ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
’கடமையை மறந்த தமிழ்த் தலைமைகள்’ தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது கடமைகளைப் புறக்கணித்துள்ளனர் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சி, குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்தியில் வந்து, அவர்களின் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளவோ அல்லது, அம்மக்களுக்காகக் களமிறங்கி வேலை செய்வதையோ தட்டிக்களித்துள்ளமை, வருத்தமளிக்கிறது என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில், தொ…
-
- 0 replies
- 237 views
-
-
தீவுகளில் முதலீட்டுக்கு பொருத்தமான நாடு இலங்கை ; பிரித்தானிய சஞ்சிகை தெரிவிப்பு 27 தீவுகளைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் தொடர்பில் பிரித்தானிய FDI சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறுக்கமைய இனிவரும் காலங்களில் பலமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய நாடாக இலங்கை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்காலத்தில் தீவு நாடுகளில் முதலீடு செய்வதற்கு பொருத்தமான நாடு இலங்கை என்று சஞ்சிகை சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் முதலீட்டு வாய்ப்புக்களை உலகுக்கு காட்டும் இலங்கை முதலீட்டு மற்றும் வர்த்தக மாநாடு - 2017 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமானது. …
-
- 1 reply
- 280 views
-
-
மலையக பிரதேசங்களில் ஊசி மருந்துகள் மூலமாக தொற்று நோய்களை வெளிநாட்டவர்கள் பரவ செய்கின்றனர் என்ற வதந்தி சில மாதங்களாக பரவுகிறது. இந்நிலையில் ஹப்புத்தளை, பிட்ரத்மலை பகுதியில் ஊசி மருந்து ஏற்ற வந்தார்கள் என்ற சந்தேகத்தில் சைக்கிளில் பயணித்த மூன்று வெளிநாட்டவர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றள்ளது. சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹப்புத்தளை, பிட்ரத்மலை பகுதியில் தேவாலயம் ஒன்றில் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அப்பகுதி ஊடாக வெளிநாட்டு பிரஜைகள் மூவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவர்களில் ஒருவர் தனது சைக்கிள் டயர்களுக்கு காற்று நிரப்பும் உபகரணங்களை தனது பையில…
-
- 0 replies
- 212 views
-
-
தெற்கில் வெள்ளம் வடக்கிலோ வறட்சி நாட்டின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் வறட்சி நீடிப்பதாக இடர் முகாமைத்துவ மைய நிலையம் அறிவித்துள்ளது. வடக்கில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 40 ஆயிரத்து 531 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 20 பேரும், யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 57 பேரும், கடும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வவுனியா, கிளிநொச்சி, ம…
-
- 1 reply
- 345 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலை புலிகளின் தலையீட்டுடன் தான் ஆரம்பிக்கப்பட்டதா??
-
- 4 replies
- 366 views
-
-
சுன்னாகம் நில நீர் மாசு: மின் உற்பத்தி நிலையப் பொறுப்பாளர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீர் மாசடையக் காரணமான மின் உற்பத்தி நிலையத்தின் பொறுப்பாளர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்துள்ளமை சுற்றாடல் அதிகார சபையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். …
-
- 1 reply
- 548 views
-
-
ஜப்பான் பயணித்தார் மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு ஜப்பான் நோக்கிப் பயணமானாதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 10 நாள் விஜயமாக ஜப்பான் பயணிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது மகன் யோஷித்த ராஜபக்ஷவையும் இவ் விஜயத்தின் போது அழைத்துச்சென்றுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச்சொந்தமான விமானத்தில் நேற்றிரவு 7.15 மணியளவில் 9 பேரடங்கிய குழுவினருடன் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, மஹிந்தராஜபக்ஷவின் ஜப்பான் விஜயத்துடன் தொடர்புடைய மற்றுமொரு குழுவினரும் வேறொரு விமானத்தில் பயணித்துள்ளதாகவும் குறித்த குழுவில் பியால் நிஷாந்தவும் பயணித்துள்ளமை க…
-
- 0 replies
- 384 views
-
-
அம்மாவைத் தேடிய யாழ். சிறுவன் சிக்கினான் தன்னுடைய அம்மாவைத் தேடிக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து, நடுவீதியில் திக்குத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த 12 வயதான, சிறுவனை தோப்புவ பொலிஸ் வீதி சோதனை சாவடியில் வைத்து, பொலிஸ் அதிகாரிகள் பிடித்துவிட்டனர் என்று, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 28ஆம் திகதியன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொச்சிக்கடை நகரத்திலிருந்து சிறுவன் ஒருவன், அதிகாலை மூன்று மணியளவில், சைக்கிளிலில் பயணிப்பதில் சந்தேகம் கொண்ட நீர்கொழும்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஆனந்த பெர்ணான்டோ, தன்னுடைய காரை அந்த சைக்கிளுக்கு…
-
- 0 replies
- 368 views
-
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம் சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனம் உலக புகைத்தல் எதிர்ப்புத் தினமான இன்று தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம் சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனப் படுத்தப்பட்டது. தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச செயலகம், மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து மது, புகைத்தல், பொலித்தீன், மற்றும் விவசாய இராசயனங்கள் ஆகியவையை கட்டுப்படுத்தப்பட்ட சதுக்கமாக தெல்லிப்பளை சந்தியிலிருந்து புற்றுநோய் வைத்தியசாலையை சூழவுள்ள பகுதியை பிடகடனப் படுத்தியுள்ளன. இந்நிகழ்வில் பிர…
