Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் போராளிகள் மகஜர் கையளிப்பு.! கிளிநொச்சியில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து வடமாகாண ஆளுனரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொங்கல் விழா, கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் அமைந்துள்ள வட்டக்கச்சி வயல் பண்ணையில் இன்று இடம்பெற்றது. இதன்போதே முன்னாள் போராளிகள் ஆளுனரிடம் மகஜர் கையளித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு கோரி ஆளுனருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக …

  2. பட்டப்போட்டி... -எம்.றொசாந்த் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, வல்வெட்டித்துறையில் மாபெரும் இராட்சத பட்டங்கள் ஏற்றும்போட்டி சனிக்கிழமை இடம்பெற்றது. - See more at: http://www.tamilmirror.lk/189718/பட-டப-ப-ட-ட-#sthash.3dgRAmvf.dpuf

  3. பாடசாலைக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலாப்பயணியின் செயற்பாட்டால் சந்தோசத்தில் திளைத்த மாணவர்கள், ஆசிரியர்கள் நாட்டை சுற்றிப் பார்க்க ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ள சுற்றுப்பயணி ஒருவர் தனது செயற்பாட்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமொன்று சிகிரியா பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. டேவிட் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இவர் ஒருவார காலம் இலங்கையில் தங்கியிருந்து சிகிரியா, கண்டி, நுவரெலியா, மிரிஸ்ஸ மற்றும் சிவனொளிபாதமலை போன்ற சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவதற்காக திட்டமிட்டு சாரதியுடன் ஒரு வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்தியுள்ளா…

  4. வவுனியா பஸ் தரிப்பிடத்தில் மோதல்.! வவுனியா, புதிய பஸ் தரிப்பிடத்தை மையமாகக் கொண்டு தனியார் மற்றும் அரசாங்க பஸ் ஊழியர்களுக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று காலை அரச பஸ் நிலையத்திற்குச் சென்ற பொலிஸார் அரச பஸ்களை நேற்று புதிதாக திறக்கப்பட்ட பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர். இதற்கு பஸ் நிலையத்தில் நின்ற பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மறுப்புத் தெரிவித்ததுடன் தமது மேலதிகாரியிடமிருந்து உத்தரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். இருபகுதியினருக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம்…

  5. எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினம் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று (17) விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கும் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கோப்பாய் பகுதியை சேர்ந்த எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான சுந்தரலிங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் இதன்போது தெரிவு செய்யப்பட்ட நூறு வறுமைக்கு உட்பட்டவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டதுட…

  6. இலங்கையில் காலூன்ற விருப்பம் கொண்டுள்ள கொக்ககோலா தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக இலங்கையை பணன்படுத்த, அமெரிக்க நிறுவனமான கொக்ககோலா நிறுவ னம், விருப்பம் வெளியிட்டுள்ளது. கொக்ககோலா நி்றுவனத்தின், ஆசிய பசுபிக் பிரிவுக்கான உதவித் தலைவர், ஜோன் முர்பி, நிதிய அமைச்சர் ரவி கருணாநாய க்கவை கொழும்பில் சந்தித்து இதுதொடர்பாகப் பேச்சு நடத்தியுள்ளார். தெற்காசியாவில் அதிக சந்தைவாய்ப்பைக் கொண்டுள்ள கொக்க கோலா நிறுவனம், இலங்கையில் உற்பத்தி மையத்தை ஆரம்பி ப்பதற்கும், இங்கிருந்து இந்தியாவுக்கு தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு மெ…

  7. நுகே­கொ­டையில் 27ஆம் திகதி அர­சாங்­கத்துக்கு எதி­ரான பேரணி நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான வேலைத்­திட்­டங்­களை விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி திட்­ட­மிட்­டுள்­ளது. அவ்­வே­லைத்­திட்­டத்தின் முத­லா­வது பேரணி எதிர்­வரும் 27 ஆம் திகதி நுகே­கொ­டையில் இடம்­பெ­ற­வுள்­ளது என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார். அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பலர் அப்­பே­ர­ணியில் இணைந்­து­கொள்­ள­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ரா…

  8. லசந்­தவின் கொலைக்கு கோத்­தாவே பொறுப்பு 'சண்டே லீடர்' பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள லசந்த விக்­ர­ம­துங்­கவின் மகள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு வாக்கு மூலம் அளித்­துள்ளார். கொலை இடம்­பெற சில தினங்­க­ளுக்கு முன்னர் தனது தந்தை தன்­னிடம் தெரி­வித்த விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தியே அவுஸ்­தி­ரே­லி­யாவில் வைத்து அவர் இவ்­வாறு தமது விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் வாக்கு மூலம் வழங்­கி­ய­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா கல்­கிசை நீதிவான் நீதி…

