ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
சர்வதேச நடனத் திருவிழா இலங்கையில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச நடனத் திருவிழா இவ்வருடம் மூன்றாவது தடவையாக நற்ரான்டா அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையில் நடைபெறுகின்றது. இவ்வருடத்துக்கான ஆரம்ப வைபவம் நேற்றைய தினம் முதலாம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. யாழில் ஆரம்பமான நடனத் திருவிழாவில் இலங்கை, இந்தியா, லண்டன், ரஸ்யா மற்றும் இந்தோனேசியா ஆகிய ஐந்து நாட்டு நடனக் கலைஞர்களின் நடன நிகழ்வுகள் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வில் யாழிலுள்ள திருமறைக் கலாமன்ற மாணவர்களின் நடன நிகழ்வு, மட்டக்களப்புக் கலைஞர்களின் நடன நிகழ்வு, இலங்கை, இந்தியா, லண்டன், ரஸ்யா, இந்தோனேசியா ஆகிய ஐந்து நாட்டு நடனக் கலைஞர்கள…
-
- 0 replies
- 350 views
-
-
வவுனியாவில் பாரிய தீ விபத்து : தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இன்மையால் திண்டாட்டம் வவுனியா - மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள வன்பொருள் அங்காடி (ஹாட்வெயார்) ஒன்று இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்ததையடுத்து குறித்த பகுதிக்கு வருகைதந்த தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இன்மையால் அங்கிருந்து குறித்த வாகனம் திரும்பிச்சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா - மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள வன்பொருள் அங்காடி (ஹாட்வெயார்) ஒன்று இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்நிலையில், குறித்த இடத்திற்கு தீயணைப்பு பிரிவின் வாகனம் ஒன்று வருகைதந்த போதும் குறித்த வண்டியில் தண்ணீர் இல்லை என…
-
- 2 replies
- 616 views
-
-
முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் விடாப்பிடியான நிலைப்பாடு புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதிகாரப்பகிர்வின் மூலமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வானது அவர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யத்தக்க வகையில் அமையவேண்டியது இன்றியமையாதது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டியை உள்ளடக்கிய சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்பதே தமிழ் மக்களது கோரிக்கையாக உள்ளது. கடந்த ஆறு தசாப்தகாலத்திற்கும் ம…
-
- 2 replies
- 762 views
-
-
"அம்பாறையில் அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகியுள்ளது" (அம்பாறை மேலதிக நிருபர்) கடந்த அரசு காலத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டம் மாத்திரமே திட்டமிடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது. ஆனால் அம்பாறையில் பாரிய அபிவிருத்தி யுகம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அம்பாறை நகரில் 286 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன வசதிகளை கொண்ட பஸ் நிலையத்திற்கான கட்டிடத் தொகுதி நேற்று இடம்பெற்றது. அங்கு உரை நிகழ்த்தும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார். ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே…
-
- 1 reply
- 376 views
-
-
அரசியலில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி படையினரிடம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியலில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். வடக்கில் கடமையாற்றி வரும் படையினரிடம் அரசியலில் ஈடுபட வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ள அவர்பொதுமக்களுடன் சிறந்த உறவுகளை பேண வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இன நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் வகையில் படையினரின் செயற்பாடுகள் அமைய வேண்டுமென இராணுவத் தளபதி …
-
- 0 replies
- 319 views
-
-
தமிழர்களால் மறக்க முடியாத அந்தக் காலம் விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர் தமிழர்களின் அனைத் துச் செயற்பாடுகளும் அடியோடு மாறிவிட்டன. சமூகப் பழக்கவழக்கங்கள் மட்டுமல்லாது அரசியலிலும் தனிநபர்கள் மத்தியிலும் மாற்றத்தைக் காண முடிகின்றது. விடுதலைப் புலிகள் தமக்கென ஒரு தனியான அரசியல் பிரிவைக் கொண்டிருந்தனர். இதற்குப் பொறுப்பாகவும் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் தேர்தல்களில் இவர்கள் போட்டியிடுவதில்லை. இதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழர்களின் அரசியல் நீரோட்டத்தில் கலந்திருந்த முக்கியமான அரசியல் கட…
