Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊடகவியலாளரின் நெஞ்சை பிடித்து தள்ளி மிரட்டிய அரச அதிகாரி : சி.வி., றிசாத், அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் சம்பவம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த நிலையில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை அக் கூட்டத்தில் இருந்த மாவட்ட செயலக அரச அதிகாரி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டமானது வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன்போது அங்கு செய்தி சேகரிப்பு பணிய…

  2. மோடியின் உரை புதிய பிரிவினைவாதத்தை உருவாக்க வழியமைக்கும் – தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உரையானது புதிய பிரிவிணைவாதத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளதாக தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மோடி இலங்கைக்கு பயணம் செய்திருந்த போது நோர்வூட்டில் பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்திற்கு ஆற்றிய உரையானது பிரிவினைவாதத்தை உருவாக்கும் வகையிலானது என தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் சன்ன ஜயசுமன இது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மோடியின் உரை மலையக பெருந்தோட்ட மக்களை மட்டும் முன்னிலைப்படுத்தும் வகையில் அமைந்தது எனவும் ஏனைய தமிழ் சமூகம…

    • 2 replies
    • 418 views
  3. நாவற்குழி சமுத்தி சுமண விகாரையில் பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் குறித்த விகாரையில் இடம்பெற்றது. குறித்த விகாரைக் கோபுரத்துக்கான அடிக்கல்லினை 523 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் திஸாநாயக்க நாட்டி வைத்தார். நாவற்குழி மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிங்கள குடியேற்றத்துக்கு அருகில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த விகாரையில் “களன மிதுரு” கோபுரம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த வகையில் குறித்த கோபு ரம் அமைப்பதற்கான ஒரு தொகுதி நிதியை களன மிதுரு பௌத்த அபிவிருத்தி நிலையம் வழங்கவுள்ளதுடன் மேலதிக நிதியை பல தரப்பினரிடமும் நிர்வாகத்தினர் கோரியுள்ளனர். இந் நிலையில் நேற்றை…

    • 2 replies
    • 766 views
  4. பிர­தமர் நாடு திரும்­பி­ய­வுடன் அமைச்­ச­ர­வையில் மாற்றம் முக்­கிய அமைச்சுப் பொறுப்­புகள் மாறும் (ஆர்.யசி) நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பிர­தான இரண்டு கட்­சி­க­ளி­னதும் அமைச்சு பத­வி­களில் முக்­கிய மாற்­றங்கள் ஏற்­படும் வகையில் இந்­த­வார இறு­திக்குள் அமைச்­ச­ரவை மாற்றம் ஏற்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தி­யுடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் நடத்­திய சந்­திப்பில் இது தொடர்பில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனாவில் இருந்து நாடு திரும்­பி­ய­வுடன் அமைச்­ச­ரவை மாற்றம் நடை­பெறும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக பிர­தான இரண்டு…

  5.  'படுகொலைகளுக்கு தீர்வு; இலங்கையில் வரலாறு இல்லை' -எஸ்.நிதர்ஷன் “நீதி செத்துவிடவில்லை. நீதிக்கான கோரல் தொடரும்” என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாளான இன்று, நெடுந்தீவில் குமுதினி படகில் இடம்பெற்ற படுகொலைகளை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வுகள் நெடுந்தீவில் உள்ள நினைவு தூபியில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு படுகொலைகளுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. அவற்றில் சிலவற்றை மாத்திரமே நினைவு கூர்ந்து வருகின்றோம். அனைத்து படுகொலை…

  6. விக்கியின் செயற்பாடுகள் இனவாதத்தின் உச்சகட்டம் (ஆர்.யசி) வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள் இனவாதத்தின் உச்சகட்டமாக அமைந்துள்ளது. மீண்டும் சர்வதேச அழுத்தங்களுக்குள் அரசாங்கத்தை தள்ளி நல்லிணக்கத்தை குழப்பி அரசாங்கத்தை சீண்டிப்பார்க்கிறார் என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக தெரிவித்தார். நல்லிணக்க நகர்வில் அரசாங்கதின் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வடக்கு முதல்வர் சர்வதேச தரப்புக்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அரசாங்கம் எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளது என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/20015

  7. உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்படும் வரை கீதா குமாரசிங்கவின் மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இடைநிறுத்தம் (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை - சுவிட்சர்லாந்து இரட்டை பிரஜா உரிமையைக் கொண்டுள்ள காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி) பதவி வகிக்க தகுதியற்றவர் என மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது, அது தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன் முறையீட்டு மனு விசாரணை செய்து தீர்ப்பளிக்கப்படும் வரையில் அமுல் செய்வதில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தலை இன்று இரு வேறு மாறுபட்ட கருத்துக்களுக்கு மத்தியில் மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர…

