Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் புதிய சரக்குக் கப்பல் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த இரண்டு துறைமுகங்களுக்குமிடையே நிரந்தரமான தொடர் சேவையை வழங்குவதற்காக ஏ & என் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 700 மெட்ரிக் தொன் எடை கொண்ட ‘தாரா கிரண்’ என்ற கப்பலை தயார்படுத்தியுள்ளது. கடலில் பயணிக்கும் தகுதி மற்றும் பிற சான்றிதழ்களை பெறும் செயல்முறைகள் பெப்ரவரி மூன்றாவது வாரத்துக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் முதல் பயணம் மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகால உலகளாவிய கப்பல் போக்குவரத்து நிபுணத்துவத்துடன் அந்தமானில் தலைமையகத்தைக் கொண்ட ஏ&am…

  2. ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் செயற்திட்டங்களின் பலவற்றின் சொற்கள் மக்களுக்கு புரியவதில்லை. திட்டத்தின் தலைப்பு புரியாத சந்தர்ப்பத்தில் அந்தத் திட்டம் எவ்வாறு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியது. அஸ்வெசும என்பதன் அதன் தமிழாக்கம் என்ன, 16ஆம் திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆட்சி மொழி தமிழாகும். புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய தமிழ் பதங்களை அறிமுகம் செய்யுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உர…

  3. (எம்.வை.எம்.சியாம்) உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற நேர்காணலில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடயம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கேள்வி - தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்துக்கு ஏற்ப நிறைவேற்று அதிகாரம் கொண…

  4. Published By: RAJEEBAN 22 JAN, 2025 | 04:57 PM லசந்த விக்கிரமதுங்க, வாசிம் தாஜூதீன், பிரகீத்எக்னலிகொட விவகாரங்களிற்கு நீதி வழங்குவேன் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உறுதியளித்துள்ளார். தொலைக்காட்சி பேட்டியொன்றின் போது இதனை தெரிவித்துள்ள அவர் கடந்தகால குற்றங்கள் காலவோட்டத்தில் மறக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வது குறித்த தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். விசாரணைனகளை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், நீதித்துறை போன்ற நிறுவப்பட்ட கட்டமைப்புகள் உள்ளதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விசாரணைகளிற்கு மிகவும் அவசியமான விசாரணையாளர்கள் பலர் …

  5. Published By: VISHNU 22 JAN, 2025 | 06:25 PM (நா.தனுஜா) அடுத்துவரும் மூன்று மாதகாலத்தில் 3 பிரதான செயற்திட்டங்களுக்கென மொத்தமாக 200 மில்லியன் டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு உத்தேசித்திருப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத் தலைவர் மார்ட்டின் ரெய்ஸர் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் நாட்டுக்கு வருகை தந்திருந்த உலக வங்கியின் தெற்காசியப் பிராந்திய பிரதித்தலைவர் மார்ட்டின் ரெய்ஸர், இலங்கையில் தங்கியிருந்த இருநாட்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்கள், தனியார்துறை முதலீட்டாளர்கள், அபிவிருத்திப்பங்…

  6. அரிசி ஆலைகளை இராணுவம் கண்காணிக்கும்! -ஜனாதிபதி தெரிவிப்பு. அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளை கட்டுப்படுத்த இராணுவத்தை களமிறக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரிசி ஆலைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது ”பாரிய நெல் ஆலைகளின் உரிமையாளர்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாவிட்டால், நெல் ஆலையில் உள்ள தமது கடைக்கு அரிசி கொண்டு செல்லும் வரை இராணுவ கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அத்துடன் அரிசி தேசிய சொத்து என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கம் இதுவரை எந்தவிதமான நியாயமற்ற விதிமுறைகளையும் ஏற்படுத்தவில்லை எனவும் மில்…

