ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143353 topics in this forum
-
‘போரின் அழிவுகள், அவலங்களைப் பொருட்படுத்தாமல் கல்வியிலும் விளையாட்டிலும் முன்னிலை அடையவும்’ – வடக்கு மாகாண முதலமைச்சர் அழைப்பு (யாழ்ப்பாணத்திலிருந்து நெவில் அன்தனி) போரின் அழிவுகளையும் அவலங்களையும் பொருட்படுத்தாமல் எதிர்காலத்தில் கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் முன்னணியில் உள்ள மாகாணமாக வடக்கு மாகாணம் திகழவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் கூறினார். கல்வி அமைச்சு, அமைச்சின் விளையாட்டுத்துறைப் பிரிவு ஆகியன நெஸ்ட்லே லங்கா நிறுவனத்துடன் இணைந்து நடத்திய அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் ஓர் அம்சமான நெஸ்டமோல்ட் அரை மரதன் ஓட்டப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு …
-
- 0 replies
- 253 views
-
-
சந்திரிகாவும் களத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் சிலர், அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகி வருவதாக வெளியான தகவலையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்தச் சந்திப்பின்போது, அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை, அரசாங்கத்துக்குள்ளே வைத்துகொள்ளும் முயற்சியில், ஈடுபடுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. …
-
- 0 replies
- 195 views
-
-
புதிய கூட்டாட்சிக்கு முயற்சி இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப் -படுத்துக்கின்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள், அரசாங்கத்திலிருந்து விலகினால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு, புதிய கூட்டாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களே, மேற்கண்ட முயற்சியில் களமிறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. புதிய கூட்டாட்சிக்காக, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ம…
-
- 0 replies
- 276 views
-
-
‘காணாமற்போன சட்டமூலத்தை திருத்தத்துடன் சமர்ப்பிக்க முஸ்தீபு’ பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்ட சகலரையும் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும், நிர்வகித்தலும்) பணிகளை நிறைவேற்றுதலும் (திருத்தச்) சட்டமூலத்தை, திருத்தத்துடன் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கடந்த …
-
- 0 replies
- 149 views
-
-
காடுகளை அழித்து மேற்கொள்ளப்படும் குடியேற்றத்துக்கு எதிராக முல்லைத்தீவில் இன்று மாபெரும் பேரணி ! முல்லைத்தீவு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பிரதேசமான ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பில் 177 ஏக்கர் வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இக்காடழித்து குடியமர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பினால் இன்று காலை 11 மணியளவில் மாபெரும் போராட்டமொன்று நடாத்தப்படவுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கும் குறித்த பேரணி காடழிப்பு நிகழ்த்தபடவிருக்கும் கூளாமுறிப்பு பிரதேசம் வரை சென்று நி…
-
- 17 replies
- 606 views
-
-
‘கூட்டாட்சியை நீடிப்பதற்கு பரஸ்பர முயற்சி’ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கூட்டாட்சியைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு பல்முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகி, தனியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு, அரசாங்கத்திலிருக்கின்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே, இந்தப் பரஸ்பர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்திலிருந்து வெளியேறு…
-
- 0 replies
- 241 views
-
-
நவம்பர் இறுதியில் தேர்தல் நடைபெறுவது உறுதி எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என, இன்று (16) மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹகீம், மனோ கணேசன், ரிஷாட் பதியூதின், கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா, அநுரகுமார திசாநாயக்க, எம். ஏ. சுமந்திரன், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதன்போது, உள்ளூராட்சி தேர்தல் சட்டம…
-
- 0 replies
- 207 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (16-07-2017)
-
- 0 replies
- 298 views
-
-
பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க காணாமற்போயுள்ளார் அமெரிக்காவிற்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க, பதவிக்காலத்தின் பின்னர் காணாமற்போயுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். வொஷிங்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க, ஏப்ரல் மாதத்துடன் பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவிருந்தார். பதவிக்காலம் நிறைவு பெற்றதன் பின்னர், பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க ஒரு மாத வெளிநாட்டு விடுமுறை பெற்றிருந்ததுடன், அவர் மீண்டும் மே …
