ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் உயிரிழப்பு நல்லூர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கொண்ட குழுவென்று குறித்த குடும்பத் தலைவரை நேற்றுக் கடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை குறித்த குடும்பத் தலைவர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையிலேயே இவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. http://newuthayan.com/story/29963.html
-
- 7 replies
- 482 views
-
-
"சர்வஜன வாக்கெடுப்புக்கு பங்கத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை" மாகாண சபைத் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படவேண்டியது அவசியமாகும்,ஆனாலும் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவது தொடர்பிலான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்வரை ஏனைய தேர்தல்களை நடத்தி அதற்கு பங்கத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழு நேற்று காலையில் கூடியது. இதன் போது 20ஆம் அரசியல் சாசன திருத்தம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்பன தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் போது உரையாற்றிய சமபந்தன், "அரசாங்கம் எந்த விதத்தில…
-
- 0 replies
- 252 views
-
-
மாகாண சபை தேர்தல் சட்டமூலத்தில் திருத்தம் இன்று சபையில் நிறைவேற்ற அரசாங்கம் முஸ்தீபு; திருத்தத்திற்கு மு.கா., த.மு.கூ., அ.இ.ம.கா. எதிர்ப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 20 ஆவது திருத்தச்சட்ட மூலத்தினை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக 1988ஆம் ஆண்டு மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொள்வதென எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போத…
-
- 0 replies
- 255 views
-
-
ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்றத்தில் ரகளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், சபைக்கு நடுவே வந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சபையில் சற்று பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஒன்றிணைந்த-எதிரணி-நாடாளுமன்றத்தில்-ரகளை/175-204150
-
- 0 replies
- 188 views
-
-
நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நாடாளுமன்றத்துக்கு செல்லும் வழியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவியப்போது, இந்தப் பகுதியில் ஊனமுற்ற போர் வீரர்களின் எதிர்ப்பு பேரணியொன்று, இன்று (20) இடம்பெறுகின்றது. இதனால்,கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளமையினால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/நாடாளுமன்றத்தைச்-சுற்றி-பலத்த-பாதுகாப்பு/175-204152 நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வீதி மூடப்பட்டது நாடாளுமன்ற சுற்றுவட்டம் முதல், நாடாள…
-
- 0 replies
- 312 views
-
-
சிங்களவருக்கு மகிந்த போன்று தமிழருக்கு பிரபாகரன் ‘ஹீரோ’ ஞானசார தேரர் தெரிவிப்பு “மகிந்த அரசு போரின் மூலம் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டபோதும் தமிழ் மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்வதற்கு எந்த வேலைத்திட்டமும் இருக்கவில்லை. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நந்திக்கடலில் பிரபாகரனுக்கு நினைவுத்தூபி அமைத்திருந்தாலும் பிரச்சினை இல்லை” இவ்வாறு பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். “மகிந்த இங்குள்ள மக்களுக்கு வீரர் போன்று பிரபாகரன் தமிழ் மக்களுக்கு வீரராவார். சரியோ பிழையோ அதுதான் உண்மை” என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பத்த…
-
- 1 reply
- 348 views
-
-
யாழ். சிறையிலிருக்கும்கைதிக்கு ஹெரோயின் ஆடைகளுக்குள் மறைத்துக் கடத்தியவர் சிக்கினார் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் விளக்கமறியல் கைதிக்கு வழங்குவதற்கு என ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட இளைஞ ரொருவர் நேற்று முன்தினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. விளக்கமறியலில் கைதியான தனது சகோதரரைப் பார்ப்பதற்காக ஊர்காவற்றுறை நாரந்தனையைச் சேர்ந்த இளைஞரொருவர் ஆடைகளை கொண்டு சென்றுள்ளார். அந்த ஆடைகள் மீது சந்தேகம் கொண்ட சிறைக்காவலர்கள் அதனை பரிசோதித்துள்ளனர். …
-
- 0 replies
- 266 views
-
-
தேர்தலைத் தள்ளிப்போட அரசுக்குள்ளேயே எதிர்ப்பு தேர்தல்களை ஒத்திப்போடும் திட்டங்களைக் கைவிட்டு உடனடியாகத் தேர்தலொன்றுக்கு அரசு செல்லவேண்டும். சிறுபான்மையினர் பாதிக்கப்படும் வகையில் எந்தவொரு திருத்தங்களையும் அரசு செய்யுமாயின் அது நியாயமானதாக இருக்காது. தேர்தலை ஒத்திப்போட்டு ஆளும் கூட்டணி அரசு தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொள்ளக்கூடாது. ஆளும் கட்சிக்குள்ளிருந்து இவ்வாறான குரல்கள் நேற்று வெளிப்பட்டுள்ளன. அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்துள்ளனர். தற்போதைய அரசியல் நிலவரம் மற்று…
-
- 0 replies
- 258 views
-
-
