ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
‘‘அடுத்த ஜனாதிபதி கோத்தாதான்!” அடுத்த முறை ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிரணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவார் என்றும் அந்தத் தேர்தலில் அவரே வெற்றிபெறுவார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்லாமல், அதில் கோத்தாபய ராஜபக்சவே வெற்றிபெற்று ஜனாதிபதி நாற்காலியில் அமர்வார் என்றும் அவர் கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/29480
-
- 1 reply
- 542 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் கருத்தமர்வும் கலந்துரையாடலும் ஆரம்பம் எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் ‘இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல்’ என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது இடம்பெறுகின்றது. இக்கலந்துரையாடல் மற்றும் கருத்தமர்வில், வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமை உரை ஆற்றவுள்ளார். தொடர்ந்து “வடகிழக்கு தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேச சட்டம்" எனும் தலைப்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைகழக சட்டத்துறை பேராசிரியர் முத்துகுமாரசாமி சொர்ணராஜா உரையாற்றவுள்ளார். …
-
- 3 replies
- 818 views
-
-
சந்திரிகாவின் கருத்து கண்மூடித்தனமானதே கூட்டு அரசின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவும் களவு செய்யமாட்டார்கள் என்று தெரிவித்து அவர்கள் மட்டில் தனது பகிரங்க ஆதரவை முன் வைத்துள்ளார் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க. வியாங்கொட பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறாக தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் சந்திரிகா. பிணைமுறி விவகாரத்தை மையமாக வைத்தே அவர் தனது கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தார். பிணைமுறி விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு மைத்திரி – ரணில் கூட்டு அரசு நிச்…
-
- 0 replies
- 374 views
-
-
முஸ்லிம் காங்கிரஸ் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மோதல்: வேட்பாளர் உட்பட மூவர் காயம் வாழைச்சேனை - செம்மண்ணோடை பகுதியில் இன்று இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் உட்பட மூவர் தாக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப் பகுதியின் போக்கடி வீதியில், வடிகாண்களை வாழைச்சேனை பிரதேச சபை வாகனத்தை கொண்டு சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது, அந்த இடத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் ஐக்கிய தேசிய முன்ணியில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் செம்மண்ணோடை வட்டார தலைவர் ஆகிய இருவரும் சென்றனர். இதனையடுத்து, எமது கட்சியின் ஊட…
-
- 0 replies
- 327 views
-
-
ஜனாதிபதியின் ஆசை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது - மஹிந்த (எம்.மனோசித்ரா) 5 வருடங்கள் போதாது எனக்கூறி தனது பதவிக் காலத்தை 6 வருடங்களாக அதிகரிக்க ஜனாதிபதி முயற்சித்தமை மெய்சிலிர்க்க வைத்துவிட்டதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பதவி ஆசை எனக்கு தான் என கூறினார்கள். எனினும் நான் இரண்டு வருடங்கள் பதவிக் காலம் மீதமிருந்தும் ஆட்சியை ஒப்படைத்து விட்டேன். ஆனால் தற்போது 5 வருடங்கள் போதாது எனக் கூறி தனது பதவிக் காலத்தை 6 வருடங்களாக அதிகரிக்க ஜனாதிபதி முயற்சித்தார். எனினும் அது சாத்தியப்படவில்லை. மக்களால் ஏற்பட்ட தவறினை அவர்களாகவே திருத்திக் கொள்வதற்கு மீண்டும் ஒரு ச…
-
- 0 replies
- 277 views
-
-
விமான நிலையம் தெரியாது நீண்ட நேரம் வானில் சுற்றிய விமானி! பொங்கல் தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம்(14.01.2018) வல்வெட்டித்துறையின் பட்டத் திருவிழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வருகை தந்த, அமைச்சர் மகிந்த அமரவீர பயணித்த விமானமானது, விமான நிலையம் தெரியாது நீண்ட நேரம் வானில் சுற்றிய நிலையில் தரையிறங்கும் போது, விமானத்தின் எரிபொருள் தீர்ந்த நிலையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவமானது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பட்டத் திருவிழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வருகை தந்த, கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர பயணித்த விமான இலங்கை விமானப்படை விமானத்தின் விமானிக்கு, …
