Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 31 May 2017, 8PM

  2. மட்டக்களப்பிலிருந்து காலிவரை சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென, பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது முதல் தொகுதி நிவாரணப் பொருட்களை, மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் மாமாங்க ராஜாவிடம் செவ்வாய்க்கிழமை மாலை கையளித்தனர். காலி மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்கென, குறித்த நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டதுடன், இப்பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர்…

  3. ஊடகவியலாளர் நடேசனின் 13ஆவது நினைவு தினம்... -எம்.றொசாந்த் மறைந்த ஊடகவியலாளர் நடேசனின் 13ஆவது நினைவு தினம், யாழ். சுப்பிரமணியம் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் நினைவு தூபியில், இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர், இந்நிகழ்வில் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஊடகவியலாளர்-நடேசனின்-13ஆவது-நினைவு-தினம்---/46-197724

  4. 15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் ; 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது ;விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் (எம்.எப்.எம்.பஸீர்) போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் 6 சந்தேக நபர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குழு ஒன்றுனை கைது செய்துள்ளனர். திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக வேரஹெர, மருதானை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர். இதன் போது போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வந்த மருதானை - தேவனம் பியதிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்று…

  5. இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கிழக்கு முதலமைச்சர் எடுத்துரைப்பு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கெராட் ரான் லேனட் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது. இதன் போது கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி,கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ ஏ எல் அசீஸ் ஆகியோரும் …

  6. நீதிமன்றில் நாளை பிரசன்னமாகவுள்ள ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், நாளை (31) புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் பிரசன்னமாகவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி வழக்கில் கடந்த 24ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகவிருந்த ஞானசார தேரர் சமுகமளிக்கவில்லை. உடல் நிலை காரணமாகவே அவர் சமுகமளிக்கவில்லை என்று அவரது தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, மருத்துவச் சான்றுகளுடன் நாளை (31) ஞானசார தேரர் நீதிமன்றில் பிரசன்னமாகவேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதேவேளை, இன வெறுப்புப் பேச்சுக்…

  7. புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் விவரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர்கள் நால்வரையும், பிரதியமைச்சர்கள் மூவரையும் நியமித்துள்ளார். இராஜாங்க அமைச்சர்கள் 1. லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன: பொது நிர்வனங்கள் மேம்பாடு 2. பாலித்த ரங்கே பண்டார: நீர்ப்பாசனம் 3. வசந்த சேனாநாயக்க: வெளிவிவகாரம் 4. ஏரான் விக்கிரமரட்ண: நிதி பிரதியமைச்சர்கள் 1 ஹர்ஷ டி சில்வா: தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாடு 2 கருணாரத்ன பரணவித்தாரண: திறன் அபிவிருத்தி 3 ரஞ்சன் ராமநாயக்க: சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி பாரம்பரியம் http://www.tamilmirror.lk/செய்திகள்/புதிய…

  8. ஏறாவூர் இரட்டைக் கொலை விவகாரம் : ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கைதிகள்! (படங்கள்) ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களை இன்றைய தினம் ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின் வழக்கு முடிவடைந்து சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிய போது, குறித்த சந்தேக நபர்கள் அங்கிருந்த ஊடகவியலாளர்களை திட்டியதுடன் சந்தேக நபர்கள் அணிந்திருந்த செருப்பைக் காட்டியும் அச்சுறுத்தியுள்ளனர். குறித்த வழக்கு தொடர்பாக ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு வழக்குத் தவணைக்கும் அறிக்கையிட செல்லும் வேளையில் ஏறாவூர் இரட்டைக் கொலை சந்தேக நபர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வதுடன், தொடர்ந்தும் ஊடகத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர். ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம்…

  9. ‘அரசியலுக்கு வரமாட்டேன்’ தான், எதிர்காலத்தில் இடம்பெறும் தேர்தல்களில் குதிக்க மாட்டேன் என்றும், அரசியலுக்கு வரும் நோக்கம் தனக்கு இல்லையென்றும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அளுத்கடை நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக வைத்து, ஊடகவியலாளர்கள் நேற்றுமுன்தினம் (29) கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னதாகக் கேள்வி கேட்ட ஊடகவியலாளர், “இரட்டை பிரஜாவுரிமையை இல்லாமற் செய்து கொள்வீர்களா?” என வினவினார். அதற்கு பதிலளித்த அவர், “தேர்தலில் போட்டியிடும் எண்ணம் என்னிடம் இல்லை என்பதனால், இரட்டை பிரஜாவுரிமை, எனக்குப் பிரச்சினை இல்லை” என்றார். …