  7. சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு! சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், நுகர்வோர் இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இன்னிலையில் ரூ.1095 ஆக இருந்த நிலக்கடலை ரூ.995 ஆக குறைக்கப்பட்டுள்ளது 340 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பிரவுன் சீனி 300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது அத்துடன் 210 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 180 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது 795 ரூபாவாக இருந்த சிவப்பு கௌபி கிலோ ஒன்று 765 ர…

  8. நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் பிரிந்து செல்லக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டம் தயாரிப்பு! நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். செயற்திறனுடனும் திறமையாகவும் பொருளாதார செயல்முறையை கையாள்கையில் பொதுப் போக்குவரத்தை நிறுவுவதன் முக்கியத்துவம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்…

  9. 22 JAN, 2025 | 01:08 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஒருவாரகாலப்பகுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம் அவை முழு வீச்சில் இடம்பெறுகின்றன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதிஅர்ஜூனமகேந்திரன் சிங்கப்பூர் பிரஜைஎன்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார். எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி,அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண:டுவருவதற்கான முயற்சிகளில் ஈ…

  10. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை ( 21.01.2025) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா, இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மற்றும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை முகநூலில் பதிவிட்டமைக்கு குறித்த சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். …

  11. இலங்கையில் அண்மையில் பதிவான குற்றங்கள் தொடர்பாக ஒரு இராணுவ மேஜர், ஆறு அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 15 பேர் கைது செய்யப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றின் நேற்றைய(21.01.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “2024 செப்டம்பர் 23 முதல் நடந்த குற்றங்களை ஆராயும் போது, கடமைகளில் இருந்த சில இராணுவ வீரர்கள் இந்த சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆயுதங்கள் மீட்பு கடந்த இரண்டு நாட்களில், ஒரு இராணுவ மேஜர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இராணுவத்தைச் சேர்ந்த மேலும் …

  12. IMF உடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டம்! சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். பொதுமக்களுக்குக் கூடுதல் நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். புதிய நிர்வாகத்தின் கீழ் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பல வரிச் சலுகைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நி…

  13. எனது கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கட்டளை January 22, 2025 11:17 am கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுர மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் நீதிமன்றத்தால் வழக்கு ஒன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கட்ட நிலையில் நேற்று (21) நீதிமன்றத்திற்கு சென்று வந்த பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் முள்ளிவாய்காலில் நடந்த அனர்த்தங்களையு…

  14. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி... January 22, 2025 05:53 am நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். செயற்திறனுடனும் திறமையாகவும் பொருளாதார செயல்முறையை கையாள்கையில் பொதுப் போக்குவரத்தை நிறுவுவதன் முக்கியத்துவம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்…

  15. 22 JAN, 2025 | 11:08 AM காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. புங்குடுதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வேளை சிறுமியை அவரது பெற்றோர் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு கொண்டுசென்றபோது, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை (20) சிறுமிக்கு கடும் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், பெற்றோர் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். அவ்வேளை, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து அறிக்கையிட்டுள்ளனர். அதனையடுத்து, சிறு…

  16. 22 JAN, 2025 | 10:44 AM எதிர்வரும் ஏப்ரல் மாதம் 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படலாம். எந்த வகையிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை பிற்போட முடியாது. சகல தரப்பினரதும் இணக்கத்தின்படி, நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக நாம் நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு ஒன்றைப் பெற்றுள்ளோம். தற்போது கோரப்பட்டுள்ள வேட்பு மனுக்களை இரத்து செய்துவிட்டு மீண்டும் கோரப்படுதல் வேண்டும். அப்படிச் செய்வதன் ஊடாக இளம் வாக்காளர்கள் 4 இலட்சம் பேருக்கு…

  17. முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா மைத்திரி மகிந்த வசிக்கும் வீடுகளின் பெறுமதி என்ன ? அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி BatticaloaJanuary 22, 2025 முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வவாசல்ஸதலங்களினால்அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி பேட்டியொன்றில் கருத்துதெரிவித்துள்ள ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் வழங்கிய வீட்டிலேயே வசிக்கின்றார் அந்த வீட்டின் மாதாந்த வாடகை பெறுமதி 2 மில்லியன் ரூபாய் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதேபோன்று முன்னாள் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவும் 0.9மில்லியன் ரூபாய் இல்லத்தில் வசிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார். …

