ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
ரணிலின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்தார் மல்வத்துப்பீட செயலாளர் புதிய அரசியலமைப்பு அவசியமற்றது என்பதை இரண்டு பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைப்படியே அறிவிக்கப்பட்டதாக அஸ்கிரிப்பீட செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று முன்தினம் கூடிய அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான சங்க சபையில் புதிய அரசியலமைப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதனையடுத்து தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தேவையற்றத…
-
- 1 reply
- 294 views
-
-
ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமா? சபையில் தினேஷ் , பிரதமர் ரணில் இடையே வாக்குவாதம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் இன்னும் அமைச்சரினால் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை. ஆகையால் ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படுமா? இல்லை தாமதிக்கப்படுமா? என தினேஷ் குணவர்தன எம்.பி வினவிய போது சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது எழுந்த வாக்குவாதத்தை அடுத்து உள்ளூராட்சி மன்ற சட்டமூலத்தில் திருத்தங்கள் பல செய்ய வேண்டி உள்ளமையினால் இது தொடர்பிலான அறிக்கையை அமைச்சர் அடுத்த வாரம் அ…
-
- 0 replies
- 334 views
-
-
பௌத்த மேலாதிக்க சிந்தனையின் அடிப்படையே இடைக்கால அறிக்கை கிளிநொச்சி மக்கள் கருத்து சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையின் அடிப்படையிலேயே இலங்கையின் புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சியில் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இலங்கையின் அரசியலமைப்புச் சபையின் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான மக்கள் கருத்தறியும் கலந்துரையாடல் ó¼அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு கருத்துரைத்தனர். ம…
-
- 0 replies
- 159 views
-
-
நிலைமாறுகால நீதி செயற்பாடு அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப் தெரிவிப்பு (ரொபட் அன்டனி) பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கான நிலைமாறுகால நீதி செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது. இந்த விடயத்தில் அரசியல் முன் னெடுக்கப்படுமானால் நிலைமாறு கால நீதி செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட்டுவிடும். இது நீதி செயற்பாடுகளாகும். மாறாக அரசியல் திட்டம் அல்ல என்பதனை எப்போதும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மோதல் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் தெர…
-
- 0 replies
- 542 views
-
-
யாழில் வங்கி கணக்கில் இருந்து 19 இலட்ச ரூபாயை மோசடி செய்த பெண்கள் ஐவர் விளக்கமறியலில்… வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த பெரும்பான்மையின பெண்கள் ஐவர் விளக்கமறியலில் வைக்கபட்டு உள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக தென்னிலங்கை முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக நுழைவு விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார். விசா பெறுவதற்கு அவரது வங்கி கணக்கில் 20 இலட்ச ரூபாய் பணம் மீதியாக இருக்க வேண்டும் என முகவர் நிறுவனம் கூறியுள்ளது. அதற்கமைவாக 20 இலட்ச ரூபாய் பணத்தினை தனது கணக்கில் வைப்பிலிட்டுள்ளார். அதன் பின்னர் வங்கி கணக்கு புத்தகம்…
-
- 0 replies
- 281 views
-
-
டெங்கு ஒழிப்பு பிரிவை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திய இனம்தெரியாத நபரினால் யாழ்.திருநெல்வேலி பகுதியில் பதட்டம்.. டெங்கு ஒழிப்பு பிரிவை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திய இனம்தெரியாத நபரினால் யாழ்.திருநெல்வேலி பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , திருநெல்வேலிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இனம் தெரியாத நபர் ஒருவர் தன்னை டெங்கு ஒழிப்பு பிரிவைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டு வளவுகளுக்குள் புகுந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டு உரிமையாளர்களின் பெயர் விபரங்களை தான் கொண்டு வந்திருந்த கோவையில் (பையில்) பதிவு செய்துகொண்டார். இவ்வாறாக ஒரு சில வீட்டு வளவுகளுக்குள…
-
- 0 replies
- 255 views
-
-
வவுனியாவில் கத்திக்குத்து : சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலி வவுனியா, குடியிருப்பு பூங்கா வீதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வாரிக்குட்டியூரை சேர்ந்த கனகராசா (வயது-56) என்பவர் குடியிருப்பு பூங்கா வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் பணிபுரியும் வர்த்தகருக்கு கொடுத்த பணத்தினை மீள்ப்பெற சென்றுள்ளார். அச் சமயத்தில் குறித்த இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கத்திக்குத்தில் முடிவடைந்தது. இதன் போது பணத்தினை மீளப்பெறச் சென்ற கனகராசா சம்பவ இடத்திலிலேயே உயிர…
-
- 0 replies
- 319 views
-
-
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வவுனியாவுக்கான விஜயத்தினை முன்னிட்டு வவுனியாவில் பலத்த பாதுப்பு போடப்பட்டுள்ளதுடன் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் பூரண வழிகாட்டலுடன் உத்தியோக பூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவையின் இறுதி நாள் நிகழ்வுகள் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமாலான்சவினதும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவினதும் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று காலை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரில்…
-
- 0 replies
- 217 views
-
-
