ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143502 topics in this forum
-
விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு! உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்வது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விசேட தேவையுடைய வாக்காளர்களுடன் வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் உதவியாளர்கள், 18 வயதை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால், அவர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இருத்தல் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சி ஒன்றின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ வாக்கெடு…
-
- 0 replies
- 135 views
-
-
Published By: VISHNU 31 MAR, 2025 | 07:49 PM ஏப்ரல் மாதத்திற்கான லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலையை திருத்தியமைக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரித்து புதிய விலை ரூ.4,100 ஆக விற்கப்படும், 5 கிலோ சிலிண்டர் ரூ.168 அதிகரித்து ரூ.1,645 ஆக விற்கப்படும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/210779
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
வடக்கு மாகாணத்தில் 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்காக வருடமொன்றுக்கு 620 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படவேண்டும். இந்தக் கட்டணம் இன்னமும் செலுத்தப்படாது நிலுவையிலுள்ளது என்று இலங்கை மின்சாரசபையின் வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். வடக்கிலிலுள்ள பெரும்பாலான வீதிகளில் அண்மைக்காலமாக வீதி மின்விளக்குகள் இரவு வேளைகளில் ஒளிராதுள்ளமை தொடர்பாகவும், அதனால் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பாகவும் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆரம்பகாலத்தில் வீதி விளக்குகள் மின்சாரசபையால் பொருத்தப்பட்டு, அதற்குரிய பராமரிப்புகள் மற்றும் மின்சாரப் பட்டியல் பணத்தை ஒவ்வொரு மின் பாவனையாளர…
-
- 0 replies
- 213 views
-
-
31 Mar, 2025 | 11:57 AM உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும், விடுதலை புலிகளாலும், புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை பொய்யல்ல. போர் ஒன்றின்போது அவ்வாறு (மனித உரிமைகள், விதிகள் மீறல்) இடம்பெறும். இது குறித்து உள்நாட்டில் உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார் “மாகாண சபை முறைமை குறித்து இந்தியா எமக்குக் கூற வேண்டிய அவசியம் கிடையாது. எனினும், நாம் உறுதியளித்தபடி மாகாண சபை தேர்தலை நடத்துவோம்” என்றும் அவர் கூறியுள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வ…
-
- 0 replies
- 128 views
-
-
அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நிர்வாக ஒழுங்குகளுக்குள்ளாக கடமைகளை திணைக்களங்களுக்கு அறிவுறுத்தி அவற்றின் வாயிலாக மக்களுக்கான சேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இராணுவத்தினை பயன்படுத்தி சாதாரண சிவில் நிர்வாகத்தினை செயல்திறன் குன்றியதாக மாற்றக்கூடாது. இராணுவமயமாக்கத்தினை ஊக்குவிக்க கூடாது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினை பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில், இராணுவ குழுக்கள் இணைந்து துய்மிப்புப் பணியில் ஈடுபட்டமை குறித்து தனது அதிருப்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களையோ அல்லது கட்சித் தொண்டர்க…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு - மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு. 31 Mar, 2025 | 05:07 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி , சித்திரவதை புரிந்தமையால் மாணவனின் காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார். மகன் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் சித்திரவதை ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , மகனின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் மாணவனின் தந்தை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவன், நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்தவர்…
-
-
- 34 replies
- 2.1k views
- 1 follower
-
-
31 Mar, 2025 | 05:17 PM முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இந்த இளைஞனின் கைதுக்கான பல காரணங்களை தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞன் இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களில் கருத்துவெளிப்பாட்டில் ஈடுபட்டான் என தெரிவிக்கின்றனர், இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் என்றால் அது யூத எதிர்ப்பு. இந்த நாட்டில் வெறுப்பு பேச்சுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன, அந்த இளைஞன் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கவேண்டும். நா…
-
- 1 reply
- 195 views
-
-
