ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
“ஈழத் தமிழர்களுக்கு ஒரே ஆதரவு தமிழர்கள்தான்!” - இலங்கை அமைச்சர் அனந்தி சசிதரன் பேட்டி அனந்தி சசிதரன், இலங்கைத் தமிழர். இலங்கை வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக உள்ள இவர் சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல், உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழில்துறை தொழில் முனைவோர் மேம்பாடு ஆகிய துறைகளுக்கான அமைச்சராகவும் உள்ளார். இவரது கணவர் சசிதரன்; விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திரிகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்தவர். 2009-ல் நடைபெற்ற இறுதிப் போருக்குப் பின்னர் இலங்கை ஆயுதப் படைகளிடம் சரணடைந்த சசிதரன் அதன் பின்பு காணாமல் போனதாகச் சொல்லப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தமிழ் மக்களுக்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் திருமதி அனந்தி…
-
- 0 replies
- 675 views
-
-
விக்னேஸ்வரனுக்கு எதிரான மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை? வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியினராலேயே முதலமைச்சருக்கு எதிராக இரண்டாவது தடவையாகவும் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான வட மாகாண முன்னாள் அமைச்சர்களான குருகுலராஜா, டெனீஸ்வரன், மற்றும் மருத்துவர் சத்தியலிங்கம் ஆகியோருக்கு எதிராக முதலமைச்சர் எ…
-
- 1 reply
- 466 views
-
-
ரூ.5,000 தாள்கள் நீக்கப்படாது புழக்கத்தில் உள்ள, 5,000 ரூபாய் பெறுமதியான நாணயத்தாள், புழக்கத்திலிருந்து நீக்கப்படவுள்ளதென வெளியாகியுள்ள செய்தி, தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ள, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, அத்தாள்கள் நீக்கப்படாது என்றும் குறிப்பிட்டார். அந்தத் தாளை, புழகத்திலிருந்து நீக்கிவிடுவதற்கு, எவ்வாறான தீர்மானமும் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவது தொடர்பில், பொலிஸாருக்கு, கூடுதலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்நிலையிலேயே, அந்தத் தாளை, புழகத்திலிருந்து அகற்றிவிடுவதற்கு, மத்திய வங்கி நடவடிக…
-
- 0 replies
- 273 views
-
-
திருத்தத்துடன் 20 மீண்டும் பாராளுமன்றம் வரும்.! மாகாண சபை தேர்தல் குறித்தான 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்த பின்னர் மீண்டும் அதனை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதன்படி விரைவில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் வினவியபோதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனைத்து மாகாண சபை தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தும் நோக்கில் கடந்த மாத இறுதியில் அரசியலமைப…
-
- 0 replies
- 188 views
-
-
புத்தூர் மயான பிரச்சனை துப்பாக்கி சூடு வரை நீண்டுள்ளது – புத்தூர் பகுதியில் தொடரும் பதட்டம். புத்தூர் மேற்கில் அமைந்துள்ள மயானம் தொடர்பிலான பிரச்சனை பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் உச்சத்தை அடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மாயனத்தை அகற்ற கோரி மாயானத்தை சூழவுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் அண்மைக் காலமாக போராட்டங்களை நடாத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளின் பின்னனர் நீதிவான் ஏ.யூட்சன் மாயனத்தை சுற்றி சுற்றுமதில் அமைத்த பின்னர் சடலங்களை எரியூட்டுங்கள் என்றும் மிக விரை…
-
- 13 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு பிரபல உணவகத்தில் பழுதடைந்த உணவு விநியோகம்.! மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பழுதடைந்திருந்த உணவு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைப்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றுக்கே இவ்வாறான பழுதடைந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவம் பிறந்தநாள் வீட்டில் இடம்பெற்றுள்ளமையால் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இதேவேளை, கவலையடைந்த வாடிக்கையாளர் உணவக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட நகர பகுதிகளில் சுகாதாரமற்ற பழுதடைந்த உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களை பரிசோதித்து உரிய சட்ட நடவடிக்கைய…
-
- 7 replies
- 1.5k views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விசேட பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அரசியல் கிசுகிசுக்களை வெளியிடும் கொழும்பு வார இறுதி பத்திரிகையொன்று இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் சம்பந்தன், ஊருக்கு சென்று திரும்பும் போது வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வந்து சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதனை வழமையாகக் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அண்மையில் ஊடக விடயங்களுடன் தொடர்புடைய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விசேட வகையான பரிசு ஒன்றை சம்பந்தன் வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு முருங்கைக்க…
-
- 4 replies
- 661 views
-
-
எனது காணியிலேயே என் உயிர் பிரியவேண்டும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-10#page-5
-
- 2 replies
