ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
பெண்ணொருவரை வல்லுறவு செய்தனர் என்ற குற்றச்சாட்டின்கீழ் வழக்குதொடரப்பட்டிருந்த இருவருக்கு கம்பஹா மேல் நீதிமன்ற நீதியரசர் பிரியந்தபெர்னாண்டோ தலா இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நேற்றுதீர்ப்பளித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருவரும் ஐந்து லட்சம் ரூபாவை நட்டஈடாகசெலுத்தவேண்டுமெனவும், அவ்வாறு செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டுசிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. 2002 செப்டெம்பர் 2ம் திகதி லலித் பிரேமகுமார (வயது 47), இந்திக்க சம்பத்(வயது 37) ஆகிய இவர்கள் இருவரும் 49 வயதான பெண்ணொருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் பலவந்தமாகக் கடத்திச் சென்று வல்லுறவு செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. http://www.t…
-
- 0 replies
- 386 views
-
-
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர மற்றும் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் இருவருக்கும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இரு பொலிஸ் அத்தியட்சகர்களையும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் விரைவில் விசாரணைகளுக்காக அழைக்கப்படலாம் என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. யாழ்.நல்லூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 439 views
-
-
அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த பீடங்களை விசேடமாக சந்திப்பதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசியலமைப்பு குறித்து விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவந்ததன் பின்னர், நாட்டிலுள்ள மக்களை பல்வேறு மட்டங்களிலும் சந்தித்து விளக்கமளிக்கவுள்ளோம். இதில் முதற்கட்டமாக இலங்கையிலுள்ள அனைத்து மதத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம். அவ்வாறு எல்லா மதத் தலைவர்களையும் சந்திக்கும்போது பௌத்த பீடாதிபதிளையும் சந்திப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டு…
-
- 0 replies
- 282 views
-
-
நீதிபதியின் அழுகையால் நெகிழ்ந்தார் அமெ.தூதுவர் தனது மெய்ப்பாதுகாவலராக இருந்து உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவியின் காலில் நீதிபதி மா.இளஞ்செழியன் வீழ்ந்து கதறியழுத சம்பவத்தைக் கண்டு, ‘ஆழமாக நெகிழ்ந்தேன்’ என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை, உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவியின் காலில் வீழ்ந்து நீதிபதி மா.இளஞ்செழியன் கதறி அழுதார். இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பும் தனது கீச்சகத்தில் இந்தக் க…
-
- 2 replies
- 452 views
-
-
புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையை வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்தார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தி பின்வருமாறு… இரகசிய பொலிஸ் தலைமையகத்திற்கு வந்து வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு பிரபாகரனின் மைத்துனர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குறித்து வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு இரகசிய பொலிஸார் சிவாஜிலிங்கத்திற்கு அறிவித்திருந்தனர். எனினும் வல்வெட்டித்துறையிலிருந்து கொழும்பிற்கு செல்வதற்கு எட்டு மணித்தியாலங்கள் செல்லும் எனவும் இதனால் இரகசிய பொலிஸ் தலைமையகத்திற்கு வர முடியாது எனவும் சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். என்னிடம்…
-
- 0 replies
- 317 views
-
-
விடுதியில் புகுந்து இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் : வவுனியவில் சம்பவம் வவுனியா முதலாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் விடுதி முகாமையாளர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். வவுனியா முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பிற்கபல் 2.45 மணியளவில் நான்கு நபர் சென்று தங்குவதற்கு அறை வேணுமென கோரியுள்ளனர். எனினும் முகாமையாளர் அறை இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர்கள் முகாமையாளரை தாக்கி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். சத்…
-
- 0 replies
- 309 views
-
-
கிளிநொச்சியில் சந்தையை பூட்டி எதிர்ப்பும், அனுதாபமும் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ் நல்லூர்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தினை கண்டித்து இன்று ( செவ்வாய் கிழமை) கிளிநொச்சி சந்தையை பூட்டி எதிர்பபு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, உயிரிழந்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய் பாதுகாவலருக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது கிளிநொச்சி சேவை சந்தையின் அளைனத்து வியாபார நிலையங்களும்இன்றைய தினம் பூட்டப்பட்டு இவ் எதிர்ப்பு நடவடிக…
-
- 0 replies
- 713 views
-
-
அர்ஜூன் அலோசியசின் இலத்திரனியல் சாதனங்கள் ஒப்படைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியசின் இலத்திரனியல் சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இந்த சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அலோசியசின் மடிக்கணனி, மடிக்கணணி , செல்லிடப்பேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன. கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காக இந்த சாதனங்கள் தேவைப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்த நிலையில் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆணைக்க…