  8. மட்டக்களப்பு கிரான் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குடும்பிமலை முருகன் ஆலயத்துக்குச் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டதாக குறித்த பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாலயத்தில், வருடாந்தம் பிரதேச மக்களால் திருவிழா மேற்கொள்ளப்படுவது வழமை. இம்முறை அங்கு திருவிழா மேற்கொள்ளச் சென்ற மக்களுக்கு, குடும்பிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமின் அதிகாரிகளால், தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்படி இடத்தில் யுத்த காலத்தின் பின்னர் பௌத்த வணக்கஸ்தலம் அமைக்கப்பட்டு, வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.ஆனால், அங்கு முருகன் ஆலயத்துக்குச் செல்வதற்கு, ஆலய நிர்வாகத்தினருக்குத் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் தரவையிலுள்…

    • 2 replies
    • 706 views
  9. இரட்டைக்குடியுரிமையுடன் கூட்டமைப்பில் எவருமில்லை எமது கட்சிக்கு தெரிந்த தகவல்களின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரட்டைக்கு குடியுரிமையுடன் எந்தவொரு பாராளுமன்ற பிரதிநிதிகளும் இல்லையென கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். எமது கட்சிக்கு வழங்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் எந்தவொரு உறுப்பினர்களும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே இந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைக்குடியுரிமைகள் காணப்படுவதாகவும் குறிப்பா…

    • 1 reply
    • 269 views
  10. இரட்டை பிரஜாவுரிமை : கூட்டமைப்பின் நான்கு எம்.பி.களின் பதவி பறிப்போகும் அபாயம் (எம்.சி.நஜிமுதீன்) இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கமைவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளடங்கலாக ஆறு பேரின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், அமைச்சரவை அமைச்சர் ஒருவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். மேலும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விபர…

  11. தொட்டிலில் கதறியழுத ஆறு மாத குழந்தையை விட்டு தூக்கில் தொங்கிய தாய் : வவுனியாவில் சோகம்! (படங்கள்) வவுனியா நெளுக்குளத்தில் இன்று (15) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா நெளுக்குளம், புதையல்பிட்டியில் வசித்துவரும் ஆறு மாத கைக்குழந்தையின் தாய் சுதன் வாணி (வயது 24) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நேற்றைய தினம் இவரது சொந்த இடமான கிளிநொச்சியில் உள்ள வீட்டுக்கு காலை சென்று மீண்டும் மாலை நேரத்தில் வீடு வந்துள்ளார். பின்னர் இன்று காலை எழுந்து வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து கணவரின் தந்தைக்கு காலை உணவு செய்து வழங்கிய…

  12. கூட்டமைப்பு ஒருபோதும் வலுவிழந்து போய்விடாது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நீடிக்­கும். அது ஒரு­போ­தும் வலு­வி­ழக்­காது. அப்­படி வலு­வி­ழக்­கத் தமிழ் மக்­கள் விட­மாட்­டார்­கள். அதை நீங்­கள் உறு­தி­யாக நம்­ப­லாம். கூட்­ட­மைப்­பில் நான்கு அணிக் கட்சிகள் உள்ளன. ஆனால் தலைமை ஒன்றுதான். சம்பந்தனே எமது தலைவர். இவ்வாறு தமிழீழ விடுதலைக் கழகத்தின் (ரொலோ) முக்கிய உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந. ஸ்ரீகாந்தா தெரிவித்தார். வவுனியாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். தமிழ் தேசியகூட்டமைப்பில் பிளவு இருப்பதாகப் பலரும் கருதுகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று …

  13. வாள்­வெட்­டுக் குழு கொக்­கு­வி­லி­லும் நேற்று அடா­வடி வாள்­க­ளு­டன் வீடு புகுந்த 10 பேர் கொண்ட குழு மின்கு மிழ்­கள் உள்­ளிட்ட பொருள்­களை அடித்து நாசம் செய்­துள்­ளது. வீட்­டுக்­கா­ரர் வெளியே ஓடி­ய­தால் காயங்­க­ளின்­றித் தப்­பித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் கொக்­கு­வில் பிரம்­படி 2 ஆம் ஒழுங்­கை­யில் நேற்று மாலை 6.45 மணி­ய­ள­வில் இடம்­பெற்­றது. அவர்­க­ளைக் கண்­ட­தும் வீட்­டில் நின்­றி­ருந்­த­வர்­கள் பின்­பு­ற­மாக ஓடித் தப்­பித்­த­னர். அந்­தக் குழு வீட்டு மின்­கு­மிழ்­கள் உள்­ளிட்ட பொருள்­கள் பல­வற்­றை­யும் உடைத்­துச் சேத­மாக்­கி­யது. சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­தும் உட­ன­டி­யா­க அவர்­கள் அங்கு செல்­ல­வில்லை என்று அய­ல­வர்­க­ளால் கூறப…