- 280 views
-
-
பயன்படுத்தப்படாத தனியார் காணிகள் அரச மயப்படுத்தப்படும்: சிறிசேன இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ள தனியார் காணிகளை அரசமயப்படுத்தி அவற்றில் விவசாயத்தை மேற்கொள்ள கூடிய வகையில் தற்போது இருக்கின்ற சட்டத்தின் கீழ் விசேட அரச வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை பிறப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். படத்தின் …
-
- 1 reply
- 312 views
-
-
எனது இராணுவ வாழ்க்கையின் 30 வருடங்களில் 26 வருடங்களை வட-கிழக்கில் கழித்த எனக்கு தமிழ் மக்களுக்கு என்னவேண்டுமென்பது நன்றாகத் தெரியும் என இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் தனிநாட்டையோ, காவல்துறை அதிகாரத்தையோ, நீதித்துறை அதிகாரத்தையோ, அதிகாரப் பகிர்வையோ கோரவில்லை. மாறாக அவர்கள் அமைதியான கௌரவமான வாழ்க்கையையே கோருகின்றனர். கடந்த புதன்கிழமை கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான எலிய அமைப்பின் தொடக்க விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், மத்தியில் அதிகாரத்தைக் குவித்து வைத்திருப்பதே நாட்டை ஒன்றாக வைத்திருக்கும். அதிகாரப் பகிர்வு பிரிவினைக்கே இட்டுச் செல்லும் என்பதை முட்டாள் அர…
-
- 3 replies
- 645 views
-
-
சக்தி டிவி செய்திகள் 10 09 2017 , 8PM
-
- 0 replies
- 350 views
-
-
அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் கடற்படைத் தளபதியை சந்தித்துள்ளனர் இலங்கையின் ஐக்கிய அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கேணல் டக்ளஸ் சி. ஹீஸ், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா, ஆகியோர் நேற்று முன்தினம் கடற்படை தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது ஐக்கிய அமெரிக்கா கடற்படையின் லெப்டினென்ட் கமாண்டர் பிரையன் எஸ் பேஜ்யும் கலந்துகொண்டார் இதேவேளை நேற்று முன்தினம் இலங்கையின் இராணுவ, விமான மற்றும் கடற்படை விவகாரங்கள் பற்றிய சீனாவின் சிரேஸ்ட பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஷு ஜியேன்வெய் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா ) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளா…
-
- 0 replies
- 395 views
-
-
“சரத் பொன்சேகா பேசியிருக்கக் கூடாது” முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவைப் பற்றி அமைச்சர் சரத் பொன்சேகா பேசியிருக்கக் கூடாது. இவ்வாறான காட்டிக்கொடுப்புகள் மூலம் சமூகம், நாடு மற்றும் யுத்தத்தின் முடிவுகள் குறித்து குழப்பமான நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரம், ஜயஸ்ரீ மகா விகாரைக்கு இன்று (10) விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “முன்னாள் இராணுவத் தளபதியாக, சரத் பொன்சேகா கருத்து தெரிவிப்பதால் அதில் உண்மை இருக்கலாம் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கூறியிருக்கிறார். அவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது…
-
- 2 replies
- 529 views
-
-
சரத் பொன்சேகாவின் தலையில் இடி விழ வேண்டும்! - சபிக்கிறார் முன்னாள் அமைச்சர் [Sunday 2017-09-10 19:00] அமைச்சர் சரத் பொன்சேகாவின் தலை மீது இடி விழ வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னக்கோன் சாபமிட்டுள்ளார். தம்புள்ளையில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் அமைச்சர் சரத் பொன்சேகா, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய பற்றி கூறிய கருத்து மிகவும் கீழ்த்தரமானது. வடக்கு முதலமைச்சரின் தேவைக்காக பொன்சேகா இதனை கூறியுள்ளார். இவ்வாறான பாவப்பட்ட நபர் பிறந்தமை குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன். பொன்சேகாவின் தலையில் இட…
-
- 0 replies
- 388 views
-
-
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி திலக் மாரப்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து கலந்துரையாடினார். புது டில்லியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது அமைச்சர் திலக் மாரப்பன இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்திகளை இந்திய பிரதமருக்கு எடுத்துரைத்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைகும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என இதன்போது அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்பட்ட பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநா…
-
- 0 replies
- 245 views
-
-
சிறைக்கு சென்ற விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம் கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு நேரடியாக விஜயம் செய்து அவர்களின் சுக துக்கங்களை கேட்டறிந்தார். இதன்போது தமக்கு எதிரான வழக்குகள் துரிதப்படுத்தப்படும் என கூறப்பட்ட போதிலும் அவ்வாறு நடைபெறவில்லை என அவர்கள் தம்மிடம் கூறியதாக வட மாகாண முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார். கண்டி போகம்பரை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் சுக துக்கங்களை வட மாகாண முதலமைச்சர் நேரில் சென்று விசாரித்தார். இதன்பின்னர் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால ச…
-
- 0 replies
- 404 views
-
-
