Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச கடல் எல்லையில் வைத்து 77 இந்திய மீனவர்கள் விடுதலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட 77 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த 25 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தால் நல்லிணக்க அடிப்படையில் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட தமிழக மீனவர்கள் 77 பேரை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து இந்திய கடலோர படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட இரண்டு இலங்கை மீனவர்களை இந்திய கடலோரபடை அதிகாரிகள் இலங்கை கடற்படைய…

  2. பொலிஸ் சேவையில் பெண்கள் இணைய வேண்டும்.- அனந்தி சசிதரன் வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த வடமாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண மகளிர் விவகார புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றம் கூட்டுறவுத்துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற துணியிலான பைகளைப் பயன்படுத்துவதற்கான தையல் பயிற்சி நெறி அறிமுக விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது- முன்னைய காலங்களில் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு பணிகளில் பெண்கள் பணியாற்றியுள்ளனர். ப…

  3. கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் 75 மாணவா்களுக்கு துவிச் சக்கர வண்டிகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 75 மாணவா்களுக்கு படையினரின் ஏற்பாட்டில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நன்மதிப்பு நிதியத்தின் நிதி பங்களிப்பில் 57 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இத்துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் ( புதன் கிழமை) கிளிநொச்சி இரணைமடு தாமரைத் தடாக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன கலந்துகொண்டு மாணவா்களுக்கு துவிச் சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார். …

    • 3 replies
    • 422 views
  4. போராளிகள் மீதான குற்றச்சாட்டு: ‘நியாயாதிக்கங்களை மீறுகின்றது’ முன்னாள் விடுதலைப் போராளிகளே வாள் வெட்டுகளுக்கும் குற்றவியல் சார் சம்பவங்களுக்கும் பொறுப்பு என்று கூறுவது, ஜனாதிபதியின் வரப்பிற்குற்பட்ட நியாயாதிக்கங்களை மீறுகின்ற ஒரு செயற்பாடாகவே தாம் கருதுவதாக, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பிரிவு நேற்று முன்தினம் (03) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தாயகப் பிரதேசங்களில் சம காலத்தில் நிகழும் வன்முறைகள் மற்றும் குற்றங்களுக்கு விடுதலைப் புலிகளின் போராளிகளை இணைத்து புனையப்படும் வியாக்கியானங்கள் குறித்த ஓர் சமூகப் புலனாய்வு பார்வையை…

  5. அரசியல் சாணாக்கியத்துடன் சர்வதேசத்தை அணைத்துச் செயற்பட வேண்டும் மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்துடன் நம்ப நட நம்பி நடவாதே என்பது போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஆர்.ஜெயசேகரத்தின் பதவிப் பிரமாண நிகழ்வு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போது விருந்தினராக கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …

  6. முதுகெலும்பு இருந்தால் தமிழ் அரசுக் கட்சியை தூக்கி எறிந்து பாருங்கள் அப்­பொ­ழுது தெரி­யும் அதன் அருமை: இப்­ப­டிக் கூறு­கி­றார் தமிழ் விருட்சம் செயலாளர் உங்­க­ளால் முடி­யும் என்­றால்–உங்­க­ளுக்கு முது­கெ­ழும்பு இருக்­கும் என்­றால் –உங்­க­ளால் சரியாக நிமிர்ந்து நிற்க முடி­யும் என்­றால் தமிழ் அர­சுக் கட்­சி­யைத் தூக்கி எறி­யுங்­கள். அப்­பொ­ழுது தெரி­யும் அதன் அருமை. அந்­தத் துணிவு இல்­லா­விட்­டால் என்ன மண்­ணாங்­கட்­டிக்கு இங்கு வந்து கூட்­டம் நடத்­து­கி­றீர்­கள்? மாற்று அணி­யப்­பற்றி கதைக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை. இவ்­வாறு காரசாரமாகத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் வவு­னியா தமிழ் விருட்­சம் அமைப்­பின் செய­லா­ள­ரும் கலை­ஞ­னு­மான …

  7. இம்மாத இறுதிக்குள் புதிய அரசமைப்பு தயாராகி விடும் புதிய அரசமைப்பு இம்மாத இறுதிக்குள் தயாரித்து முடிப்பதற்கு எதிர்பார்ப்பதாக, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் இதன்பொருட்டு, அரசமைப்பு வழிநடத்தல் குழுக்கூட்டம் அடுத்து வரும் வாரங்களில் கூடவுள்ளதுடன், நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து தொடர்ச்சியாகக் கூட்டம் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இம்மாத-இறுதிக்குள்-புதிய-அரசமைப்பு-தயாராகி-விடும்/175-201776