  18. 22 JAN, 2025 | 10:05 AM இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர் விசா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை விடுவிப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார். இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம் நீதிமன…

  19. Published By: VISHNU 22 JAN, 2025 | 05:07 AM மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் இரண்டு நாள் விவாதத்தின் முதல் நாளில் செவ்வாய்க்கிழமை (21) கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பாராளுமன்றம் கூடிய நாளிலிருந்து இந்த எதிர்க்கட்சியின் பொறுப்புக்கள் என்ன என்றும், இந்த எதிர்க்கட்சி எந்த நோக்கத்திற்காக பே…

  20. வடக்கின் அபிவிருத்தியில் அரசாங்கம் அதிக கவனம்; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு! வடமாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளில் அரசாங்கம் அதிக கவனத்துடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதியின் அலுவலகத்தில் நேற்றுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போதே, வடமாகாணத்தை மையப்படுத்திய தமது அரசின் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர உலக வங்கியின் பிரதானிகளிடம் தெளிவுபடுத்தியுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது: வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், தண்ணீர் வசதிகளை வழங்கவும், வடக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு கலாசார அடையாளத்தைப் பாதுக…

  21. வடக்கு மாகாணத்தில் 2024இல் மட்டும் 34 படுகொலைகள் வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் 34 படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கமைவாக அவர் இந்தத் தகவலை வழங்கியுள்ளார். இதன்படி, வடமாகாணத்தில் கடந்த வருடம் 34 படுகொலைகள் பதிவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்த வருடம் வடக்கு மாகாணத்தில் 255 கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. 501 திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. 70 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்றும் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால மேலும் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஜனவரி ம…

  22. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடா நாட்டில் உள்ள தடை செய்யப்பட்டுள்ள அமைப்புடன் பேசுவதற்காகவே நான் சென்னை சென்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவரை விசாரணை செய்தால் உண்மையை கண்டறியலாம். விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் நெருக்கடி ஏற்படவில்லை என அய்யூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ள விடயத்துக்கும், சுமந்திரனின் கருத்துக்கும் தொடர்பு உள்ளதென சந்தேகிக்கிறேன். எனது சிறப்புரிமை மீறப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது ஆகவே விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் …

  23. Published By: VISHNU 21 JAN, 2025 | 06:41 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந் துள்ளதுடன் 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்தொழல் பாதிக்கப்பட்டதுடன் மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களுக்கு; வெளிமாவட்டத்துக்குமான போக்குவரத்து மற்றும் ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ம் திதி ஆரம்பித்த கன மழையினால் மாவட்டதிலுள்ள பெரிய குளமான உன்னிச்சை குளம் மற்றும் குளங்கள் யாவும் நிரம்பியதையடுத்து தேவைக்கு எற்றால் போல வான்கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ள நீரில் …

  24. Published By: DIGITAL DESK 2 21 JAN, 2025 | 05:31 PM (எம்.மனோசித்ரா) கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான அலைதாங்கியை நீடிப்பதற்கான விபரங்களுடன் கூடிய திட்டத்தை இயக்குவதற்கான ஆலோசனை சேவையை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான அலைதாங்கியை நீடிப்பதற்கான விபரங்களுடன் கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஆலோசனை சேவைகளுக்கான நிதி மற்றும் தொழிநுட்ப ரீதியான ஒத்த…

  25. வடமராட்சி - பருத்தித்துறை, ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று இன்றையதினம்திங்கட்கிழமை(21) கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சம்பவம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள்,மிதவைகள்,போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது. வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!

      • Haha
      • Like
      • Thanks
    • 8 replies
    • 481 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.