ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான கூட்டு அர்ப்பணிப்புமாகும் - பிரதமர் 13 Mar, 2026 | 05:29 PM மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, எமது உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்புமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய, 2026 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று (13) கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலை அரங்கில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வு 'மொழிகள் இணைக்கின்றன; பன்முகக் குரல்கள், பகிரப்பட்ட மனிதநேயம்' (Languages Unite: …
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் - உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் 13 Mar, 2026 | 04:21 PM இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக யாழ் வந்த உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தெரிவித்தார். உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார அபி…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம் Published By: Vishnu 13 Mar, 2026 | 07:16 PM புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/240904
-
-
- 3 replies
- 327 views
- 1 follower
-
-
தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு புதிய நியமனங்கள் 13 Mar, 2026 | 05:26 PM (செ.சுபதர்ஷனி) இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,918 புதிய மாணவ தாதியர்களைப் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு (14) சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெ…
-
-
- 1 reply
- 137 views
- 1 follower
-
-
இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள் வறுமையின் பிடியில்: கிராமப்புறங்களே அதிகம் பாதிப்பு - அமைச்சர் உபாலி பன்னிலகே Published By: Digital Desk 1 13 Mar, 2026 | 03:37 PM இலங்கை மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிப்பதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். எனவே, வறுமையை ஒழிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கிராம மட்டத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நிலவும் வறும…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு Mar 13, 2026 - 04:41 PM இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றது. மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக, ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதற்கமைய, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து வெளிவிவகார …
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் - பிரதமர் 13 Mar, 2026 | 01:32 PM நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு மைல்கல்லாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்ப…
-
-
- 1 reply
- 124 views
- 1 follower
-
-
பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் - அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் Mar 13, 2026 - 08:30 PM தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். வெப்பமான வானிலையினால் ஏற்படும் சுகாதார அபாயங்களைக் குறைப்பது எப்படி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், இன்று (13) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்! தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போது, இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்திற்குப் பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட நீர் ஊற்று ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய நீர் ஆதாரம் மடு பகுதியில் அமைந்திருந்தது. அதன் நீர்வரத்து ஒரு நிமிடத்திற்கு 7,000 லீற்றராகக் காணப்பட்டது. பாறை அடுக்குகளை ஆய்வு செய்த…
-
- 0 replies
- 111 views
-
-
யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகை! 13 Mar, 2026 | 10:32 AM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்து வந்த பல வணிக நிலையங்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன், பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று வியாழக்கிழமை (12) இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் அனுமதியின்றி இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் யாழ்ப்பாண பொலிஸார் இந்தச் சுற்றிவளைப்பை…
-
- 0 replies
- 189 views
-
-
யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம் adminMarch 13, 2026 யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நீடிக்க மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந்த உத்தரவை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் முதலில் இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்தது. ஆ…
-
- 1 reply
- 160 views
-
-
செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்! செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்று (12) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன்போது, புதைகுழியை சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டுள்ளது. அத்துடன் புதைகுழி பகுதியில் அகழ்வு பணிகளில் ஈடுபடுவர்களுக்காக மற்றும் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகள் டித்வா புயல், அதனை தொடர்ந்து யாழில் பெய்த பருவ மழை காரணமாக ச…
-
- 0 replies
- 107 views
-
-
“Work from home” தற்போது அவசியமில்லை – அரசாங்கம் தெரிவிப்பு! மத்திய கிழக்கு மோதல்களால் உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டாலும், தற்போது நாட்டில் வீட்டிலிருந்து வேலை செய்வது (Working from home) அவசியமில்லை என்று வர்த்தக, வணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (12) தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நிலைமை மோசமடைந்தால், பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்த மோதல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, கப்பல் செலவுகளை அதிகரித்து, சர்வதேச சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் வில…
-
- 0 replies
- 120 views
-
-
இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்! இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 478 கிலோ கிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் 176 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட மொத்தம் 654 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பல நாள் மீன்பிடி இழுவை படகுகள் நேற்று (12) டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு இழுவைப் படகுகளில் இருந்து பறிமுதல் …
-
- 0 replies
- 109 views
-
-
இந்தியக் குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அதனை வழங்குங்கள்; நாடு திரும்புவோர் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அரசுக்கு அழுத்தம் வழங்குங்கள் - இந்திய அரசிடம் சுமந்திரன் வலியுறுத்தல் Published By: Vishnu 13 Mar, 2026 | 05:50 AM (நா.தனுஜா) இந்தியாவிலேயே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து, அங்கேயே குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, மீண்டும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலிய…
