ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
கடந்த நான்கு (2013-2017) வருடங்களில் வடக்கு சுகாதார அமைச்சு – சாதித்த சாதனைகள்- முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்:- வடக்கு மாகாண சபை இதுவரை மக்களுக்கு என்ன செய்தது என்ற கேள்வி ஊடகங்களிலும், அரசியல் காரணங்களுக்காக குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளாலும் அடிக்கடி எழுப்பப்பட்டு வருகின்றது. மாகாணத்திற்கு ஒதுக்கிய நிதி செலவழிக்கப்படாது மீள அனுப்பி வைக்கப்படுவதாகவும் குறை கூறப்படுகின்றது. எனது பொறுப்பிலிருந்த சுகாதார அமைச்சை பொறுத்தவரை அவ்வாறான எந்த விடயமும் நடைபெறவில்லை என்பதை ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றேன். இந்த நாட்டில் தமது உரிமைகளுக்காக போராடிய தமிழ் மக்களுக்காக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை…
-
- 0 replies
- 302 views
-
-
'பிரித்தானியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூற வலியுறுத்தியும், பிரித்தானியாவை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்துவது தொடர்பிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஓன்று நேற்று லண்டனில் (07)இடம்பெற்றது. யுத்தம் இடம்பெற்ற போதும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் பலர் காணாமல் போயிருந்தனர். பலர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தெரியாத நிலையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியுள்ளது. காணாமல் ஆக்…
-
- 0 replies
- 167 views
-
-
யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு: 9 பேர் அடையாளம் காட்டப்பட்டனர் யாழ்ப்பாணம் - கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேக நபர்களில் 9 பேர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் நேற்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின்போதே சந்தேக நபர்கள் 9 பேரும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் கடந்த யூலை மாதம் 30 ஆம் திகதி 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுவினரால் கோப்பாய் பொலிஸ்நிலையத்தில் கடமையாற்றும் …
-
- 0 replies
- 465 views
-
-
இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த போது, இந்தியாவில் 13 பெண்களைக் கற்பழித்து, ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்ற, 4 இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என, வடக்கு மாகாண முதலமைச்சர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்ததாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா இன்று சபையில் குற்றச்சாட்டு
-
- 1 reply
- 475 views
-
-
விக்னேஸ்வரா கல்லூரிக்கு வந்த இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற அதிகாரி Share இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் ரஞ்சன் காந்தி இன்று கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரிக்கு வருகை தந்தார். 1929 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் இவரது பேரன் அச்சுதன்பிள்ளை அதிபராகக் கடமையாற்றினார் என்றும், அதன் நினைவாக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. இலங்கை விமானப் படையினர் ஊடாக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாடசாலை வளாகத்தையும், கற்றல் செயற்பாடுகளையும் பா…
-
- 9 replies
- 743 views
-
-
பளையில் பெரும் குண்டு!! – ஐந்து கிராம மக்கள் இடம்பெயர்வு! பளை – வேம்பொடு கேணிப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் பணிகளில் ஈடுபட்டிருந்த வெடிபொருள் அகற்றும் பிரிவினரே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் குண்டை வெடிக்க வைப்பதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்திராபுரம், வேம்பொடுகேணி, இத்தாவில், செல்வபுரம், கச்சார்வெளி, போன்ற கிராம மக்களை குறித்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர். குண்டு புதைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து…
-
- 3 replies
- 559 views
-
-
நிலக்கடலைகளை ஒவ்வொன்றாக மைக்ரோ துளையிட்டு ஹெரோயினை உள்ளே வைத்து சிறை கைதிக்கு வழங்க முயற்சித்த நபரொருவர் கைது! (ரெ.கிறிஷ்ணகாந்) நிலக்கடலை பொதியில் ஹெரோயினை மறைத்து வைத்து கொழும்பு மெகஸின் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முற்பட்ட நபர் ஒருவரை சிறைச்சாலை புலனாய்வு பிரிவினர் கைது செய்து பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பொரளை பிரதேசத்தை சேர்ந்த சிறைக் கைதி ஒருவரை பார்வையிடுவதற்காக நிலக்கடலை பொதி ஒன்றுடன் சென்றிருந்த நபர் ஒருவரை சோதனையிட்டபோது, அப்பொதியினுள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தலா 1 கிராம் நிறையுடைய 18 ஹெரோயின் பக்கற்றுகளைச் சிறைச்சாலை பு…
-
- 1 reply
- 335 views
-
-
கிளிநொச்சியில் மீண்டும் வாள்வெட்டு கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாள்வெட்டு சம்பவம் நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அக்கராயன் பகுதியைச் சேர்ந்தவர்களே வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்ட 7 ஆண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக…
