ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
03 FEB, 2025 | 08:26 PM (எம்.வை.எம்.சியாம்) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்டக்குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இதனிடையே வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தும் 68 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : பல மாற்றங்களுடன் ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள் 04 FEB, 2025 | 06:38 AM (எம்.மனோசித்ரா) இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்' என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டத்துக்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று காலை ஏழு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன. பிரதமர் உட்பட ஏனைய பிரதம அதிதிகளின் வருகையை அடுத்து எட்டு மணிக்கு…
-
-
- 11 replies
- 790 views
- 2 followers
-
-
இழுவைமடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படும் இந்த மீன்பிடி முறைமையை நிறுத்த வேண்டும் எனக் கூறிய இலங்கையின் கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்> கடலுக்கு அடியில் வலைகளைப் பயன்படுத்தும் இழுவைமடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படுவது இந்திய கூலித்தொழிலாளர்களே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த படகுகளின் உரிமை இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்கு சொந்தமானது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 'அந்த செயற்பாடு என்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அந்த இழுவைமடியில் இழுவைப் படகுகளில் வருகின்றவர்கள் மீன் பிடிக்க வருகின்றவர்கள்…
-
- 0 replies
- 145 views
-
-
உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டால் மகிந்த வசிப்பிடத்தை காலி செய்யத் தயார் – SLPP அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வழங்கினால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயார் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நல்லாட்சி அரசாங்கத்தினால் உத்தியோகப்பூர்வ இல்லம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வெளியேற வேண்டுமாயின் உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வழங்குமாறும் தெரிவித்தார். அவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டால், மஹிந்த ராஜபக்ஷ அங்கு சில கணங்கள் தங்கமாட்டார் எனவும், அது தொடர்பில் கருத்த…
-
- 0 replies
- 215 views
-
-
திருகோணமலை - வீரநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு பிரதேசத்தை கடலரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு கல்வேலி நிர்மாணிக்கும் பணி இன்று (3) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆரம்பித்து வைத்தார். பொதுமக்களின் குடியிருப்புப் பகுதியை மையமாகக் கொண்டு, இந்த கல்வேலி, 100 மீட்டர் நீளத்திலும் 2 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படவுள்ளது. மக்களின் தேவை இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், நீண்ட காலமாக மக்களின் தேவையாக இருந்த இந்தப் பிரதேச மக்களின் குடியிருப்புகளை பாதுகாப்பதற்கு புதிய அரசாங்கத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, ரூபாய் 6.47 மில்லியன் ந…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
03 FEB, 2025 | 08:09 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதால், மக்கள் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அரச இயந்திரங்கள் தொடர்ந்தும் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச்செய்தால் மக்கள் வீதிகளிலா குடியிருப்பது எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (3) நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணுக்காய் பிரதேச ச…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
50 மீற்றர் தொலைவிலுள்ள பாடசாலை மைதானத்துக்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்! 03 FEB, 2025 | 08:13 PM கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் தங்களது பாடசாலைக்கு முன்பாக 50 மீற்றர் தொலைவில் உள்ள மைதானத்திற்கு சுமார் ஒரு கிலோ மீற்றர் நடந்து சென்று வரும் அவலத்தை தீர்த்து தருமாறு பாடசாலை சமூகம் புதிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மாணவர்கள் பாடசாலையின் நிகழ்வுகளுக்கு மைதானத்திற்கு செல்ல வேண்டுமாயின் பாடசாலையின் வீதிக்கு வருகை தந்து அங்கிருந்து ஏ9 பிரதான் வீதி வழியாக மத்திய விளையாட்டு மைதானத்தை ஊடறுத்து கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்திற்கு செல்ல வேண்டும். இதற்காக மாணவர்கள் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு நடந்து …
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
03 FEB, 2025 | 05:28 PM சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தோடு புதியதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்று ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது கூறியது. இப்போது முந்தைய அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட அதே ஒப்பந்தத்தை அதே வழியில் முன்னெடுத்து வருகின்றது. இவற்றுக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறேன். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அரசாங்க…
