் எச்சரித்திருப்பதாக பௌத்த பிக்குகளின் அமைப்பொன்று விளக்கம் அளித்துள்ளது. அதேவேளை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயற்பாட்டை பாராட்டியுள்ள பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முலுகல்லே ஸ்ரீ ஜினானந்த தேரர், புலம்பெயர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அந்தந்த நாடுகளில…
-
- 5 replies
- 677 views
-
-
தலைவர் பிரபாகரனை பல முறை காப்பாற்றினேன்! 40 பேருடன் நடந்த சமர் தலைவர் பிரபாகரனை நானும் எனது அண்ணனும் பலமுறை காப்பாற்றியுள்ளோம் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் இறுத்திக்கட்ட தேர்தல் பிரச்சாரமும் களூவளையில் இன்று மாலை இடம்பெற்றது. இதன்போது பேசிய முரளிதரன், தலைவர் பிரபாகரனை நானும் எனது அண்ணனும் பலமுறை காப்பாற்றியுள்ளோம். 18 பேருடன் மணலாற்றுக் காட்டுக்குள் வந்து நின்ற தலைவரை எனது அண்ணனும் நானும் 40 பேருடன் சென்று சண்டை செய்து தலைவரைக் காப்பாற்றினோம். அதுபோல் ஜெயசிக்குறுச் சமரிலும் சண்டை செய்து காப்பாற்றினோம். இவ்வாறு பலமுறை நான் தலைவரைக் காப்பா…
-
- 2 replies
- 563 views
-
-
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் இப்படிப் பொய் சொல்லக்கூடாது 2018-02-07 18:30:42 அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைமை செய்து வரும் தேர்தல் பிரசாரம் கண்டு நெஞ்சு வெடித்து விடும் போல் இருக்கிறது. அந்தளவுக்கு படுபாதகமான பொய்களை அவர்கள் அடுக்கி வருகின்றனர். அதிலும் காளியம்மன் மீது அளவு கடந்த பக்தி கொண்ட, அரசியலில் முதிர்வுமிக்க கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் கூறுவதாக ஊடகங்களில் வரும் செய்திகள் ஏன்தான் இப்படிச் சொல்லுகிறார் என்று எண்ணத் தோன்றும். வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும். ஒற்றையாட்சியை ஏற்க மாட்டோம். ஒஸ்லோ உடன்பாடே கூட்டமைப்பின் இலக்கு அதனை நோக்கியே நகர்கின்றோம். என இரா.சம்பந்த…
-
- 2 replies
- 542 views
-
-
ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சி முறையை குறிப்பதல்ல. – இரா.சம்பந்தன்…. ஏக்கிய இராச்சிய என்பதன் பொருள் பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாடு. ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சிமுறையை குறிக்கும் சொல் இல்லை. அது பிரதேசத்தை குறிக்கிறது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதரவு தெரிவித்து யாழ்.சங்கிலியன் பூங்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இடைக்கால அறிக்கையில் ஒன்றும் இல்லை என கூறுகிறார்கள். இடைக்கால அறிக்கையி…
-
- 3 replies
- 1k views
-
-
‘0’இல் இருந்து ‘100’ நோக்கிச் செல்லும் எதுவுமே நியாயமான கோரிக்கைகளே வாரத்துக்கொரு கேள்வி 05.02.2018 தேர்தல் காலத்தில் அரசியல் சார்பற்ற ஒரு கேள்வி இவ்வாரக் கேள்வியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பதிலில் அரசியல் புகுந்துள்ளதை அவதானிக்கலாம். கேள்வி பின்வருமாறு – கேள்வி – நீங்கள் ஜனாதிபதியுடனும் வேறு சில மத்திய அமைச்சர்களுடனும் சிங்களத்தில் மிக அன்னியோன்யமாக சிரித்துப் பேசுவதைக் கண்டிருக்கின்றோம். ஆனால் உங்கள் அரசியல்க் கருத்துக்கள் மிகத் தீவிரமாக இருக்கின்றனவே? இது ஒரு நாடகமா? பதில் – நான்கு விடயங்களை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். சிங்களத்தில் பேசுவது, சிரித்துப் பேசுவது, என் அரசியல் சிந்தனைக…
-
- 4 replies
- 586 views
-
-
தமிழ் மக்களின் கனவு நனவாக எல்லோரும் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்போம்! யாழ். கல்வியாளர் ஒன்றியம் தமிழ் மக்களின் கனவு நனவாக அனைவரும் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும், உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண கல்வியாளர் ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இத்தேர்தலில் எல்லா மக்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு வாக்களிப்பதன் மூலம் மோசடிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு குடிமகனும் வாக்கின் மூலம் தமது உரிமை…
-
- 1 reply
- 263 views
-
-
கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்றது. இன்று மாலை இடம்பெற்ற இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான குருகுலராஜா, பசுபதிபிள்ளை, மற்றும் தேர்தல்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலா் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர். இக் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டிருந்தனர் http://globaltamilnews.net/2018/65778/
-
- 0 replies
- 216 views
-
-
உள்ளூராட்சி தேர்தல் 2018க்கான பரப்புரைக் களம் அரசியல்வாதிகளிடையே சூடுபிடித்திருக்கிறது. அந்த சூடுபிடித்தலுக்கான பேசுபொருளாக அபிவிருத்தி அபிவிருத்தியுடன் கூடிய தேசிய அரசியல் என்ற இரு விடயங்களும் மாறியிருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் தமிழர் தரப்பில் கவனியாது விட்ட இன்னொரு விடயமும் உண்டு. இதுவரை காலமும் தமிழர்கள் வசமிருந்த பிரதேச சபைகளுக்குள் பெரும்பான்மையினர் நுழைந்திருப்பதும், பிரதேச சபையே அவர்களின் வாக்குப் பல அதிகரிப்பின் காரணமாக, பெரும்பான்மைவயப்படவிருக்கும் சம்பவங்களும் நடக்கவிருக்கின்றன. அவ்வாறானதொரு தமிழ் பிரதேச சபை அபகரிப்பைப் பற்றியே இக்கட்டுரை பேசுகின்றது. வவுனியா வடக்கு பிரதேச சபை ஈழப் போரின் மிக மோசமான அழிவுகளையும், ஆக்கிரமிப்புக்களையும் சந்தித்த அனேக…
-
- 0 replies
- 507 views
-