ஏன் இந்த பாராமுகம்? : யாழ் மாநகர சபையின் சுகாதாரப்பிரிவிடம் மக்கள் கேள்வி யாழ்.பஸ் நிலையத்திற்கு பின்னால் இயங்கும் பிரபல சைவ உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிக்கொண்டிருப்பதாகவும், மக்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் போதே கழிவுகள் அகற்றப்படுவதாகவும் குறித்த சுகாதார சீர்கேடுகள் தொடர்பாக யாழ்.மாநகர சபையின் சுகாதார பிரிவு பாராமுகமாக இருப்பதாக மக்கள் விசணம் தெரிவிக்கின்றனர். இது குறித்து மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், “யாழ் நகருக்குள் பெருமளவு மக்கள் தினசரி கூடும் நிலையில், பஸ் நிலையத்திற்கு பின்னால் உள்ள பிரபல சைவ உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது, குறித்த சில உணவகங்களில் கழிவுநீர்த் தொட்டிகள் அமைக்க…
-
- 0 replies
- 271 views
-
-
அமெரிக்க அழுத்தத்துக்கு தலைசாய்கிறது கொழும்பு ஐ.நா. அணு ஆயுதத் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாது ஐ.நாவின் அணு ஆயுதத் தடை உடன்பாட்டில், இலங்கை கையெழுத்திடுவதற்கு வாய்ப்பில்லை என்று அரச தரப்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. அணு ஆயுதங்களைத் தடை செய்யும் ஐ.நா. பிரகடனம் தொடர்பான உடன்பாடு, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொட ரின் போது நாளை கையெழுத்திடப்படவுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின்போது கலந்துரையாடப்படவுள்ள விடயங்க ளில், இந்த விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடைசி நேர அழுத்தங்களால், உடன்பாட்டில் க…
-
- 0 replies
- 203 views
-
-
காணாமற்போனோர் அலுவலகத்தால் சிங்களவர்களுக்கும் நன்மையுண்டு காணாமற் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டால் சிங்கள மக்களும் அதிக நன்மையடைவர் என்றும் இந்த அலுவலகம் தமிழர்களுக்காக மாத்திரம் அமைக்கப்படாது. இந்த அலுவலகம் ஊடாகப் படையினரை பன்னாட்டுப் போர்க்குற்ற நீதிமன்றுக்கு அனுப்பும் எந்தவோர் ஏற்பாடும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் சாந்தபண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த நாட்டில் 30 வருட காலமாக இடம்பெற்ற போரால் நாம் அதிக அழிவுகளை எதிர்கொண்டோம். இன, மத பேதமின்றி அனைவரும் பாதிக்கப்பட்டனர். உயிர்களை,உடைமைகளை இழந்தோம். பலர் கா…
-
- 0 replies
- 275 views
-
-
‘உயர்நீதிமன்ற வியாக்கியானம்; ஜனநாயகத்தின் வெளிப்பாடு’ அரசமைப்பின், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள வியாக்கியானமானது, நாட்டின் ஜனாநாயகம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்துவதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 20ஆவது திருத்தம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்து, அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் - அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தவகையில், 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் ஊடாக சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில்…
-
- 0 replies
- 169 views
-
-
எழிலன் இராணுவத்திடம் சரணடையவில்லை என்று நீதிமன்றத்தில் தகவல் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் உத்தரவை அடுத்து, சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உட்பட ஏனைய 5 பேரும் சரணடையவில்லை என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன தெரிவித்துள்ளார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Ezhilan-was-not-surrened-to-army
-
- 3 replies
- 518 views
-
-
பிக்குகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தியதில் தவறு இல்லை அஸ்கிரிய பீடம் கூறுகின்றது நீதிமன்றத் தீர்ப்பில் குற்றவாளியாக தீர்ப்ப ளிக்கப்பட்டவர்களுக்குப் பிக்குமார் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிதிசேகரிப்பதில் தவறில்லை என்று அஸ்கிரிய பீடம் அறிவித்துள்ளது. சில் துணிவிநியோக முறைகேடுகள் காரணமாக லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்குத் தண்டமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டத் தொகையைச் செலுத்தும் நோக்கில் பிக்குமார் சிலர் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிக்குமாரின் நடவடிக்கை பௌத்த மதத்துக்கு இழுக்கானது எ…
-
- 1 reply
- 331 views
-
-
யாழ்ப்பாண மாம்பழத்தைக் காதலித்த சந்திரிகா! ஸ்ரீலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு யாழ்ப்பாண மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்ற சாரப்பட வடக்கு மாகாண விவ்சாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். தன்னுடன் சந்திரிகா ஒருமுறை பேசியிருந்தபோதே இந்த விடயத்தினைத் தெரிவித்ததாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண விவசாயக் கண்காட்சி இன்று காலை 09.30 மணியளவில், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் தலைமையில் யாழ். திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட தக…
-
- 6 replies
- 980 views
-
-
சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்த 8 இந்திய மீனவர்களை இன்று காலை சர்வதேச கடல் எல்லையில் ரோந்துப்பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு மீன் பிடி படகுகளும் வலைகளும் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களை கடற்படையினர் காரைநகர் எலாரா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மினவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/24644