  14. பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம் பனை உற்பத்திகளில் ஒன்றாகிய பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம்காட்டி வருவதாக, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ்.துரைசிங்கம் தெரிவித்துள்ளார். உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த உற்பத்திப்பொருளாகவும் வெல்லம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், புலம்பெயர்வாழ் மக்கள் ஒடர்கள் மூலம் அதிகளவில் வெல்லங்களை கொள்வனவு செய்துவருவதாகவும் குறிப்பிட்டார். முன்னைய காலங்களில் உள்ளுர் மக்கள் பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் கூடிய நாட்டம் காட்டுவதில்லை என்றும், தற்போது அவர்களும் வெல…

  15. பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட விவகாரம் ; அதிருப்தி வெளியிட்டது ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளமைக்கு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் உட்பட சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயகத்திற்கு முழுமையாக விரோதமாகவிருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழித்து அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தேசிய அரச…

  16. கேப்­பா­ப்பு­லவு முகாமை மாற்­று­வ­தற்­காக பல மில்­லியன் ரூபா கையளிக்­கப்­பட்­டது : டி.எம்.சுவா­மி­நாதன் (ஆர்.ராம்) கேப்­பா­ப்பு­லவு இரா­ணுவ முகாமை மாற்­று­வ­தற்­காக இரா­ணுவம் கோரிய 5மில்­லியன் ரூபா நிதியை பாது­காப்பு அமைச்­சிடம் கைய­ளித்­துள்­ள­தாக சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு மற்றும் இந்து சமய அலு­வ­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார். அத்­துடன் வடக்கில் ஏனைய காணிகள் விடு­விப்பு தொடர்பில் விரைவில் பாது­காப்பு இரா­ஜங்க அமைச்சர் ருவான் விஜே­வர்த்­த­னவை சந்­திக்­க­வுள்­ள­தா­கவும் அமைச்சர் குறிப்­பிட்டார். இந்த விடயம் சம்­பந்­த­மாக அமைச்சர் சுவா­மி­நாதன் மே…

  17. 2 விக்­னேஸ்­வ­ரன்­க­ளும் கட­மை­க­ளைச் சரி­யாக நிறை­வேற்­ற­வேண்­டும் நல்லை ஆதீன மு­தல்­வர் “வடக்­கின் முக்­கிய பத­வி­களை வகிக்­கும் 2 விக்­னேஸ்­வ­ரன்­க­ளும் தங்­க­ளது கட­மையை சரி­யா­க­வும் நேர்த்­தி­யா­க­வும் செய்ய வேண்­டும். எமது சமூ­கத்­துத்­தின் முக்­கி­ய­மான பொறுப்­புக்­கள் உங்­கள் இரு­வர் கைக­ளில்­தான் உள்­ளன” இவ்­வாறு நல்லை ஆதின குரு­மு­தல்­வர் ஸ்ரீலஸ்ரீ சோம­சுந்­தர தேசிக ஞான­சம்­பந்த பர­ம­சா­ரிய சுவா­மி­கள் தெரி­வித்­தார். யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தின் புதிய துணை­வேந்­தர் ஆர். விக்­னேஸ்­வ­ர­னுக்கு பாராட்டு விழா இணு­வில் கந்­த­சு­வாமி ஆல­யத்­தில் நேற்­றுப் பிற்­ப­கல் 2.30 மணிக்கு நடை­பெற்­றது. பேரா­சி­ரி­யர் வ.மகேஸ்­வ­ரன் தலை­மை­யில…

  18. 2018 மே தினத்துக்குள் ஆட்சி அமைப்போம் – மகிந்த அணி சூளுரை அடுத்த ஆண்டு தொழி­லா­ளர் தினத்­துக்கு முன்­னர் நாம் ஆட்சி அமைப்­போம் என்று மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மகிந்­தா­னந்த அழுத்­க­மகே தெரி­வித்­தார். இது­தொ­டர்­பில் அவர் மேலும் தெரி­வித்­தா­வது, கூட்டு அரசு எந்­த­வொரு அபி­வி­ருத்­திப் பணி­க­ளை­யும் முன்­னெ­டுப்­ப­தில்லை. மகிந்த ஆரம் பித்து வைத்த வேலைத் திட்டங்களை மீளவும் ஆரம்பித்துவிட்டு அவை தம்மால் முன்னெடுக்கப்பட்டவை என்று அரசு காட்டிக்கொள்கிறது. கண்டி அதிவேகப் பாதை நிர்மாணம் இதற்கு சிறந்த உதாரணமாகும். மகிந்த ஆரம்பித்து வைத்த அந்த நிர்மாணப் பணியைத்தான் இந்த அரசு மீண்டும் ஆரம்பிக்கின்றது. கூட்டு அரசால் புதிதாகத் தொடங்…