-
- 3 replies
- 302 views
-
-
புனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் புனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் போராளிகள் 40 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் புனா்வாழ்வுப் பெற்ற தெரிவு செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று (07) கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கோழி குஞ்சுகள் உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. http://tamil.adaderana.lk/news.php?…
-
- 1 reply
- 375 views
-
-
நவம்பரில் பொதுவாக்கெடுப்பு நடக்கலாம் புதிய அரசமைப்பு மீதான பொது வாக்கெடுப்பு நவம்பர் மாதம் நடைபெறலாம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது. புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினம், அறிக்கை மீதான விவாதத் திகதி தீர்மானிக்கப்படும். பெரும்பாலும் ஒக்ரோபர் மாதத்தின் முதல் வாரத்தில் விவாதம் நடைபெற்று, நவம்பர் மாத இறுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது. http://newuthayan.com/story/26652.html
-
- 0 replies
- 281 views
-
-
ஒருபோதும் இடமளியோம் சுதந்திரக்கட்சி திட்டவட்டம் (ரொபட் அன்டனி) இந்த நாடு பிரிவடைவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒருபோதும் இடமளிக்காது. நாட்டில் சமஷ்டி முறையைக் கொண்டுவருவதற்கோ, வடக்கு, கிழக்கை இணைப்பதற்கோ, சர்வதேச நீதிபதிகளை கொண்டுவருவதற்கோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிங்கா சுதந்திரக்கட்சி ஒருபோதும் இடமளிக்காது. இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். அடுத்து வரும் அனைத்துத் தேர்தல்களிலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தனித்தே போட்டியிடும் அது…
-
- 0 replies
- 366 views
-
-
லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்குச் சிறை!! Share கடந்த அரச தலைவர் தேர்தலின் போது நாடளாவிய ரீதியில் சில் துணி பகிரப்பட்டது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்புகள் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இருவருக்கும் தலா மும்மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 லட்சம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ள மேல் நீதிமன்றம், ஏற்பட்ட நட்டத்துக்காக தொலைத்தொடர்புகள் ஆணைக…
-
- 1 reply
- 997 views
-
-
வட- கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு இடைக்கால அறிக்கையில் இடமேயில்லை புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தயாராகிவிட்ட நிலையில், வடக்கு– கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பில் அதில் எந்தவிதமான இறுதித் தீர்மானமும் கூறப்படவில்லை என்று ‘உதயன்’ அறிந்தான். அதுபோன்றே மதச் சார்பற்ற நாடு என்ற விடயத்திலும் ஒருமித்த நிலைப்பாடு எட்டப்படவில்லை. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்காக நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டது. அத்துடன் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழுவும் நியமிக்கப்…
-
- 0 replies
- 418 views
-
-
சம்பந்தனையும் அழைக்கிறார் கோட்டாபய புதிய அரசியலமைப்பை உருவாக்கும் கூட்டரசின் முயற்சியை முறியடிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச தலைமையில் உதயமாகியுள்ள எலிய அமைப்பின் அடுத்த கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கட்சி தலைவர்களுக்கு தான் அழைப்புவிடுக்கவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எலிய – ஒளிமயமான அபிலாசைகள் என்ற பெயரிலான புதிய அமைப்பு அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை பொரலஸ்கமுவவிலுள்ள விடுதியொன்றில் இட…
-
- 0 replies
- 328 views
-
-
மக்களது அபிவிருத்தி விருப்பங்கள் மீறப்படமாட்டாது : ஜனாதிபதி நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் உள்ள மக்களினதும் நலன்கள் மற்றும் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டிலுள்ள பொது மக்களின் அபிவிருத்தி விருப்பங்கள் ஒருபோதும் மீறப்படமாட்டாது எனவும் தெரிவித்தார். நேற்று பிற்பகல் பொலன்னறுவை விஜிதபுர மகா வித்தியாலயத்தின் புதிய ஆரம்ப கற்றல் நிலையத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாக தெரிவித்த ஜனாதிபதி,…
-
- 0 replies
- 147 views
-
-
வவுனியாவில் பாடசாலை மாணவியை காணவில்லை.! வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டில் உறங்கியிருந்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மகாறம்பைக்குளம், லக்சபான வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் அன்ரன் அனிஸ்டலா (வயது - 14) என்ற பாடசாலை மாணவி நேற்று முன்தினம் (06.09) அவரது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டதன் பின்னர் வீட்டின் அறையில் உறங்கியுள்ளார். நேற்றைய தினம் அதிகாலை அவரது பெற்றோர் பாடசாலைக்கு செல்வதற்கு எழும்புமாறு அறைக்கு சென்ற போது குறித்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் வவுனியா …