-
- 1 reply
- 160 views
- 1 follower
-
-
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் 3 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவும் செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்திற்காக ஜனாதிபதி இலங்கை விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.. இந்தப் பயணத்திற்கு இலங்கை விமானப்படையின் எந்த விமானமும் பயன்படுத்தப்படவில்லை என்றும், ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ காரிலேயே பயணம் செய்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. R Tamilmirror Online || விமானங்களை பயன்படுத்தினாரா ஜனாதிப…
-
- 0 replies
- 374 views
-
-
யாழின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட பழைய மாணவர்கள்! யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடலின்போது, 2010ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த மாட்டுவண்டி பவனி முன்னெடுக்கப்பட்டது. பவனியில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகளை சுற்றி பவனியாக வலம் வந்தபோது வீதியில் சென்ற மக்கள் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு உற்சாகமூட்டுவதை அவதானிக்க முடிந்தது. தமிழர்களின் பாரம்பரியத்தை பேணிக்காப்பதற்கு இவ்வாறான செயற்பாடுகளின் ஈடுபடுகின்ற பழைய மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். …
-
-
- 4 replies
- 597 views
-
-
யாழில். 575 ஏக்கர் தனியார் காணியில் இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகள்! adminFebruary 3, 2025 யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள், இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற போது, மீள் குடியேற்றம் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பிலான விடயம் கலந்துரையாடப்பட்ட போதே அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 1775.27 ஏக்கர் காணி இராணுவத்தினரிடமும் , 160.67 ஏக்கர் காணி , கடற்படையினரிடமும் , 660.05 ஏக்கர் காணி வி…
-
-
- 4 replies
- 310 views
-
-
அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்பிற்கும், விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளிற்கும், குழந்தைகள் உட்பட அவர்களின் குடும்பத்தவர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை நீடிக்கின்றது - ஐநா அமைப்பிற்கு ருத்திரகுமாரன் கடிதம் Published By: RAJEEBAN 03 FEB, 2025 | 04:03 PM முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நிமிடங்களில் தங்கள் பிள்ளைகளுடன் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் என பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கியநாடுகளின் செயற்குழு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்த…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக வெளிவந்த முக்கியத் தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிடுவதற்கு அசாத் மௌலானா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீர். மேலும் பல தகவல்களை வழங்க தயாராகவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் அசாத் மௌலானா நாடு திரும்புவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அசாத் மௌலானா அரசியல் தஞ்சம் கோரி வெளிநாட்டில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அசாத் மௌலானா, சுயவிருப்பின் பேர…
-
- 3 replies
- 277 views
-
-
ட்ரம்பின் நிதியுதவி முடக்க அறிவிப்பால் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு! USAID (சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி) நிதியுதவியை முடக்குவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் முடிவு, இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனத் துறையை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களின் தொழிலை பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் பல நிறுவனங்கள் நிதியுதவி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் திட்டங்களைத் தக்கவைக்க போராடுகின்றன. மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் பெண்கள் மற்றும் LGBTQ உரிமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்கள் US…
-
- 0 replies
- 229 views
-
-
புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் ஆரம்பம்! டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1419517
-
- 1 reply
- 138 views
-
-
வாகன இறக்குமதியை எளிதாக்க தயார் நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம்! 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதியை இலகுபடுத்துவதற்கு இலங்கையின் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் தயாராக உள்ளது. 2024 இல், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 579,362 வாகனங்களை விடுவித்துள்ளது, இது 2023 இல் 238,997 ஆக இருந்தது. இறக்குமதி மற்றும் டிரான்ஸ்ஷிப்மென்ட் வாகனங்கள் இரண்டையும் கையாளும் வகையில் குறைந்தபட்சம் 4,000 வாகனங்களை சேமிக்கும் திறன் கொண்ட முற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வில்சன் கியூ குறிப்பிட்டார். வாகனம் கையாளும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்பு…