’’விஷ ஊசி ஏற்றப்படவில்லை’’ இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரிடம் சரணைடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் விஷ ஊசி ஏற்றப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் வட மாகாண சபையோ, சுகாதார அமைச்சோ எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் முகமாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள…
-
- 0 replies
- 281 views
-
-
வடக்கு மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக் கலாச்சாரத்துடன் தொடர்புபட்டது. அந்த மக்கள் கல்வி கற்றது, வளர்ந்தது அனைத்தும் ஆயுதக் கலாச்சாரத்திலேயே. அம்மக்கள் வெடிபொருட்களைப் பயன்படுத்தியவர்கள். ஆகையால் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அங்கு இடம்பெற்ற சம்பவங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தேன் என சிறிலங்கா காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். வடக்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் சாதாரணமானவையா அல்லது பாரதூரமானவையா என ஊடகமொன்றினால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற பின்னணி தொடர்பாக நாம் கரிசனை கொண்டால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு தற்போது ஒன்பது …
-
- 2 replies
- 540 views
-
-
”பிரபாகரனை எப்போது கொன்றோம்?” மீண்டும் சொல்கிறார் கமால் குணரத்ன! கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் பயங்கரவாதம் தொடர்பான எந்தவித பிரச்சினைகளும் எழவில்லை என ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ”கை, கால் என உடல் உறுப்புக்களையும் உணர்ச்சிகளையும் இழந்து எமது இராணுவத்தினர் எதற்காக யுத்தம் செய்தார்கள்? எதற்காக இவ்வளவு துன்பத்தையும் அவர்கள் தாங்கிக்கொண்டார்கள்” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்துவரும் முன்னாள், வன்னி பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த கமால் குணரத்ன என்பவரே இவ்வாறு கூறியுள்ளார். …
-
- 10 replies
- 1.2k views
-
-
அமெரிக்கா செல்ல முன்னர் ஜெகத் ஜெயசூரியவைச் சந்திக்கிறார் மைத்திரி! [Sunday 2017-09-10 07:00] போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் சந்தித்துப் பேசவுள்ளார். ஐ.நா.பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 12ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. 19ஆம் திகதியே உலக நாட்டுத் தலைவர்கள் பொதுத்தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தவுள்ளனர். இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கைக்குழு எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் அமெரிக்கா செல்லவுள்ளது. இந்தப் பயணத்து…
-
- 0 replies
- 477 views
-
-
இரு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்தனர் : மத்தள விமானநிலைய விவகாரமே முக்கிய பேச்சு (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடனான சந்திப்பில் சுஷ்மா சுவராஜ் கலந்துரையாடியுள்ளார். இதன் போது மத்தள விமான நிலைய விவகாரம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கூட்டு முயற்சியில் மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய திட்டங்களை இலங்கையில் முன்னெடுப்பதில் பல்வேறு இழுபறி நிலைகள் …
-
- 1 reply
- 357 views
-
-
184பேர் பலியெடுக்கப்பட்ட சந்துருக்கொண்டான் படுகொலை! 1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாருமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்கள்தான். இலங்கை அரசின் திட்டமிட்ட அடுத்த இனப்படுகொலை கிழக்கை மட்டக்களப்பை உலுக்கியது. மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது சத்துருக்கொண்டான் பிரதேசம். ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி முதலிய கிராமங்களை உள்ளடக்கியது சத்துருக்கொண்டான். ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாலு அணியிருக்கும். ஊரை இராணுவம் சுற்றி வளைத்தது. 5.30மணிக்கு மணிக்கு வின்சன் டிப்போ தோட்ட இராணுவமுகாமில் கூட்டம் ஒன்று இருக்கிறது அனைவர…
-
- 4 replies
- 678 views
-
-
பிரகீத்தின் கையை வீட்டில் வளர்த்த சுறாவுக்கு இரையாக்கிய கோத்தா! [Saturday 2017-09-09 17:00] கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கை ஒன்றைத் துண்டித்து , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சுறா மீனுக்கு இரையாக்கியதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் முறைகேடுகள், கொடூரங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டிருந்தார். அவருக்கு என்ன நடந்தது என்பது பல வருடங்களாக மர்மமாகவே நீடித்து வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு நல்லாட்சி அர…
-
- 0 replies
- 369 views
-
-
இலங்கை உள்ளிட்ட சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு, சுமார் 204 மில்லியன் பவுண் பெருமதியான நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட பிற பொருட்களை, வடகொரிய, சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகளை மீறியதான, கடந்த ஆறு மாதக் காலப்பகுதியிலேயே, இந்த ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/வடகொரியாவின்-இலங்கைக்கான-சட்டவிரோத-ஏற்றுமதிகள்/175-203472
-
- 0 replies
- 274 views
-
-
பத்திரிகை கண்ணோட்டம் 10.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 218 views
-