ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
திருகோணமலை கடற்கரையில் இனப்படுகொலை வார நினைவேந்தல் நிகழ்வு! திருகோணமலையில் இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகில் இன்று மதியம் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=182532&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 294 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பம்! கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில் இன்றிலிருந்து எதிர்வரும் 18ஆம் நாள் வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது. நினைவேந்தல் வாரத்தினை ஒற்றுமையாகவும், வன்முறையின்றியும் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. இந்நினைவு வா…
-
- 12 replies
- 2.3k views
-
-
சக்தி டிவி செய்திகள் 16th May 2017, 8PM
-
- 0 replies
- 229 views
-
-
டெங்கு நோயை கட்டுப்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு : அதிகாரிகளை அவசரமாக சந்தித்தார் தற்போது வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ; அரச மற்றும் தனியார் துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். டெங்கு ஒழிப்புக்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி தமது நேரடி பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடமும் கேட்டுக்கொண்டார். அதேபோன்று டெங்கு ஒழிப்புக்காக அரச மற்றும் தனியார் துறை இணைந்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறை…
-
- 0 replies
- 159 views
-
-
வடக்கு, மக்களுக்காக மேலும் செய்யப்படவேண்டியுள்ள விடயங்களை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமென நம்புவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் பில் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்ஸன் நேற்று கொழும்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கிறார். தான் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு முன்னெடுக்கப்படும் வெற்றிகரமான அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டதாகவும் மேலும் செய்யப்படவேண்டிய விடயங்களை அர…
-
- 0 replies
- 169 views
-
-
சர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டவர் கைது! சர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டு கலந்துகொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சர்வதேச வெசாக் மாநாடு பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது நபரொருவர் மதகுரு போன்று வேடமிட்டு சர்வதேச வெசாக் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைசெய்த பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/20038
-
- 3 replies
- 450 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றது இரகசிய சந்திப்பு என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனவே, சந்திப்பு குறித்த விபரங்களை வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் அண்மையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "எங்களுடைய அழைப்பை ஏற்று இந்த சந்திப்பு இடம்பெற்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது. இந…
-
- 1 reply
- 206 views
-
-
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பிரச்சினைகளை அறிந்து, தீர்த்துக்கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் நான்கு மணியளவில் தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் றொசான் ராஜபக்ச கலந்து கொண்டார். பொலிஸ் மா அதிபரின் பணிப்பிற்கமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் குறிப்பாக பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. சட்டவிரோத செயற்பாடுகளான கசிப்பு, மரம் மணல் கடத்தல் போன்ற செயற்பாடுகளை மிக விரைவில் ஒழிக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில…
-
- 0 replies
- 253 views
-
-
வாளுடன் வந்த ரவுடிகளால் யாழ்.நகரில் நேற்று பதற்றம் யாழ்ப்பாண நகர் ஸ்ரான்லி வீதியில் நேற்று மு.ப. 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர், இளைஞன் ஒருவரைத் துரத்தியதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. வாளுடன் வந்த இருவரும் நகரில் சாதாரணமாக நடமாடினர். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளிலேயே அவர்கள் வாளுடன் நகரில் சுமார் 15 நிமிடங்கள் நடமாடினர். அந்தப் பகுதியால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 இளைஞர்களை அவர்கள் துரத்திச் சென்றனர். வாளுடன் நடமாடிய இருவரும் 20 வயது மதிக்கத்தக்கவர்கள். இந்தச் சம்ப…
-
- 4 replies
- 699 views
-
-
விடிவு காண்கிறது மறிச்சுக்கட்டி 1990ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளினால், முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் முசலி மற்றும் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அந்த பிரதேசங்களை நீக்கி, வனப் பாதுகாப்பு பிரதேசப் பிரகடனத்தை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி செயலாளர் பி.பிஅபேயகோன் இணக்கம் தெரிவித்தார். முசலி பிரதேசத்தில் மாவில்லு வனப் பாதுகாப்பு பிரகடனத்தினால் அப்பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையிலான உயர்மட்ட மாநாடொன்று , ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) காலை நடைபெற்றபோது, ஜனாதிபதி செயலாளர் இந்த இணக்கத்தை வெளியிட்டார். முஸ்லிம் இயக்களின் கூட்டமை…
