ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
15 FEB, 2025 | 01:13 PM அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்தால் உடனடியாக அவர்களை அன்பாக அணுகி சேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள். உங்களால் முடியாவிட்டால் மேலதிகாரிகளிடம் அழைத்துச் சென்று பொதுமகனின் தேவையை எப்படி நிறைவு செய்து கொடுக்கலாம் என்று சிந்தியுங்கள். 'பந்தடிப்பது' போன்று வேலைகளை தட்டிக்கழித்து பொதுமக்களை அலைக்கழிக்காதீர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். கடந்த காலங்களில் தவறாக ஒரு விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதையே தொடர்வதற்குத் தான் பலர் விரும்புகின்றார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு யாரும் தயாராக இல்லை. தவறானது என்று தெரிந்தால் அதை முடிவுக்கு கொண்டு வந்து சரியானதைச் செய்யவேண்டும். இந்த மாற்றத்துக்கு …
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
15 FEB, 2025 | 12:43 PM அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை (15) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 1,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், ஒரு கிலோ பாகற்காய் 450 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபா முதல் 400 ரூபா வரையிலும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 250 ரூபா முதல் 300 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. https://www.virakesari.lk/article/206738
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 15 FEB, 2025 | 12:16 PM பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உட்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புலதிசிபுர தேசிய கல்விக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதன்கிழமை (14) பொலன்னறுவை புலதிசிபுர கல்விக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "புலதிசிய தருனை" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புலதிசிபுர கல்விக் கல்லூரியின் இ…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
கனேடியத் தூதுவர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு! வடக்கு மாகாணத்திற்கு இலங்கைக்கான கனேடியத்தூதுவர் எரிக் வோல்ஷ் நேற்று (14) வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு சென்றதுடன்இ வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இதன் போது இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கு வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள்இ தேவைப்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள்இ சுற்றுலாத்துறையின் அபிவிருத்திஇ பாதை வலையமைப்பு தொடர்பாக மேம்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேலும் பலாலி விமான நிலையத்துக்கு …
-
- 0 replies
- 204 views
-
-
புகையிரதத் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு! கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பித்த காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் இன்று முதல் மொரட்டுவை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பமாகும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மொரட்டுவ புகையிரத நிலையத்திலிருந்து மாலை 6.55 மணிக்குப் புறப்படும் காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களில் இருந்து கோட்டை புகையிரத நிலையத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், இரவு 8 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் என புகையிரத திணைணக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1421548
-
- 0 replies
- 164 views
-
-
பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில் காட்டுத் தீ 15 Feb, 2025 | 10:35 AM எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு தீ பரவியுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருந்ததாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இ.எம்.எல். உதய குமார தெரிவித்தார். குறித்த வனப்பகுதியில் தனிநபரொருவர் அல்லது குழு ஒன்றினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். …
-
- 1 reply
- 313 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு சுமார் ஒரு வருடம் முன்பு, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கூறிய அரசியல் மற்றும் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலானமை உண்மையாகின. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்க. தனது நெருங்கிய பத்திரிகையாளர்கள் குழுவிடம் இதேபோன்ற பல கணிப்புகளை வெளியிட்டுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, நாட்டின் எதிர்காலம் மீண்டும் இருளடையும் என்று ரணில் விக்ரமசிங்க அந்த பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களுக்கு நன்மை வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர நான் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. ஆனால் தற்போதுள்ள நிலையில் அதனை செய்தால் நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படும் எ…
-
-
- 8 replies
- 478 views
- 1 follower
-
-
மும்மொழியிலான தேசிய பாடசாலைக்கு பிரதமர் விஜயம்! இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் பொலன்னறுவை, கதுருவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மும்மொழியிலான தேசிய பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்கான கண்காணிப்பு விஜயம் மற்றும் குறித்த பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றள்ளது. வலயத்தின் அனைத்து இன, மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகல பிள்ளைகளுக்கும் கல்வியை பெறுவதற்கான வசதியை நோக்கமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுவரும் இந்தப் பாடசாலையின் நிர்மாணிப்பணிகள் பல வருடங்களாக மந்தகதியில் இடம்பெற்றமை தொடர்பில் இதன்போது பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 253 views
-
-
வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை பணம் மோசடி Published By: Vishnu 15 Feb, 2025 | 01:57 AM வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி, ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் , மானிப்பாய் , கிளிநொச்சி உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடை…
-
- 0 replies
- 204 views
-
-
வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல அபிவிருத்தி திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை Published By: Vishnu 15 Feb, 2025 | 02:00 AM வவுனியாவில் ஏ9 வீதியை மையமாக கொண்டு பல விவசாய நிலங்கள் மண் போட்டு நிரப்பட்டு ஆக்கிரமிக்கபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக வவுனியா, நொச்சிமோட்டை, தாண்டிக்குளம், யாழ் வீதி, பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய காணிகளில் மண் போட்டு அவற்றை நிரவி புதிதாக வர்த்தக நிலையங்கள், கட்டடங்கள் என்பவற்றை அமைக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இது தொடாபில் ஊடகங்களில் பல தடவ…
-
- 0 replies
- 189 views
-
-
14 FEB, 2025 | 03:55 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்து கொழும்பில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனவரி 30ஆம் திகதி ரணில் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள அமாரி ஹோட்டலில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, நிமல் லன்சா, பிரேம் நாத் சி தொலவத்த, உதய கம்மன்பில மற்றும் ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட முக்கிய அரசியல்வாத…
-
- 1 reply
- 185 views
- 1 follower
-
-