-
- 0 replies
- 111 views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தின விசாரணைகள்: தவறு செய்யாதவர்கள் அஞ்சத் தேவையில்லை - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல Published By: Vishnu 13 Mar, 2026 | 05:44 AM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தவறு செய்யாத எவரும் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டமை அரசியல் வட்டாரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகளை குழப்ப நினைப்பவர்களுக்கு மத்தியில் அரசாங்கம் சட்டத்தை முறையாக அமுல்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 12ஆம் திகதி வியாழக்கிழமை மொனராகலை மாவட்ட செயலகத்தில் இடம்ப…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
கிவுல் ஓயா திட்டம்: வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கலந்துரையாட தீர்மானம் Published By: Vishnu 13 Mar, 2026 | 05:28 AM (இராஜதுரை ஹஷான்) கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பாராளுமன்ற குழுக்கள் ஊடாக கலந்துரையாடி இணக்கப்பாடொன்றை எட்டியதன் பின்னர் அவ்விடயம் குறித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் சார்ந்த நீரியல் வளங்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து ஆராயும் கூட்டம் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி.லால் காந்த தலைமையில் வியாழக்கிழமை (12) வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பா…
-
- 0 replies
- 79 views
- 1 follower
-
-
நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் சுமார் 200 கிலோவுக்கு அண்ணளவான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு Published By: Vishnu 13 Mar, 2026 | 05:22 AM (செ.சுபதர்ஷனி) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த சுமார் 200 கிலோ கிராமுக்கு அண்ணளவான போதைப்பொருள் வெள்ளிக்கிழமை (13) காலை வனாத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள விசேட தகன உலையில் வைத்து அழிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகள் யாவும் நிறைவடைந்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 40 கிலோ 53…
-
- 0 replies
- 59 views
- 1 follower
-
-
“காயங்களைத் தாண்டி” காபி மேசை நூல் வெளியீடு – இலங்கையில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் முயற்சி Published By: Vishnu 13 Mar, 2026 | 01:30 AM Alliance Development Trust (ADT) நிறுவனம் தயாரித்த “Beyond the Scars” (காயங்களைத் தாண்டி) என்ற காபி மேசை நூல், கொழும்பு நகர மையத்தில் அமைந்துள்ள Courtyard by Marriott Colombo City Centre ஹோட்டலின் Sapphire Hall மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் வளர்ச்சி கூட்டாளர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் முக்கிய அம்சமாக, சுய உதவி குழு உறுப்பினர்களான இரண்டு பெண்கள் தங்களது உண்மை வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இவர்களில…
-
- 0 replies
- 59 views
- 1 follower
-
-
அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - பலாங்கொட கஸ்ஸப தேரர் 12 Mar, 2026 | 05:31 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வலுசக்தி காரணமாகவே கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிலையே அநுர குமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும். அதனால் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்தர். திருகோணமலை பெளத்த விகாரை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை மின்சாரசபை சில தினங்களுக்கு முன்னர் இறுதிப்பயணம் சென்றது முன்னா…
-
- 1 reply
- 185 views
- 1 follower
-
-
இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை Mar 12, 2026 - 05:29 PM இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய பொருட்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://adaderanatamil.lk/news/cmmney4p1000r356p8t73d1nw
-
-
- 6 replies
- 400 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி நேரடி விஜயம்: ஆளணிப் பற்றாக்குறை குறித்து ஆராய்வு! 12 Mar, 2026 | 03:27 PM முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை (12) நேரடியாகச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அங்கு நிலவும் பல்வேறு குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்ததுடன் அவற்றினை நேரில் பார்வையிட்டார். வைத்தியசாலையின் நோயாளர்கள் மற்றும் மருத்துவர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர், அங்குள்ள தேவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தார். வைத்தியசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிற்றுழியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஆளணித் தேவைகள் பெருமளவில் காணப்படுவதாக இதன்போது மருத்துவ அதிகாரியால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவன…
-
- 0 replies
- 82 views
- 1 follower
-
-
என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும் - மகிந்த Mar 12, 2026 - 03:42 PM - 0 மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமயில் உள்ள விகாரை ஒன்றில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கேள்வி: தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்திற்கு ஆற்றும் சேவை குறித்து உங்களது கருத்து என்ன? பதில்: ஏதேனும் சேவை செய்கிறார்களா? கேள்வி: பௌத்த சாசனத்தை இரண்டாம் பட்சமாகக் கருதும் நிலை காணப்படுகிறது. உங்கள் காலத்தில் எப்படி மதிப்பளிக்கப்பட்டது? பதில்: மிக உயர்வாக மதித்தோம். இப்போது அப்படிச் செ…
-
- 1 reply
- 162 views
- 1 follower
-
-
அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்பு: விசாரணை சி.ஐ.டிக்கு மாற்ற நீதிமன்ற உத்தரவு Published By: Vishnu 12 Mar, 2026 | 08:28 PM அல்லைப்பிட்டியில் பொலிசரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகன சாரதியான 17 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீ…
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்! தெற்கு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல், பல பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களையும், ஆயுதங்களையும் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர தெரிவித்தார். அந்தக் கப்பல் சுமார் 600 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) ஆகியவற்றைக் கொண்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் பெறுமதி 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது கடற்படை வீரர்கள் எட்டு கைத்துப்பாக்கிகள், இரண்டு T-56 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ஒரு M16 துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும…
-
- 2 replies
- 153 views
- 1 follower
-