  8. கூட்டு எதி­ர­ணியினரின் பின்­வாங்­க­லுக்கு பின்­ன­ணியில் மிகப்­பெ­ரிய நாட்டின் தூத­ரகம் யாருடன் தொடர்­பு­கொண்டு உரை­யா­டினர் என்­பதும் தெரியும் என்­கி­றது அர­சாங்கம் (ரொபட் அன்­டனி) அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை தொடர்­பாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெ­ற­வி­ருந்த விவா­தத்தை கூட்டு எதி­ர­ணி­யினர் குழப்பி நடத்­த­வி­டாமல் செய்­ததன் பின்­ன­ ணியில் மிகப்­பெ­ரிய நாடு ஒன்றின் தூத­ர­கமே இருந்­தது என்று அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் சீன நிறு­வ­னத்­துடன் அம்­பாந் தோட்டை துறை­முகம் தொடர்­பாக செய்­து­ கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கை­யா­னது எந்­த­வொரு நேரத்­திலும் திருத்­தத்­திற்­குட் ப­டலாம். மேலும் அமைச்­…

  9. இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் இலங்கை பிர­ஜை­க­ளுக்கு இலத்­தி­ர­னியல் வெளிநாட்டு கட­வுச்­சீட்டு ஒன்­றினை அறி­முகம் செய்­வது தொடர்­பி­லான நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இத­ன­டிப்­ப­டையில் அனைத்து வகை தக­வல்­க­ளையும் உள்­ள­டக்­கிய சிம் அட்டை வடி­வி­லான இலத்­தி­ர­னியல் மாதிரி ஒன்றை வெளியிட அர­சாங்கம் தீர்­மா­னித்துள்­ளது. அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு மற்றும் காணி அமைச்­சரும் அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக குறித்த அறி­விப்பை வெளியிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், இலத்­தி­…

  10. கொக்குவில் வாள்வெட்டு – சிகிச்சைக்காக பொலிஸார் வேறிடம் மாற்றம் யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதிப் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான இரு பெரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்த அனுராதபுரத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு பொலிஸ் மருத்துவமனைக்கும், மன்னாரைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மன்னார் அரச வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் நோயாளர்காவு வண்டி மூலம் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/16098.html

  11. யாழ்.பொலிஸார் மீது வாள் வெட்டு ; மேலும் இருவர் கைது யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் மேலும் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரு பொலிஸார் மீது இனந்தெரியாத குழுவினால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்து பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, குறித்த இருவரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புட…

  12. "தந்தை செல்வா - தலைவர் பிரபாகரன்" பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் என்னை சந்தேகிக்காதீர்...எரிமலையாய் வெடித்த " உணர்ச்சிக்கவிஞர் " காசி ஆனந்தன் !

  13. திரு­ம­லை கன்சைட் இர­க­சிய நிலத்தடி முகாமில் என்ன நடந்தது என முன்னாள் கடற்­படை தள­பதிகளே அறிவர் : அங்கு என்ன நடக்­கி­றதென வேறு எவ­ருக்கும் தெரி­யாது“ Published by Priyatharshan on 2017-08-03 11:13:09 திரு­மலை கடற்­படை முகாமில் உள்ள கன்சைட் இர­க­சிய சித்திர­வதை கூடங்கள் என நம்­பப்­படும் சிறைக் கூடங்­களில் என்ன நடந்­தன என்­பது குறித்து அனைத்து தக­வல்­களும் முன்னாள் கடற்படை தள­பதி வசந்த கரண்­ணா­கொட, முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்க, லெப்­டினன் கொமாண்டர் சுனித் ரண­சிங்க மற்றும் லெப்­டினன் கொமாண்டர் பண்­டார ஆகி­யோரைத் தவிர வேறு எவ­ருக்கும் தெரி­யாது என கடற்­ப­டையின் கிழக்கு பிராந்­திய கட்­டளைத் தள­பதி ரியர் அத்­மிரால் ரி.ஜே…

  14. எதுவுமே தெரியாது என சகல குற்றச்சாட்டுகளையும் ரவி நிராகரித்தார் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சகல குற்றச்சாட்டுகளையும் நிராகரித்த, முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க, தனக்கு எதுவுமே தெரியாது என்று, சாட்சியமளித்தார். திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் அமர்வில், நேற்று (02) ஆஜரான அமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்த அமர்வுக்கு இரண்டு தடவைகள் அழைக்கப்பட்டபோதிலும், தன்னால் சமுகமளிக்கமுடியாமைக்காக, தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, ஆணைக்குழுவில் பாரிய குற்ற…

  15. வடக்கில் குடி­நீ­ரின்றி தவிக்கும் நான்­கரை இலட்சம் மக்கள் நாட்டின் வட பகு­தியில் நிலவும் கடும் வரட்சி கார­ண­மாக வட­மா­கா­ணத்தின் 670 கிராம சேவைப் பிரி­வு­களில் நீர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து 4 இலட்­சத்து 62 ஆயி­ரத்து 991 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மக்­களின் குடி­நீ­ருக்கு பாரிய தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­துடன் விவ­சாயம் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. வட பகு­தியில் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்த வெப்பக் கால­நிலை கார­ண­மாக வடக்கில் கடும் வறட்சி நில­வு­கின்­றது. இந்த வறட்சி கார­ண­மா­கவே வட­மா­கா­ணத்தில் 670 கிராம சேவைப் பிரி­வு­களில் நீர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. நிலவும் வறட்சி கார­ண­மாக வடக்கில் 1 இ…

