Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணிகள் விடுவிப்பு குறித்து நாளை கூட்டம் : வடக்கு மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அழைப்பு (ஆர்.ராம்) மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரிடத்தில் உள்ள முள்ளிக்குளம் உட்பட வடமாகாணத்தில் படைத்தரப்பினர் ஆக்கிரமித்துள்ள காணிகள் விடுவிப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சில் நாளை முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். http://www.virakesari.lk/article/19308

  2. வட மாகாண பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கு துருக்கி உதவி வட மாகாணம் , பின்தங்கிய , மாணவர்கள், துருக்கி, உதவி ,கற்றல் உபகரணங்கள், பிரதம அதிதி வட மாகாணத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கான உதவிகளை வழங்க துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்காக 90 மில்லியன் ரூபாவினை துருக்கி அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியின் கீழ் 3மூவாயிரம் பின்தங்கிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் யாழ் வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. நிகழ்விற்கு பிரதம அதிதியாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும் துருக்கியின் இலங்கைக்கான தூதுவர் ருனியா ஹாடார் ஆகியோர் கலந்து…

  3. கண்டி, கொஹா­கொட குப்­பை­மேடு சரிந்து விழும் அபாயம் : புவி­யியல் பேரா­சி­ரியர் எச்­ச­ரிக்கை..! கண்டி நகர பிர­தேச குப்­பைகள் கொட்­டப்­படும் கொஹா­கொட குப்பை மேடும் சரிந்து விழும் அபாயம் காணப்­ப­டு­வ­தாக பேரா­தனை பல்­க­லைக்­க­ழக புவி­யியல் துறை பேரா­சி­ரியர் அத்­துல சேனா­ரத்ன எச்­ச­ரிக்கை செய்­துள்ளார். நீண்­ட­கா­ல­மாக கண்டி நகர பிர­தேச குப்­பைகள் கொஹா­கொ­டையில் கொட்­டப்­பட்டு வரு­கின்­றது. நாள் ஒன்­றுக்கு சுமார் 100 தொன் வரை­யி­லான குப்­பைகள் இங்கு கொட்­டப்­ப­டு­கின்­றன. ஒரு மலையடிவாரப் பகு­தியில் இந்த குப்பை மேடு அமைந்­துள்­ளது. எவ்­வே­ளை­யிலும் சரிந்து விழும் அபாயம் காணப்­ப­டு­கின்­ற­தெ­னவும் அவர் தெரி­வித்தார். இக்­குப்ப…

  4. இந்திய பிரமருக்கு முன்னதாக இலங்கை வரும் சீன தலைவர் (லியோ நிரோஷ தர்ஷன்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னர் சீனாவின் மூன்றாம் நிலை தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகின்றார். அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளை சீர்ப்படுத்துவது சீன தலைவரின் முக்கிய பணியாக அமைந்துள்ளது. ஆனால் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் சீனா திருப்திகரமான நிலையில் இல்லை. இந்நிலையில் அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுக திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைபினை அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை காலம் 99 ஆண்டுகளில் இருந்து 50 தொடக…

  5. இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார் பிரதமர் ரணில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயமானது தனிப்பட்ட விஜயமாக அமையவுள்ள நிலையில் மறுநாள் 26 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மதிய போசனத்தில் கலந்துகொள்ளவுள்ளார். இந்திய வெளியுறவுத்தறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் வெஷாக் பண்டிகை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத…

    • 9 replies
    • 897 views
  6. தமிழ்த் தேசிய அரசியல்பரப்பில் எதிரும் புதிருமான இரண்டு கருத்துக்களையுடைய த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் மற்றும் த.தே.ம.முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்வான எதிரொளி நிகழ்வுக் காணொளி உங்கள் பார்வைக்காக இணைக்கப்படுகின்றது. http://www.tamilkingdom.com/2017/04/456_8.html

  7. மயி­லிட்­டித்­து­றைப் பகுதி வெகு­வி­ரை­வில் விடு­விப்பு - இரு­வேறு கூட்­டங்­க­ளில் நேற்று உறுதி மயி­லிட்­டித்­து­றை­மு­கம் உள்­ள­டங்­க­லாக அந்­தப் பிர­தே­சத்தை பாது­காப்­புத் தரப்­பி­னர் வெகு விரை­வில் விடு­விப்­பார்­கள் என்று நேற்று நடை­பெற்ற இரு­வேறு கூட்­டங்­க­ளில் உறு­தி­ய­ளிக்­கப் பட்­டுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. மயி­லிட்­டித்­து­றை­மு­கம் மற்­றும் அதனை அண்­டிய பகு­தி­கள் பாது­காப்­புத் தரப்­பி­னர் வசம் உள்­ளன. அவற்றை விடு­விக்­கு­மாறு தொடர்ச்­சி­யாக கோரிக்­கை­கள் - அழுத்­தங்­கள் கொடுக்­கப்­பட்ட போதும் அது விடு­விக்­கப்­ப­ட­வில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­…