-
- 0 replies
- 365 views
-
-
தாமதித்தாவது அரசாங்கம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் ; ஜெஹான் பெரேரா நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை அரசாங்கம் தாமதித்தாலும் அதனை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கின்றது. கூட்டு எதிரணி மிகவும் பலமாக செயற்படுகின்றமையின் காரணமாக அரசாங்கம் இந்த விடயத்தில் தயக்கத்தை காட்டுகின்றது என்று தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலுவலகத்துக்கான ஆணையாளர்களை நியமிக்கும் சாத்தியம் இருந்தும் அதனை அரசாங்கம் தாமதிக்கின்றது. பெரும்பாலும் உள்ளூரா…
-
- 0 replies
- 311 views
-
-
வவுனியா மாவட்ட பேருந்து நிலையத்தின் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்! அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமையினால் வடக்குமாகாண வேலையில்லா பட்டதாரிகளால் இன்று(02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தின் போது சந்திரிக்கா ஆட்சியில் 65 ஆயிரம் மகிந்த ஆட்சியில் 20 ஆயிரம், நல்லாட்சியில்? நியமனம் வழங்குவதை துரிதப்படுத்து, அரசே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர். அத்தோடு இப்போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மகாண வேலையில்லா பட்டதாரிகளால் துண்டுப்பிரசுரங்களும் விநோயகிக்கப்பட்டன. தொடர்ந்தும் இப்ப…
-
- 0 replies
- 309 views
-
-
கடந்தகால ஊழல் குற்றங்களை கண்டறிவதில் அரசாங்கம் தயக்கம் : சம்பிக்க ரணவக்க உள்ளூராட்சி சபைத் தேர்தல் அனைத்தும் ஒரே தினத்தில் இடம்பெறுவது ஆரோக்கியமான விடயமாகும். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு தவிர்ந்த ஏனைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் புதிய முறையில் தேர்தல் நடத்தப்படும் என பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கடந்தகால ஊழல் குற்றங்களை கண்டறிவதில் இந்த அரசாங்கம் பின்வாங்குவதாகவும் அவர் தெரிவித்தார். பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறி…
-
- 0 replies
- 153 views
-
-
ஒருமாத காலம் தொழிலுக்கு செல்லாத முல்லைத்தீவு மீனவர்கள்:வாழ்வாதாரமின்றி தவிப்பு! முல்லைத்தீவில் மீனவர்கள் சுனாமி அச்சம் மற்றும் அண்மைய நாட்களில் கடல் சீரின்மை போன்றன காரணமாக ஒருமாத காலமாக தொழிலுக்கு செல்லவில்லை இதனால் வாழ்வாதாரமின்றி தவிப்பதாக கவலை தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது... முல்லைத்தீவு மாவட்டமானது சுனாமி மற்றும் இறுதி யுத்தம் போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு தற்போது மீள்குடியேறி சுமார் 8 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் முல்லைத்தீவில் கடற்றொழிலை நம்பி வாழும் சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்துக்காக போராடி வருகின்றனர். குறிப்பாக அதிகரித்துவரும் வெளிமாவட்ட மீனவர…
-
- 0 replies
- 369 views
-
-
இந்திய மீனவா்கள் 20 போ் கைது அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 20 போ் கைதுசெய்யப்பட்டனா். இந்தியாவின் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனா். பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா் மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் பின்னர் மீனவர்களை யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத்திணைக…
-
- 0 replies
- 224 views
-
-
உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடாக இருபது இலட்சம் ரூபா கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு அறிவிப்பு (எம்.சி.நஜிமுதீன்) சீரற்ற காலநிலையினால் உயிரிழந்த மீனவர் களின் குடும்பங்களுக்கு இருபது இலட்சம் ரூபா நஷ்டஈட்டுத் தொகை கிடைக்கவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு சகல பிரஜைகளுக்குமான காப்புறுதித் திட்டத்தின் கீழ் தேசிய காப்புறுதி நிதியத்தினூடாக பத்து இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் கடற்றொழில் மற்றும் நீரியல் வ…
-
- 0 replies
- 223 views
-
-