-
- 0 replies
- 353 views
-
-
நீதிபதிக்கு அதிதிகள் பாதுகாப்பு O யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு அதிதிகளுக்கு வழங்கப் படும் சிறப்பு அதிரடிப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நல்லூர் பகுதியில் கடந்த சனிக் கிழமை, மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்கான பாதுகாப்பு அதிகரித்து வழங்கப்படும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு சிறப்பு அதிரடிப்படையின் பாதுகாப்பு நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/13675.html
-
- 0 replies
- 286 views
-
-
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பிரதான சந்தேகநபர் – புங்குடுதீவைச் சேர்ந்த ஜெயந்தன் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் முன்னாள் போராளி ஒருவரின் நண்பர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது யாழ்.பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். பிரதான சந்தேகநபருடன் குறித்த இருவரும் நேற்றைய தினம் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந…
-
- 8 replies
- 987 views
-
-
சி.சி.டிக்குச் சொந்தமானதுதான் அந்த வெள்ளை வான் அனைத்துப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தைக் கைதுசெய்வதற்குக் கொண்டுவரப்பட்ட வெள்ளை வான், கொழும்பு குற்றப் பிரிவினுடையது (சி.சி.டி) என்று, நீதிமன்றத்தின் கவனத்துக்கு, நேற்று (24) கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, ரயன் ஜயலத்தைக் கைதுசெய்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, நேற்று (24) அனுமதித்தார். சுகாதார அமைச்சுக்குள்அத்துமீறி நுழைந்து 870, 227 ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பான சந்தேகத்தின் பேரில் அவரைக் கைதுசெய்யவதற்காக, கொழும்பு குற்றப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்…
-
- 1 reply
- 395 views
-
-
‘4 உறுதிமொழிகளை உடன் நிறைவேற்றவும்’ காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு வழங்கிய நான்கு உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கடுமையான மனக்காயங்களை ஆற்ற வேண்டிய கடமைப்பாடு, இந்த அரசாங்கத்துக்கு உண்டு என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதமொன்றை எழுத்தியுள்ளார். அந்தக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘காணாமற்போன ஆட்…
-
- 0 replies
- 270 views
-
-
யாழில் இரவோடிரவாக பெற்றோலுக்கு முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்! (படங்கள்) பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். தாம் முன்வைத்த பிரதான கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகள் அரசாங்கத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களுக்கு உரித்தான கேப்பாபிலவு காணி தொடர்பில் சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் கேப்பாபிலவு காணி தொடர்பில் சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தற்பொழுது இராணுவம் நிலைகொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவுக் காணி தமிழ்க் குடிமக்களுக்குச் சொந்தமானது. அது நான்கு காணித் துண்டுகளை உள்ளடக்கியது. (01) 243 ஏக்கர்கள் (02) 189 ஏக்கர்கள் (3) 111 ஏக்கர்கள் (4) 70 ஏக்கர்களும் 02 றூட்களும். எல்லாமாக மொத்தம் 613 ஏக்கர்களும் 02 றூட்களும் ஆகும். கடந்த மே மாதம் 18ந் திகதி நானும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களும் குறித்த காணிக்கு விஜயம் செ…
-
- 0 replies
- 282 views
-
-
பாதுகாப்புச் செயலாளருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்னவிற்கும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் ( James Dauris )க்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இரு தரப்பு உறவுகள், இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் என்பன குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் ரொம் பேர் ( Tom Burn) னும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கபில வைத்தியரட்ன, அண்…
-
- 0 replies
- 308 views
-
-
சக்தி டிவி செய்திகள் 24th July 2017, 8PM
-
- 0 replies
- 236 views
-
-
பற்ற வைத்த சுருட்டினை அணைக்காமல் தலைமாட்டின் கீழ் வைத்துவிட்டு தூங்கிய பெண்மீது தீ பற்றிக்கொண்டதில் உடல் முழு வதும் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத் தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தி னம் மாலை உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. கரவெட்டி மத்தி கரவெட்டி பகுதியினை சேர்ந்த சின்னத் தம்பி லட்சுமி என்ற ஐந்து பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் மேற்படி பெண் சுருட்டு ஒன்றினை புகைத்துள்ளார். பற்றிய சுருட் டின் தனலை அணைக்காமல் அதனை தலைமாட்டின் கீழ் வைத்துவிட்டு தூங்கி விட்டார். இதன்போது சுருட்டின் தணல் மெத்தை மீது பற்றி எரிந்ததில் மூதாட்டியும் மெத்தையுடன் சேர்ந்துதீயில் எரிந்துள்ள…
-
