ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143347 topics in this forum
-
இறுதி அறிக்கை வரும்வரை பொறுமை காத்தல் அவசியம் “தற்போது வெளிவந்திருப்பது இடைக்கால அறிக்கை. இதுவரை பொறுமைகாத்த நாங்கள் இன்னும் கொஞ்சக் காலம் பொறுமை காத்தால் இறுதி அறிக்கை வரும். அதற்கு முன்னரே – இடைக்கால அறிக்கையை நாம் தூக்கி எறிவது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. புதிய அரசமைப்பு முயற்சியை நாமே குழப்பிக் கொண்டதாக இருக்கக் கூடாது” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார். புதிய அரசமைப்பு முயற்சியில் அமைக்கப்பட்ட உபகுழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்கியிருந்தார். இந்த …
-
- 3 replies
- 544 views
-
-
சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை நாட்டுக்கும் இனத்திற்கும் எதிரானது : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்புடையதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் மேற்கொண்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.எனினும், சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெ…
-
- 1 reply
- 293 views
-
-
வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் மூன்று மாதங்களில் விடுவிக்கப்படும் வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று மாதங்களில் படையினர் வசம் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பாக மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வவுனியா மன்னார் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் வசம் உள்ள பாடசாலைகள¸; ஆலயங்கள்¸ தேவாலயங்கள்¸பள்ளிவாசல்¸விகாரைகள்¸சுகாதார நிறுவனங்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று…
-
- 0 replies
- 396 views
-
-
இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக திருமதி சார்ள்ஸ் இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக பி.எஸ்.எம்.சார்ள்ஸை அமைச்சரவை இன்று (26) நியமித்துள்ளது. இலங்கைச் சுங்கத்தின் இயக்குனர் ஜெனரலாக கடந்த இரண்டு வருடங்களாகப் பணியாற்றிய சூலானந்த பெரேராவுக்குப் பதிலாகவே சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு பிரதேச செயலகத்தின் செயலாளராகக் கடமையாற்றிய சார்ள்ஸ், அரச நிர்வாக சேவையில் இருபத்தாறு வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த நிலையிலேயே அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/arti…
-
- 1 reply
- 313 views
-
-
தொடருந்து மோதி ஒருவர் சாவு- அறிவியல் நகரில் சற்றுமுன் சம்பவம் Share கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் சற்றுமுன் நடந்த தொடருந்து விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகின்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்து மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளது. பாதுகாப்பற்ற இடத்தில் தொடருந்துத் தடத்தைக் கடக்க முயன்ற சமயம் விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் இதுவரை இனங்காணப்படாத நிலையில், கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://newuthayan.com/story/32343.html
-
- 2 replies
- 405 views
-
-
இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல் : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம் (ஆ.பிரபுராவ் ) மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 20 இலட்சம் ரூபா பெறுமதியான உயிர், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஓமினி ரக கார் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த உச்சிப்புளி பொலிஸார் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை விசேட பொலிஸ் குழு அமைத்து தேடி வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகொன்றில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உச்சிப்புளி பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரப்பன்வலசை என்னும் பகுதியி…
-
- 0 replies
- 233 views
-
-
ஒற்றையாட்சி என்ற பதம் ஒருபோதும் மாறக்கூடாது காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலும் தீர்மானம் இல்லை என்கிறது சு.க. (ஆர்.யசி) வடக்கின் நிலைப்பாடும் விக்கினேஸ்வரனின் பிரிவினை செயற்பாடுகளுமே அதிகார பகிர்வு தொடர்பில் அச்சத்துடன் சிந்திக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிய அதிகார பகிர்வானது நாட்டில் பிளவினையே உருவாக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. அதிகாரப்பகிர்விற்கு நாம் தயார் ஆயினும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதில் தீர்மானம் இல்லை எனவும் அந்தக் கட்சி குறிப்பிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த செய்தி…
-
- 1 reply
- 792 views
-
-
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவு ஒக்டோபர் 5இல் (எம்.சி.நஜிமுதீன்) 2017 ஆம் கல்வியாண்டுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி வெளியிடப்படவுள்ளன. இதேவேளை க.பொ.த. உயர்தரப்பரீட்சை முடிவுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளன. அதற்கான சகல ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் பாடசாலை மட்டத்தில் நடத்தப்படும் பரீட்சை பெறுபேறுகள் தாமதப் படுவதனால் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக்கொண்…
-
- 0 replies
- 505 views
-
-