திங்கட்கிழமை இலங்கை வருகிறது ஐ.நா.செயற்குழு (ரொபட் அன்டனி) தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் மூவர் கொண்ட குழுவினர் நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கை வருகின்றனர். எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஐ.நா.செயற்குழு உறுப்பினர்கள் நாட்டின் மனித உரிமை நிலைமை குறித்து ஆராய்ந்து மதிப்பிடவுள்ளதுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். ஜோஸ் அன்டோனியோ லீ டூமி மற்றும் எலினா ஸ்டீனிர்ட் ஆகிய மூவரே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். ஐக்கிய நாடுகளின் இந்த விசேட நிபுணர்கள் பொலிஸ் நிலையங்கள் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு …
-
- 0 replies
- 285 views
-
-
பொது எதிரணியினர் ஐ.தே.க.வுடன் "டீல்' அமைச்சர் அமரவீர குற்றச்சாட்டு (எம்.சி.நஜிமுதீன்) கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இணைக்கும் பேச்சு வார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்வது தொடர்பில் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம்வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைக்கும் வக…
-
- 0 replies
- 197 views
-
-
பேச்சுவார்த்தைக்கு இனிமேல் இடமில்லை பொது எதிரணி தனித்தே போட்டி என்கிறார் கெஹெலிய (லியோ நிரோஷ தர்ஷன்) தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைத்துள்ள ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் எவ்விதத்திலும் ஒன்றித்து பயணிக்க முடியாது. எனவே இனி பேச்சுவார்த் தைக்கான வாய்ப்புகள் இல்லை. உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொதுஜன பெரமுன தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது என்று பேச்சுவார்த்தைக்கான எதிரணி இணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹேலிய ரம்புக்வல தெரிவித்தார். …
-
- 0 replies
- 224 views
-
-
தாழமுக்கம் சூறாவளியாக மாறியது சீரற்ற காலநிலை தொடரும் அபாயம் 61,125 பேர் பாதிப்பு; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு (ஆர்.யசி) வங்காள விரிகுடாவின் தாழமுக்க சுழல் காற்று இலங்கையை கடந்து அரபுக்கடலை நோக்கி நகர்ந்துள்ள போதிலும் தற்போது தாழமுக்கம் சூறாவளியாக மாறியுள்ளது. இலங்கைக்கு நேரடியான தாக்கங்கள் இல்லையென கூறப்படுகின்ற போதிலும் சீரற்ற காலநிலை தொடரும் எனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையின் காரணமாக இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காணாமல் போயுள்ளனர். 11 மாவட்டங்களில் மொத்தமாக 61 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு…
-
- 0 replies
- 449 views
-
-
மட்டக்களப்பு மீனவர்களின் வலைகளில் பாம்பு : மக்கள் மத்தியில் அச்சம் மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை கர வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலை கலிலும் பாப்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ள நிலையிலும் ஏது காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலையொன்று ஏற்பட்டுள்ளது. இதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்ப…
-
- 0 replies
- 252 views
-
-
வாழைச்சேனையில் பதற்றம் ; இரு சமூகங்களுக்கிடையில் முறுகல் வாழைச்சேனையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்றவரும் வாக்குவாதத்தால் வாழைச்சேனையில் பெரும் பதற்றம் நிலவிவருவதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அங்குள்ள பஸ்தரிப்பிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள நிலையில் குறித்த அடிக்கலலை இனந்தெரியாத நபர்கள் அகற்றியுள்ளதாகவும் இதனால் குறித்த பகுதியில் இரு சமமூகங்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் கலமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக எமது…
-
- 16 replies
- 2.3k views
-
-
வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பால் நோய்ப் பிரிவு நிபுணத்துவ மருத்துவர் பிரியந்த படகல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் வட மாகாணத்தில் எட்டு எயிட்ஸ் நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர் எனவும், இதில் 36 பேர் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எயிட்ஸ் நோய் தொடர்பில் போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், நோய் பரவுவதனை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டுடன் ஒப்…
-
- 11 replies
- 866 views
-
-