31 MAR, 2025 | 03:35 PM பொறுப்புக்கூறலினால் மாத்திரம் இலங்கையின் நீண்டகாலச் சவால்களுக்கு தீர்வைக் கண்டுவிட முடியாது என்று கூறியிருக்கும் தேசிய சமாதானப் பேரவை இனமோதலுக்கு வழிவகுத்த ஆழமான காரணிகளைக் கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்று அவசியமாகும் என்று வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் தேசிய சமாதானப் பேரவை அதில் கூறியிருப்பதாவது ; மூன்று முன்னாள் இராணுவ தலைவர்கள் உட்பட நான்கு இலங்கையர்களுக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் எடுத்த தீர்மானம் முக்கியமான ஒரு விவாதத்தை மூளவைத்திருக்கிறது. உலகின் வேறு பகுதிகளில் பாரிய வன்முறைகள் தடுக்கமுடியாத அளவுக்கு தொடருகின்ற ஒரு நேரத்தில் பிரிடடன் எடுத்திருக்கும் இந்த தீர்மான…
-
- 0 replies
- 84 views
- 1 follower
-
-
துபாயிலிருந்து வந்தவரின் பணத்தைத் திருடி காதலியிடம் கொடுத்த வாடகை வாகன சாரதி கைது Published By: Digital Desk 2 31 Mar, 2025 | 05:49 PM துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவரின் கைப்பையில் இருந்து ஒன்பது இலட்சத்து நான்காயிரத்து நானூறு ரூபா பணத்தை திருடிய வாடகை வாகன சாரதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவது, கடந்த சனிக்கிழமை (29) துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து வாடகை வாகனம் ஒன்றில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். குறித்த நபர் தனது மடிக்கணினி அடங்கிய…
-
- 0 replies
- 106 views
-
-
கொழும்பில் உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டிடங்கள் பூகம்பத்திலிருந்து தாங்கும் சக்தி கொண்டது என்றும் அவை அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளவை என்றும் நில அதிர்வு நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு கூறுகையில், இலங்கை அனுபவித்த அதிகபட்ச நிலநடுக்கம் சுமார் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும், இது எந்த தாக்கத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தாது. இருப்பினும், தற்போது கட்டப்பட்டு வரும் மற்றும் சமீபத்திய காலங்களில் கட்டப்பட்ட அனைத்து நவீன வானளாவிய கட்டிடங்களும் மிதமான அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன. GSMB நில அதிர்…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை! “அரசியல் கைதிகளை விடுவிப்பது உடனடியாகத் தீர்மானிக்கக் கூடிய விடயம் அல்ல” என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”தற்போது சிறையில் உள்ளவர்களில் யாரும் வெறும் சந்தேகநபர்கள் அல்ல எனவும், அனைவரும் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும், எனவே முன்னைய ஜனாதிபதிகள் செய்தது போல அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது எனவும் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மேலும் ”முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான கொலைச்சதி, பிலியந்தலை பேருந்து குண்டுவெடிப்பு, மத்திய வங்கி குண்டுவெடிப்பு மற்றும் தலதா மாளிகை குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களில் குறித்த …
-
-
- 2 replies
- 272 views
-
-
மீன்பிடி பிரச்சினை குறித்து இலங்கை-இந்திய அரசு விரைவில் பேச்சுவார்த்தை – அரசாங்கம்! பிரதமர் நரேந்திர மோடி தனது நாட்டிற்கு வருகை தருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மீன்பிடி தகராறு குறித்து அரசு மட்ட பேச்சுவார்த்தை விரைவில் மீனவர்கள் முன்னிலையில் நடைபெறும் என மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு அவருடன் ஒரு சந்திப்பை நடத்திய பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார். மீனவர் தலைவர் ஆர்.சகாயம் தலைமையிலான குழு, இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தையை தொடங்குமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தது. இந்த…
-
- 0 replies
- 140 views
-
-
அமில சம்பத் ரஷ்யாவில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான அமில சம்பத், அல்லது ‘ரோடும்பா அமில’, ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது குறித்து நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் நாடுகடத்தல் விவாதங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1426919
-
- 0 replies
- 252 views
-
-
Published By: DIGITAL DESK 3 31 MAR, 2025 | 10:31 AM இலங்கையின் தெற்கே காலியில் இருந்து 63 கடல் மைல் (சுமார் 116 கி.மீ) தொலைவில் பயணித்த MV AE Neptune என்ற கப்பலின் பணிக்குழுவைச் சேர்ந்த சீன பிரஜையொருவர் மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில் இலங்கை கடற்படையின் உதவியுடன் கரைக்குக் கொண்டுவந்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தென் கடற்பகுதியில் பயணித்து கொண்டிருந்த MV AE Neptune கப்பலின் பணிக்குழுவில் இருந்த சீன நாட்டவர் ஒருவர் கப்பலின் இயந்திர அறையில் மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அந்த சீன நபரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினை உதவுமாறு, அந்த கப்பலில் இருந்து கொழு…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும் | Sri Lanka News | Ada Derana | Truth First செய்திகள் பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (30) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்தை முதல் தடவையாக பார்வையிட்ட அமைச்சர் விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும் அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். இதன் போது விமான நிலையத்தின் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் ஹர்ச அபய விக்ரம மற்றும் ஏனைய ஊழியர்களுடன்…