  16. வடக்கில் பாரிய குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த தீய சக்­திகள் முயற்சி முன்­னைய அரசே ஆவா குழுவை உரு­வாக்­கி­யது; நிலை­மையை சரி­யாக உணர்ந்­து­விட்டோம் என்­கி­றது அர­சாங்கம் (ரொபட் அன்­டனி) நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்­களை முடக்­கு­வ­தற்­காக வடக்கில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு­சிலர் முயற்­சித்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக தெரி­கி­றது. வடக்கில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி மக்­களின் இயல்­பு­நி­லையை சிக்­க­லாக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. இது­தொ­டர்பில் அர­சாங்கம் மிகவும் ஆழ­மான முறையில் கவனம் செலுத்தி வரு­கி­றது என்று அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் வடக்கில் ஆவா குழுவை முன்­னைய அர­…

  17. வடக்கில் பாரியளவில் வரட்சி ஏற்படும் – ஆய்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் பாரியளவில் வரட்சி நிலைமை ஏற்படும் என அண்மைய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக வெப்பமயமாதல் காரணமாக தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடுமையான வெப்பத்தை உணர நேரிடும் எனவும் குறிப்பாக இலங்கையின் வட பகுதி மக்கள் இவ்வாறு வெப்பத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2100ம் ஆண்டளவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் அதி கூடிய வெப்பநிலை காணப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் வெப்பநிலைமை, அனல் காற்று போன்ற சவால்களை எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்…

  18. விலைமதிக்க முடியாத பரிசை அருங்காட்சியகத்திற்கு கையளித்தார் ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட புராதன வாள் தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய நூதனசாலைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. 44 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்துக்கான அழைப்புக்கமைய கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட உயர் வரவேற்பாக ரஷ்ய ஜனாதிபதியினால் இந்த புராதன வாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு வழங்க…

  19. வட்டரக விஜித தேரர் கைது ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலக காரியாலய பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டதால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/22619

  20. இணக்க முயற்சியை குலைக்கவே வடக்கில் வன்முறை கட்டவிழ்ப்பு “அர­சால் கட்­டி­யெ­ழுப்­பட்­டு­வ­ரும் நல்­லி­ணக்­கத்­தை­யும் அதற்­கான முயற்­சி­க­ளை­யும் சீர்­கு­லைக்­கவே வடக்­கில் ஆவா குழு மூலம் வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­ப­டு­கின்­றன’’ என்று அரசு குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது. கூட்டு அர­சின் அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் வாராந்த ஊட­க­வி­ய­லா­ளர் மாநாடு நேற்­றுக் காலை அரச தக­வல் திணைக்­ ­களத்­தில் நடை­பெற்­றது. அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரும் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்­தார். வடக்­கில் அதி­க­ரித் துள்ள பொலி­ஸார் மீதான தாக்­கு­தல்­கள் தொடர்­பில்…

  21. பொலிஸார் மீது வாள்வெட்டு – சந்தேகநபர்களுக்கு மறியல் யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதிப் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது. சந்தேகநபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். அதன்போதே இந்த உத்தரவு விதிக்கப்பட்டது. அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் உத்தரவிட்டது. http://uthayandaily.com/story/15836.html

  22. ‘கைதிகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசுவேன்’ எஸ். நிதர்ஷன் “தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக, சட்டமா அதிபருடன் மிக விரைவில் கலந்துரையாடவுள்ளேன்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கையிலுள்ள சிறைகளில், அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுதலை செய்யுமாறு கோரி, தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் , வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். மாகாணசபை உறுப்பினர் எஸ்.சிவயோகம் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்…

  23. ‘வடக்கில் 260 புலிகள் உள்ளனர்’ இலங்கை இராணுவத்திடம் சரணடையாத, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 260 பேர், வடக்கில் உள்ளனரென, பாதுகாப்புப் பிரிவை மேற்கோள்காட்டி, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில், அண்மைய காலத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் ஏனைய சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளின் பின்னால், முன்னாள் புலிகள் இருப்பதாக அறியமுடிகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடக்கில்-260-புலிகள்-உள்ளனர்/71-201750

  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகளின் இன்று மாலை இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அண்மைக்காலமாக தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டு வரும் நிலையில் ஆயுதப் போராட்டத்தின் வழிவந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து பேசியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற குறித்த ஒன்றுகூடல் தொடர்பில் அதில் கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவரிடம் எமது ஊடகவியலாளர் வினவிய போது, தாங்கள் ஒன்றுகூடி பேசியது உண்மை எனவும், அந்த ஒன்றுகூடலில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததாகவும், மாவட்ட ரீதியில் மூன்று கட்சிகளும் ஒன்ற…

  25. பொலிஸ்மா அதிபர் கிளிநொச்சி விஜயம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் உள்ள கிராம சேவையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் சிவில் குழுக்களுடனான சந்திப்பொன்றில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பொலிஸ்மா அதிபர் நேற்று கலந்து கொண்டார். குறித்த சந்திப்பு நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது. பொலிஸ்மா அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், பொலிஸ் உப குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். http://www.virakesari.lk/article/22615

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.