Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : தேரர்களின் ரிட் மனு மீதான தீர்ப்பு அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பு 30 January 2026 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் குறித்த தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த போதிலும், தீர்ப்புர…

  2. நாமல் ராஜபக்ஷ சி.ஐ.டியில் முன்னிலை! 03 Feb, 2026 | 11:03 AM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ அத்திணைக்களத்தில் இன்று காலை 10.15 மணியளவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237678

  3. “கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு 02 Feb, 2026 | 03:56 PM சுதந்திர தினத்தை “கரிநாள்” என பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இவ்விதமாக அழைப்பு விடுத்தனர். மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர். https://www.v…

  4. கிவுல் ஓயா திட்டத்தினால் கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய, குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாயம் 02 Feb, 2026 | 07:02 PM கிவுல் ஓயா திட்டத்தினால் பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான சமூக, நில உரிமை மற்றும் பண்பாட்டு பாதிப்புகள் குறித்து நேற்றைய தினம் (01) இடம்பெற்ற சமூக மட்ட விழிப்புணர்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக…

  5. மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் மாநாடு ஹட்டனில் ஏற்பாடு 02 Feb, 2026 | 05:57 PM மலையகத் தமிழ் மக்களின் காணி, வீட்டு உரிமை, முறையான மாதாந்த சம்பளம் மற்றும் குடியுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சம உரிமை இயக்கம் மற்றும் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்து எதிர்வரும் புதன்கிழமை (04) ஹட்டனில் மாபெரும் மக்கள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 'மலையகத் தமிழ் மக்களே தளராது போராடுவோம்' எனும் கருப்பொருளின் கீழ் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஹட்டன் கிருஷ்ணபவன் கலாசார மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் இம்மா…

  6. தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பையும் மீறி வலி கிழக்கில் கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை நிறைவேற்றம் 02 Feb, 2026 | 03:58 PM தமிழ் மக்களின் பூர்விக தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழ் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் அரச கொள்கையின் திட்டமிட்ட தொடர்ச்சியாகவே கிவுல் ஓயாத்திட்டம் அமைகிறது எனத் தெரிவித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சபைக் கூட்டம் இடம்பெற்றது. கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான பிரேரணை சபையில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்னால் முன்வைக்கப்பட்டது. இப் பிரரேரணையினை சபையில் முன்வைக்க முடியாது என மத்தியில் ஆளும் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர…

  7. கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு 01 Feb, 2026 | 09:36 AM ஆர்.ராம் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிவுல் ஓயாத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காலை பத்து மணிக்கு நெடுங்கே பஸ்நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளவர்கள் ஒன்றுகூடவுள்ளதோடு அங்கிருந்து பேரணியாக வருகை தந்து வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் எதிர்ப்புக்கள் வெளியிடப்படவுள்ளதோடு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது. இந்தப்போராட்டத்த…

  8. சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு Feb 2, 2026 - 07:22 PM 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்வது மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தனியார் விண்ணப்பதாரர்கள் தமது அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திணைக்கள இணையத்தளத்திற்குச் சென்று தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளும் கால அவகாசம் 2026.02.10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும். திருத்தங்களுக்கான இந்தத் திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என பரீட்…

  9. யாழ். மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி நபரொருவர் பலி! 02 Feb, 2026 | 04:55 PM பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) மதியம் இராணுவ வாகனம் மோதியதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் வீதியை கடக்க முயன்றபோது அவர்மீது இராணுவ வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தை செலுத்திய பெண் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பலாலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/237632

  10. 49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு Feb 2, 2026 - 06:50 PM 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு, அவர்கள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், 75,000 ரூபாவுக்கும் குறைந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலமும் ரத்து செய்யப்படவுள்ளது. http…

  11. இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு 02 Feb, 2026 | 04:34 PM மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை இந்தியப் பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய மீட்புப் பணியைச் செய்து முடித்துள்ளது. பாகிஸ்தான் கரையில் இருந்து சுமார் 1,500 கி.மீ (800 கடல் மைல்) தொலைவில், நடுக் கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இலங்கை பிரஜை ஒருவரை பாகிஸ்தான் கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சர்வதேச அளவில் விடுக்கப்பட்ட அவசர அழைப்பை ஏற்று, மிக விரைவாகச் செயல்பட்டு இந்த நீண்ட தூர மருத்துவ மீட்புப் பணியை அவர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்தச் செயல் பாகிஸ்தான் கடற்படையின் திறமையை உலகிற்குக…

  12. கச்சத்தீவில் அரசியல் வேண்டாம் - வட மாகாண மீனவர் சங்கம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை அரசியல்மயமாக்க வேண்டாம் என வட மாகாண மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. வட மாகாண கடற்றொழில் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான அன்னலிங்கம் அன்னராசா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். கச்சத்தீவு வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக கச்சத்தீவு வரும் இந்திய மீனவர்கள், அங்கு இலங்கை - இந்திய மீனவ விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் அதனை யாத்திரைத் தளமாக மாத்திரம் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ள…