-
- 0 replies
- 194 views
-
-
03 FEB, 2025 | 12:34 PM அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) உயிரிழந்தார். திடீரென சுகவீனமுற்ற நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். இளைனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டவர் ஆவார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 03 FEB, 2025 | 11:34 AM பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்து வரவேண்டும் என்றால் அவர்களது ஒவ்வொரு செயற்பாடுகள் தொடர்பிலும் கண்காணிப்புடன் இருங்கள். தற்போதைய இளம் சமூகத்தை திசைதிருப்பும் வகையில் பல்வேறு விடயங்கள் நடக்கின்றன. அவற்றில் சிக்காமல் உங்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என பெற்றோர்களிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். ஏடு நிறுவனத்தால் மாணவர்களுக்கான கற்றல் உதவிகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக…
-
-
- 1 reply
- 174 views
- 1 follower
-
-
03 FEB, 2025 | 10:38 AM தேசிய மக்கள் சக்தியின் மேலும் ஒரு பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், எஸ்.ஸ்ரீ. பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கட்சி உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். மக்களின் நலன் கருதி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/205652
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 03 FEB, 2025 | 11:22 AM இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபரும் நிர்வாகியுமான தேசமான்ய கந்தையா பலேந்திரா (கென்) தனது 85ஆவது வயதில் காலமானார். 1940 ஆம் ஆண்டு பிறந்த பாலேந்திரா இலங்கையிலும் அதன் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மிகப்பெரிய கூட்டு நிறுவனமான John Keells Holdings Ltd இன் முதல் இலங்கைத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அவர் பிரண்டிக்ஸ் லங்கா லிமிடெட் மற்றும் கொமன்வெல்த் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். https://www.virakesari.lk/article/205660
-
-
- 27 replies
- 1.6k views
- 2 followers
-
-
“தையிட்டி விகாரை விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திசைதிருப்பியதும், ஏனையவர்கள் அமைதியாக இருந்ததும் வேதனையளிக்கிறது; கஜேந்திரகுமாருக்கு பக்கபலமாக கதைத்திருக்கவேண்டும்” Published By: Rajeeban 03 Feb, 2025 | 11:26 AM ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தலைமையில் இடம்பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி விகாரை விவகாரம் குறித்து ஜனாதிபதி பதிலளிக்கவிருந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா இராமநாதன் இந்த விடயத்தை திசைதிருப்பியதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் வாய்திறக்காமல் விட்டதும் மிகப் பெரிய பிழையாகும் என தையிட்டி காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் தெரிவித்து…
-
-
- 3 replies
- 330 views
-
-
அரச சேவை சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு February 3, 2025 07:42 அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த விஜேபால, அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார். https://tamil.adaderana.lk/news.php?nid=199666
-
- 0 replies
- 96 views
-
-
மனித உரிமை குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்க இராஜதந்திர குழு ஜெனிவாக்கு பயணம் SapthaviFebruary 3, 2025 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இராஜதந்திர சிறப்புக் குழு எதிர்வரும் 23ஆம் திகதி ஜெனிவாவுக்கு விஜயம் செய்கிறது. இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து விசேட அறிக்கையை இலங்கை தரப்பு சமர்ப்பிக்க உள்ளதுடன், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான நீண்ட தெளிவுபடுத்தலை முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும…
-
- 0 replies
- 67 views
-
-
ஜனாதிபதி அநுரவின் யாழ். பயணம் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சு! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய யாழ்ப்பாண பயணத்தின் போது இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் திகதி ஜனாதிபதியின் பயண ஏற்பாடுகள் தொடர்பில் இணையத்தில் பரவிய செய்திகள் முற்றிலும் தவறானவை என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்காக விமானப்படையின் விமானங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ காரில் பயணித்ததாகவும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டு…
-
- 1 reply
- 110 views
-
-
மாவையின் உடல் தகன மயானத்தில் தடை விதிக்கப்பட்ட 19 நபர்கள்: சர்ச்சையை கிளப்பிய பதாகை By Sajithra 11 hours ago இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அந்த பதாகையில், மாவையின…
-
- 0 replies
- 214 views
-