Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 20 ஐ அமுல்படுத்த பாரளுமன்றின் 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் 20 ஆவது திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உரியது அல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றில் தெரிவித்தார். அதன்பிரகாரம், சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்பிற்கு முரணாக காணப்படுவதாகவும் அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் பாரளுமன்றின் 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்றைய அமர்விலேயே மேற்கண்டவாறு சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றில் அறிவித்தார். http://www.virakesari.lk/article/24631

  2. வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு இந்தியா உதவுமாம் வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு உதவிகளை வழங்க இந்தியா இணங்கி யுள்ளதாகக் கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், அரச தலைவர் மைத்திரிபால மற்றும் தலைமை அமைச்சருடன் நடத்திய பேச்சுக்களின் போதும், இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன கடந்தவாரம் புதுடில்லிக்கு மேற்கொண்ட பயணத்தின் போதும் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போதும், இதற்கான இணக்கப்பாடுகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இந்தியப் பெருங்கடல் மாநாட்டுக்காகக் கொழும்பு வந்திருந்த போது, அயலுறவுத்துறை அமைச்சு …

  3. சுமந்திரன் மீதான கொலை முயற்சியுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் விடுவிப்பு! பாராளுமன்ற உறுப்பினர், சுமந்திரன் மீதான கொலை முயற்சியுடன் சம்மந்தப்பட்ட, குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் யாழ்.மேல் நீதிமன்றால் சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். https://news.ibctamil.com/ta/politics/suspects-involved-murder-of-Sumanthiran-release

  4. யாழ். போதனா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு வந்த பாம்­பால் பர­ப­ரப்பு பாம்­புக் கடிக்கு இலக்­கா­கிய ஒரு­வர், சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். அவர் தன்­னைத் தீண்­டிய பாம்பை போத்­த­லில் அடைத்து வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்­து­வந்­துள்­ளார். அந்­தப் பாம்பு போத்­த­லுக்­குள்­ளேயே 10 குட்­டி­க­ளைப் போட்­ட­தால் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் நேற்­றுப் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. யாழ்ப்­பா­ணம், காரை­ந­க­ரில் நேற்­று­ முன்­தி­னம் ஒரு­வ­ருக்குப் பாம்பு தீண்­டி­யுள்­ளது. அவர் சிகிச் சைக்­காக உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். சம்­ப­வத்­தில் காரை­ந­க…

  5. வடக்கு - தெற்கு இனவாதிகளிடையே இரகசிய தொடர்பை அம்பலப்படுத்திய மனோ நாட்டில் இனவாதத்திற்கு உரமூட்டுவதற்காக வடக்கிலுள்ள இனவாதிகளுக்கும், தெற்கிலுள்ள இனவாதிகளுக்கும் இடையே உத்தியோகபூர்வற்ற உடன்படிக்கைகள் காணப்படுவதாக தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சகவாழ்வு பற்றி தெரியாத இனவாதிகளே ஐ.நா பொதுச் சபை அமர்வில் ஸ்ரீலங்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் உரை நிகழ்த்தவுள்ள நிலையில் அங்குகூடி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையர் எம் அடையாளம், பல இனங்கள் எம் சக்தி என்ற தொனிப்பொருளில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்க விழிப்புணர்வு நடவடிக்கை பதுளை…

  6. அண்மைக்காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் நிலைப்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்திருந்தால், உங்களுக்கு நிச்சயமாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதார செயல்பாடுகளானது கவலைக்குரியதாகவே இருக்கிறது. குறிப்பாக, 2015ம் ஆண்டு முதல் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி என்பதற்கு பதில் வீழ்ச்சி எனும் பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் மாத்திரமே பொருளாதார வளர்ச்சியானது 3.8%மாக வளர்ச்சி கண்டிருக்கிறது. (இங்கு குறிப்பிடப்படும் பொருளாதார வளர்ச்சி என்பது, கடந்த ஆண்டுடன் அல்லது கடந்த காலாண்டுடன் ஒப்பிடுமிடத்து பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளதா? அல்லது அதே அளவு வளர்ச்சியை கொண்டுள்ளதா? என்பதையே குறிப்பிடுகிறது) …