  19. புலிகளின் அடையாளங்கள் முள்ளிவாய்க்காலில் இப்போதும் ஆயுத ரீதி­யான தமிழ் மக்­க­ளின் விடு­த­லைப் போராட்­டம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் விடு­த­லைப் புலி­க­ளின் எச்சங்­கள் பல­வற்றை தன்னகத்தே சுமந்த வண்ணம் இந்த உலகுக்கு பல செய்திகளை எடுத்து கூறிய நிலையில் உள்ளது. விடுதலைப் புலிகள் தங்களை படையணி ரீதியாகவோ அல்லது நிர்வாக ரீதியாகவோ அடையாளப்படுத்துவதற்காக தகடுகளில் இலக்கம் பொறிக்கப்பட்டு மூன்று இடங்களில் அணிந்து கொள்வார்கள். அவர்கள் இடுப்பு பகுதியில் அணியும் தகடு ஒன்று முள்ளிவாக்கால் பகுதிக்கு நேற்றைய தினம் சென்றபோது சிக்கியது. இந்தத் தகட்டுக்கு மற்றும்மொரு சிறப்பு ஒன்று உள்ளது. விடுதலைப்புலிகள் வளங்களை எவ்வாறு பய…

  20. மைத்திரியின் கோட்டை மகிந்தவிடம் சாய்கிறது! அரச தலை­வர் மைத்­தி­ரி­யின் கோட்­டை­யா­க­வுள்ள வட மத்­திய மாகாண சபை­யின் ஆட்சி அதி­கா­ரம், மகிந்த அணி­யி­டம் பறி­போ­வது பெரும்­பா­லும் உறு­தி­யா­கி­யுள்­ளது. அந்த மாகாண சபை­யின் ஆளும் தரப்பு உறுப்­பி­னர்­கள் 17 பேர் நேற்று முன்­தி­னம் இரவு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வைச் சந்­தித்து இர­க­சி­யக் கலந்­து­ரை­யா­டல் நடத்­தி­யுள்­ள­னர். பெரும்­பான்மை பலம் மகிந்த அணிக்கு கிடைத்­துள்ள நிலை­யில், வட மத்திய மாகாண சபை யில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிய வருகின்றது. பொலநறுவை மாவட்டத்தை உள்ளடக்கிய வட மத்திய மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னா…

  21. முல்லைத்தீவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்! முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி நிலவுவதன் காரணமாக குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும், குடிநீர் நெருக்கடி தொடர்பாக கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்களின் ஒழுங்குப்படுத்தல்களில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் …

  22.  ‘கடைக்குச் சென்ற என் அம்மா எங்கே?’ -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், நேற்று (14) 69ஆவது நாளாகவும் தொடர்ந்தது. வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள க…

  23.  மஹிந்த-சுஜீவ சந்தித்தனர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹவுக்கும் இடையில் மிககுறுகிய நேர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கும் இடையில், முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளதாக வெளியான செய்தியை அடுத்தே இந்த செய்தி வெளிவந்துள்ளது. ராஜபக்ஷவின் இளம் சகோதரி மரணமடைந்ததையடுத்து இடம்பெற்ற ஏழாம்நாள் மதவழிபாடுகளில் பங்கேற்பதற்கே, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ, அங்கு வருகைதந்திருந்தார். அவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

  24. இந்திய ஹெலிகளுக்கு எதிராக 10 முறைப்பாடுகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது, இலங்கைக்கு வந்திருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ-17 ரக ஹெலிகொப்டர்களுக்கு எதிராக, இதுவரையிலும் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என ஹட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் புஸ்பகுமார ஹெட்டியாராச்சி தெரிவித்தார். அந்த ஹெலிகள், ஹட்டன் டன்பார் மைதானத்தில், தரையிறக்கப்பட்டு ஒத்திகைபார்த்தபோது மற்றும் இந்தியப் பிரதமருடன் தரையிறக்கப்பட்டபோது, மைதானத்துக்கு அருகிலிருந்த வீடுகள் சிலவற்றின் கூரைகள் சேதமடைந்தன. இதேவேளை, மைதானத்தில் மதில் இடிந்துவிழுந்ததிலும் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டன. இவ்வாறான சேதங்கள் தொடர்பிலேயே, ஹட்டன்…

  25. முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கொள்ளை கிளிநொச்சியில், முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானம் மற்றும் களஞ்சிய அறை உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆலய பூசை முடிந்த பின்னர் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் இன்று காலை ஆயலத்திற்கு சென்று பார்த்த போது ஆலயத்தின் மூலஸ்தான கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அம்பாளுக்கு அணியப்பட்டிருந்த தங்க நகைகள் களவாடப்பட்டு இருந்ததாகவும், களஞ்சிய அறை உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.