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்! இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் இறையாண்மைக்கும், சுயாட்சிக்கும…
-
-
- 5 replies
- 305 views
-
-
பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல். முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபகச்வின் சொத்துக்கள் குறித்து கடந்த காலத்தில் விமல் வீரவங்ச வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றிருந்தது. வாக்குமூலத்தை அளித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் இருக்கு…
-
-
- 6 replies
- 624 views
-
-
Published By: DIGITAL DESK 2 14 FEB, 2025 | 07:03 PM "லிட்டில் ஹார்ட்ஸ்" என்ற போலி கணக்கைத் திறந்து பரிசுத் தொகை தருவதாகக் கூறி இணையதளம் மூலம் 29 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்துறை பகுதியிலும் நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரம்ப பிரதேசத்திலும் சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நொச்சியாகம, பலாவி பிரதேசங்களைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடையவர்கள் ஆவர். சந்தேக…
-
- 1 reply
- 218 views
- 1 follower
-
-
14 FEB, 2025 | 05:21 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (14) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தனது வரவேற்புரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 56 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவற்றுக்கான முன்மொழிவுகள் உரிய முறைய…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 14 FEB, 2025 | 01:46 PM சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளை கடத்த முயன்ற சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஆவார். இவர் முதலாம் திகதி மாலை 4:30 மணிக்கு கியூஆர்-654 கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளார். அன்று அந்த விமானத்தில் அவரின் பைகள் வரவில்லை. பின்னர் மற்றுமொரு விமானத்தில் அவரின் பைகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. …
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் பயணம்! ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கான தெற்கு சூடான் நிலை 2 மருத்துவமனையில் கடமைகளைப் பொறுப்பேற்க இலங்கை இராணுவ மருத்துவப் படையின் 11வது இராணுவ மருத்துவக் குழு இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளது . நாட்டிலிருந்து புறப்பட்ட 11வது இராணுவ மருத்துவப் படைக் குழுவில் 16 இராணுவ அதிகாரிகள், இரண்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் 46 சிப்பாய்கள் உட்பட 64 இராணுவ வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர். அந்தக் குழுவின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேணல் ஆர்.எம்.டி.பி. ராஜபக்ஷ யுஎஸ்பீ. அவர்களும் இரண்டாவது கட்டளை அதிகாரியாக கே.டி.பி.டி.இ.ஏ. விஜேசிங்கே அவர்களும் கடமையாற்றவுள்ளனர். இதேவேளை இராணுவத் தளபதியைப் பி…
-
-
- 1 reply
- 245 views
- 1 follower
-
-
தெல்லிப்பழை வைத்தியசாலையில் அடிக்கல் நாட்டு விழா! தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான Palliative Care கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்றைய தினம் இடம்பெற்றது. இக்கட்டடத்திற்கான அடிக்கல்லினை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் நாட்டிவைத்தார். சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டடம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான நிதிப் பங்களிப்பை வன்னி கோப் எனும் நிறுவனம் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1421406
-
- 0 replies
- 210 views
-
-
Published By: DIGITAL DESK 2 14 FEB, 2025 | 11:35 AM பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். நாமல் ராஜபகஷ சட்டப் பரீட்சையை முடித்ததில் கிடைக்கப்பபெற்ற பல புகார்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/206651
-
- 1 reply
- 352 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது February 13, 2025 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு அதன் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்ய இடமளிப்பதா? என்பது குறித்து ஆராய்வதற்காக ஒத்தி வைக்கப்பட்டது. இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்தத் திகதியில் பிரதிவாதி ஒருவரை மாற்றுவது குறித்துத் தீர்மானிக்கப்படும். அதன் பின்னரே வழக்கின் விசாரணை பற்றி ஆராயப்படும். இன்று (13) இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பயஸ் ரஸாக் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே வழக்கு இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கை இணக்கமாக முடிவுறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காகவே இன்…
-
- 1 reply
- 186 views
-
-
14 FEB, 2025 | 12:55 PM கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏ32 பிரதான வீதியின் வாடியடி சந்தியை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தியே இப்போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். அதனையடுத்து, பூநகரி பிரதேச செயலாளர் அகிலனிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர்களை போராட்டத்தில் ப…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
14 FEB, 2025 | 12:00 PM சட்டமா அதிபர் அனுர பி மெதகொட செயற்பட்ட விதத்தினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியாயப்படுத்தியமை குறித்து படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் கடும் விசனமும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கபடநாடகமாடுகின்றார்இஇரட்டை நிலைப்பாட்டை பேணுகின்றார் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள அஹிம்சா விக்கிரமதுங்க சட்டமா அதிபர் தனது தந்தையின் கொலை விசாரணைகளிற்கு வேண்டுமென்றே இடையூறு விளைவிக்கின்றார்இஎன தெரிவித்துள்ளார் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்திலேயே அஹிம்சா விக்கிரமதுங்க தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இலங்…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
இன்று முதல் தடையின்றி மின் விநியோகம் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தன. இதன் காரணமாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சுழற்சி முறையில் ஒன்றரை மணி நேர மின் விநியோகத் தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு நேரிட்டது. இருப்பினும், பௌர்ணமி தினம் என்பதால் நேற்று முன்தினம் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படவில்லை. அதேநேரம் சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் நேற்றைய தினம் மி…
-
- 0 replies
- 139 views
-
-
இன விடுதலைக்கான போராட்டம் எப்பொழுதும் தொடரும் மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று விடுவிக்கப்பட்டோம் என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த போராட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக ஆரம்பமாகியிருந்தது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் 2023 ஆகஸ்ட் மாதம் வேழன் சுவாமிகள், MK சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸாரால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடர…
-
- 0 replies
- 174 views
-
-
Published By: VISHNU 14 FEB, 2025 | 01:40 AM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் வசிக்கும் கட்டிடத்தின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சிறுபிள்ளைத்தனமாக அரசாங்கம் செயற்படுவது கவலைக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, …
-
- 0 replies
- 110 views
- 1 follower
-