-
-
- 2 replies
- 345 views
-
-
O/L விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பம்! கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணியை ஏப்ரல் 10ஆம் திகதி நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விடைத்தாள் மதிப்பீட்டில் சுமார் 15,000 ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426838
-
- 0 replies
- 144 views
-
-
ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான குழு ஏப்ரல் 21க்கு முன்னர் வௌிப்படுத்தப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பான பல நபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தெய்யந்தர பகுதியில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், "ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 21 ஆம் திகதி மீண்டும் ஈஸ்டர் தாக்குதல்களின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது." "பெரும்பாலும், குற்றப்…
-
- 1 reply
- 200 views
-
-
Published By: VISHNU 30 MAR, 2025 | 09:24 PM யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை 28.03.2025 அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 26ஆம் திகதி, குழந்தைக்கு 2 மாதங்களில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 27ஆம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 28ஆம் திகதி இரவு உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக …
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 30 MAR, 2025 | 03:01 PM சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவானந்த ராஜா பணிப்புரை விடுத்துள்ளார். சனிக்கிழமை(29) உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுளமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவனந்தராஜா தலைமையில் இடம் பெற்றபோது சமூகமட்ட பிரதிநிதி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்ட நிலையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சுன்னாக நி…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
30 MAR, 2025 | 05:37 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) முதல் ஆரம்பமாகியுள்ளது. திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வேளை, விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த விமான சேவையானது தினசரி மதியம் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, 2.25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, திருச்சியை மாலை 4 மணியளவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 2 replies
- 334 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 30 MAR, 2025 | 05:05 PM இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தின் அனைத்து விசைப்படகு சங்க செயலாளர் சகாயம் தலைமையிலான இந்திய மீனவ பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர். நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோ…
-
- 1 reply
- 194 views
- 1 follower
-
-
30 MAR, 2025 | 01:54 PM போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவிதித்துள்ளதை நாம் வரவேற்ப்பதுடன் சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இவ்வாறான தடைகள் விதிக்கப்படவேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதிக்கு முன்பாக அவர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், இலங்கை அரசானது நீண்டகாலமாக பொறுப்புக்கூறலில் இருந்து தவறியுள்ளது. இதனால் நாம் சர்வதேச நீதிகோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகிறோம். இன்று போர்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக சில இராணுவத்…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 30 MAR, 2025 | 02:18 PM இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி சர்வ மத தலங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மதத் தலைவர்களுடன் சந்தித்து கலந்துரையாடினார். வரணி மத்திய கல்லூரியில் மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இராணுவத் தளபதி கலந்து கொண்டார். மேலும் கொடிகாமம் தெற்கில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடும் பயனாளி ஒருவரிடம் கையளிக்கப்பட்டது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதியை, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹாம்பத் வரவேற்றதுடன் விசேட சந்திப்புக்களும் இடம்பெற்றது. https://ww…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
கிழக்கில் உரிய விசாரணை முன்னெடுக்காது விடுதலையான அரசியல்வாதிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் பழைய கச்சேரி மண்டபத்தில் பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் யாரையும் அரசியல…
-
- 2 replies
- 192 views
-
-
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம் 30 Mar, 2025 | 01:00 PM கிளிநொச்சியில் வலிந்து காணாமல் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தங்கள் கையினால் கையளித்த தங்களது உறவுகளை மீட்டு தருமாறு கோரியும் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தியும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210620
-
- 0 replies
- 127 views
-