-
- 0 replies
- 398 views
-
-
"முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை மனவருத்தத்தையளிக்கிறது"// என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். "வடமாகாணத்தின் மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்களைக் கொண்ட எருக்கலம்பிட்டிக் கிராம மக்கள் 1990ஆம் ஆண்டில் இப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நாட்டின் நாலா பக்கங்களிலும் சிதறுண்டு வாழ்ந்து வருவது மனவருத்தத்திற்குரியது" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இடம் பெற்ற ஹஜ் பெருவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "…
-
- 6 replies
- 943 views
-
-
இராணுவத்தினரை விசாரணைக்கு அழைத்தால் முன்னாள் போராளிகளை கைது செய்யவேண்டுமாம்? இராணுவத்தினரின் போர்க் குற்றங்களை விசாரிக்க பொன்சேகா கோருவாராயின் விடுவிக்கப்பட்ட 12ஆயிரம் முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைது செய்ய வேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் மட்டுமா போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்? விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன், அடேல் பாலசிங்கம், விநாயகம் ஆகியோரும், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12,000 முன்னாள் போராளிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை…
-
- 5 replies
- 516 views
-
-
கிருசாந்தியின் நினைவு தினம் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செம்மணியில் கடைப்பிக்கப்பட்டது. கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். http://newuthayan.com/story/26347.html
-
- 7 replies
- 1.1k views
-
-
சலித்துப் போன உறுதிமொழிகள்! இலங்கைத் தமிழர்களை ஒருபோதுமே கைவிடப் போவதில்லையென்றும், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு நீதியும் நிரந்தரமுமான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் இந்தியா இன்னமும் கூட கூறிக் கொண்டேயிருக்கின்றது. இந்தியாவின் இந்த உறுதிமொழி புதியதொன்றல்ல... இலங்கையில் தோற்றம் பெற்ற இனமுரண்பாடானது 1983 ஜுலையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒழிப்புக் கலவரமாக உருவெடுத்த நாளில் இருந்து, இங்குள்ள தமிழர்களின் விவகாரம் தொடர்பா…
-
- 0 replies
- 240 views
-
-
கிழக்கில் கூட்டாட்சி: சம்பந்தனும், ஹக்கீமும் இன உறவுகளை பலப்படுத்த வேண்டும் கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சி நடத்தும்,தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் தழிழ், முஸ்லிம் சமூகங்களின் உறவுகளைப் பலப்படுத்த வேண்டுமென தேசிய சகவாழ்வு, தேசிய கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின், பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் (05) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ப…
-
- 0 replies
- 388 views
-
-
வௌி மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான லொறிகளில் மணல் கொண்டு செல்லப்படுகிறது மட்டக்களப்பு – வாகனேரி, முள்ளிவெட்டுவான் ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாகக் கூறப்படும் பகுதிக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இன்று சென்றிருந்தார். முள்ளிவெட்டுவான் ஆற்றுப்பகுதிக்கு இன்று சென்ற சந்தர்ப்பத்தில் சிலர் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததுடன், தம்மைக் கண்டதும் அவர்கள் ஓடிவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மண் வளம் சட்டத்திற்குப் புறம்பாக சூறையாடப்பட்டு, வௌி மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான லொறிகளில் கொண்டு செ…
-
- 0 replies
- 442 views
-
-
சக்தி டிவி செய்திகள் 07 09 2017 , 8PM
-
- 0 replies
- 227 views
-
-
மஹிந்த உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார். அரசாங்க அதிகாரிகள் தேர்தலில் ஈடுபடும் போது உள்ள புதிய சட்டதிட்டங்கள் குறித்து இதன்போது கவனத்திற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அ…
-
- 0 replies
- 439 views
-
-
கொழும்பில் இடம்பெற்ற பாகிஸ்தானின் 52 ஆவது பாதுகாப்பு தினம் கடந்த 1965 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின்போது உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுக் கூருமுகமாக கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயம் பாகிஸ்தானின் 52 ஆவது பாதுகாப்புத்தின நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. பாகிஸ்தானிற்கான பாதுகாப்பு ஆலோசகர் கலோனல். சஜ்ஜாத் அலி தனது ஆரம்ப உரையில், பாகிஸ்தானிய ஆயுதப்படைகள் தங்களது மண்ணில் தீவிரவாத்தினை இல்லாதொழிப்பதற்கு தியாகங்களை மேற்கொண்டுவருவதாகவும், நாட்டிலே சமாதானம் மற்றும் ஸ்த்திரத்தன்மையினை ஏற்படுத்துவதற்கு அளப்பரிய முயற்சிகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டார். இந்நிகழ்விற்கு இலங்…
-
- 1 reply
- 298 views
-