ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
மூன்று போர் கப்பல்களில் 715 சீன கடற்படையினர் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட இலங்கை வருகை (லியோ நிரோஷ தர்ஷன்) வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக சீன கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளை கருத்தில் கொண்டு தேவையான உதவிகளை வழங்குவதற்காக சீன அரசாங்கம் இந்த மூன்று கப்பல்களை அவசரமாக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. நல்லெண்ணப் பயணமாக கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த இந்தப் போர்க் கப்பல்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நி…
-
- 4 replies
- 602 views
-
-
மதங்களைக் கடந்து ஹிஸ்புல்லாஹ்வின் மனித நேயப் பணி! சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத பேதங்களுக்கு அப்பால் நிவாரணப் பணிகளை அள்ளி வழங்கினார். மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்களுக்கு இதன்போது விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், அப்பகுதி மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை அங்குள்ள சமூக நிறுவனங்களிடம் ஒப்படைத்தார். இதற்க…
-
- 1 reply
- 476 views
-
-
அனர்த்தத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்வு நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ் அனர்த்தங்களில் சிக்கி 72 பேர் காயமடைந்துள்ள நிலையில் 92 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, 175,216 குடும்பங்களைச் சேர்ந்த 677,241 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,735 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 9,432 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாதிப்படைந்த 17,446 குடும்பங்களைச் சேர்ந…
-
- 0 replies
- 217 views
-
-
ஜப்பான், மாலைதீவுகளின் நிவாரணக் கப்பல்கள் இவ்வார இறுதியில் இலங்கையில்..! (ஆர்.யசி ) வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை மேற்கொள்ள இந்தியா, சீனா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளிட்ட 19 நாடுகள் முன்வந்துள்ளன. 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரண நிதியாக இதுவரை கிடைத்துள்ளது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் நிவாரணப் பொருட்களுடன் 7 போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் ஜப்பான், மாலைதீவுகளின் நிவாரணக் கப்பல்கள் இவ்வார இறுதியில் கொழும்பை வந்தடையும். வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட மக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் சர்வ…
-
- 0 replies
- 189 views
-
-
அனர்த்தத்தின் போது சர்வதேசத்திடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு நட்புறவான வெளிநாட்டுக் கொள்கையின் சாதகத்தை வெளிப்படுத்துகிறது : ஜனாதிபதி அனர்த்தத்துக்குள்ளான இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சர்வதேச சமூகம் அர்ப்பணிப்புடன் முன்வந்தமை தற்போதைய அரசாங்கத்தின் நட்புறவான வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டுக்கு வருகை தந்துள்ள மாலைதீவு வெளிநாட்டமைச்சர் கலாநிதி மொஹமட் அஸீம் இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக மாலைதீவு அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்காக ஜனாதிபதி மாலை…
-
- 0 replies
- 127 views
-
-
விசாரணைகள் மூலமே நீதி நிவாரணம் கிட்டும் ஊகங்களும், சந்தேகங்களும் நீதியையும் நிவாரணத்தையும் பெற்றுத் தரமாட்டாது. அவற்றை விசாரணை களின் ஊடாக நிரூபிக்கவேண்டும். அதற்குக் காணாமற்போனோர் அலுவலகம் விரைவில் நிறுவப்பட வேண்டும். அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. இவ்வாறு அந்தக் கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே உயிருடன் இருக்கின்றார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்பதைத் தேடிப் பார்க்கவேண்டும். எனக்குத் தெரிந்த வரை…
-
- 2 replies
- 413 views
-
-
மகாவலி கங்கையிலிருந்து வட மாகாணத்துக்கு நீரைக் கொண்டுசெல்வதற்கான சாத்திய ஆய்வை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் இந்த சாத்திய ஆய்வை மேற்கொண்டு வருவதாக, மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சின் செயலர் உதய செனிவிரத்ன தெரிவித்தார். மொஹரகந்த அணைக்கட்டுப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த வருடம் களுகங்கை நீர்த்தேகத்தை அமைக்கும் பணிகள்நிறைவடையும். இவ்விரு திட்டங்களின் மூலம் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு நீரைக் கொண்டுசெல்வது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இவற்றின் மூலம் இரண்டு பிரதேசங்களை அபிவிருத்தி செய்யமுடியும். அத்துடன், இதன்மூலம் 85ஆயிரம் ஏக்கரில் அபிவிருத்தி வலயம் ஒன்றையும் அரசாங்கம் …
-
- 1 reply
- 287 views