-
- 0 replies
- 464 views
-
-
முன்னாள் போராளிகள் 4பேர் சமூகத்துடன் இணைவு. வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருடம் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று (31) காலை சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப்பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக, நிலையபயிற்சிப் பொறுப்பாளர் சித்திரகுணதூங்க. சிரேஸ்ட அதிகாரி சமன்பேரேரா. பூந்தோட்ட நிலை பொறுப்பதிகாரி கேணல் ஹேமிடோன் சர்வமதத்தலைவர்கள்.முன்னாள் போரளிகளின் குடும்ப உறுப்பினர்கள், பொலிசார், விமானப்படையினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இன்று புனர்வாழ் நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பெற்ற சற்குணசிங்கம் தயாபரன்(வயது 44) - கிளிநொச்சி, விக்ன…
-
- 1 reply
- 379 views
-
-
நாவற்குழியில் சிங்களக் குடியேற்றத்தின் பிதாமகன் மாவை சேனாதிராஜா! நாவற்குழியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தை நிரந்தர சிங்களக் குடியேற்றமாக மாற்றியதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவே பதில் சொல்லவேண்டுமென நாவற்குழி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கடந்த அரசாங்கத்தினால் நாவற்குழியில் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டனர். அவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக இராணுவத் தளமொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் வழிபாட்டினை மேற்கொள்வதற்கு விகாரையொன்றுக்கு அண்மையில் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. அத்துடன் நாவற்குழி என்ற பெயரினை சாந…
-
- 1 reply
- 365 views
-
-
சம்பூர் கடற்பரப்பில் கூட்டங்கூட்டமாகக் கரையொதுங்கிய திமிங்கிலங்கள் (Video) சம்பூர் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கூட்டங்கூட்டமாக இன்று காலை கரையொதுங்கியுள்ளன. சுமார் 10 தொடக்கம் 11 அடி நீளமான 40 திமிங்கிலங்கள் கரையொதுங்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று மாலை கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் விட்டுள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக இந்த திமிங்கிலங்கள் கரையொதுங்கி இருக்கலாம் என சம்பூர் கடற்றொழில் பரிசோதகர் மொகமட் ரிஸ்வி தெரிவித்தார். http://newsfirst.lk/tamil/2017/05/சம்பூர்-கடற்பரப்பில்-கூட/
-
- 0 replies
- 269 views
-
-
சக்தி டிவி செய்திகள் 31 May 2017, 8PM
-
- 0 replies
- 206 views
-
-
மட்டக்களப்பிலிருந்து காலிவரை சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென, பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது முதல் தொகுதி நிவாரணப் பொருட்களை, மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் மாமாங்க ராஜாவிடம் செவ்வாய்க்கிழமை மாலை கையளித்தனர். காலி மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்கென, குறித்த நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டதுடன், இப்பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர்…
-
- 0 replies
- 306 views
-
-
ஊடகவியலாளர் நடேசனின் 13ஆவது நினைவு தினம்... -எம்.றொசாந்த் மறைந்த ஊடகவியலாளர் நடேசனின் 13ஆவது நினைவு தினம், யாழ். சுப்பிரமணியம் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் நினைவு தூபியில், இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர், இந்நிகழ்வில் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஊடகவியலாளர்-நடேசனின்-13ஆவது-நினைவு-தினம்---/46-197724
-
- 0 replies
- 318 views
-
-
15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் ; 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது ;விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் (எம்.எப்.எம்.பஸீர்) போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் 6 சந்தேக நபர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குழு ஒன்றுனை கைது செய்துள்ளனர். திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக வேரஹெர, மருதானை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர். இதன் போது போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வந்த மருதானை - தேவனம் பியதிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்று…
-
- 0 replies
- 238 views
-
-
இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கிழக்கு முதலமைச்சர் எடுத்துரைப்பு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கெராட் ரான் லேனட் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது. இதன் போது கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி,கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ ஏ எல் அசீஸ் ஆகியோரும் …
-
- 0 replies
- 177 views
-
-
நீதிமன்றில் நாளை பிரசன்னமாகவுள்ள ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், நாளை (31) புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் பிரசன்னமாகவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி வழக்கில் கடந்த 24ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகவிருந்த ஞானசார தேரர் சமுகமளிக்கவில்லை. உடல் நிலை காரணமாகவே அவர் சமுகமளிக்கவில்லை என்று அவரது தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, மருத்துவச் சான்றுகளுடன் நாளை (31) ஞானசார தேரர் நீதிமன்றில் பிரசன்னமாகவேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதேவேளை, இன வெறுப்புப் பேச்சுக்…