-
- 9 replies
- 994 views
-
-
தமிழர்கள் கடத்தல் வழக்கில் கமாண்டர் பிரசாத்திற்கு சர்வதேச பிடியாணை தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகார வழக்கில் தலைமறைவாகியுள்ள மற்றுமொரு சந்தேக நபரான கடற்படை லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்யுமாறு சர்வதேச பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அத்துடன் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 8ஆவது சந்தேக நபரான கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரி காமினி என்பவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட…
-
- 0 replies
- 364 views
-
-
கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று! தமிழீழ விடுதலை புலிகளின் கட்டளைத் தளபதி கேணல் கிட்டு உட்பட இந்திய கடலில் வீரச்சாவை தழுவிய வீரர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கையில் தொடர்ந்தும் பயணிப்போம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய- இலங்கை கூட்டு சதியால் சர்வதேச கடலில் கேணல் கிட்டு உயிர்தியாகம் செய்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இராசையா கதிர் கூறியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான சதாசிவம் கிருஸ்ணகுமார் எனும் இயற்பெயர் கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்…
-
- 0 replies
- 304 views
-
-
இலங்கையின் அபிவிருத்தி சமாதானத்தில் உண்மையான பங்காளியாக இந்தியா இருக்கும் இந்தியாவானது இலங்கை மக்களின் எதிர்காலம் அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பனவற்றின் சிறந்த உண்மையான பங்காளியாக தொடர்ந்து செயற்படும். இலங்கையில் மேற்கொள்ளப்படும் உதவி திட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் அணுகுமுறை எம்மிடம்கிடையாது. செல்வாக்கு செலுத்தும் அணுகுமுறை எம்மிடம் கிடையாது. மாறாக மக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே எமது உதவிகள் மற்றும் கடனுதவிகள் அமையும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் சட்டம் நீதித்துறை தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல்…
-
- 2 replies
- 419 views
-
-
வரலாற்றில் முதற் தடவையாக கல்வி அமைச்சில் தைப்பொங்கல் விழா வரலாற்றில் முதற் தடவையாக கல்வி அமைச்சில் தைப்பொங்கல் விழா இன்று (16) மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னர் கல்வி அமைச்சில் பொங்கல் விழாக்கள் கொண்டாடியது இல்லை. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஏற்பாட்டில் கல்வி அமைச்சிலும் நாட்டிலும் பாடசாலை மாணவர்களிடமும் இன ஐக்கியத்தையும் சகவாழ்வையும் உறுதிபடுத்தும் முகமாக இந்த தை பொங்கள் நிகழ்வு கல்வி அமைச்சில் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/61594/ எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா …
-
- 3 replies
- 829 views
-
-
எல்.ரீ.ரீ.ஈ தற்கொலைதாரிக்கு உதவிய பெண்ணுக்கு சிறைத்தண்டனை விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைத்தாரி ஒருவருக்கு உதவிய பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (16) தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், அபராதத் தொகையும் விதித்துள்ளது. ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தாவை படுகொலை செய்ய முயற்சித்த தற்கொலைத்தாரி ஒருவருக்கு உதவி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவருக்கே இன்று இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. செல்வகுமார் சத்யவேல் என்ற குறித்த சந்கேநபர் சிறையில் இருக்க வேண்டிய காலத்திற்கு அதிகமாகவே சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதாகவும், 15 வருடங்கள் ஒ…
-
- 0 replies
- 225 views
-
-
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைஎம்சிஏ மண்டபத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் தி.ஸ்ரீதரன் (சுகு) மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் ஆகியோர் இணைந்து இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்தனர். ‘மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக மக்களின் அடிப்படைத் தேவைகளையும் சமூக, பொருளாதார அபிவிருத்தியையும் முன்நிறுத்துவோம்’ என்ற கொள்கையின் கீழ் அந்தக் கட்சி தனது தேர்தல் அறிக்…