  7. அமெ­ரிக்க நுழை­வி­சைவு பொன்­சே­கா­வுக்கு மறுப்பு ராணு­வம் மீதான போர்க்­குற்­றச்­சாட்­டு­களே அதற்­குக் கார­ணம் “இலங்கை இரா­ணு­வத்­தின் மீது போர்க்­குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி என்ற வகை­யில் என்­மீ­தும் குற்­றச்­சாட்­டுக் கள் உள்­ளன. இத­னா­லேயே அமெ­ரிக்­கா­வுக்­குச் செல்­வ­தற்கு எனக்கு நுழை­வி­சைவு (விசா) மறுக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்” இவ்­வாறு முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும் அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா தெரி­வித்­தார். ‘அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் அமெரிக்­கா­வுக்கு நீங்­கள் செல்­ல­வி­ருந்­த­தா­க­வும், உங்­க­ளுக்கு நுழை­வி­சைவு மறுக்­கப்­பட்­ட­தா­லேயே ச…

  8. மட்டக்களப்புக்கு விஜயம் செய்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக, பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களைப் பார்வையிடவுள்ளதுடன் வாழ்வாதார உதவி வழங்கல் மற…

  9. மண் கடத்தல்: தேடப்பட்டோர் கைதாகினர் - கே. மகா யாழ். துன்னாலை பகுதியில், மணல் கடத்தல் சம்பந்தமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்களில், சந்தேகநபர்கள் மூவர், நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் இன்று காலை ஏழு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்துள்ள சந்தேகநபர்கள் மூவரையும், விசாரணையின் பின் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக, நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மண்-கடத்தல்-தேடப்பட்டோர்-கைதாகினர்/71-203992

  10. சுன்­னாகம் கழிவு ஒயில் விவ­கா­ரம்: நொதேர்ன் பவர் நிறு­வ­னத்­தின் சீராய்வு மனு நேற்­றுத் தள்­ளு­படி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்று கட்­டளை சுன்­னா­கம் நொதேர்ன் பவர் மின் உற்­பத்தி நிலை­யத்தை இழுத்து மூடு­மாறு உத்­த­ர­விட்ட மல்­லா­கம் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு எதி­ராக கொழும்பு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் தாக்­கல் செய்­யப்­பட்ட சீராய்வு மனு நேற்­றுத் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது. இந்த வழக்கு விசா­ர­ணையை மீள­வும் மல்­லா­கம் நீதி­வான் மன்­றுக்கே பாரப்­ப­டுத்­தி­யது மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்று. சுன்­னா­கம் உள்­ளிட்ட பிர­தே­சங்­க­ளில் நிலத்­தடி நீரில் கழிவு எண்ணை கலந்த வழக்­கில், சுன்­னா­கம் நொதேர்ன் பவர் தனி­யார் மின் உற்­பத்தி நிலை­யம் …

  11. நாளை புதிய சட்­ட­மூ­லத்தை சமர்ப்­பிப்­ப­தற்கு தீர்­மானம் ஆளுங்­கட்சி தலை­வர்கள் விரி­வாக ஆராய்வு (எம்.எம்.மின்ஹாஜ்) மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை ஒரே முறையில் நடத்­து­வ­தற்கு ஏற்ற வகையில் 20ஆவது திருத்­தத்­திற்கு பதி ­லாக புதி­ய­தொரு சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. 20ஆவது திருத்த சட்­ட­மூலம் தொடர்­பான உயர் நீதி­மன்­றத்தில் தீர்­மானம் ஜனா­தி­ப­திக்கும் சபா­நா­ய­க­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் சப­நா­யகர் இன்று அறி­விக்­க­வுள்ளார். ஆனாலும் 20ஆவது திருத்­தத்­திற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் என்று உயர் நீதி­மன்றம் பரிந்­துரை …

  12. ஐ நா முன்றலில் இலங்கை இன அழிப்பு தொடர்பில் வைகோ

  13. ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாடு இன்று ஆரம்பம் டொனால்ட் ட்ரம்ப், மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் முதல் நாளில் உரை (நியூ­யோர்க்­கி­லி­ருந்து ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடு­களின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொட ரின் அரச தலை­வர்கள் பங்­கேற்கும் மாநாடு இன்று 19 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நியூ­யோர்க்கில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபை கட்­ட­டத்தில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடர் அதன் தலைவர் மிரோஸ்லோவ் லஜ்கெக் தலை­மையில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. கூட்டத் தொடரின் முதல்நாள் அமர்வில் பல முக்­கிய தலை­வர்­களின் உரைகள் இடம்­பெ­ற­வுள்­ளன. ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நா…