    • 1 reply
    • 442 views
  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கத்தையும் பிரித்துப் பார்ப்பது தவறு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அரசாங்கத்தின் ஒரு அங்கம். அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுதான். அது தான் யாதார்த்தம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எட்டு வருடங்களாக இந்தப் பிரச்சினையை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த மார்ச் மாதமும் ஐ.நாவால் அரசுக்கு இரண…

    • 0 replies
    • 392 views
  11. பிர­பா­க­ரனோ இல்லை காணா­மற்­போ­னோரை யாரி­டம் போய் கேட்­பது? கேள்வி எழுப்­பு­கி­றார் வடக்கு ஆளு­நர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் இப்­போது இல்லை. அப்­ப­டி­யா­னால் காணா­மற்­போ­ன­வர்­களை யாரி­டம் போய் கேட்­பது? இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்­ளார் வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் கூரே . வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல­கத் தில் நேற்று மதி­யம் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார். தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள், புளொட், ஈரோஸ், இந்­திய அமை­திப் படை, இலங்கை இரா­ணு­வம் ஆகி­யன அந்­தக் காலத்­தில் இங்கே இருந்­தன. இந்­தப் பகு­தி­யி­லி­ருந்த பிள்­ளை­கள் காணா­மற்­…

  12. மைதானத்தில் அடித்துக் கொலை;தொடர் விசாரணைகள் மேல் நீதிமன்றில் நேற்று ஆரம்பம் வட்­டுக்­கோட்டை மைதா­னத்­தில் இடம்­பெற்ற பாட­சா­லை­க­ளுக்கு இடை­யே­யான கிரிக்­கெட் போட்­டி­யின் போது இளம் குடும்­பத்­த­லை­வர் அடித்­துக் கொலை செய்­யப்­பட்­டமை தொடர்­பான வழக்­கின் தொடர் விசா­ரணை நேற்று யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் ஆரம்­ப­மா­னது. வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூரி மைதா­னத்­தில் யாழ். சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரிக்­கும் யாழ்ப்­ பா­ணக் கல்­லூ­ரிக்கு இடையே இடம்­பெற்ற வரு­டாந்­தக் கிரிக்­கெட் போட்­டி­யின் போது இளம் குடும்­பத்­த­லை­வ­ரும் பற்­றிக்ஸ் கல்­லூ­ரின் பழைய மாண­வ­னு­மான அம­லன் அடித்­துக் கொலை செய்­யப்­பட்­டார். அவ­…

    • 1 reply
    • 448 views
  13. பாகிஸ்தானின் நிவாரணப் பொருட்கள் இலங்கை வந்தன ( படங்கள் இணைப்பு ) வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு உதவும் நோக்கில் பாகிஸ்­தா­னிய அர­சாங்­கத்­தினால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள வெள்ள நிவா­ரண பொருட்கள் பி.என்.எஸ். சுல்­பிகார் கடற்­படை கப்பல் மூலம் நேற்று இலங்கை வந்­த­டைந்­தன. பாகிஸ்­தா­னிய பதில் உயர்ஸ்­தா­னிகர் சர்ப்ராஸ் அஹமட் கான் சிப்ரா வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்கவிடம் இந்த பொருட்­களை கைய­ளித்தார். இதன்­பொ­ழுது கருத்து தெரி­வித்த பாகிஸ்­தா­னிய பதில் உயர்ஸ்­தா­னிகர், கடி­ன­மான தரு­ணத்­திலே பாகிஸ்­தா­னிய அர­சாங்­கமும் அதன் மக்­களும் இலங்கை மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்கு ஒரு­போதும்…

