ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
மன்னார் கட்டுக்கரையில் மீட்கப்பட்ட தொல்லியல் சின்னங்கள் யாழ்.பல்கலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது கட்டுக்கரை தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சின்னங்கள் காட்சிப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. யாழ்.பல்கலைகழக தொல்லியல் அருங்காட்சியகத்தில் காலை 9.30 மணியளவில் கண்காட்சிக்கூடம் திறந்து வைக்கப்பட்டது. கண்காட்சி கூடத்தை யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் திறந்து வைத்தார். http://globaltamilnews.net/archives/12065
-
- 0 replies
- 582 views
-
-
யாழ் போதனா வைத்தியசாலை சூழலில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு காணி தந்துவ வேண்டுமென வைத்தியசாலை தரப்புகள் எதிர்பார்ப்பு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 2017 ஆம் வருட பட்ஜட்டில்; வடமாகாணத்தில்; சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு ரூபா 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை கிழக்கு மாகாணத்திலும் தென்பகுதியிலும் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு தலா ரூ 1000 மில்லியன் அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர் வைத்தியசாலையானது மாகாணத்திலுள்ள போதனா வைத்தியசாலையுடன் இணைந்ததாகவே அமைக்கப்பட இருப்பதால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அண்மையாக இவ் வைத்தியசாலை அமையும். இதற்காக போதனா வைத்தியசாலை சுற்றாடலில் அண்ணளவாக 1.5 ஏக்கர் பரப்பளவான காண…
-
- 0 replies
- 198 views
-
-
மீனவர்களின் படகு கவிழ்ந்தது : மட்டக்களப்பில் மற்றுமொரு சம்பவம்!! மட்டக்களப்பில் தொழில் நிமிர்த்தம் கடலுக்கு சென்று வரும் போது இன்று 29 காலை வியாழக்கிழமை ஆத்துவாயில் வைத்து அலியா படகு என்று அழைக்கப்படும் பெரிய படகு கவிழ்த்துள்ளது. காத்தான்குடியை சேர்ந்த படகில் சென்ற மீனவர்கள் 3 பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். படகில் பிடித்து வைத்திருந்த மீன்கள் அனைத்தும் கடலில் போனதுடன் அவர்களது வலைகளும் கடலில் போயுள்ளது. இதை தொடர்ந்து அங்கு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு படகின் உதவியுடன் மீனவர்கள் உயிர் தப்பியதுடன் படகு பாரிய சேதமடைந்துள்ளது. இதேபோன்று கடந்த 20 ஆம் திகதி தொழில் நிமிர்த்தம் கடலுக்கு சென்ற சுவிஸ் கிரா…
-
- 0 replies
- 257 views
-
-
சட்டவிரோத மதுபான சாலைகளை மூடக்கோரி மட்டுவில் ஆர்ப்பாட்டம் (சசி) மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசசெயலகத்துக்கு முன்பாக இன்று 29 ம் திகதி காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மதுபான சாலைளை மூடக்கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மண்முனை பற்று பிரதேச செயலகத்துக்கு அண்மித்த பகுதிகளில் உள்ள ஆலயங்கள் பாடசாலைகள் மற்றும் மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் இயங்கும் சட்டவிரோதமான மதுபான சாலைகளை மூடக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை கலந்து கொண்டதுடன் இந்த மதுப…
-
- 0 replies
- 334 views
-
-
ஜனவரி 17, 18இல் டொரன்டோவில் சர்வதேச மாநாடு; சத்தியலிங்கம், குருகுலராஜா பங்கேற்பு வடமாகாண சுகாதாரம், கல்வி குறித்த மூன்று ஆண்டு திட்டம் ஆராயப்படும் (ஆர்.ராம்) ஜனவரி 17ஆம் 18ஆம் திகதிகளில் கனடாவின் தலைநகரான டொரன்டோவில் சர்வதேச மாநாடு இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராஜா எதிர்வரும் ஜனவரி மாத முதல் வாரத்தில் கனடா நோக்கி பயணமாகவுள்ளனர். இந்த சர்வதேச மாநாட்டில் வடமாகாணத்தில் 2016 ஜுன் மாதம் முதல் 2019 ஜுன் மாதம் வரையிலான மூன்று வருடகாலப்பகுதியில் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் நடைமு…
-
- 0 replies
- 237 views
-
-