  14. 20 ஆவது திருத்தத்திற்கு பதிலாக புதிய சட்டமூலம் மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சி; பொது எதிரணி குற்றச்சாட்டு (எம்.சி.நஜி­முதீன்) அர­சி­ய­ல­மைப்பின் இரு­ப­தா­வது திருத்தச் சட்­ட­மூலம் தொடர்பில் உயர்­நீ­தி­மன்றம் தனது தீர்ப்­பினை சபா­நா­ய­க­ருக்கு அனுப்­பி­யுள்­ளது. அத்­தீர்ப்­பினை சபா­நா­யகர் பாரா­ளு­மன்றில் நாளை (இன்று) அறி­விக்­க­வுள்ளார். அத்­தீர்ப் பின் பிர­காரம் பத­விக்­காலம் நிறை­வ­டை­ய­வுள்ள கிழக்கு, சப்­ர­க­முவ மற்றும் வட­மத்­திய மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்த வேண்டும்.எனினும் அர­சாங்கம் மற்­று­மொரு சட்­ட­மூலம் ஒன்றை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்து மாகாண சபைத் தேர்­தலை பிற்­போ­டு ­வ­தற்க…

  15. ஜெனி­வாவில் பேரணி வைகோ, கௌதமன் உட்­பட பெரு­ம­ள­வானோர் பங்­கேற்பு (நமது விசேட நிருபர்) இலங்­கையில் இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்­க­ளுக்கு நீதி வழங்­கக்­கோரி ஜெனி­வாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை பேர­வைக்கு முன்­பாக நேற்று புலம்­பெயர் அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து ஆர்ப்­பாட்டப் பேர­ணி­யையும் எதிர்ப்புக் கூட்­டத்­தையும் நடத்­தி­யி­ருந்­தன. ஜெனிவா புகை­யி­ரத நிலை­யத்­துக்கு அரு­கா­மையில் உள்ள பூங்­காவில் நேற்று பிற்­பகல் 2.00 மணி­ய­ளவில் ஒன்­று­கூ­டிய புலம்­பெயர் தமிழ் மக்கள் பெரு­ம­ள­வானோர் பேர­ணி­யாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு­வுக்கு முன்னாள் உள்ள முரு­க­தாஸன் திடலை நோக்கி வருகை தந்­தனர்.…

  16. வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படுவதில் குளறுபடிகள் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (18) இடம்பெற்றது. இக்கூட்டத்தை, இணைத் தலைவர்களான, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தலைமையேற்று நடாத்தினர். அங்கு விசேட பிரேரணையாக, யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத் திட்டம் சார்ந்த விடயங்களை வட மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் முன்வைத்திருந்தார். குறித்த விடயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, “1990களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 3,417 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந…

  17. இலங்கையில், அகதிகளாக வந்துள்ள மியன்மார் மக்களுக்கு அந்த நாட்டிலும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமயம். படகுமூலமும் – விமானம் மூலமும் இலங்கைக்கு வந்த மியன்மார் மக்களுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தினால் (UNHCR) இலங்கையில் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுக் கொண்டு வருகிறது. இலங்கை அரசுக்கு ஒரு சதம்கூட செலவு இல்லை. ஒரு சில முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனங்களும், தனவந்தர்களும் இவர்களுடைய விடயங்களில் உதவி ஒத்தாசைகள் செய்து வருகின்றனர். ஐரோப்பிய நாடோன்றிற்கோ அல்லது அவர்களது சொந்த நாட்டின் நிலைமை சுமுகம் ஆகும் வரை இவர்கள் தற்காலிகமாக இலங்கையில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களின் முழு செலவையும் ஐக்கிய நாடுகளின் …

  18. சக்தி டிவி செய்திகள் 18 09 2017 , 8PM

  19. பிறந்து ஏழு நாட்களே நிரம்பிய சிசுவொன்று, நாய்க்கு இரையாகி உயிரிழந்த பரிதாப சம்பவம் ஹபரன – நாமல்புர பிரதேசத்தில் இன்று (17) பதிவானது. ஏழு நாட்களுக்கு முன்னர் பிறந்த கவிஷ்க சந்தருவன் இந்தக் குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை. தமது ஜீவனோபாயத்திற்காக தினமும் கூலி வேலை செய்யும் சமன்குமார மற்றும் நிரோஷா குமாரி ஆகியோருக்கு பிறந்த கவிஷ்க குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளை. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆறு நாட்கள் வீட்டிலிருந்த குழந்தையின் தந்தை, தேன் எடுப்பதற்காக காட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே வீட்டில் இருந்த மற்றைய இரண்டு பெண் பிள்ளைகளில் ஒரு பிள்ளை தனக்கு பசி என்று கூறி தாயிடம் உணவு கேட்ட போதிலும் அவளுக்கு கொடுக்க இந்த வீட்டில் எதுவும் இருக்கவில்லை. இதனால்…