    • 1 reply
    • 327 views
  8. குப்பை மேட்டில் ஒளிந்திருந்த எமன் ரொபட் அன்­டனி எவ­ராலும் அனு­ம­திக் ­கப்­பட முடி­யாத ஒரு அனர்த்தம் எமது நாட்டில் இடம்­பெற்­றுள்­ளது. அதா வது இயற்கை அனர்த்­த­ மாக இன்றி மனி­தனால் முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற் ­பாட்டின் விளை­வாக ஏற்­பட்ட அனர்த்­த­மாக இது உள்­ளது. இவ்­வா­றான நிகழ்­வுகள் எதிர்­வரும் காலங்­களில் இடம்­பெ­றாமல் இருக்க நடவ­டிக்கை எடுக்­கப்­ப­ட வேண்டும். இவ்­வா­றான விட­யங்­களில் அர­சாங்கம் உலக நாடுகள் பின்­பற்றும் முறை­மை­களை கையாண்டு மிகவும் முன்­னேற்­ற­க­ர­மான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யதே அவ­சி­ய­மா­க­வுள்­ளது எமது நாட்­டில் தான் அடிக்­கடி விசித்­தி­ர­மான சம்­ப­வங்கள் நடை­பெ­று­வ­துண்டு. இப்­ப­டியும் நடக்­கும…

  9.  'உயிர்களை துன்புறுத்துமாறு மதங்கள் சொல்லவில்லை' “சிலர் தாம் சார்ந்த மதத்தின் மீது கொண்டிருக்கக்கூடிய அதீத பற்றுக் காரணமாகவோ அல்லது ஏனைய மதங்கள் பற்றிய போதிய அறிவு இன்மையாலோ ஏனைய மதங்களைச் சார்ந்த மக்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றார்கள். இது வருத்தத்திற்குரியது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மானிப்பாய், ஸ்ரீ சத்ய சாயி பாடசாலையில் இடம்பெற்ற, “மதங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கும் இலட்சியத்தை நோக்கிய சர்வ மத விழா – 2017” எனும் நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, இன்று அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இன்று நீங்கள் மதங்களுக்குள் ஒற்றுமையை உரு…

    • 1 reply
    • 490 views
  10. 'அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்தால் அநீதி இழைத்தவர்கள் வந்துவிடுவார்கள்' -எஸ்.என்.நிபோஜன் “இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால், தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு சஞ்சலம்” என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 62 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, இன்று (22) சந்தித்து கலந்தரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் அரச…

  11. பலாலி விமான நிலையத்தை அண்டிய காணி விடுவிப்பு தொடர்பில் இணக்கப்பாடு இல்லை படைத்தரப்பினருடனான சந்திப்பையடுத்து சுமந்திரன் எம்.பி.தகவல் (எம்.நியூட்டன்) பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான பலாலி விமான நிலை­யத்தை சூழ்ந்த நான்­கா­யிரம் ஏக்கர் காணிகள் இரா­ணு­வத்­தி­ட­முள்­ளது. இதனை விடு­விப்­பது குறித்த பேச்­சு­வார்த்­தையில் எவ்­வி­த­மான முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். காணி விடு­விப்பு குறித்து மாவட்ட ரீதி­யான மேற்­கொள்­ளப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்கள் முன்­னேற்­ற­ம­ளித்­துள்­ள­தோடு அடுத்த கட்­ட­மாக உயர் மட்ட…

  12. முள்ளிக்குளம் மக்களை சந்தித்தார் குரே -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று வெள்ளிக்கிழமை(21) மாலை மன்னாருக்கு வருகை தந்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மக்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியுள்ளார். மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்துக்கு வருகை தந்த வடமாகாண ஆளுநர், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களை சந்தித்து உரையாடினார். இதன்போது, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை, வன்னி மாவட்ட கிறிஸ்தவமத இணைப்பாளர் பாஸ்டர் சந்துரு உட்பட வடமாகாண ஆளுநரின் …

  13. கிணறுகளை அமைத்து நெற்செய்கையில் ஈடுபடுதல் சட்டவிரோதம் – மீறினால் மானியங்கள் இரத்து – மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் கிளிநொச்சியில் நெற்செய்கையில் ஈடுப்படும் விவசாயிகள் கிணறுகளை பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனவும் அவ்வாறு மீறி நெற்செய்கையில் ஈடுப்பட்டால் முதலில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற மானியங்கள் நிறுத்தப்பட்டு பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இத் தீர்மானம்மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முறையற்ற விதத்தில் குளத்து நீரை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுப…