  9. அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்கள் ‘சமாதானத்துக்கு எதிரானவை’ சண்முகம் தவசீலன் “அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்கள் சமாதானத்துக்கு எதிராகவே உள்ளது” என, மனித உரிமை செயற்பாட்டாளரும் இனவெறி மற்றும் பாரபட்சத்துக்கு எதிரான சர்வதேசத்தின் தலைவருமான நிமல்கா பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவு - மாங்குளத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை நல்லிணக்கம் சகவாழ்வு சமாதானம் ஆகியவற்றை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் சமாதானத்துக்கு எதிராகவே காணப்படுகின்றது. மக்…

  10. நான் தனித்து இயங்குவேன்: அத்துரலிய எம்.பி கட்சி அரசியலில் இருந்து விலகி தாம் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக அதுரலிய ரதன தேரர் அறிவித்துள்ளார். தாம் எவ்வித கட்சியிலும் இணைந்து செயற்பட மாட்டேன் எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் அதுரலிய ரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/

  11.  வட்டவான் கடற்கரை வீதி விவகாரம் நீதிமன்றம் செல்கிறது பேரின்பராஜ் சபேசன் மட்டக்களப்பு, வாகரை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் கடற்கரை வீதி, இரவோடு இரவாக அகற்றப்பட்ட விடயத்தை, நீதிமன்றின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுமாறு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தார். வட்டவான் கிராம சேவகர் பிரிவுக்கப்பட்ட கடற்கரை வீதி, சனிக்கிழமை இரவோடு இரவாக இருந்த இடமில்லாமல் அகற்றப்பட்டதுடன் அவ்வீதி வழியான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டது. இதனை அறிந்த மீனவர்கள் மற்றும் பொத…

  12.  சிறைச்சாலையை உடைக்க திட்டம்: சி.ஐ.டி வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையை உடைப்பதற்கு திட்டம் தீட்டியமை தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி), நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். இந்த கைதிகளில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அடங்குவதாக, சி.ஐ.டியினர் குறிப்பிட்டுள்ளனர் - See more at: http://www.tamilmirror.lk/189825/ச-ற-ச-ச-ல-ய-உட-க-க-த-ட-டம-ச-ஐ-ட-#sthash.dtoruSU7.dpuf

  13. தமிழ் மக்கள் பேரவையில் மூன்று அரசியல் கட்சிகள் இணைவு:- தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பின் அணியில் தற்போது மூன்று அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புக்களும், கட்சிகளும் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு பிரதிநிதி ரீ.வசந்தராஜா தெரிவித்துள்ளார். “தமிழ் மக்கள் பேரவைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் பலம் காரணமாக எம்மோடு அணி சேர்ந்து கொள்வதற்கு பலர் விரும்புகின்றனர். ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனை தலைமையாகக் கொண்ட ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) அதேபோன்று சித்தார்த்தனை தலைமையாகக் கொண்…

  14. வட.,கிழக்­குக்கு மட்டும் எதிர்க்­கட்சி தலை­வ­ராக செயற்படும் சம்­பந்தன் நாமே சர்­வ­தேச விசா­ர­ணையை கோரு­வதா? அத்­து­ர­லியே தேரர் கேள்வி (ஆர்.யசி ) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் எதிர்க்கட்சி தலை­வ­ராக இருந்­தாலும் அவர் வடக்கு, கிழக்கு பகுதி­க­ளுக்கு மட்­டுமே எதிர்க்கட்சித் தலை­வ­ராக செயற்பட்டு வரு­கின்றார். தமிழர் ஒருவர் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருக்கும் நிலை யில் நாட்டின் தேசிய நல்­லி­ணக்க நகர்­வு­க­ளுக்கு பல­மாக அமையும் என்ற எண்­ணத்­தி­லேயே ஆத­ரவு வழங்­கினோம். ஆனால், அவர் முழு நாட் ­டிற்கும் எதிர்க்­கட்சித் தலைவர் என்­பது அவ­ருக்கு இன்னும் புரி­ய­வில்லை என தூய்­மையான நாளை அமைப்பின் தலை­வரும் பாரா­ள…

  15. புலி சார்­பா­ன­வர்­களே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­கின்­றனர் ;ரத்ன தேரர் நல்­லாட்சி அர­சாங்கம் சொல் தவ­றி­விட்­டது. அர­சியல் அமைப்பு மூல­மா­கவும் பொரு­ளா­தாரம் மூல­மா­கவும் நாட்டை துண்­டாடும் பாதையில் அர­சாங்கம் பய­ணிக்­கின்­றது. அர­சாங்­கத்தை சரி­யான பாதைக்கு கொண்­டு­வர ஒரு தேசிய சபையை உரு­வாக்­குவேன் என தூய்­மை­யான நாளைக்­கான அமைப்பின் தலை­வரும் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார். ஆட்­சியை கவிழ்க்க முயற்­சிக்­க­வில்லை. ஆனால் அர­சாங்­கத்தின் பயணம் மோச­மாயின் சரி­யான சந்­தர்ப்­பத்தில் மாற்­ற­வேண்­டிய நிலைமை ஏற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.அத்து­ர­லியே ரத்ன தேரரின் விசேட செய்­தி­யாளர் சந்…