-
- 1 reply
- 442 views
-
-
புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் விவரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர்கள் நால்வரையும், பிரதியமைச்சர்கள் மூவரையும் நியமித்துள்ளார். இராஜாங்க அமைச்சர்கள் 1. லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன: பொது நிர்வனங்கள் மேம்பாடு 2. பாலித்த ரங்கே பண்டார: நீர்ப்பாசனம் 3. வசந்த சேனாநாயக்க: வெளிவிவகாரம் 4. ஏரான் விக்கிரமரட்ண: நிதி பிரதியமைச்சர்கள் 1 ஹர்ஷ டி சில்வா: தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாடு 2 கருணாரத்ன பரணவித்தாரண: திறன் அபிவிருத்தி 3 ரஞ்சன் ராமநாயக்க: சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி பாரம்பரியம் http://www.tamilmirror.lk/செய்திகள்/புதிய…
-
- 0 replies
- 410 views
-
-
ஏறாவூர் இரட்டைக் கொலை விவகாரம் : ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கைதிகள்! (படங்கள்) ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களை இன்றைய தினம் ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின் வழக்கு முடிவடைந்து சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிய போது, குறித்த சந்தேக நபர்கள் அங்கிருந்த ஊடகவியலாளர்களை திட்டியதுடன் சந்தேக நபர்கள் அணிந்திருந்த செருப்பைக் காட்டியும் அச்சுறுத்தியுள்ளனர். குறித்த வழக்கு தொடர்பாக ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு வழக்குத் தவணைக்கும் அறிக்கையிட செல்லும் வேளையில் ஏறாவூர் இரட்டைக் கொலை சந்தேக நபர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வதுடன், தொடர்ந்தும் ஊடகத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர். ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம்…
-
- 0 replies
- 352 views
-
-
‘அரசியலுக்கு வரமாட்டேன்’ தான், எதிர்காலத்தில் இடம்பெறும் தேர்தல்களில் குதிக்க மாட்டேன் என்றும், அரசியலுக்கு வரும் நோக்கம் தனக்கு இல்லையென்றும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அளுத்கடை நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக வைத்து, ஊடகவியலாளர்கள் நேற்றுமுன்தினம் (29) கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னதாகக் கேள்வி கேட்ட ஊடகவியலாளர், “இரட்டை பிரஜாவுரிமையை இல்லாமற் செய்து கொள்வீர்களா?” என வினவினார். அதற்கு பதிலளித்த அவர், “தேர்தலில் போட்டியிடும் எண்ணம் என்னிடம் இல்லை என்பதனால், இரட்டை பிரஜாவுரிமை, எனக்குப் பிரச்சினை இல்லை” என்றார். …
-
- 1 reply
- 442 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கத்தையும் பிரித்துப் பார்ப்பது தவறு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அரசாங்கத்தின் ஒரு அங்கம். அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுதான். அது தான் யாதார்த்தம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எட்டு வருடங்களாக இந்தப் பிரச்சினையை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த மார்ச் மாதமும் ஐ.நாவால் அரசுக்கு இரண…
-
- 0 replies
- 393 views
-
-
பிரபாகரனோ இல்லை காணாமற்போனோரை யாரிடம் போய் கேட்பது? கேள்வி எழுப்புகிறார் வடக்கு ஆளுநர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்போது இல்லை. அப்படியானால் காணாமற்போனவர்களை யாரிடம் போய் கேட்பது? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே . வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத் தில் நேற்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள், புளொட், ஈரோஸ், இந்திய அமைதிப் படை, இலங்கை இராணுவம் ஆகியன அந்தக் காலத்தில் இங்கே இருந்தன. இந்தப் பகுதியிலிருந்த பிள்ளைகள் காணாமற்…
-
- 0 replies
- 451 views
-
-
மைதானத்தில் அடித்துக் கொலை;தொடர் விசாரணைகள் மேல் நீதிமன்றில் நேற்று ஆரம்பம் வட்டுக்கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது இளம் குடும்பத்தலைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தொடர் விசாரணை நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆரம்பமானது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப் பாணக் கல்லூரிக்கு இடையே இடம்பெற்ற வருடாந்தக் கிரிக்கெட் போட்டியின் போது இளம் குடும்பத்தலைவரும் பற்றிக்ஸ் கல்லூரின் பழைய மாணவனுமான அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவ…
-
- 1 reply
- 449 views
-
-
பாகிஸ்தானின் நிவாரணப் பொருட்கள் இலங்கை வந்தன ( படங்கள் இணைப்பு ) வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் பாகிஸ்தானிய அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண பொருட்கள் பி.என்.எஸ். சுல்பிகார் கடற்படை கப்பல் மூலம் நேற்று இலங்கை வந்தடைந்தன. பாகிஸ்தானிய பதில் உயர்ஸ்தானிகர் சர்ப்ராஸ் அஹமட் கான் சிப்ரா வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இந்த பொருட்களை கையளித்தார். இதன்பொழுது கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய பதில் உயர்ஸ்தானிகர், கடினமான தருணத்திலே பாகிஸ்தானிய அரசாங்கமும் அதன் மக்களும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு ஒருபோதும்…
-
- 2 replies
- 573 views
-