    • 0 replies
    • 209 views
  14. 15 வயது சிறுமி 13 பேர் கொண்ட மோட்டார் ஊர்திகளில் வந்த குழுவினரால் கடத்தப் பட்டுள்ளார். தர்சனா கோவிந்தசாமி எனும் இந்த சிறுமி (April 20, 2017) காலை 10 மணியளவில் பிரமந்தனாறு கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த வேளையிலேயே கடத்தப்பட்டுள்ளார். இவர் உரித்திரபுரத்திலுள்ள மகாதேவா இல்லத்தில் வசித்து கல்வி பயில்பவரெனவும் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு வந்த வேளையே கடத்தப் பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. மோட்டார் ஊர்திகளில் வந்தவர்கள் அனைவரும் தம் முகங்களுக்கு துணி கட்டியிருந்ததால் அடையாளம் காணப்படவில்லை. இவரின் குடும்பத்தினர் தர்மபுரம் காவல் நிலையம் சென்று முறையிட்ட போதும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபரம் தெரிந்தால் அழைக…

    • 0 replies
    • 262 views
  15. துன்னாலையில் குழுக்களுக்கிடையே மோதல்; பன்னிருவர் காயம் துன்னாலை கிழக்கு வேம்படிப் பகுதியில் நேற்று (21) மாலை கோஷ்டி மோதல் இடம்பெற்றுள்ளது. இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற இந்த மோதலில் 12 பேர் காயமடைந்தனர். மோதல் குறித்து தகவல் அளிக்கப்பட்டதையடுத்து உடனடியாக நெல்லியடிப் பொலிஸார் அப்பகுதிக்கு விரைந்தனர். அவர்களின் முயற்சியையடுத்து, அங்கு ஏற்பட்டிருந்த பதற்றம் சகஜ நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. மோதலில் காயமுற்ற பன்னிரண்டு பேரும் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். http://www.virakesari.lk/article/19276

  16. யாழில் அளவுக்கதிக வரி அறவீடு – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி மக்களிடம் வரி அறவிடுவதால் நாடு பொருளாதார மட்டத்தில் உயர்வு கண்டு அபிவிருத்தியை அடைவதற்கு ஆகும் என்பது எல்லோருக்கம் தெரியும். அபிவிருத்தி அடைந்த நாடுகள் மக்களிடம் வரியை அறவிடுவதோடு நிற்பதில்லை. அந்த வரியின் மூலம் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடிய வகையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு வரியைப் பயன்படுத்துகிறது. அதனால் தான் அபிவிருத்தி அடைந்த நாடுகளை இன்றும் சிறந்த நாடுகள் என்று போற்றுகிறோம். இலங்கையைப் பொறுத்தமட்டில் மக்களிடம் இருந்து வரியை அறவிடுவதுடன் அவர்களின் வேலை முடிந்து விடுகிறது. அந்த வரி மூலம் பிரதேச அபிவிருத்தியை மேற்கொள்ள எவரும் முயல்வதில்லை இதனால் தான் இன்று இலங்…

  17. மஹிந்த செய்த பாவத்தின் கட­னையும் நாமே செலுத்தி வரு­கின்றோம் : அமைச்சர் அர்­ஜுன ஒவ்­வொ­ரு­வரும் கூறும் கருத்­துக்­களை கேட்­டு­ விலகிச் சென்­று­விட்டால் சீனா­வுடன் ஒப்­பந்தம் செய்­து துறை­மு­கத்­தினை விற்­பனை செய்­து­வி­டு­வார்கள். அவ்­வா­றின்றி நாட்டின் வளங்­களை பாது­காப்­பதே எமது அர­சாங்­கத்தின் நோக்கம். அதற்­காக மஹிந்த செய்த பாவத்தின் கட­னையும் நாம் செலுத்த வேண்­டி­யுள்­ளது என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­துறை அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அர­சாங்­கத்தை ஒற்­று­மை­யாக முன்­நகர்த்திச் செல்­கின்­றார்கள். விமர்­ச­னங்­களை கண்டு அஞ்சி விலகிச் செல்ல மாட்டோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். …

  18. 'டெங்குவால் வைத்தியசாலையில் இருந்த நான் சம்பவத்தை அறிந்து வீட்டில் இருந்த கணவருக்கு கோல் பண்ணினேன்.." : மீதொட்டமுல்ல சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்களின் உள்ள குமறல்கள் (எம்.சி.நஜிமுதீன்) 'டெங்குவால் உயிர் தப்பினேன்" டெங்கு நோயால் பிடிக்கப்பட்டு அண்மைக்காலமாக நான் அவதிப்பட்டேன். வைத்தியசாலையில் தங்கிருந்து சிகிச்சைபெறுவதற்கு விருப்பமில்லாத என்னை எனது கணவர் வற்புறுத்தி வைத்தியசாலையில் அனுமதித்தார். எனினும் அவரின் வற்புறுத்தல் தன்னை மரணத்திலிருந்து தப்பிக்கவைத்ததாக குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததனால் எற்பட்ட அனர்த்தத்தில் வீடு சேதமடைந்து டெரன்ஸ் வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் கயணி என்பவர் தெரிவித்தார். அவர் மேலும் க…

