ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கேளிக்கை நிகழ்வாக மாற்ற வேண்டாம்! - முல்லை. மாவட்ட சிவில் அமைப்புக்கள் கோரிக்கை [Sunday 2017-05-07 19:00] முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூரும் நாளை, விளையாட்டுப் போட்டிகளை நடத்தி கேளிக்கை நிகழ்வாக மாற்ற வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன. முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஊடக சந்திப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழித்தொழிக்கப்பட்ட நாளை விளையாட்டுப்போட்டிகள் நடத்தி கேளிக்கையாக்க வேண்டாம். இறுதி நாட்களில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல்ஆக்கப்பட்…
-
- 0 replies
- 324 views
-
-
சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரை போல வராது – இரணைதீவுக்குச் செல்லவிடுங்கோ மக்கள் கண்ணீருடன் கோரிக்கை கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது. சொர்க்கமே என்றாலும் எங்களது சொந்த ஊரை போல வராது வளமாகவும் ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் ஆகின்றன எங்களை மீண்டும் ஊருக்குச் செல்ல விடுங்கள் என கண்ணீருடன் இரணைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மே முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சொந்த ஊருக்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டம் ஏழாவது நாளாக தொடர்கிறது. ஊருக்கு போகாமல் தங்களின் போராட்டத்தை கைவிடப்போ…
-
- 0 replies
- 227 views
-
-
சரத் பொன்சேகா மீது சட்ட நடவடிக்கை : உதேனி அதுகோரல (க.கமலநாதன்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சால்வையினாலேயே அவரை தூக்கிலிட வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கூட்டு எதிரணியின் மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் உதேனி அதுகோரல தெரிவித்தார். கூட்டு எதிரணியின் கோரிக்கைகளை செவிசாய்க்காமல் அதன் செயற்பாடுகளை போலியாக விமர்சிக்கின்ற அரசாங்கத்தில் வெறுமனே குருடர்களும் செவிடர்களும் மாத்திரமே நிறைந்துள்ளார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கூட்டு எதரிணின் பத்தரமுல்லை நெலும் மாவத்தை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற…
-
- 0 replies
- 259 views
-
-
தற்போது நாம் நினைத்த நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியுமான சூழல் தோன்றியுள்ளது எனவும் சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 2017ம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்பதாக கூறியமை தொடர்பில் திவயின நாழிதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். தற்போது நாட்டில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது ஆட்சி கவிழ்க்கும் அந்த தருணத்தை நோக்கி விடயங்கள் நகர்வதை அனைவராலும் உணர்ந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்த அவர் அதிகாரம் எவ்வாறு கைமாறும் என்பது தொடர்பில் தன் அளவுக்கு அறிந்துவைத்துள்ள எவரும் இருக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். தம்மிடமிருந்து ஆட்சி சொல்லிவிட்டு நழுவிச்செல்லவில்லை எனவும் கடந்த ஜனாத…
-
- 0 replies
- 361 views
-
-
ஆர்.ஹஸன் முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ள கருத்தை வன்மையாகக் கண்டித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வடக்கு கிழக்கு இணைய வேண்டும் அது இயற்கையானது என அது குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முடியுமானால் ஒரு நியாயமான காரணத்தை முன்வைக்குமாறும் சவால்விடுத்தார். இதேவேளை, முஸ்லிம் வாக்குகளைப் பெற்று சமூகத்துக்கு எதிரான துரோக செயல்களில் ஈடுபடும் வெளிசக்திகளால் இயக்கப்படும் ந.தே.மு., சமூகத்தின் உரிமைப்பற்றி பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கடுமையாக சாடினார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்…
-
- 0 replies
- 562 views
-
-