தானியக்க இலத்திரனியல் இயந்திரங்களிலிருந்து பல மில்லியன் ரூபா பணம் கொள்ளையிட்ட இருவர் கைது (எம்.எப்.எம்.பஸீர்) வெளிநாட்டவர்களுடன் இணைந்து போலி கடனட்டைகளை பயன்படுத்தி, தனியார் வங்கிகளின் இலத்திரனியல் இயந்திரங்களில் இருந்து மில்லியன்கணக்கில் பணம் கொள்ளையிட்டு வந்த திட்ட மிட்ட குற்றக் குழுவொன்றின் வலையமைப்பை குற்றப் புலனாய் வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர். அதன்படி இந்த திட்டமிட்ட குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் தெற்கு பாதாள உலகப் புள்ளி ஒருவர் உள்ளிட்ட இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் போலி நாணயத் தாள்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். …
-
- 1 reply
- 462 views
-
-
எம் மக்களுடைய வாழ்க்கையுடன் ஒருபோதும் விளையாட வேண்டாம் இறுதி எச்சரிக்கை என்கிறார் சுமந்திரன் எம்.பி. (வடமராட்சி நிருபர்) இறுதி எச்சரிக்கையாக அமைச்சர் சுவாமிநாதனுக்கு இன்று நான் சொல்கின்ற செய்தி. நொந்துபோய் இருக்கின்ற எம் மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடவேண்டாம் எங்கள் மக்களுடைய தன்மானத்துக்கு நீங்கள் இழுக்கை ஏற்படுத்த வேண்டாம் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான எம் ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கரவெட்டி பிரதேசசெயலகத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட கலாசார பெரு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கரவெட்…
-
- 0 replies
- 222 views
-
-
புதிய அரசியலமைப்பின் பின்னர் பிரிந்துசெல்லலாம் சுதந்திரக்கட்சி அமைச்சர்களுக்கு மனோ கணேசன் அறிவுரை (க.கமலநாதன்) நீண்ட காலமாக இழுபறி நிலையில் காணப்படுகின்ற தேசிய பிரச்சினைக்கு நிரந் தர தீர்வை காணவேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெரிவுசெய்து தேசிய அரசாங்கத்தினையும் அமைத்தோம். எனவே அரசாங்கத்தின் உள்ளிருந்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் நாட்டை ஒன்றுபடுத்தும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் பிரிந்து செல்லலாம் என்று தமிழ் முற்போக் குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், நல்லிணக்கம் மற் றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனே…
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ் தேசிய இனம், சிங்கள தேசிய இனத்தின் பௌத்த மேலாதிக்கவாதிகளால் அடக்கி ஒடுக்கப்பட்டனர். ஜனநாயக ரீதியாக சமவுரிமை, சம நீதி கேட்டு போராடிய தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அவர்களது கோரிக்கைகளும், மகஜர்களும் வெற்றிக் காகிதங்கள் போல் தூக்கி வீசப்பட்டன. ஜனநாயக ரீதியாக குரல் கொடுத்த மக்கள் பிரதிநிதிகள் கூட சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளால் இலக்கு வைக்கப்பட்டனர். தென்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் இனக்கலவரம் என்ற பெயரில் அடித்து விரட்டப்பட்டனர். தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் கூட நிம்மதியாக வாழ முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன்விளைவு இந்த நாடு 30 வருடம் ஒரு ஆயுதப் போராட்டத்தை …
-
- 0 replies
- 258 views
-
-
புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதனை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சிறந்த தமிழ் தலைவரான இரா.சம்பந்தன் மற்றும் தானும் கலந்துரையாடினோம். புதிய அரசியல் அமைப்பில் சமஷ்டி அப்படையிலான அரசியல் தீர்வுக்கு யோசனை எதனையும் முன்வைக்க போவதில்லை என இரா.சம்பந்தன் தன்னிடம் உறுதியளித்துள்ளார். மக்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்தாலும், தான் அதனை முன்வைக்க போவதில்லை என இர.சம்பந்தன் திட்டவட்…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு பாதகமாக அமையுமா? ட்ரம்ப் அரசின் அறிக்கை: கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணைகளிலிருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரி ஏற்கனவே அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்த கலந்துரையாடுவதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாகவும் இதன் பிரகாரம் …
-
- 6 replies
- 584 views
-
-