-
- 1 reply
- 445 views
-
-
வட மாகாணத்தில் பாரிய சூழல் பிரச்சினையை உருவாக்கி வரும் சட்டவிரோத மணல் அகழ்வு சட்டவிரோத மணல் அகழ்வு, தற்போது வடமாகாணத்தில் பாரிய சூழல் பிரச்சினையை உருவாக்கி வருகின்றது. வடமாகாணத்தில் தற்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கட்டுமானப்பணிகளுக்கான மணலுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன் காரணமாக குறைந்த விலையில் மணலை பெற்ற மக்கள், தற்போது பல மடங்கு விலைக்கு மணலை கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் 17,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு டிப்பர் மணலை தற்போது 38,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். மன்ன…
-
- 0 replies
- 313 views
-
-
டெனீஸ்வரனையும் பதவி விலக்குகிறார் முதலமைச்சர் விக்கி வடக்கு மாகாணப் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கோரிக்கைக்கு அமையப் பதவி நீக்கம் செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோரைப் பதவி நீக்கியதால் தோன்றிய சர்ச்சை அடங்குவதற்கு முன்னரே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.சிறீகாந்தாவால் வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடிதம் ஒன்று அனுப்ப…
-
- 1 reply
- 519 views
-
-
பணத்திற்காக ஆட்களை கடத்திய இரண்டு குழுக்களை இயக்கினார் கடற்படை கப்டன் தசநாயக்க – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பேச்சாளார் ருவான் குணசேகர, வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள், கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவமானது பணத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளார் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில வைக்கப்ப…
-
- 0 replies
- 242 views
-
-
மக்களின் கேள்வி! புதிய அரசமைப்பு ஒன்றின் உருவாக்கம் பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நீண்ட காலத்தின் பின்னர் வாய் திறந்திருக்கிறார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் வருகை தந்திருந்தார் அவர். அங்கு தனது கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இடையே பேசினார். அங்கேயே புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் குறித்தும் விளக்கமளித்தார். புதிய அரசமைப்பை உருவாக்கும் விடயத்தில் கூட்டமைப்பு விட்டுக்கொடுக்கிறது, தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக அரசோடு சேர்ந்து சோரம் போகிறது என்ற கடும் விமர்சனங்களைக் கூட்டமைப்பு எதிர்கொண்டு வரும்…
-
- 0 replies
- 425 views
-
-
ஒற்றையாட்சி, சமஸ்டி சொற்கள் இல்லாமல் அதிக கூடிய உறுதியான அதிகார பகிர்வு – கிளிநொச்சியில் சம்மந்தன்:- ஒற்றையாட்சி எனும் சொல்லோ அல்லது சமஸ்டி எனும் சொல்லோ இல்லாமல் அதி கூடிய உறுதியான மத்திய அரசினால் மீளப்பெறப்பட முடியாத அதிகார பகிர்வு புதிய அரசியல் சாசனத்தின் மூலம் கொண்டுவரப்படுமானால் அதனை நாங்கள் பரிசீலிப்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார் கடந்த 12 ஆம் திகதி கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரின் முழுமையான உரை வருமாறு இன்றைய நிலைமை ஒரு மிகவும் சிக்கலான நிலைமை இந்த நிலையி…
-
- 11 replies
- 618 views
- 1 follower
-
-
-
-
- 0 replies
- 364 views
-
-
வட மாகாணத்திலிருந்து பயங்கரவாத புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள குடியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை சில இனவாத தமிழ் அரசியல்வாதிகளும் இனவாத தமிழ் அமைப்புக்களும் எதிர்ப்பதை உலமா கட்சி கண்டிப்பதுடன் இத்தகைய இனவாத எதிர்ப்புகளுக்கெதிராக முஸ்லிம் இளைஞர் அமைப்புக்களும் அமைதிப்பேரணிகளை நடத்த வேண்டும் எனவும் உலமா கட்சி வேண்டிக்கொள்கிறது. விடுதலைப்புலிகள் வட மாகாண முஸ்லிம்களிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் கொள்ளையடித்த பின்னர் பலாத்காரமாக வெளியேற்றியிருந்தனர். அம்மக்களின் காணி உறுதி பத்திரங்களைக்கூட பறிமுதல் செய்திருந்தனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரார்த்த…
-
- 1 reply
- 522 views
-
-
தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கு எக்காலமும் பிக்குகளே இடைஞ்சல் தேசிய பிரச்சினை விவகாரத்தில் பிக்குகள் அநாகரிகமாக நடந்துகொண்டார்கள் என்று கூறுகிறார் சத்கோரள மகாதிசாவே பிரதி பிரதம சங்க நாயக்க சாஸ்திரபதி மாகல்கடவல புஞ்ஞாசார தேரர் கேள்வி : புதிய அரசியலமைப்புத் தொடர்பாக பலவிதமாக கதைகள் கூறப்படுகின்றன. இது குறித்து தங்களின் கருத்தென்ன? பதில் : புதிய அரசியலமைப்பொன்றை அல்லது தற்போதுள்ள அரசியலமைப்புக்கு திருத்தத்தையோ மேற்க…