தீபாவளி தின அடிதடிகளில் 29 பேர் காயம் யாழ்ப்பாணத்தில் தீபாவளி தினமான நேற்று ஒரே நாளில் மட்டும் அடி தடி, வாள்வெட்டுக்களில் காயமடைந்த 29 பேர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 23 பேரும், பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் 6 பேரும் நேற்றுச் சேர்க்கப்பட்டனர். வட்டுக்கோட்டையில் இருந்து 3பேரும், சாவல்காட்டுப் பகுதியில் இருந்து 5 பேரும், மானிப்பாயில் இருந்து 2 பேரும், நாவற்குழிப் பகுதியில் இருந்து 3 பேரும், மாதகல் இருந்து 2 பேரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். …
-
- 9 replies
- 692 views
-
-
முல்லைத்தீவில் ஏழு யுவதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்; மணமக்கள் புளகாங்கிதம்! இலங்கையின் வடக்கே முல்லைதீவு தண்ணீரூற்று பகுதியில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஏழு திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. தண்ணீரூற்று ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்திலேயே குறித்த திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. திருமணம் முடிப்பதற்கு வசதியற்ற நிலையில் இருந்த யுவதிகளுக்கு இன்றைய தினம் ஒரே ஆலயத்தில் மேற்படி திருமணம் முடித்துக்கொடுக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன. அகில இலங்கை இந்துமா மன்றம் மற்றும் சைவ முன்னேற்ற சங்கத்தின் லண்டன் கிளை ஆகியவற்றின் ஏற்பாட்டிலேயே குறித்த திருமண நிகழ்வு இன்றைய தினம் காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.…
-
- 2 replies
- 673 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (20-10-2017)
-
- 0 replies
- 476 views
-
-
உயிருக்குப் போராடிய தமிழக மீனவர்களை மீட்ட இலங்கை மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்குப் போராடிய தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை தமிழக மீனவர்களின் நாட்டுப் படகு ஒன்று ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது கடல் சீற்றம் காரணமாக குறித்த படகு கடலில் மூழ்கியது. படகு மூழ்கியதால் செய்வதறியாது திகைத்து நின்ற மீனவர்கள் ஏழு பேரும் உயிருக்குப் போராடியபடி இருந்தனர். சர்வதேச கடல் எல்லையில், கொழும்புக்குத் தென்கிழக்குப் பகுதியில், 28 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அப்போது, மீனவர்கள் சிலர் உயிருக்குப் போராடியபடி இருப்பதைக் கண்ட இலங்கை மீனவர்கள், உ…
-
- 0 replies
- 404 views
-
-
அனிகாவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு பிணைமுறி விவகாரத்தில், முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவின் நெருங்கிய உறவினர்களால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் அனிகா விஜயசூரியவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரணை நடத்தப்பட்டு வரும் பிணைமுறி விவகாரத்தில், தனக்குச் சொந்தமான ஒரு வீட்டை அர்ஜூன் அலோஷியஸுக்கு அனிகா விஜயசூரிய வாடகைக்குக் கொடுத்திருந்தார். அர்ஜூன் அலோஷியஸ் அந்த வீட்டை ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கியிருந்ததுடன், அதற்கான வாடகையையும் அர்ஜூனே செலுத்தியதாகக் கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரத்தில், ஜனாதிபதி ஆணைக்குழு முன் விளக்கமளித்த …
-
- 0 replies
- 265 views
-
-
65 சதவீத பாலியல் துஷ்பிரயோகங்கள் சுய விருப்பத்துடன் நடப்பவை கிடைக்கப்பெறும் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளில் 65 சதவீதமானவை பெண்களின் சம்மதத்துடன் நடப்பவை என பொலிஸ் பகுப்பாய்வு புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. அப் புள்ளிவிபர தகவலின் படி 2016 ஆம் ஆண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் மொத்தமாக 2036 ஆகும். இதில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 350ம், 16 வயதிற்குட்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 1686ம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 16 வயதிற்குட்பட்ட யுவதிகள் சுய விருப்பத்துடன் ஆணுடன் உறவு கொண்டாலும் பாலியல் துஷ்பிரயோகம் என்றே கருதப்படும். இவர்களில் 1394 யுவதிகள் அ…
-
- 0 replies
- 342 views
-
-
யாழ்ப்பாணத்தில் அனைவருக்கும் வாழ்வாதாரங்களை வழங்குமாறு நோர்வே தூதுவரிடம் கோரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தவிர்ந்த ஏனைய மக்களுக்கும் வாழ்வாதார திட்டங்களை வழங்குமாறு நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசடாதிடம் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசாட்சதர் (thorbjorn gausadaether) மற்றும் அவரது குழுவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது, யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றம் உட்பட உட்கட்டமைப்பு வசதிக…
-
- 3 replies
- 440 views
-
-
அரசியல் கைதிகளின் வழக்குகள் மாற்றப்படுமா? அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சிறந்த தீர்வொன்றை வழங்க வேண்டும் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்பது தொடர்பில் காத்திரமான பதிலை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார். https://news.ibctamil.com/ta/internal-affairs/-pol…
-
- 0 replies
- 176 views
-
-
சவாலைக் கடக்குமா அரசு? புதிய அரசமைப்பு முயற்சிகளை மகாநாயக்க பீடங்கள் எதிர்த்துள்ளன. இலங்கை பன்மைத்துவச் சமூகமாக, எதிர்காலத்தை நோக்கிய முற்போக்குச் சமூகமாக மாறுவதை தமது பௌத்த மேலாதிக்க வாதத்துக்காக ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்பதை இந்த எதிர்ப்பின் மூலமாக பௌத்த பீடங்கள் தெளிவுபடுத்திவிட்டன. புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கையில் நாட்டின் தன்மை குறித்துப் பெரிதான மாற்றம் எதுவும் நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை. 30 வருடகால உள்நாட்டுப் போரின் பின்னர், பெரும் இழப்புக்கள் துயரங்களின் பின்னர், அதன் படிப்பினைகளில் இருந்து கற்றுக்கொண்டு எதிர்கால உலகை நோக்கித் தயாரிக்…