  14. நயினாதீவில் புத்தர் சிலை நிறுவும் பணிகளை நிறுத்த ரணில் பணிப்பு நயி­னா­தீ­வில் புத்­தர் சிலை அமைக்­கும் பணி­ களை நிறுத்­து­மாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பணித்­துள்­ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழு­வின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராசா தெரி­வித்­தார். யாழ்ப்­பாண செய­ல­கத்­தில் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. நயி­னா­தீ­வில் புத்­தர் சிலை அமைக்­க­ப்பட்டு வரு­வ­தா­க­வும் அதனை நிறுத்த உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என­வும் மாகாண சபை உறுப்­பி­னர் விந்­தன் கன­க­ரத்­தி­னம் வலி­யு­றுத்­தி­னார். இதற்க…

    • 1 reply
    • 587 views
  15. ’18 மாதங்கள் தாமதித்தே ரணில் சென்றார்’ 18 மாதங்களாத் தாமதித்து வந்த மருத்துவ சிகிச்சைக்காகவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார் என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன, மீண்டும் தள்ளிப்போட முடியாமல் போனதாலேயே அவர் சென்றதாகவும் தெரிவித்தார். பிரதமர் ரணில், தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு, கடந்த சனிக்கிழமை, ஐ.அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். இலங்கையில், பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் இவ்வாறு சென்றமை, அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது, அது தொடர்பாகக் கரு…

  16. வெள்ளம் வடிந்தபோதும் நீடிக்கிறது மக்களின் அவலம் : 196 பேர் பலி, 6,22,510 பேர் பாதிப்பு நாட்டில் கடந்த சில நாட்களாக தொடரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதனுடன் இணைந்ததாக ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த அனர்த்தங்கள் காரணமாக 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 93 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகா மைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களை பாதிக்கும் விதமாக ஏற்பட்ட இந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக மொத்தமாக ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 75 ஆயிரத்து 816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …

  17. அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் 3 ஆவது கப்பலும் வந்தது அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் மூன்றாவது கப்பலும் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. சீரற்ற காலநிலையினால் அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மூன்றாவது கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன் பொறுப்பேற்று, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர வி…

    • 3 replies
    • 379 views
  18. கொட்டாஞ்சேனை கொலை விவகாரம்: ரியர் அட்மிரல் ஆனந்த குருகே, லெப்டினன் கொமான்டர் தயானந்த, கடற்படை சிப்பாய் சுசந்த நேரடியாக தொடர்பு கொட்டாஞ்சேனையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் இதுவரை உயிருடன் இருப்பதாக தகவல் இல்லாத நிலையில், சடலங்கள் கிடைக்காத போதும் சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 108 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் அவர்கள் உயிருடன் இல்லை என தீர்மனைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவு நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தது. அத்துடன் இவ்வாறு கடத்தப்ப்ட்டு தற்போது கொல்லப்ப்ட்டுள்ளதாக நம்பப்படும் இரு தமிழர்களுக்கும் சொந்தமான தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட…

  19. இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை செய்யப்படுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அரசாங்கம் விடுத்த இந்த அறிவிப்பு உலகுவாழ் இந்து மக்களுக்கு பலத்த ஆறுதலைத் தந்துள்ளது. இந்து சமயத்தவர்களைப் பொறுத்தவரை மாடுகள் அவர்களின் வழிபாட்டுக்குரியவைகள். தாய்க்கு ஈடாகப் பால் தரும் பசுக்களை கோமாதா என்று போற்றி வழிபடுகின்ற பண்பாடு இந்து சமயத்தில் உண்டு. பசுவின் பால் உலகுவாழ் மக்களின் நிறை உணவு. உலகம் முழுவதும் வாழும் மக்கள் பசுப்பாலை அருந்துகின்றனர். தவிர சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகிய சிவப்பரம்பொருளின் வாகனமாக எருது விளங்குகின்றது. தவிர இந்து சமயத்தவர்கள் அணியும் திருநீறு பசுச் சா…