கனடாவில் ஈழத்தமிழருக்கு காத்திருந்த ஏமாற்றம்?? தொடரும் துயரம்... Report us Dias 3 hours ago ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் முதன் முறை பிரதம மந்திரியாக பதவியேற்று, ஒரு சமூதாயத்தை சார்ந்தவர்களுக்கு முக்கியமான ஒரு விடயத்தில் தன்னால் ஆன, உறுதியான முயற்சிகளை எடுப்பதாக கூறினார் என்றால் அதை வெறும் அரசியல் நோக்கில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. பிரதமர் ஜஸ்டின் Trudeau கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற 'தமிழ் தெரு விழாவில் முழங்கிய பேச்செல்லாம் வெறும் தேர்தல் பிரச்சாரம் போலவே தோன்றுகிறது. தேர்தலுக்கு முன்பாக தமிழ் சமூதாயத்திற்குக்கான மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வதாகவும், உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் நடந்…
-
- 1 reply
- 410 views
-
-
’யாழில் ஹெரோய்ன் டொபி’ மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதெனக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, யாழ்ப்பாணத்தில் “ஹெரோய்ன் டொபி” விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (30) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி, கல்வியமைச்சரிடம் கேள்விகளை கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அளித்த பதிலையடுத்தே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னதாகக் கேள்விகளை கேட்டிருந்த பத்திரண எம்.பி, பிரபல பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு பியர் கம்பனிகள் அனுசரணை வழங்குகின்ற…
-
- 2 replies
- 417 views
-
-
கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக நீடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் ஒரு விவசாயியாக இருப்பதால் இதை ஆனி அல்லது ஆடிக்கு மாற்றுவதையே விரும்புவதாக தற்போதைய வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார். முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சுக் காலத்தில் அவரால் முன்வைக்கப்பட்ட மரநடுகை மாதக்கருப்பொருள் 2014 ஆம் ஆண்டிலிருந்து வடமாகாண சபையின் ஒப்புதலுடன் செயல்வடிவமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் தெரிவு செய்யப்பட்டதற்கான பின்னனி பற்றி ஐங்கரநேசன் விளக்கும்போது தெரிவித்ததாவது; வடக்கில் மரநடுகையை முன்னெடுப்பதற்குச் சாலச்சிறந்ததொரு மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. எமது மண்ணுக்கு அதிக அளவு மழைவீழ்ச்சியைத்…
-
- 1 reply
- 745 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக வரதராஜ பெருமாள்? Report us Steephen 4 hours ago வடகிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆரம்பகால தலைவர்களில் ஒருவரான வரதராஜ பெருமாள் தற்போதும் ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா) அணியின் உறுப்பினராக இருப்பதுடன் அரசியலில் ஈடுபடுவதில்லை. வரதராஜ பெருமாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 1988ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாகாணசபைத்…
-
- 0 replies
- 476 views
-
-
கிளிநொச்சியில் பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சொகுசு பேரூந்தில் கடத்திச் செல்லப்பட்ட பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்குமாகாண சிரேஸ்ர காவல்துறை அதிபரின் வழிகாட்டலின் கீழ் இரவுவேலைகளில் பயணிக்கும் வாகனங்களை பரிசோதிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் பருத்துறையிலிருந்து மொனராகல நோக்கிச்சென்ற சொகுசு பேருந்தில் பயணபொதிகள் போன்று பொதி செய்யப்பட்ட 12கிலோக்கிராம் கஞ்சா காவல்துறையால் பளையில்…
-
- 0 replies
- 236 views
-
-
இலங்கையில் 1.6 மில்லியன் மாற்றுத் திறனாளிகள் இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் 1.6 மில்லியன் பேர் காணப்படுவதாகவும், இது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 7.9 வீதம் எனவும் மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு ஏற்ற வாழ்வாதாரங்களை வழங்கி பொருளாதார ரீதியாக பாதுகாக்க வேண்டும். சமூகத்தில் மதிப்பு பெற்று அவர்களும் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் . புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி ஒவ்வொரு 1000 ஆண்களில் 77 ஆண்களும் ஒவ்வொரு 1000 பெண்களில் 96 பெண்…
-
- 0 replies
- 267 views
-