கடல் எல்லையை குறிக்கும் இலங்கையின் பெயர் பலகை..! கடல் எல்லையை குறிக்கும் விதத்தில் பெயர் பலகையினை திறந்துள்ளது இலங்கை. இந்தியாவின் எல்லை பகுதியான தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 20 மணல் திட்டுகள் உள்ளன. இவை கடல்நீர் பெருக்கத்தை பொறுத்து மாறுபடும். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்கவும், இலங்கையில் இருந்து வருபவர்கள் ஊடுருவல் செய்யாமல் இருக்கவும் நமது எல்லை பகுதியான 5-ம் மணல் திட்டில் 'இந்தியா' என்ற பெயர் பலகையினை இந்திய கடற்படையினர் ஏற்கனவே வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது, இலங்கை அரசும் தலைமன்னாரில் இருந்து 5-வது மணல் திட்டில் தங்கள் நாட்டு கொடியுடன் 'இலங்கை' என எழுதப்பட்ட பெயர் பலகையினை வைத்துள்…
-
- 2 replies
- 2.4k views
-
-
பெளத்த மகாநாயக்கர்கள் ஒற்றுமைப்படுத்தி வைப்பர் உலகில் ஓர் இனம்; இனத்தால், மதத்தால், நிறத்தால், மொழியால் பாதிக்கப்பட்டு உரிமையைப் பெற முடியாமல் தவிக்கிறது எனும் போது அந்த இனத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதைக் காணமுடியும். குறிப்பாக அந்த இனத்தின் தலைமை பிரிவுபட்டு நிற்கும் அல்லது விலைபட்டுப் போயிருக்கும். தவிர அந்த இனத்துக்குள்ளேயே கருத்து மோதல்களும் உட்கட்சிப்பூசல்களும் தலைவிரித்தாடும். சரியான திட்டமிடல்கள், அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் எதுவும் இருக்காது. கிடைத்த அதிகாரங்களையும் தக்கமுறையில் பயன்படுத்தாமல் எல்லாம் வீணடிக்கப்படும். மக்களை ஏமாற்றிப் பிழைப்பதில் ஒரு பகு…
-
- 0 replies
- 471 views
-
-
இலங்கையில் விபசார விடுதியை நடத்திச் செல்ல உதவி செய்த தாய்லாந்து பெண்கள் இருவர் உள்ளிட்ட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளையில் ஆயுர்வேத வைத்திய நிலையம் நடத்துவதாக கூறி, இந்த விபசார விடுதி நடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விடுதியின் முகாமையாளர், உதவியாளர்களான ஆண்கள் இருவர், தாய்லாந்து பெண்கள் இருவர் மற்றும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சந்தேகநபர்களான 8 பெண்கள் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் 22 வயது முதல் 37 வயதெல்லைக்கு உட்பட்டவர்கள் எனவும் கொழும்பு, உக்குவலை, குளியாப்பிட்டிய, கம்பஹா, பொலனறுவை, ரிதிகம, கல்கமுவ மற்றும் அவிசாவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் கூறினர்…
-
- 0 replies
- 536 views
-
-
சர்வதேச வெசாக் நிகழ்வில் நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில், இலங்கை வரும் இவர், எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச வெசாக் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். இதேவேளை, சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 13ம் திகதி வரை வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, புத்தசாசன அமைச்சு குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/19802
-
- 0 replies
- 429 views
-
-
சிங்கப்பூர் சென்றுள்ள இலங்கையின் சாகர, நந்திமித்ர..! சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச கடல் பாதுகாப்பு கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்ர கப்பல்கள் சிங்கப்பூர் சென்றுள்ளன. குறித்த கண்காட்சியின் போது யுத்த கப்பல் தொடர்பான சர்வதேச கடல் பாதுகாப்பு சர்வதேச கடல் பொறியியலாளர் மாநாடு இடம்பெறவுள்ளமையினால், அதில் பங்குகொள்வதற்காக 34 அதிகாரிகளும், 290 கடற்படை வீரர்களும் சென்றுள்ளனர். மேலும் நேற்று கொழும்பிலிருந்து சென்றுள்ள குறித்த கப்பல்களானது எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை சிங்கப்பூர் துறைமுகத்தில் நிறுத்தப்படவுள்ளதாக, இலங்கை கடற்படை …
-
- 0 replies
- 295 views
-
-
33ஆவது முதலமைச்சர்கள் மாநாடு, இன்று (06) முற்பகல் ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நடைபெற்றது. 0 0 0 G - See more at: http://www.tamilmirror.lk/196139/ம-தலம-ச-சர-கள-ம-ந-ட-#sthash.16cDidVW.dpuf
-
- 2 replies
- 1.4k views
-
-
மோடியின் வருகை : மலையக அரசியல் கட்சிகள் வலியுறுத்த போகும் விடயம் என்ன..? (க.கமலநாதன்) இந்திய அரசாங்கத்திற்கு மலையகத் தோட்ட தொழிலாளர் சமூகத்தின் மேம்பாட்டிற்கு முழு உதவி வழங்கவேண்டிய கடமையுள்ளது என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடத்தில் வலியுறுத்துவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். அதேநேரம் இந்திய தலைவர் ஒருவரின் மலையகத்திற்கான விஜயம் முதல் முறையாக இடம்பெறும்போது அவரிடம் வலியுறுத்தும் காரணங்களை விடுத்து அவருக்கு வரவேற்பளிப்பதையே முதன்மையாக கருதுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். இந்திய பிர…