-
- 2 replies
- 268 views
-
-
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, ஆர்னோல்ட் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் நிதி சேகரிக்கும் நடைபயணத்தில் கலந்துகொள்வதற்காக இன்று கனடா நாட்டுக்குப் பயணம் செய்துள்ளனர். கிழக்கு மாகாணத்திலுள்ள தென்னமரவாடி கிராம மக்களின் அபிவிருத்தித் தேவைக்காக நிதிசேகரிப்பில் ஈடுபடுவதற்காகவே குறித்த மூவரும் கனடாவிற்குப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இன்றும் நாளையும் தெருவிழா நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் நாளில் ஸ்காபரோவில் நிதிசேர் நடைபவனியும் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவே இவர்கள் கனடாவிற்குப் பயணம் செய்துள்ளனர். இரண்டு வாரம் கனடா நாட்டில் தங்கியிருக்கும் இக்குழுவினர் அங்கு பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு நிதி ச…
-
- 19 replies
- 1.6k views
-
-
வடக்கு மாகாணத்தில் வெளிவரும் உதயன் நாளிதழ் நிறுவனத்திடம் 500 மில்லியன் (50கோடி) ரூபா கோரி வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் மானநஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார். கடந்த காலத்தில் தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் சிவனேசனே தராகி சிவராம் படுகொலையைச் செய்தவர் என உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் விவசாய அமைச்சர் போதைவஸ்து கடத்தலுடனும் தொடர்புபட்டவர் எனவும் செய்தி வெளியிட்டிருந்தது. இக்காரணங்களைக் குறிப்பிட்டு, இவ்விவகாரங்களில் தன்னைக் குறிப்பிட்டு திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக, வடக்கு விவசாய அமைச்சரின் சட்டத்தரணியூடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 30 நாட்களுக்குள் 500 மில்லியன் ரூபா பணத்தினைச் செலுத்தாவிட்டால் நீதிமன்றத்தினூடா…
-
- 0 replies
- 495 views
-
-
ஐ நா முன்றலை நோக்கி அலையென திரண்ட ஈழத் தமிழர்,
-
- 2 replies
- 459 views
-
-
சக்தி டிவி செய்திகள் 19 09 2017 , 8PM
-
- 0 replies
- 291 views
-
-
ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவு முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் மியன்மார் நாட்டில் ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையை கண்டித்து முல்லைத்தீவு ஹிஜிராபுரம் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு வாழ் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இன்றைய ஜும்மா தொழுகையின் பின்னர் ஹிஜிராபுரம் பள்ளிவாசலுக்குமுன்பாக ஒன்றுகூடியவர்கள் கண்டனகோசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைய…
-
- 24 replies
- 1.9k views
-
-
அரசமைப்பு உருவாக்கல் பணியை முடக்க ராஜபக்சக்கல் முயற்சி;லால் விஜேநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புப் பணிகளை முடக்குவதற்காக பல்வேறு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். குறுகிய அரசியல் இலாபத்திற்காக மஹிந்த அணியினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ள சட்டத்தரணி விஜேநாயக்க, இதன் ஒரு அங்கமாகவே அரசியல் யாப்பைத் தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதிய புரளியை கிளப்பிவிட்டுள்ளதாகவும் கடுமையாக சாடியுள்ளார்…
-
- 0 replies
- 352 views
-
-
’20ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டமைப்புக்குள் குழப்பம்’ “அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளிடையே தீர்க்கமான முடிவில்லாத காரணத்தால்தான், கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். இந்தக் குழப்பத்தின் வெளிப்பாடுதான், த.தே.கூவின் அறுதிப் பெரும்பான்மை கொண்ட வட மாகாணசபையால் நிராகரிக்கப்பட்ட 20ஆவது திருத்த சட்டமூலத்தை, கிழக்கு மாகாணசபையில் உள்ள த.தே.கூ உறுப்பினர்கள் ஆதரித்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் (18) மாலை நட…
-
- 0 replies
- 191 views
-
-
கேள்விக்குறியாகும் அரசமைப்பு முயற்சி புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுவிடலாம் என்று தலைகீழாய் நின்று பார்க்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதனாலேயே எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு முன்னர் அரசமைப்புத் தொடர்பான கருத்துக் கணிப்பையே நடத்தவேண்டும் என்று அது அரசிடம் வலியுறுத்துகிறது. தேர்தல் ஒன்றை நடத்தி, அதில் தற்போதைய அரசுக்குப் பின்னடைவுகள் ஏற்பட்டால் அது புதிய அரசமைப்பு முயற்சிகளையும் அதற்கூடான தீர்வையும் பெரிதும் பாதிக்கும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகப்பட்டபாடுகள் எல்லாம் வீணாகிவிடும் என்கிற பய…
-
- 0 replies
- 268 views
-
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியை சேர்ந்த ஆழ்கடல் மீன் பிடி படகு ஒன்றில், இரண்டாயிரம் கிலோவுக்கு அதிகமான எடையுள்ள சுறா மீன்கள் பிடிபட்டுள்ளன. கடந்த சில நாட்களாக கடலில் தங்கியிருந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று கரை திரும்பிய படகில், அதிகளவான சுறா மீன்கள் சிக்கியிருந்தன. சுறாமீன்களின் பெறுமதி பத்து இலட்சம் ரூபாவுக்கு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=190533&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 608 views
-