- 0 replies
- 303 views
-
-
உயிரிழந்த மெய்ப் பாதுகாவலருக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. நேற்று முன்தினம் நல்லூரில் நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த அவரது மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திரவிற்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தினார்கள். அன்னாரின் உருவப்படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மெழுகுவர்த்திகளும் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். http://uthayandaily…
-
- 0 replies
- 358 views
-
-
யாழ். முச்சக்கரவண்டிச் சாரதிகள் கறுப்புத் துணிகளைப் பறக்கவிட்டுச் சேவைப் புறக்கணிப்பு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, முச்சக்கரவண்டிச் சாரதிகள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ். முச்சக்கரவண்டித் தரிப்பிடங்களில் கறுப்புத் துணிகளைப் பறக்கவிட்டுத் தமது சேவைப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர். http://uthayandaily.com/story/13497.html வடக்கு சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பு! யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டது என்று…
-
- 2 replies
- 593 views
-
-
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தது அல்ல.! - எம்.எப்.எம். பஸிர் துப்பாக்கிச் சூடு நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தது அல்ல என விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக சற்றுமுன்னர் தெரிவித்தார். நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யும் எந்த வழக்கு தொடர்பிலான விடயங்களும் சம்பவத்தின் பின் புலத்தில் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/22229 நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நீதிபதி இலக்கில்லை என்கிறார் எஸ்.எஸ்.பி. ஸ்ரனிஸ்லஸ் நல்லூர் சம்பவம் நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட…
-
- 7 replies
- 2.2k views
-
-
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியது அவசியமானது – கனேடிய பிரதமர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியது அவசியமானது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ( Justin Trudeau )தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பான நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் ஏற்பட்ட கலவரத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்களின் உயிர்கள் காவு கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை என கு…
-
- 0 replies
- 257 views
-
-
திருமலையை ஐ.தே.க. கைப்பற்றுவது உறுதி! எதிர்வரும் தேர்தல்களில் திருகோணமலையை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவா் இவ்வாறு தெரிவித்தார். அவா் தெரிவித்ததாவது, கடந்த வாரம் தலைமை அமைச்சா் ரணில் விக்ரம சிங்கவுடன் நிகழ்வொன்றில் பங்கேற்றபோது எதிர்வரும் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விரிவாகக் க லந்துரையாடினேன். இதன்போது கட்சியின் செயற்பாட…
-
- 0 replies
- 464 views
-
-
மல்வத்து பீடம் கடும் கண்டனம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக, பௌத்த மக்களின் முக்கிய பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் தெரிவித்தது. “இந்த ஆட்சியில் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட வேண்டும். ஆயுதங்களால் அதனை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தாக்குதலாளிகள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று மல்வத்து பீடம் குறிப்பிட்டுள்ளது http://uthayandaily.com/story/13414.html
-
- 0 replies
- 376 views
-
-
கதறி அழுத யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் 18 ஆண்டுகால நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர் கேமரத்ன (வயது -58) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்தார். இந்நிலையில் கதறி அழுத நீதிபதி யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது இரு கைகளையும் கூப்பி குறித்த மெய்பாதுகாவலரின் மனைவியிடம் மன்னிப்பு கோரினார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Judge-Jaffna-High-Court-Judge-Ilancheliyan உயிரிழந்தவரின் உறவினர்களின் காலில் வீழ்ந்து கதறி அழுத நீதிபதி:- நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தி…
-
- 5 replies
- 2.2k views
-
-
தமிழர், முஸ்லீம் உறவும் எதிர்காலமும் இலங்கை இனவாத அரசின் மொழிவாரியான அடக்குமுறை தீவிரம் கொண்ட காலம் முதல் அதன் எதிர்வினையாகத் தோற்றம் பெற்ற தமிழ் மக்களது தேசிய விடுதலை போராட்ட வாழ்முறையுடன் பல முஸ்லீம்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். தமிழ் தேசிய வீரர்பட்டியலிலும் பலர் இடம் பிடித்திருந்தனர்; தமிழ் தேசிய படையணிகளும், போர்வீரர்களும் முஸ்லீம் பெயர்களை பெருமையுடன் தாங்கி நின்றிருக்கின்றன. தமிழீழ தேசிய விடுதலை போராட்டத்தின் அங்கமாக முஸ்லீம்கள் இணைந்திருந்தார்கள். முஸ்லீம் மக்களை பொறுத்தவரை, தமிழ் மக்களில் இருந்து மாறுபட்டு ஒரு தனித்தன்மை அவர்களிடம் ஆரம்பம் முதலே இருந்து வந்துள்ளது என்பது வரலாற்று உண்மையாகும். தாம் தனித்தன்மை கொண்ட ஒரு மக்கள் பிரிவு என்பதை மு…
-
- 1 reply
- 636 views
-