-
- 0 replies
- 177 views
-
-
புதிய அனுபவ காட்சியறையை கொழும்பில் திறந்துள்ள Huawei (காணொளி இணைப்பு ) Huawei நிறுவனம், இலங்கையில் முன்னெடுத்து வருகின்ற விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் மற்றுமொரு அத்தியாயமாக கொழும்பில், லிபேர்ட்டி பிளாஸா வர்த்தக மையத்தின் கீழ்த் தளத்தில் வர்த்தகநாமத்தின் புதிய அனுபவ காட்சியறையொன்றை திறந்து வைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய Huawei ஸ்மார்ட்போன்கள், tablet சாதனங்கள் மற்றும் ஏனைய சாதனங்களை நேரடியாக அனுபவித்து அவை தொடர்பில் தீர்மானிப்பதற்கு இடமளிக்கும் வகையில் நேரடி இடைத்தொடர்பாட்டு அனுபவங்களைக் கொண்ட கருமபீடங்களுடன் இப்புதிய அனுபவ காட்சியறை வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அனைத்து பிரதான மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களில் தன…
-
- 0 replies
- 350 views
-
-
நல்லாட்சி அரசாங்கமும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது! - இரணைத்தீவு மக்கள் கவலை [Saturday 2017-05-06 18:00] எங்களால் உருவான நல்லாட்சி அரசாங்கமும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது என, இரணைத்தீவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இன்று ஆறாவது நாளாகவும் சொந்த நிலத்துக்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரணைத்தீவு மக்கள், தாங்கள் தாங்கள் மீண்டும் ஊருக்குச் செல்லும் வரை போராட்டத்தில் ஈடுப்பட போவதாகவும் தெரிவித்துள்ளனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கணவனை இழந்த பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது, “இரணைத்தீவில் இருந்த காலத்தில் காலையில் அறு மணிக்கு கடலுக்குச் சென்றால் ஏழு மணிக்கு வீட்டுக…
-
- 0 replies
- 347 views
-
-
மே-18 ஆம் திகதி முல்லைத்தீவு செல்லும் ஜனாதிபதி! [Saturday 2017-05-06 18:00] முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு மாவட்டத்துக்கு செல்லவுள்ளார். வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்கவே ஜனாதிபதி முல்லைத்தீவுக்குச் செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நாட்டில் மிகவும் வறுமையான மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என்பது தொடர்பி…
-
- 0 replies
- 496 views
-
-
புலிகளின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்டிக்காக்க வேண்டும்! - என்.சிறீகாந்தா [Saturday 2017-05-06 18:00] 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்டிக்காக்க வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளர் என்.சிறீகாந்தா தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது. கோண்டாவில் அன்னங்கை வீதியில் அவர் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் இந்த நினைவு தினம் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் வடமாகாண அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண அமைச்ச…
-
- 0 replies
- 593 views
-
-
மகிந்த ஆட்சிக் காலத்தில் கொலையாளிகளுக்கு தூதரகங்களில் அடைக்கலம் - கோத்தபாயவின் அராஜகங்களை சபையில் போட்டுடைத்தார் மங்கள படுகொலைகள் மற்றும் கடத்தல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரணாகவே வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ச பயன்படுத்தினார் என்று சபையில் தெரிவித்தார் அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரித்துக்கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண…
-
- 2 replies
- 479 views
-
-
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆசிரியர்கள் அழைத்து வர நடவடிக்கை என்கிறார் இராதாகிருஷ்ணன் மலையகத்தில் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. வடக்கு-கிழக்கிலிருந்தும் உரிய ஆசிரியர்களைப் பெறமுடியவில்லை. பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேறுவழியின்றித் தமிழ் நாட்டிலிருந்து கணித, விஞ்ஞான ஆசிரியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையகம் மீபேயில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிறுவனத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற பெருந்தோட்டப் பாடசாலைக…