-
- 1 reply
- 270 views
-
-
அர்ஜுன மகேந்திரன் விரைவில் சிறைக்கு செல்வார்;சந்திரிகா ஆருடம் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜுன மகேந்திரனுக்கு விரைவில் சிறைக்குச் செல்லநேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆருடம் வெளியிட்டுள்ளார். கம்பஹா மாவட்டம் – மீரிகம பல்லேவல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் கல்வித்துறையையும் ராஜபக்ச குடும்பம் வியாபாரமாகவே பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இலங்கை மத்திய வங்கிக்கு 11,145 மில்லியன் ரூபா …
-
- 1 reply
- 426 views
-
-
இன்று நள்ளிரவு வெளியாகும் உயர்தர பெறுபேறுகள் இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்றஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று இரவு(27) இணையத்தில் வெளியிடப்படவுள்ளது. பாடசாலைகளுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு நாளைய தினம் தபால் மூலம் பரீட்சை முடிவுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இன்று-நள்ளிரவு-வெளியாகும்-உயர்தர-பெறுபேறுகள்/150-209495
-
- 43 replies
- 4.5k views
-
-
உக்ரேனிடம் இருந்து மிக்-29 போர் விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் மோசடி செய்யப்பட்ட பணம் ஹொங்கொங் வங்கி ஒன்றில் பதுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேருவளையில் நேற்று நடந்த ஐதேகவின் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், ”உக்ரேனில் இருந்து முன்னைய அரசாங்கம் மிக் போர் விமானங்களை தலா ஒவ்வொன்றும் 7.2 மில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்திருந்தது. எனினும், அதிகாரபூர்வ ஆவணங்களில் 14.7 மில்லியன் டொலருக்கு அவை கொள்வனவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச 7.5 மில்லியன் டொலரை எடுத்து, ஹொங்கொங் வங்கி ஒன்றில் வைப்பிட்டுள…
-
- 1 reply
- 426 views
-
-
பொதுஜன பெரமுன தேர்தலில் வெற்றிபெற்றால் மஹிந்த ராஜபக் ஷ ஏப்ரலில் பிரதமராவார் (எம்.சி.நஜிமுதீன்) உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவான உள்ளூர் அதிகார சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றுமாகவிருந்தால் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கிக் காட்டுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அளகப் பெரும தெரிவித்தார். மாத்தறை உயன்வத்தையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவத்துள்ளார். அவர் மேலும் குறிப்…
-
- 2 replies
- 361 views
-
-
ஐந்தாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் புதுடெல்லியில் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. கடந்த 9ஆம் நாள் நடந்த இந்த பாதுகாப்புக் கலந்துரையாடலுக்கு சிறிலங்கா தரப்புக் குழுவுக்கு, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தலைமை தாங்கினார். இந்தக் குழுவில், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் சரத் குமார, வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் கிரிஹகம, விமானப்படைத் தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் டயஸ், சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளர் றியர் அட்மிரல் பியால் டி சில்வா, கடலோரக் காவல்படை பணிப்பாளர் றியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, மற்றும் மேஜர் ஜெனரல் ஜிஎல்ஜே வாதுகே ஆகியோர் இடம்பெ…
-
- 4 replies
- 345 views
-
-
ஸ்ரீலங்கா இராணுவத் தளபதிக்கு சந்தியா எக்னலிகொட பகிரங்க சவால் இராணுவத்தினருக்கும், கொலையாளிகளுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்துவரும் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, அதனை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று கடத்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட சவால் விடுத்துள்ளார். ஊடகவியலாளர் எக்னலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்திருக்கின்ற நிலையில் அதற்கான முழுப்பொறுப்பையும் இராணுவ புலனாய்வுப் பிரிவே ஏற்கவேண்டும் என்றும் சந்தியா எக்னலிகொட வலியுறுத்தினார். கே…