-
- 0 replies
- 193 views
-
-
பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கி மஹிந்தவை அமர்த்தவேண்டும் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கி மஹிந்தவை அமர்த்தவேண்டும் எம்.நேசமணி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பத வியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது தம்மை எதிர்க்கட்சி வரிசையில் அமர அனுமதிக்க வேண்டும். இல்லையேல் இந்த அரசாங்கத்திலிருந்து நிரந்தர மாக வெளியேறவேண்டி ஏற்படுமென ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான அருந்திக்க பெர்னாந்து எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது குறித்து தெரிவித்துள்ளதாகவும் தமது கோரிக்கைக்கு உரிய பதில் கிட…
-
- 1 reply
- 405 views
-
-
விகிதாசார தேர்தல் முறைமையை அதிகம் விரும்பும் ஐ.தே.க. கலப்புமுறையை யோசனை செய்தது த.தே.கூ. ஆர்.ராம் எதிர்வரும் டிசம்பர் மாதம் உள்ளூ ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் எழுந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி விகிதாசார தேர்தல் முறைமையிலேயே இத்தேர்தல் நடைபெறவேண் டும் என அதிகளவில் விருப்பம் கொண் டிருக்கின்றது. எனினும் எத்தகைய முறையில் தேர்தலொன்றுக்கு முகங்கொடுப்பது என்பது குறித்து இறுதி முடிவுவொன்றை எட்டுவதற்காக எதிர்வரும் காலப்பகுதியில் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உயர்மட்டத்தினருடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கும் அக்கட்சி …
-
- 0 replies
- 271 views
-
-
நாம் எதிர்பார்க்கும் அளவு விடயங்கள் நடக்கவில்லை – சம்பந்தன் புதிய அரசமைப்பு விடயத்தில் அரசு சில கருமங்களைச் செய்துள்ளது. ஆனால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விடயங்கள் நடைபெறவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: புதிய அரசமைப்பு விடயத்தில் அரசு சில கருமங்களைச் செய்துள்ளது. ஆனால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விடயங்கள் நடைபெறவில்லை. அரசு துரிதமாகச் செயற்படவேண்டும். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும். கடந்த அரசு…
-
- 4 replies
- 496 views
-
-
வீரமக்கள் தின நிகழ்வுகள் கொழும்பில் 28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இன்று கொழும்பில் நடைபெற்றன. புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரனின் உருவப்படத்துக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. http://uthayandaily.com/story/11803.html
-
- 6 replies
- 657 views
-
-
எமர்சனின் அறிக்கைக்கு கூட்டமைப்பு வரவேற்பு பாதுகாப்புத் தரப்பினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுப்பதாகப் பன்னாட்டுச் சமூகத்துக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின் அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக அந்தக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை அரசு ஒருபோதும் தப்பிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு வருகை தந…
-
- 2 replies
- 491 views
-
-
தாங்கள் நினைத்தமாதிரி முழுமையாக முல்லைத்தீவை அபகரிக்கலாம் என்று யாரும் அதிகாரம் செலுத்த முடியாது - ரவிகரன் ! முல்லைத்தீவில் காடுகளை அழித்து திட்டமிட்டு புதிய குடியேற்றங்களை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவை பிரதிநிதுத்துவபடுத்தும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூளாமுறிப்பு பகுதியில் காடுகளை அளித்து அப் பகுதியில் புதிய முஸ்லீம் குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுவரும் நிலையில் அதற்க்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பி வருகின்றது.இந்த நிலையில் இந்த காடழிப்பு தொடர்பில் வடக்கு மாகானசபை உறுப்பினர் ரவிகரன் தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவில் …
-
- 0 replies
- 249 views
-
-
சந்நிதி திருவிழாவில் கலாசாரம் கட்டாயம் ஆலய நிர்வாகத்தினர் அறிவிப்பு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருப்பதால் ஆலய திருவிழாவுக்கு வருகை தரும் அடியார்கள் ஆசார சீலர்களாக எமது பண்பாடு, கலாசாரத்துக்கு ஏற்ப ஆலயத்துக்கு வருகை தரவும் என ஆலய நிர்வாகத் தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிர்வாகத்தினரால் அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: திருவிழாக் காலத்தில் ஆலய உள்வீதி, தேரோடும் வெளி வீதிகளில் வியாபார நடவடிக்கைகள் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. நடம…
-
- 0 replies
- 392 views
-