-
-
ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் இந்தியாவில் கைது இலங்கையை சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் தமிழ் நாட்டின் திருச்சி பகுதியில் கியூ பிரிவு பொலிசாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யபட்டவர்களில் தேவா மற்றும் பிரகாஸ் என்பவர்கள் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை மூன்றாவது நபரான டானியல் என்பவர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. குறித்த மூன்று நபர்களும் தமிழ்நாட்டினுள் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து திருச்சி பகுதியில் நடமாடிய வேளையில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவ்வாறு நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நபர்களில் தேவா மற்றும் பிரகாஸ் என்பவர்கள் யாழில…
-
- 2 replies
- 1.5k views
-
-
பொன்னாலையில் காட்டுத்தீ பொன்னாலை தொடக்கம் திருவடிநிலை வரையான காடு, நேற்று தீப்பற்றி எரிந்த நிலையில், யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், பொதுமக்களுடன் இணைந்து கடும் பிரயத்தனத்தின் மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், அப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவான காடு தீயினால் எரிந்து நாசமானது. வலி. மேற்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் வலி. மேற்கு மற்றும் காரைநகர் பிரதேச சபைகள், காரைநகர் பிரதேச செயலகம், பிரதேச மக்கள் ஆகியவர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காடு தீப்பற்றி எரிவதைக் கண்ட உத்தியோகத்தர்கள் சிலர், அது தொடர்பாக வலி.ம…
-
- 0 replies
- 323 views
-
-
சத்தமாக பிரித் பாராயணம் செய்து அயலவர்களை தொல்லைபடுத்த வேண்டாம் என தம்மாலோக்க தேரருக்கு நீதிமன்றம் அறிவுரை சத்தமாக பிரித் பாராயணம் செய்து அயலர்களை தொல்லைப்படுத்த வேண்டாம் என எலன் மெதினியாராமயவின் பீடாதிபதி உடுவே தம்மாலோக தேரருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொழும்பு நீதவான் துலானி அமரசிங்க இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். கொழும்பு பொல்ஹென்கொட எலன்மெதினியாராமயவிற்கு அருகாமையில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் தம்மாலோக தேரருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதிகாலையில் சத்தமாக பிரித் பாராயணம் செய்வதனால் தமக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சத்தமாக பாராயணம் செ…
-
- 0 replies
- 152 views
-
-
மூதூர் சம்பவத்தை கண்காணித்து வருகிறேன்; : குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் : மனோ திருகோணமலை மூதூர் சம்பவம் தொடர்பில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள்-சிறுவர் உரிமை செயற்பாட்டாளர்களின் உணர்வுகள் புரிகின்றன. எனினும் விசாரணைகள் தொடர்பில் எவரும் மனக்கிலேசம் அடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார். தற்போது, விசாரணை மற்றும் வழக்கு தொடரப்பட மருத்துவ பரிசோதனை வழிகோலியுள்ளது. எனவே குற்றம் இளைத்தவர்கள் உள்ளார்கள். எந்த ஒரு காரணம் கொண்டும் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிட இடந்தர முடியாது. அதேபோல் இனங்களுக்கு இடையேயான பதட்…
-
- 1 reply
- 317 views
-
-
எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளால் அழிவுகள் ஏற்படுமென எடுத்துக்கூறியதால் தாக்கப்பட்டேன்: டக்ளஸ் எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளினால் அதன் உறுப்பினர்கள் மாத்திரமின்றி நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அழிவுகள் ஏற்படும் என்பதை தான் எடுத்துக் கூறியமையால், தனக்கு களுத்துறை சிறைச்சாலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்துள்ளார். எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளினால் 1998 ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுவதாக அறிந்தவுடன், அங்கு சென்று அவர்களுக்கு விடயங்களை எடுத்துக்கூறி அந்த…
-
- 4 replies
- 587 views
-
-
‘விருப்பு வாக்கே இன்று கசக்கிறது’ அரசியல்வாதிகள் அபிவிருத்திக்குப் பதிலாக, விருப்பு வாக்குகளை எதிர்பார்த்து செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது அரசாங்கம் விதந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்த இடமளிக்காமல் அடுத்த தேர்தலுக்காக மக்களை வெற்றி கொள்வதற்கு சில அரசியல்வாதிகள் செயற்படுவதன் காரணமாக இவ்வாறான அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். காலி மாவட்ட செயலகத்தில் நேற்று (01) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு விசேட குழுக் கூட்…
-
- 0 replies
- 217 views
-
-