-
- 0 replies
- 228 views
-
-
இஸ்லாம் ஒரு புற்றுநோய் அது இன்று உலகத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது என பொதுபல சேனா பொது செயளாலர் ஞானசார தேரர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று நடந்த ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்.. பசுக்கள் கொல்லப்பட ஆரம்பித்தது முதலே உலகத்திற்கு அதர்மம் இறங்கியது.இன்று இந்த நாட்டில் இது சர்வசாதாரனமாக நடந்தேருகிறது.அநகாரிக தர்மபால அவர்கள் மாடு அருக்க தடை விதித்தார்.அவருடைய கோரிக்கைக்கு அப்போது இருந்த ஆட்சியாளர்களால் செவிமடுக்க முடியும் ஏன்றால் இப்போது உள்ளவர்களால் ஏன் முடியாது. மாடறுப்பு தொடர்பில் நாம் தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தால் இன்று ஹஜ் காலத்தில் வீடுகளில் வைத்து மாடுகளை அறுத்து பலியிடமாட்டார்க…
-
- 1 reply
- 653 views
-
-
பல வருடங்களாக ஞானசாரவை அடக்க முடியாத ஒரு சமூகமாக இலங்கையின் முஸ்லிம் இருந்து வருவது ஒரு கோழைத்தனமான வெட்கக்கேடான விடயமாகும். இந்த விடயத்தில் நாம் ஒருவரையொருவர் விமர்சித்துக்கொண.டிருப்பதை தவிர்த்து இதற்கான நேரடி நகர்த்தல்களை நாம் மேற்கொள்ளா விட்டால் நாம் ஒரு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.அன்று ஹலால் என்ற ஒரு மமதையை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி விட்டு திட்டமிட்டு அலுத்கமையை அன்று எரித்தாலும் அந்தப் பிரச்சனை நாடு பூராவும் பரவாமல் அல்லாஹ் அன்று பாதுகாத்தான். ஆனால் இன்றிருக்கும் நிலை இப்படியே தொடருமானால் மியன்மார் முஸ்லிம்களை விடவும் அன்று 83 ஜூலை கலவரத்தின் போது எங்கள் கண் முன்னாள் எரிக்கப்பட்ட இலங்கையின் தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்…
-
- 0 replies
- 482 views
-
-
ஞானசார தேரர் சட்டத்தை கையில் எடுப்பதாக சவால் விடுவதை அரசாங்கம் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமானால் முஸ்லிம் சமூகமும் சட்டத்தை கையில் எடுக்க நேரிடும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார். தாக்குதலுக்கு உள்ளான வெள்ளம்பிடிய கொஹிலவத்த பள்ளிவாயலுக்கு சற்றுமுன் விஜயம் செய்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் .. கடந்த காலங்களில் சற்று அடங்கியிருந்த ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் மீண்டும் தங்கள் அட்டகாசத்தை துவங்கியுள்ளனர். எமது இறை நம்பிக்கைக்கு சவால்விடும் வண்ணமும் எமது இறைவனை அவமதிக்கும் வண்ணமும் அவர் கருத்து வெளியிட்டுள்ளனர்.இந்த விடயம் எம் சமூகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற…
-
- 0 replies
- 386 views
-
-
கடன் கேட்கச் சென்றவர் வாள்வெட்டில் சாவு கிளிநொச்சி பொலிஸ் பிரிவில், வர்த்தகர் ஒருவருக்கு கடன் கொடுத்தவர், அந்தக் கடனைக் கேட்டகச் சென்றபோது அவரை வாளால் வெட்டிச் சாய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் சற்று முன்னர் நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://uthayandaily.com/story/2998.html
-
- 1 reply
- 496 views
-
-
எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இலங்கைக்கு ஜி.எஸ். பிளஸ் வரிச்சலுகை : ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜி.எஸ். பிளஸ் வரிச்சலுகை, எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்விடயம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த அரசாங்க காலத்தில் ஜி.எஸ். பிளஸ் வரி விலக்களிப்பு நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20046
-
- 0 replies
- 281 views
-
-
'நல்லாட்சி அரசாங்கம் தீர்வுக்கு தயாரில்லை' -எஸ்.நிதர்ஷன் “நல்லாட்சி என்று கூறப்படுகின்ற அரசாங்கம் தம்மை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றதே தவிர, வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய தமிழ் மக்களுக்கான தீர்வைப்பெற்றுத்தர எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு நான்காம் நாளான இன்று, நெடுந்தீவில் குமுதினி படகில் இடம்பெற்ற படுகொலைகளை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றபோது அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் படுகொலைகள் ஒவ்வொன்றும் வரலாறு. தமிழ் மக்களின் படுகொலைகள் அனைத்தும் அவர்களின் உர…
-
- 2 replies
- 868 views
-
-
கறுப்புக் கொடிகளை ஏந்துவோமென்றனர் நள்ளிரவில் இந்திய பிரதமரை சந்தித்தனர் ஆட்சியை கைப்பற்ற நினைப்பது வேடிக்கை என்கிறார் ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வரும் போது கறுப்புக் கொடிகளை ஏந்துவோமென தெரிவித்த சிலர் நள்ளிரவில் சென்று அவரை சந்தித்தனர் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , அரசாங்கம் பலவீனமாக காணப்படுகின்றதெனக் கூறி ஆட்சியை கைப்பற்ற நினைத்தால் அது வேடிககையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். அரலகங்வில விலயாய மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒரு இலட்சம் மகாவலி காணி உறுதிகள் வழங்குதல் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி செயற்திட்…
-
- 0 replies