  13. திருகோணமலை சம்பவம் - கைதான தேரர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது. எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது. இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது,…

  14. ‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு Published By: Vishnu 02 Feb, 2026 | 04:41 AM கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் அமைகிறது. நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (01) முல்ல…

  15. 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே – adminJanuary 20, 2026 தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்ற நிகழ்வுகளில், தமிழ்க் கட்சிகள் குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஓரங்கட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வி.கே. சிவஞானம் இக்கருத்தை முன்வைத்தார். வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி சபைகளையும் கொண்டுள்ள தமிழ் அரசுக் கட்சியோ அல்லது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளோ ஜனாதிபதி நிகழ்வுகளில் மேடைகளில் காணப்படவில்லை. அரசாங்கத்தின…

  16. திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்! திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1462483

  17. பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு! 01 Feb, 2026 | 04:30 PM தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து, இன்று அதிகாலை 3.00 மணியளவில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தைத் தருமபுரம் பொலிஸார் சோதனையிட முற்பட்டனர். இதன்போது பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற டிப்பர் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர்கள் சேதமடைந்துள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதி தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகத் தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/a…

  18. நியூட்டனின் மூன்றாம் விதியை அன்றே சொன்னவர் வள்ளுவர்: வவுனியாவில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை 01 Feb, 2026 | 05:09 PM நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மனித குலத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு பொக்கிஷமாகத் திருக்குறள் விளங்குகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், 'மனித மாண்பு' எனும் தொனிப்பொருளிலான 7ஆவது சர்வதேச திருக்குறள் மாநாட்டின் முதலாம…

  19. இந்திய பட்ஜெட் 2026 - இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு Feb 1, 2026 - 01:35 PM இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும். "வளர்ச்சியடைந்த பாரதம்" என்ற இலக்கை மையமாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை" கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவியில் இம்முறை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு நிதியுதவியாக 400 கோடி இந்திய ரூபாயை (INR 400 Crore / 4 B…

  20. நல்லூர் முதல் நூலகம் வரை - யாழ் மண்ணை அலங்கரிக்கும் உலகக் கிண்ணம் 01 February 2026 ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, இன்று (1)உலகக் கிண்ணம் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுசெல்லப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் இடம்பெறும் இந்த கிண்ண சுற்றுப்பயணத்தில் இலங்கையின் பல இடங்களுக்கும் கிண்ணம் கொண்டு செல்லப்படும் நிலையில், யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. உத்தியோகபூர்வ பயணத் திட்டத்தின்படி, இன்று அதிகாலை தம்புள்ளையிலிருந்து புறப்பட்ட கிண்ணம் தாங்கிய ஊர்தி, மிஹிந்தலை, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய நகரங்களைக் கடந்து இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தைச் சென்றடையும். இதனையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற…

    • 1 reply
    • 162 views
  21. தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு adminFebruary 1, 2026 இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், உள்ளூர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அடையாளங்களை மறைத்து தொழிலில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரவு நயினாதீவு – நெடுந்தீவு இடையிலான பகுதியில் இந்திய இழுவைப்படகு ஒன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது. எல்லை தாண்டி வர வேண்டாம் என நயினாதீவு மீனவர்கள் எச்சரித்தபோது, இந்திய மீனவர்கள் அவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர், உடனடியாக இந்திய துணைத்தூதரக அதிகாரியை “வீடியோ கோல்” (Video Call) ஊடாகத் …

  22. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் கொண்டுவாருங்கள் எதிர்க்கட்சியிடம் அமைச்சர் பிமல் கோரிக்கை ; பலவீனத்தை மக்கள் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவிப்பு 01 Feb, 2026 | 10:45 AM (இராஜதுரை ஹஷான்) பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவேண்டும். அப்போது தான் எதிர்க்கட்சியினரின் பலவீனத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்வார்களென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச சகலவிதமான முறையற்ற செயற்பாடுகளுக்க…

  23. காத்தான்குடியில் யுவதி பாலியல் துஷ்பிரயோகம் ; கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி 3ம் திகதி வரை விளக்கமறியல் 01 Feb, 2026 | 03:38 PM காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து, மூன்று மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (30) உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவரும், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சட்டத்தரணியாக கடமையாற்றி வருபவருமான ஒருவர், தனது பிரதேசத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த,…

  24. தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம் adminFebruary 1, 2026 யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் முன்னெடுக்கப்பட்டது. போராட்ட களத்தில் பெருமளவான காவல்துறையினா் குவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globalta…

  25. யாழில். மாவைக்கு சிலை திறப்பு adminJanuary 31, 2026 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் யாழ் – காங்கேசந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள , தனியார் காணியில் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மறைமாவட்ட ஆயர் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.