இலங்கை: அத்தியாவசிய உணவு பொருட்களை தவிர இறக்குமதிக்கு தடை அத்தியாவசிய உணவு பொருட்கள் தவிர ஏனைய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை ஆண்டுதோறும் 25 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதி செலவிட்டு வருவதாக தெரிவித்தார். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் பெரும்பாலானவை எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியவை என்று கூறியுள்ள ஜனாதிபதி, அவற்றை எமது நாட்டில் உற்பத்த…
-
- 0 replies
- 366 views
-
-
வடக்கு -– கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்கள் துணைபோகார் முஸ்லிம் காங்கிரஸ் சபையில் தெரிவிப்பு “வடக்கு -– கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ துணைபோக மாட்டார்கள். கிழக்கு முஸ்லிம்க ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப் ப।ின் செயற்பாடு அதிருப்தி அளிக்கின்றது. நாம் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்து விட்டோம். முஸ்லிம் இளைஞர்கள் விரக்தியுடன் உள்ளனர்” இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரும் பிரதி அமைச்சருமான ஹரிஸ் நாடாளுமன்றில் நேற்றுத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு கூட்டமைப்பு திட்டமிட்டு வர…
-
- 1 reply
- 269 views
-
-
அமைச்சரவையில் வாக்குவாதம் (நமது நிருபர்) பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேராவும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தலைமை யில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் அமைச்சரவைக்கூட்டம் இடம்பெற்றது. இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட இரு அமைச்சர்களும் கடும் தொனியில் வாக்குவாதப்பட்டனர். பௌத்த சாசன அமைச்சுக்குள் வரும் பௌத்த துறைசார்ந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான காணியில் நகர அபிவிருத்திக்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர் காமினி …
-
- 0 replies
- 366 views
-
-
வாள்வெட்டு, திருட்டுகள் தொடர்பில் சிறப்புக் கூட்டம்! – இராணுவ தளபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம் ஒன்று இராணுவத் தளபதி தலைமையில் நடைபெறுகின்றது. துன்னாலையில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் நடந்த வாள்வெட்டு, திருட்டு, குற்றச் செயல்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளர்களை விடுவிப்பது தொடர்பாகவும் அதில் ஆராயப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. http://newuthayan.com/story/23043.ht…
-
- 10 replies
- 660 views
-
-
சிறுபான்மை இன அரசியல் தலைவர்களின் இயலாமை நிருபணமாகிவிட்டது.. நல்லாட்சி அரசு கொண்டுவந்த சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படக் கூடிய மாகாண சபை தேர்தல் முறை மாற்ற சட்டமூலத்தில், சிறு பான்மையின மக்களுக்கு இருந்த பாதிப்பை குறைத்துவிட்டதாகசிறுபான்மையின அரசியல் வாதிகள் பெருமை பேசுவதை பார்க்கும் போது நகைப்புக்குரியதாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்… இந்த நல்லாட்சி அரசானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது பலவாறான குற்றச் சாட்டுக்களை முன்னிறுத்தி கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் சிறுபான்மையின மக்கள் முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இனவாதிகளுடன் இணைந்து சிறுபான்ம…
-
- 0 replies
- 205 views
-
-
குகுலே கங்கை வான் கதவு திறப்பு : தாழ் நில மக்களுக்கு எச்சரிக்கை நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் குகுலே கங்கையின் வான் கதவொன்று திறந்துவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் புலத்சிங்கள, அகலவத்த, மதுராவல மற்றும் இங்கிரிய உள்ளிட்ட தாழ்நில பிரதேச மக்களை அவதானமாக இருக்கமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். http://www.virakesari.lk/article/24962 நாட்டில் மண்சரிவு அபாயம் நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் களுத்துறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக காலநிலை அவதான நிலையம் …
-
- 0 replies
- 260 views
-
-
ஐ.நா. பிரகடனத்திற்கு ஏற்பவே செயற்படுவோம் பொது எதிரணியின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில் (எம்.எம்.மின்ஹாஜ்) மிரிஹான பொலிஸுக்கு அருகாமை யில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவி யுடன் மியன்மார் அகதிகள் முகாமொன்று நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் முகாமில் உள்ளவர்கள் சட்டவிரோதமாக தனிவீடுகள் அமைத்து இலங்கையர்களாக வாழ்கின்றனர். இவர்களுக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது என்று கூட்டு எதிரணியினர் நேற்று சபையில் கேள்வி எழுப்பினர். தஞ்சம் புகுந்துள்ள அகதிகளில் குற்றம் இழைத்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.எனினும் மியன்மார் அரசாங்கம் இது தொடர்பில் எ…
-
- 0 replies
- 411 views
-
-
‘அட்டூழியத்தை நிறுத்தவும்’ “ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில், கொழும்பு, கல்கிஸையில் தங்கவைக்கப்பட்டுள்ள றோகிஞ்சா அகதிகளை, அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும் முஸ்லிம்களையும், மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது, அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர்களுக்குப் பாதுகாப்புக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவை சந்தித்தபோதே, அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அம…