இந்திய கடற்படை நிகழ்வில் இலங்கைத் தளபதியால் சர்ச்சை இந்தியக் கடற்படை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணவர்த்தன சிறப்பு அதிதியாகப் பங்கேற்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று, இந்தியச் செய்தி தெரிவிக்கிறது. கேரள மாநிலம் எழிமலவில் உள்ள இந்திய கடற்படை அக்கடமியில் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்விலேயே இலங்கை கடற்படை தளபதி, சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய இராணுவத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு, வெளிநாட்டு படை அ…
-
- 1 reply
- 229 views
-
-
’இலக்கத்தகடுகளை அகற்றியமை தொடர்பில் எமக்கு ஒன்றும் தெரியாது’ -எஸ்.நிதர்ஷன் வலி. வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகடுகளை, இராணுவத்தினர் அகற்றி அவற்றை கொண்டு சென்றமை தொடர்பில், எமக்கு எதுவும் தெரியாது. இவ்விடயம் தொடர்பில் கொழும்பு பார்த்துக்கொள்ளும்” என, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன, நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை வடக்கு குரு வீதி என்ற இடத்தில் உள்ள பொதுக் கிணறு சுத்தப்படுத்தப்பட்டபோது அதற்கு இருந்து, 2003ஆம் ஆண்டு காலப்பகுதியில் சந்தைக்கு விற்பனைக்கு வந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மீட்கப்பட்டன. …
-
- 0 replies
- 268 views
-
-
காணாமற்போனோர் விவகாரம்: ‘கோட்டா ஊடாக அறியலாம்’ “காணாமல்போனோர் தொடர்பான விவரங்களை வழங்க, தற்போதைய அரசாங்கத்தால் முடியாது. ஆனால், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால், அவர்கள் தொடர்பான விவரங்களை வழங்க முடியும். அதனால், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைத்து, கோட்டாபய ஊடாக, காணாமற்போனோர் தொடர்பில் ஆராய முடியும்” என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் விடயங்கள் தொடர்பில், சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் அவர், தொடர்ந்து கூறியுள்ளதாவது, “தமிழர் தாயகப் பகுதியில், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காண…
-
- 0 replies
- 319 views
-
-
யாழ். நூலகத்தை எரித்தோரை தண்டிக்கத் தவறிவிட்டது அரசு வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் சாடல் “யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் நேரடிச் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட போதும் சம்பவத்துடன் தொடர் புடையவர்களைத் தண்டிக்க ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்” இவ்வாறு குற்றஞ்சாட்டினார் வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கத்தின் ஏற் பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகம் எரிப்பு நினைவுதினம் நேற்று யாழ்ப்பாண பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண எத…
-
- 1 reply
- 224 views
-
-
மலசலகூடத்திற்குள் உணவுப்பொருள் : மட்டக்களப்பில் சம்பவம் மட்டக்களப்பு நகரில் மனித நுகர்வுக்கு உதவாத உணவுகளை மலசலகூடத்திற்குள் வைத்து பராமரித்து பாதுகாத்து தயாரித்து விற்பனை செய்து வந்த உணவகம் ஒன்று செவ்வாய்க்கிழமை 30.05.2017 மாலை சீல் வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர். தகவல் ஒன்றை அடுத்து உடனடியாக 10 நிமிட இடைவெளியில் சம்பந்தப்பட்ட உணவகம் சுற்றி வளைக்கப்பட்ட போது அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவுகள் பத்திரப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுவது அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். அமுதமாலன் தலைமையிலான பொதுச…
-
- 0 replies
- 151 views
-
-
அழிந்த வீடுகளுக்கு 25 இலட்சம் ரூபா : இறந்தவருக்காக ஒரு இலட்சம் - ஜனாதிபதி (ஆர்.யசி) கடந்தவாரம் ஏற்பட்ட வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டு இறந்தஒவ்வொரு நபருக்குமான நஷ்டஈடாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கவும் முற்றாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 25 இலட் சம் என்ற அடிப்படையில் வழங்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். மண்சரிவு பாதிப்பில் இருக்கும் நபர்களுக்கு மாற்று இடங்களை வழங்கி குறித்த பகுதிகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை எச்சரிக்கை வலயமாக பிரகடனப்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 177 views
-
-
இலங்கையின் 100 கோடி டாலர் விமான நிலையம் விமானங்களுக்கு காத்துக் கிடக்கிறது ========================================== இலங்கையில் தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மாவட்டத்தில் கட்டப்பட்ட மத்தள விமான நிலையம் விமானப் போக்குவரத்து எதுவும் இன்றி காய்ந்துப்போய்க் கிடக்கிறது. ஒரு சர்வதேச விமான நிலையமான அதில் வாரத்துக்கு 50 முதல் 75 பயணிகளே வந்து போகிறார்களாம். ஒரு விமான சேவை மாத்திரந்தான் அங்கு வந்து போகிறதாம். 100 கோடி டாலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அது இலங்கையின் பொருளாதாரத்துக்கு இன்னுமொரு பாதகமாக பார்க்கப்படுகின்றது. இது குறித்த பிபிசியின் காணொளி.