-
- 0 replies
- 326 views
-
-
இரட்டைக் கொலையில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஏறாவூர், சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலையில் உயிரிழந்த மாணவனான பி.மதுசானுக்கு நீதிகோரி இன்று வெள்ளிக்கிழமை இன்று காலை 7 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட மாணவன் கல்வி பயின்ற பாடசாலையான குடியிருப்பு கலைமகள் வித்தியாலய பாடசாலயில் இருந்து மாணவர்கள் மற்றும் பழையமாணவர்கள் ஆசிரியர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பில் இருந்து பேரணி ஆரம்பித்து மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள சிறுவர் நன்நடத்தை அலுவலகத்துக்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொலையாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்களின் பாது…
-
- 1 reply
- 1k views
-
-
வடக்குக்கான மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சியில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்க மாகாணத்திற்கான மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையத்தினை கிளிநொச்சியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ( 20.10.2017 ) நடைபெற்றது. சமூக சேவைகள். நலன்பரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வட மாகாணத்துக்கான மாற்றுவலுவுள்ளோருக்கான அமைக்கப்படவுள்ள இப்பயிற்சி நிலைய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சமூக சேவைகள். நலன்பரி மற்றும…
-
- 0 replies
- 265 views
-
-
அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பு நல்குவர் அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளுக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பில் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என்ற உறுதிமொழியை ஜனாதிபதிக்கு வழங்குகின்றேன். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் மக்களின் பூரண ஆதரவு கிடைக்கும். இந்த தீபாவளி தினத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை போலவே அடுத்த தீபாவளியில் அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொண்டு பூரண சமாதானத்துடன் கொண்டாடுவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற …
-
- 3 replies
- 448 views
-
-
வித்தியா கொலை வழக்கு : பொலிஸாருக்கு பணப்பரிசு எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு 13 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண சபை நுண்கலை கேந்திர நிலையத்தில் இன்று (20) சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்ணாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே அமைச்சரால் குறித்த பண பரிசில் வழங்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றபுலனாய்வு திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் சுதத் நாஹமுல்ல, விசாரணைகளை நெறிப்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்கள உதவி பொலிஸ…
-
- 1 reply
- 346 views
-
-
ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தி இல்லை. – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கவலை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தி இல்லை எனவும் ஜனாதிபதி சாதகமான பதிலை கூறாதது எமக்கு ஏமாற்றத்தையே தந்து உள்ளது என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைகழகத்தில் , அனைத்துபீட மாண…
-
- 0 replies
- 204 views
-
-
சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 0 SHARES ShareTweet பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 20.10.2016 அன்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு யாழ். பல்கலையில் இன்று இடம்பெற்றது. http://newuthayan.com/story/38613.html காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஓராண்டு நினைவேந்தல் .. யாழ்.காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்…
-
- 1 reply
- 692 views
-
-
இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமிழருக்கு பெரிதும் உதவா இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் சவால்களை வென்றெடுப்பதற்கு இந்தியா உட்பட உலக நாடுகளின் பங்களிப்பை சமகால பூகோள அரசியலில் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது என்று வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். இந்தியப் பயணத்தின்போது இதனை உணரக் கூடியதாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஓ.பி ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகத்தின் அரச மற்றும் பொதுத்துறைக் கொள்கையாக்கல் கல்லூரியால் வடக்கு ம…
-
- 6 replies
- 823 views
-
-
இன்று நள்ளிரவு முதல் புகையிரத பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு.! ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து அரசாங்கம் காலத்தை கடத்துவதாக குற்றம் சுமத்தி இன்று நள்ளிரவு முதல் புகையிரத பணியாளர்கள் காலவரையறையின்றியபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அரசாங்கத்துடனான எந்த பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்காதமையே இதற்கு காரணமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சம்பள உயர்வு கோரிக்கையினை முன்வைத்து கடந்த மாதம் 18 ஆம் திகதி புகையிரத பணியாளர்கள் பணிபகிஸ்கரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் அவர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கடந்த மாதம் 20 ஆம் திகதி பிர…
-
- 1 reply
- 409 views
-