-
- 1 reply
- 433 views
-
-
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.. கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதென உறுதியாகியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது. குறித்த தினத்தில் நாடாளுமன்ற அமர்வுகளைக் குழப்புவதற்காக திட்டமிடப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து சபாநாயகர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கையை அன்றைய தினம் சமர்ப்பிக்க முடியாதெனவும், எதிர்வரும் 17ஆம் திகதி அதனைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்த…
-
- 0 replies
- 302 views
-
-
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அறிவித்தது நீதிமன்றம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என நீதிமன்றம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்தில் வினவியதன் அடிப்படையில் அதுபற்றி ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/29398
-
- 1 reply
- 350 views
-
-
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளரின் கூட்டத்தில் வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர் அடாவடி – புன்னாலைக்கட்டுவனில் சம்பவம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வலி.தெற்கு பிரதேசசபையின் 05ஆம் வட்டாரமான புன்னாலைக்கட்டுவனில் போட்டியிடும் வேட்பாளர்களான கெங்காதரன் மற்றும் ஈவினை மாதர்சங்கத்தலைவி ரதி ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது, வேறு கட்சி ஒன்றை சேர்ந்த வேட்பாளர் புகுந்து அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கூட்டத்தையும் குழப்பியுள்ளார். என தெரிவிக்கப்படுகின்றது. ஈவினைதெற்கு கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் இன்று 15.01.2018 திங்கட்கிழமை பி.ப 04 மணியளவில் புன்னாலைக்கட்டுவன் வட்டார தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட…
-
- 2 replies
- 232 views
- 1 follower
-
-
இலங்கைக் கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் சிறைப் பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று காலை சிறைப் பிடித்துச் சென்றனர். பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்குவதும், சிறைப் பிடித்துச் செல்வதும் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. இதனால், பாக் நீரிணைப் பகுதியை வாழ்வாதாரமாகக்கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள், தங்கள் தொழிலை இழந்து தவித்துவருவதுடன், வாழ்வாதாரமாகத் திகழும் படகுகளையும் பறிகொடுத்த நிலையில், மீன்பிடித் தொழிலைக் கைவிட்டு, பஞ்சம் பிழைக்க வெளி மாநிலங்களுக்…
-
- 0 replies
- 155 views
-
-
நேரம் வரும்போது களமிறக்குவோம் என்கிறார் கெஹெலிய எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அறிவிக்கப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு கூட்டு எதிரணி தயாராகவே இருக்கின்றது. வெற்றிபெறும் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் மட்டுமேயாகும் என்று உயர்நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர் ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார். …
-
- 0 replies
- 291 views
-
-
ஜனாதிபதி, பிரதமருக்கிடையிலான பனிப்போர் ஆரம்பம்.! ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் நீண்டகால பனிப்போர் தேர்தல் பெறுபேறுகளுடன் வெடிக்க ஆரம்பிக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும் பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசாங்கத்துக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் நீண்ட காலமாக அதிகார பனிப்போர் இடம்பெற்று வருகின்றது. பிரதமர், ஜனாதிபதியை முந்திக்கொண்டு அரசாங்கத்த…
-
- 0 replies
- 186 views
-
-
கூட்டு அரசு தொடர்வதற்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கும் புதிய அரசமைப்பு உருவாக்கும் செயற்பாடு தொடரவேண்டுமென்றால் கூட்டு அரசு நீடிக்கவேண்டும். தேசிய நல்லிணக்க அரசின் மூலமே நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. கூட்டு அரசு தொடர்ந்து பயணிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற தைப…
-
- 1 reply
- 153 views
- 1 follower
-