  16. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரானுக்கான விஜயத்தை இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டமை குறித்து ஜனாதிபதி செயலகம் ஈரான் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ஆம் திகதி ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். தற்போது அந்த விஜயத்தை திடீரென இரத்து செய்துள்ளார். இதேவேளை, ஈரானிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். எனினும் தற்போது இந்த விஜயம் எதற்காக இரத்து செய்யப்பட்டது என்பது குறித்த காரணங்கள் இதுவரையும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. …

    • 2 replies
    • 336 views
  17. இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து அவர்கள் பின்வாங்க முடியாது. ஐ.நா. இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைன், சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பைத் தளமாகக் கொண்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைனை, கடந்த வாரம் ஜெனிவாவுக்குச் சென்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போதே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நல்லிணக்கச் செயலணியின் மக்கள் கருத்து அறியும் அறிக்கை தொடர்பிலும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. போர்க்குற்ற விசா ரணைக்கு கலப்பு நீதிமன்றப் ப…

  18. யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் மூன்று இடங்களில் வாள்வெட்டு - குழு மோதல்கள் இடம்பெற்றன. காது, மூக்கு என்பன இந்த மோதல்களில் துண்டாடப்பட்ட நிலையில் 11 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடாநாட்டில் சில வார அமைதியின் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் அச்சமும் - பீதியும் அடைந்துள்ளனர். அச்சுவேலி தெற்கு கரதடி, ஏழாலை வடக்கு, அரியாலை முள்ளிப் பகுதியிலேயே இந்த மோதல்கள் - வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன. அச்சுவேலி தெற்கு கரதடியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் நடந்த மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழ…

  19. வடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கனடாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 28 வருடங்கள் மேல் இருந்தே இந்த வடக்கு கிழக்கு இணைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் எனவே அது தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட விடையம் இல்லை என தெரிவித்தார். மேலும் தமிழர்கள் பகுதியில் அத்துமீறிய குடியிருப்பை மேற்கொள்ள அன்றைய ஸ்ரீமாவோ அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. கிழக்கில் சிங்கள மக்களை வேண்டும் என்றே அரசு கொண்டுவந்து குடியேற்றியது…

  20. கொஸ்கம - சாலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி ஆயிரத்து 329 மில்லியன் ரூபா என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.லியனவல தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சேதமடைந்த சொத்துக்களுக்கு இதுவரை ஆயிரத்து 41 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அனர்த்தத்திற்கு உள்ளான சிலர் இழப்பீட்டுத் தொகை போதாதென்று குறிப்பிட்டமையால் இரண்டு மூன்று தடவை மதிப்பீடுகளை மேற்கொள்ள நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள இழப்பீட்டுத் தொகையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள…

    • 1 reply
    • 433 views
  21. போர்க்குற்ற விசாரணைக்கு கலப்புப் பொறிமுறையை நல்லிணக்கச் செயலணியின் அறிக்கை பரிந்துரைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் செய ல ணியின் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செயலணியின் அறிக்கை வெளியீட்டில் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துகொள்ளவில்லை. செயலணியின் பரிந்துரைக்கு தேசிய அரசின் அமைச்சர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு சூழலிலேயே, நல்லிணக்கச் செயலணியின் 11 உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெறப் போவதை, நல்லிணக்கச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து உறுதி செய்தார். ஐ.நா. மனி…

  22. 20 வருடங்கள் சிறையில் வாடும் தமிழ் கைதி தகவல்

  23. ஜீ.எஸ்.பி வரிச் சலுகைக்காக படையினரை சிறையில் அடைக்க வேண்டாம் – ரதன தேரர் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக படைவீரர்களை சிறையில் அடைக்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் கோரியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்களின் அடிப்படையில் படையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக பயங்கரவாதத்தை இல்லாதொழித்த படையினரை தண்டிக்க வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கலப்பு நீதிமன்றமொன்றை அமைத்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்து இந்த வரிச் சலுகைத் திட்டம் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இ…

  24. நல்லாட்சி கொள்கைகளை அமுல்படுத்துவது சுலபமானதல்ல – ஜனாதிபதி நல்லாட்சி கொள்கைகளை அமுல்படுத்துவது சுலபமானதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நல்லாட்சி கொள்கைகளிலிருந்து விலகியிருந்த சமூகமொன்றில் நல்லாட்சியை அமுல்படுத்துவது சிரமமானதே என குறிப்பிட்டுள்ள அவர் சிரமங்களுக்கு மத்தியிலும் முடிந்தளவு நல்லாட்சியை ஏற்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்க வேண்டுமென கோரியுள்ளார். நல்லாட்சி குறித்த பௌத்த மத முன்னுதாரணங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்று இதனைத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/13982

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.