-
- 1 reply
- 425 views
-
-
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் இன்று(31.5.2017) மீன்பிடிக்க சென்றவரை முதலை கடித்து குதறியுள்ளது. மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்க சென்ற துறைநீலாவணை 7ம் வட்டாரத்தை சேர்ந்த கந்தப்பன் சிவராசா(வயது 49)என்பரையே இவ்வாறு கடித்து குதறியுள்ளது.இச்சம்பவம் மாலை 6.45 மணியளவில் மட்டக்களப்பு வாவியில் இடம்பெற்றுள்ளது. வழமையாக மீன்பிடிக்க சென்ற சிவராசா என்பவர் தோணியிலிருந்து மீன்பிடித்து கொண்டிருந்தார். இவ்வேளையில் பின்னால் வந்து தோணியை கடித்துள்ளது.இதனால் தோணி இரண்டாக பிளந்துள்ளது. தோணியில் இருந்தவர் வாவிக்குள் வீழ்ந்துள்ளார்.இதனால் முதலை விருப்பத்துக்கு ஏற்றவகையில் கடித்து குதறியுள்ளது. இதனால் மீனவர் கூக்குரல் போட்டுள்ளார்.இதனால் வாவியில் …
-
- 0 replies
- 442 views
-
-
அமெரிக்க கடேட் வீரர்கள் இலங்கையில் பயிற்சி:- அமெரிக்க கடேட் வீரர்கள் இலங்கையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க கடேட் பிரிவைச் சேர்ந்த 33 படைவீரர்கள் இவ்வாறு இலங்கையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுத பயன்பாடு, உடல் பயிற்சி மற்றும் களப் பயிற்சி போன்றன இந்த அமெரிக்க கடேட் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 7ம் திகதி வரையில் இவர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ அகடமி, இராணுவத் தலைமையகம், இராணுவ எரிகணை தாக்குதல் பயிற்சிப் பாடசாலை ஆகியன உள்ளிட்ட சில முக்கிய இடங்களுக்கும் அமெரிக்க கெடட் வீரர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். (கோப்பு படம்) …
-
- 0 replies
- 472 views
-
-
யாழ்.மாவட்டத்தில் இருந்து குடிநீரை பெற்று போத்தலில் அடைக்கும் தொழிற்சாலைகளை யாழில் அமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்றைய தினம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி.கிழக்கு பிரதேச சபைக் குட்பட்ட சிறுப்பிட்டி, நீர்வேலி மேற்கு பகுதியில் குழாய்க் கிணறு மூலம் நீரை பெற்று குடிநீரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அத்தொழிற்சாலைக்கான அனுமதியை வலி.கிழக்கு பிரதேச சபை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. குழாய்க் கிணறு மூலம் தண்ணீர் பெறப்படுகிறது என்றும் அத் தொழிற்சாலையின் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களுக்கு செல்வதாக தெரிவித்து அப்பகுதியில் குறித்த தொழிற்சாலையை ஆ…
-
- 4 replies
- 908 views
-
-
இரணைமடுவுக்கு கீழான சட்டவிரோத வயல்விதைப்பு அழிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு கீழான தீர்மானிக்கப்பட்ட அளவை விட மேலதிகமாக சட்டவிரோதமாக விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் இன்று 01-06-2017 அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன. இரணைமடுகுளத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டுக்கு 890 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு இரணைமடு குளத்திள் கீழ் உள்ள 22 கமக்கார அமைப்புகளுக்கும் வயல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் தீர்மானிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக 280 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இரணைமடுகுளத்தில் பத்து அடிக்கு குறைவான நீர் இருப்பதன் காரணமாக தீர்மானி…
-
- 1 reply
- 562 views
-
-
கொலைக்குற்றங்களில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 5 பேருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளார். மூன்று வேறு வேறு கொலைக் குற்றச்சாட்டு வழக்குகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஐந்து பேருக்கு வவனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளார். இந்த மரண தண்டனை தீர்ப்புக்கள் வியாழக்கிழமை ஜுன் மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றவாளிகளாகக் காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பெண்ணாவார்.. மூன்றுமுறிப்பு வழக்கு வவுனியா மூன்றுமுறிப்பைச் சேர்ந்த ஐஸ்பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பிரபல வர்த்தகராகிய நிலமே ஆராச்சிகே தர்மகீர்…
-
- 0 replies
- 472 views
-