  19. தமிழர் தரப்பை தொடர்ந்தும் நிராகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது (ஆர்.யசி) புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் சகல மக்களின் பிரதிநிதித்துவமும் பலமடையும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளும் செயற்பட வேண்டும். தமிழர் தரப்பை தொடர்ந்தும் நிராகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் நிலைப்பாட்டை ஆராய்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயற்பட வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்தது. புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் சந்திப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் மக்கள் விடு…

  20.  படையினருக்கு அதிக காணிகள் தேவையில்லை: ரெஜினோல்ட் குரே -எஸ்.றொசேரியன் லெம்பேட் “ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளார். மக்களின் சொந்தக்காணிகள் மீண்டும் மக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று. அதற்கமைவாக முள்ளிக்குளம் மக்களின் நிலங்கள் மீண்டும் மக்களிடமே மீள ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று வெள்ளிக்கிழமை மாலை, முள்ளிக்குளம் சென்று நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் கிராம மக்களை சந்தித்த பின் அங்கு உரையாற்றுகையிலேயே வடமாகாண ஆ…

  21. இப்படியே சென்றால் ராணுவப் புரட்சிதான் - அரசுக்கு டியூ எச்சரிக்கை கூட்­ட­ரசு இப்­ப­டியே பய­ணித்­துக்­கொண்­டி­ருந்­தால் இந்த நாட்­டில் இளை­ஞர்­க­ளின் புரட்சி அல்­லது இரா­ணு­வப் புரட்சி ஏற்­ப­டும் என்று முன்­னாள் அமைச்­சர் டியூ குண­சே­கர எச்­ச­ரித்­துள்ளார்.இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, மகிந்­த­வின் ஆட்­சி­யைக் கவிழ்த்து நல்­லாட்சி என்று சொல்­லப்­ப­டும் இந்த கூட்­ட­ரசு உரு­வா­னது. மகிந்­த­வின் ஆட்­சி­யில் காணப்­பட்ட பல பிரச்­சி­னை­க­ளுக்கு இந்த அரசு தீர்­வாக இருக்­கும் என்று நாட்டு மக்­கள் எதிர்­பார்த்­த­னர். ஆட்­சி­பீ­ட­மேறி இரண்டு வரு­டங்­கள் ஆகின்­றன. எது­வும் நடக்­க­வில்லை. இருக்­கின்ற…

    • 2 replies
    • 457 views
  22. மாயக்கல்லில் மீண்டும் விகாரை அம்­பாறை இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையை இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஆக்­கி­ர­மிக்கும் முயற்சி நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது. இங்கு விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு பௌத்த பிக்­கு­களும் மேலும் சிலரும் முயற்­சி­களை மேற்­கொண்­டனர். எனினும் ஸ்லத்­திற்கு விரைந்த இறக்­காமம் பிர­தேச மக்கள் மேற்­படி விகாரை அமைக்கும் முயற்சி நட­வ­டிக்­கை­க­ளுக்கு கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­த­துடன் பொலி­ஸாரின் கவ­னத்­துக்கும் கொண்டு வரப்­பட்­டது. இதன்­போது இப்­பி­ர­தே­சத்தில் பதற்ற நிலை குடி கொண்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து பொலிஸார் தலை­யீடு செய்து விகாரை அமைக்கும் பணி­களை தடுத்து நிறுத்­தினர். …

  23. யாழ். மாநகரில் பொலித்தீனுக்குத் தடா : பூமி தினமான நாளை முதல் நடைமுறைக்கு பூமி தினமான நாளை சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும். உணவுச்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் இவற்றின் பாவனையை இல்லாதொழிக்கவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர சபையினால் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபை எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு அமையவும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சூழல்நேய நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கவும் இந்த நடவடிக்கையில் சகலரும் இணைந்து கொள்ளவேண்டும். நாளாந்த பாவனையி…

  24.  'காணிகள் விடுவிக்கப்படுமென மைத்திரி வாக்குறுதியளித்திருந்தார்' எஸ்.ஜெகநாதன் "ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன இருந்த போது, தனியார்க் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படுமென்று எழுத்து மூலமான வாக்குறுதியளித்திருந்தார். இதனாலேயே நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்பட்டோம்" என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில், முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல், யாழ். மாவட்ட செயலகத்தில், இன்று (21) இடம்பெற்றது. கூ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.