- 318 views
-
-
மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டுக்களில் சில இரத்துச் செய்யப்படவுள்ளன மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டுக்களில் சிலவற்றை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கண்டி அஸ்கிரி, மல்வத்து, ரமன்ய மற்றும் அமரபுர பீடங்களின் மாநாயக்க தேரர்களைத் தவிர்ந்த ஏனைய பௌத்த மாநாயக்க தேரர்களின் வெளிநாட்டு இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் இரத்து செய்யப்படவுள்ளன. வெளிநாட்டு இராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தப்பட உள்ள மாநாயக்க தேரர்கள் தொடர்பிலான பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெ…
-
- 0 replies
- 164 views
-
-
"மட்டு. இராணுவ விமான நிலைய தளம் 31 ஆம் திகதி முதல் சிவில் பாவனைக்கு" இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டு விமானங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு விமான நிலையம் இம்மாத இறுதியிலிருந்து தனியார் மற்றும் வர்த்தக நோக்கிலான ஜெட் விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஏ. நிமலசிறி தெரிவித்தார். சிவில் விமான அதிகார சபையினால் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு இதற்கான அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தற்போது வரை இலங்கை விமானப் படையின் கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு விமான நி…
-
- 0 replies
- 257 views
-
-
முதல்வர் – ஆளுநர் இடையே இழுபறி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கும் இடையே கடந்த சில தினங்களாக அதிகார இழுபறி ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ஆளுநர் வழங்கிய அதிகாரிகளின் இடமாற்றல்களே இந்த இழுபறியைத் தோற்றுவித்துள்ளன. முதலமைச்சரின் செயலாளரையும் சில தினங்களுக்கு முன்னர் ஆளுநர் இடம்மாற்றிவிட்டார். இதனால் பொங்கியெழுந்த முதலமைச்சர் ஆளுநரின் பணிப்புக்கமைய இடமாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் நேற்றுமுன்தினம் அவசர அவசரமாக அறிவித்தார். இதனால் வடக்கு மாகாண சபை அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாது திணறிப் போயுள்ளனர். வடக்கு மாகா…
-
- 0 replies
- 271 views
-
-
நந்திக் கடலோரம் மிதிவெடி அபாயம் முல்லைத்தீவு நந்திக்கடற்ப் பகுதியில் தற்பொழுதும் மிதிவெடிகள் காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சமயம் அது நந்திக் கடலோரத்திலேயே முடிவடைந்தது. பல வருடங்கள் கடந்த நிலையிலும் இறுதிப்போர் நடைபெற்ற பிரதேசமான நந்திக்கடல் பகுதியில் தற்பொழுதும் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் மிதிவெடிகள் காணப்படுகின்றன. உள்நாட்டுப் போர் முடிவடைந்து 8 வருடங்களாகியும் நந்திக்கடல் பகுதியில் போர் வடுக்கள் இன்றும் அந்த இடங்களில் காணப்படுகின்றது என…
-
- 0 replies
- 229 views
-
-
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது – அமெரிக்க காங்கிரஸ் இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா காங்கிரஸ் சபை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸ் சபையின் பிரதிநிதி பில் ஜோன்சன் ( Bill Johnson ) இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். தேசிய அரசாங்கத்தின் பொருளாதார முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகள் தற்போது இலங்கைக்கு வந்துள்ள நிலையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகள் திருப்திகரமான முறையி…
-
- 0 replies
- 276 views
-
-
தேரர்கள் அத்துமீறி நுழைந்து காணியை அபகரிக்க முயற்சி தீஷான் அஹமட் திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் நீணாக்கேணி பிரதேசத்தில் முஸ்லிம்கள் பூர்வீகமாகப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வசித்து வந்த குடியிருப்புக் காணியைக் கைப்பற்றுவதற்கு முயன்றமையால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. பௌத்த மதகுருவும், பௌத்த இளைஞர் குழுவும், இயந்திரங்களின் உதவியோடு, நேற்று (15) காலை அக்காணிக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனால், பதற்ற நிலைமை தோற்றியது. காணியின் பாதுகாப்புக்காக, போடப்பட்டிருந்த வேலிகள் இயந்திரங்களால் உடைத்தெறியப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து அங்கு மக்களும் ஒன்று திரண்டுவிட்டனர். இதனால், இவ்விரு தரப்பினர…
-
- 0 replies
- 265 views
-
-
சி.விக்கு அடுத்ததில் ‘மனு’ கிடைக்காது? எதிர்வரும் வடமாகாண சபைக்கான தேர்தலின் போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, வேட்புமனுவை வழங்காமல் விடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல் தெரிவித்துள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சி.வி.விக்னேஸ்வரனுக்குப் பதிலாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் எஸ். ஸ்ரீதரனை நிறுத்துவதற்கு,அக்கூட்டமைப்பு ஆலோசித்து வருவதாகவும் அறியமுடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டி, வடமாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன், கட்சியின் கொள்கையை பின்பற்றாது, தனிப்பட்ட ரீதியில…
-
- 1 reply
- 276 views
-
-
சக்தி டிவி செய்திகள் 15th May 2017, 8PM
-
- 0 replies
- 273 views
-