    • 2 replies
    • 522 views
  20.  கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன் ப.தெய்வீகன் அவுஸ்திரேலியாவில் அருவருப்புமிக்க நிகழ்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியிருக்கிறது. அரசியல் நாகரிகம் தெரியாத அநாதைகளாக புலம்பெயர்ந்த தமிழினம் தூக்கி வீசப்பட்டுவிடுமோ என்று அச்சப்படக்கூடியளவுக்கு மிகவும் மன வேதனைக்குரிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிட்னி சம்பவம் முடிந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றுக்காக சிட்னியிலுள்ள ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலைக்கு சென்றபோது, அங்கு கூடியிருந்த 30-40 தமிழ் இளைஞர் கோஷ்டி போட்ட கூத்துக்களையும் சுமந்…

    • 42 replies
    • 3.3k views
  21. பாகுபலி படம் பார்த்ததில் இருந்து கட்டப்பா பற்றிய எண்ணம்தான் நம் மனதில் நிழலாடுகிறது. மகிழ்மதி அரசுக்கு அடிமை என்ற ஒரே காரணத்துக்காக அமரேந்திர பாகுபலியின் முதுகில் குத்துவது எந்தளவுக்கு நியாயமானது என்ற கேள்விதான் கட்டப்பாவை நம் ஆழ் மனம் அடிக்கடி நினைத்துக் கொள்கிறது. கட்டப்பா நினைத்திருந்தால், பாகுபலியை கொல்வதற்கு மகிழ்மதியின் இராஜமாதா உத்தரவிட்ட செய்தியை பாகுபலியிடம் கூறியிருக்கலாம். அவ்வாறு கூறியிருந்தால் மிகப்பெரிய அழிவுகள் தடுக்கப்பட்டிருக்கும். இதுபற்றி நம் நண்பர்களுடன் கலந்துரையாடியபோது, அட அதைவிடு அமரேந்திர பாகுபலியின் மரணத்துக்குப் பின்னர் மகேந்திர பாகுபலியின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக வேனும் கட்டப்பா பல்வாள்தேவனின் அரசு மீது போர் தொ…

    • 0 replies
    • 520 views
  22. கிளிநொச்சியில் பாரிய நீர்த்தாங்கி அமைந்திருந்த காணி விடுவிப்பு கிளிநொச்சியில் பாரிய நீர்த்தாங்கி அமைந்திருந்த காணி இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான குறித்த காணியை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் இன்று உத்தியோகப்பூர்வமாகக் கையளித்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன கூறினார். இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் யுத்த அடையாள சின்னமாக கடந்த 8 வருடங்களாக அந்த இடத்தை இராணுவத்தினர் நிர்வகித்து வந்தனர். நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு குறித்த காணியிலிருந்து வெளியேற இராணுவம் தீர்மானித்ததாக இராணுவ ஊடகப் பேச்ச…

  23. யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெங்காயத்தின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பல வருடகால இடைவெளிக்குப் பின்னர் ஒரு அந்தர் வெங்காயம் 10 ஆயிரம் ரூபாவாக விற்கப்படுகின்றது. வடமராட்சி கம்பர்மலை, புலோலி, அல்வாய் கெருடாவில், திக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து விதை வெங்காயத்துக்காக வலிகாமம் பிரதேச விவசாயிகளும், புத்தளம் பகுதி விவசாயிகளுக்கு வழங்கவென அந்தப் பகுதியைச் சேர்ந்த வெங்காய வியாபாரிகளும் போட்டி போட்டு வெங்காயத்தைக் கொள்வனவு செய்து வருகின்றனர். காலபோக வெங்காயச் செய்கையின்போது கடும் மழை பெய்தது. அதனால் பெரும் எண்ணிக்கையான பரப்பளவில் வெய்காயப் பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்தது. தப்பிப்பிழைத்த வெங்காயம் அறுவடையின் பின்னர் மிக உச்ச விலையை எட்டிப் பிடித்துள்ளது. இருந்த…

    • 0 replies
    • 313 views
  24. சக்தி டிவி செய்திகள் 30th May 2017, 8PM

  25. நாட்டின் ஒரு பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கில் கடும் வறட்சி நிலவுகிறது நாட்டின் ஒரு பகுதி மக்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வட மாகாணத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனர்த்தங்கள் பதிவாகியுள்ள நிலையில், வட மாகாணத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாட்டங்களில் பயிர் செய்கைக்குப் போதுமான மழை வீழ்ச்சி கடந்த சில மாதங்களாக கிடைக்காமையினால் வயல் நில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.