-
- 31 replies
- 2k views
-
-
சக்தி டிவி செய்திகள் 6th May 2017, 8PM
-
- 0 replies
- 272 views
-
-
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம் உள்ளதால் வடக்கில் இராணுவம் குவிக்கப்படும்! நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம் உள்ளதால் வடக்கில் இராணுவத்தினரைக் குவித்து வைத்திருப்பதாக திறன் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீண்டும் பெறுவது தொடர்பாக பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது பழைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தைவிடவும் அபாயகரமான புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான வரைபு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்…
-
- 1 reply
- 366 views
-
-
தகுதி கூடிய வடக்கு முதலமைச்சரை விட எட்டாம் ஆண்டு படித்த வடமேல் மாகாண முதலமைச்சர் சிறப்பாக மாகாணத்தை கொண்டு நடத்துகிறார் – தவராசா இலங்கையில் உள்ள முதலமைச்சர்களில் தகுதி கூடிய முதலமைச்சர் என்றால் அது வடக்கு முதலமைச்சர்தான். அது அனைவருக்கும் தெரியும். அண்மையில் கல்வி அமைச்சருடன் வட மேல் மாகாணத்தில் வயம்ப எனும் இடத்தில் கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு குறிப்பிட்டுள்ளார்கள் அந்த முதலமைச்சர் எட்டாம் ஆண்டுதான் படித்தவர் என்று. ஆனால் அவர் அந்த மாகாணத்தை சிறப்பாக கொண்டு நடத்துகின்றார் இதற்கு தகுதி அல்ல முக்கியம் ஆளுமைதான் காரணம் அவரிடம் ஆளுமை இருக்கிறது. இதனை பல இடங்களில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதுமாதிரிதான் வடக்கு கல்…
-
- 1 reply
- 227 views
-
-
வட மராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம் வட மராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்து இருபது கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இன்று (06) அதிகாலை கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கடற்படையினர் புதைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டு பளை பொலீஸாரிடம் கையளித்துள்ளனர்.பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இதன்போது எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை. பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://globaltamilnews.net/archives/26130
-
- 0 replies
- 327 views
-
-
நினைவு நிகழ்வு தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரத்தினத்தின் 31ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு, யாழ்ப்பாணம் - கோண்டாவில் அண்னங்கை வீதியில் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று நடைபெற்றது. (எஸ்.நிதர்ஷன்) - See more at: http://www.tamilmirror.lk/196146/-ந-ன-வ-ந-கழ-வ-#sthash.6MNP6bb3.dpuf
-
- 0 replies
- 345 views
-
-
எங்களை எங்களைக் கொண்டு ஏமாற்றும் இராஜதந்திரம் அறிவீரோ பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபைக் கொண்டு வருவது குறித்து தகவல்கள் வெளிவந்த போதே அதனை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எனினும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபு பற்றி அறியாமல் அதனை எதிர்க்கமுடியாதென்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…
-
- 1 reply
- 404 views
-
-
மேதின நிகழ்வுகளும் கட்சிகளின் நிலைப்பாடுகளும் இலங்கையிலுள்ள கட்சிகள் மேதினக் கூட்டங்களை, தமது கட்சி நலனுக்காகவும் ஆட்சி நலனுக்காகவும் இருப்புக்களைக் காத்துக் கொள்வதற்கும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை தனித் தனியாக மதிப்பீடு செய்து பார்ப்பதன் மூலம் அவற்றின் தாற்பரியங்களைப் புரிந்து கொள்ள முடியும். தமது மேதா விலாசத்தை வெளிப்படுத்தவா, மேதினத்தை இலங்கையின் தேசியக்கட்சிகளும் பிராந்தியக் கட்சிகளும் விழாவாக கொண்டாடின என்று ஏழைப் பாட்டாளிகளும் விவசாயிகளும் கேட்குமளவுக்கு இவ்வருட மேதின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஏழைப்பாட்டாளிகளின் மற்றும் விவசாயிகளின், அடிப்படைப்…
-
- 0 replies
- 308 views
-