-
- 0 replies
- 178 views
-
-
பஷில் தலைமையிலான குழு 30 ஆம் திகதி யாழ்.செல்கிறது.! ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விரிவாக்குவதனை அடிப்படையாகக்கொண்டு அக்கட்சி எதிர்வரும் 30 அம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி வரை யாழ். மாவட்டத்தில் பரந்துபட்ட அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தலைமையில் நடைபெறவுள்ள அக்கூட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தற்போது யாழ்ப்பாணத்தில் மும்முரமாக நடைபெற்றுவருவதாகவும் அக்கட்சி தெரிவித்த…
-
- 0 replies
- 207 views
-
-
குர்திஷ்தானின் பிராந்தியத்திய மக்களது பொதுசன வாக்கெடுப்பு,சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையினையையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தான் மக்கள் தமது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பினை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியிருந்தனர். ஈராக், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளது கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுவாக்கெடுப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வி.உருத்திரகுமாரன் குர்திஷ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய கருத்துரை ஒன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழீழம் உள்ளடங்கியதான அனை…
-
- 2 replies
- 460 views
-
-
$$ அண்மையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுயசரிதை புத்தகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை நாமல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவினால், சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் தொடர்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் அண்மையில் பண்டநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவினால், கொள்வனவு செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று …
-
- 0 replies
- 556 views
-
-
புதிய அரசமைப்பு தமிழருக்கு வெற்றி சிங்களவர், முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு இது 1 வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தமிழ் மக்களுக்கு ஓரளவு வெற்றியாகவும் முஸ்லிம்களுக்கும், சிங்களவருக்கும் எந்த நன்மையையும் வழங்காமல் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், முஸ்லிம் உலமா கட்சியின் தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இடைக்கால அறிக்கையில் வடக்கும் – க…
-
- 2 replies
- 658 views
-
-
யாழ். சிறையில் இருக்கும் தந்தை தாக்கப்பட்டுள்ளார் மனித உரிமை ஆணைக்குழுவில் மகன் முறைப்பாடு Share யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தந்தையை சிறைச்சாலை பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கினார்கள் என யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவில் மகன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி முறைப்பாடு செய்தவர் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எனது தந்தை யாழ்ப்பாணத் துக்கு சுற்றுலா சென்றார். அதன்போது அவர் கஞ்சா வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். …
-
- 0 replies
- 340 views
-
-
பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க இணங்குவது தமிழரின் அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் சாடல் Share பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதற்குத் தமிழ்த் தலைமைகள் ஏற்றுக் கொண்டிருப்பது தமிழர்களின் அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. இவ்வாறு முன்னாள் விவசாய அமைச்சரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். மல்லாகம் கல்லாரையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாதர் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துச் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாகக் கலந்துரையாடி…
-
- 0 replies
- 246 views
-
-
சக்தி டிவி செய்திகள் 26 09 2017 , 8PM
-
- 0 replies
- 402 views
-
-
தியாக தீபத்தின் நினைவு நாள் இன்று ஆரம்பம் அமைதிப் படையாகக் காலடி எடுத்துவைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி சூறையாடி – அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அகிம்சை வழியில் – 12 நாள்கள் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீபனின் நினைவுநாள் தாயக மண்ணிலும் – புலம் பெயர் தேசத்திலும் இன்று ஆரம்பமாகின்றது. மக்கள் மத்தியில் விடுதலைத் தீயை விதைத்த திலீபன், உணவு ஒறுப்புப் போராட்டத்தை இதேபோன்றதொரு நாளில் 30ஆண்டுகளுக்கு முன்னதாக – 1987ஆம் ஆண்டு ஆரம்பித்தார். ஈழத் தமிழரின் தாயக தேசம் எங்கும் நிலை கொண்டிருந்த இந்திய இராணு…
-
- 44 replies
- 6.6k views
-
-
யுத்த காலத்தில் ஒப்படைக்கப்பட்ட தங்க நகைகள் மீள கிடைக்கவில்லையென மக்கள் விசனம் யுத்த காலத்தில் தாம் ஒப்படைத்த தங்க நகைகள் தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென வடக்கு, கிழக்கு மக்கள் தெரிவித்தனர். அதிக பெறுமதியுடைய தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த தங்க நகைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 04 ஆம் திகதி முன்னாள் அரசாங்கம் 2,379 பேருக்கு அவர்களின் தங்க நகைகளை மீளக்கையளித்தது. எனினும் அதிகப் பெறுமதியுடைய, அதிக எடை கொண்ட தங்க நக…
-
- 0 replies
- 303 views
-