  20. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் உரையாடிய ஜேர்மன் சட்டத்தரணி கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் ஜேர்மன் மனித உரிமை ஆய்வாளரும் சட்டத்தரணியுமான அன்ரியஷ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கிளிநொச்சி கவனயீர்ப்புப் போராட்டம் 211 நாளாகவும் தொடர்வது குறிப்பிடதக்கது. http://newuthayan.com/story/29793.html

  21. தலைவர் அஷ்ரப்பின் தேவை இப்போதும் உணரப்படுகின்றது ஹரீஸ் தெரிவிப்பு வடக்கு –- கிழக்­குப் பிரச்­சி­னைக்­கான தீர்­வின் போது, தமிழ்த் தலை­வர்­க­ளால் கூட முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் மறைந்த தலை­வர் அஷ்ரப்­பின் தேவை தற்­போது உண­ரப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் பிர­தித் தலை­வ­ரும் விளை­யாட் டுத்­துறை பிரதி அமைச்­ச­ரு­மான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அஷ்ரப், சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸை நிறு­வி­ய­போது அவ­ரைப் பல­ரும் பல்­வேறு கோணங்­க­ளில் நோக்­கி­னர். சிங்­கள பெரும்­பான்மை, அஷ்ரப்பை தீவிர போக்­கு­டை­ய­வ­ராகப் பார்த்­தது. இத­னால் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தலை­மை­யில் இருந்த அரசு அவ­ரு­டைய…

  22. நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியை புனரமைப்பதில் என்ன சிக்கல்? யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தின் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் திலீபனின் நினைவு தூபியை யாழ் மாநகர சபையிடம் கையளித்தல் தொடர்பான விடயம் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பாக மாநகரசபை ஆணையாளர் பதிலளிக்கையில் திலீபனின் நினைவு தூபி அமைந்துள்ள பகுதி நல்லூர் கோவில் உரிமையாளர்களுடையது. கடந்த 1970 ல் இருந்து யாழ் மாநகர சபை குத்தகைக்கு எடுத்திருந்தது அந்த குத்தகை கடந்த 1980 ஆண்டுடன் காலாவதி ஆகிவிட்டது. தற்போது அப்பகுதி மூலோபாய நகர மேம்படுத்தலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மேலும் அந்த பகுதியை 20 வ…

  23. மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம் யாழ்ப்பாணத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் ,இணைத் தலைவர்களான சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைப்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ள காணிகளை தாவரவியல் பூங்காவாக பராமரிப்பதற்கான பிரேரணையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முன்மொழிந்தார். இராணுவ கட்டுப்பாட்டிற்குள் உள்ள காணிகளை தற்போது பொறுப்பேற்க முடியாத நிலையில் இராணுவம் வெளியேறிய பின்னரே அ…

  24. கொள்கை ரீதியில் செயற்படும் வடக்கு கிழக்கு இலங்கை தமிழரசுக் கட்சி எந்தவொரு கொள்கை கோட்பாடுகளிலும் இருந்து மாறவில்லையென வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு சட்ட ரீதியாக பிரிக்கப்பட்டாலும் கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோப்பாய் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 58 ஆவது நினைவு தினத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் இதனை தெரிவித்துள்ளார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Policy-principles-do-not-change--CVK

  25. அரசியலுக்கு புதியவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதியில்லை, சீறும் மாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டியையும் வடகிழக்கு இணைப்பையும் கைவிட்டுள்ளதாக இந்த மண்ணுக்கு புதியவர்கள், அரசியலுக்கு புதியவர்கள் விமர்சிக்கிறார்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா விசனம் வெளியிட்டுள்ளார். கோப்பாய் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 58 ஆவது நினைவு தினம் நேற்று மாலை கோப்பாயில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் பல சந்தர்ப்பங்களில் பல இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக முஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.