மன்னார் தாழ்வுப்பாடு கிராம மீனவர்கள் தமது நிரந்தர தொழிலாக சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று முதல் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் சுருக்கு வலையினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்துள்ளனர். இந் நிலையில் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் இன்று காலை முதல் தாழ்வுபாட்டு கிராமத்தில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் இருந்து இன்று காலை சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களை கடற்படையினர் இடை மறித்துள்ளனர். அத்துடன், சுருக்கு வலையினை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கான அனுமத…
-
- 0 replies
- 286 views
-
-
சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஜனன ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடாத்தவுள்ளது. அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும், திறந்தபோட்டி மட்டத்திலும், மற்றும் சர்வதேச மட்டத்திலும், நடாத்தவுள்ள இப்போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் மேற்படி சபையால் கோரப்பட்டுள்ளது. 01.அகிலஇலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி தலைப்பு: “ஈழத்துகல்வி வளர்ச்சியில் சுவாமி விபுலானந்தரின் வகிபங்கு” பொதுநிபந்தனைகள்: தீவகத்தின் எப்பாகத்திலும் தரம் 10 முதல் 13 வரையில் கல்விப்பயிலும் மாணவர்கள் 750 முதல் 1000 வரையிலான சொற…
-
- 0 replies
- 494 views
-
-
மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வீடுகளை - கல் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, வடக்கு மாகாண மக்கள் ஏற்க மறுத்த பொருத்து வீட்டை முன்நிர்மாணிக்கப்பட்ட வீட்டைத் திணிப்பதற்கு முயலும் காரணத்தைச் சொல்ல வேண்டிய கடப்பாடு அமைச்சருக்கு உண்டு. எங்கள் மக்களுக்கு வீடு வேண்டும். அதனை நாம் திரும்பத் திரும்பக் கூறுகின்றோம். கல் வீடாகவே இருக்கவேண்டும். தொங்கிக் கொண்டிருக்கும் வீட்டினை நாம் ஏற்கமாட்டோம். மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை எனக்கு 50 வருடங்களாகத் தெரியு…
-
- 0 replies
- 397 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்ள வேண்டுமாயின், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் அமைப்பின் செயற்பாட்டாளரான அருட்தந்தை எம்.சக்திவேல் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று அறிக்கை ஒன்றை கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தமது அமைப்பின் கோரிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைத்த போதிலும் பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டம் அடக்குமுறை சட்டம். அதில் மனிதாபிமானம் கிடையாது. தற்போதைய அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கமாக இர…
-
- 0 replies
- 246 views
-
-
புத்த சாசன அமைச்சின் விதிகளுக்கு அமையப் புராதன இந்துக் கோயில்களில் திருப்பணி செய்வதற்கு அனுமதி எவரிடமும், எப்பொழுதும் அனுமதிப் பெற வேண்டியதில்லை என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார் . திருக்கோணேச்சரம் அன்னதான மடம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள அறங்காவலர் அருள் சுப்பிரமணியம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்து இன்று (28) அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலையின் மூத்த குடிமகன், எழுத்தாளர், கவிஞர், படைப்பாளி அருள் சுப்பிரமணியம் அவர்கள். அ…
-
- 0 replies
- 198 views
-
-
தமிழ் மக்களுக்கு வரலாற்று துரோகமிழைக்கும் வழிகாட்டல் குழுவில் இருந்து சம்பந்தன் சுமந்திரன் வெளியேறவேண்டும். தமிழ் மக்களது அடிப்படை கோரிக்கைகளினை கூட பரிசீலிக்க தயாராக இல்லாத வழிகாட்டல் குழுவிலிருந்து இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வெளியேற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரச அமைச்சரான மகிந்த அமரவீரவின் 21பேர் கொண்ட அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்பந்தன…
-
- 1 reply
- 330 views
-
-
தவறவிடப்பட்ட பணப்பையை உரியவரிடம் சேர்த்த பண்பாளர். ஒரு இலட்சம ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் தவறவிடப்பட்ட கைப் பையை கண்டெடுத்தவர் அதை உரியவர்களிடம் சேர்ப்பித்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரவு யாழிலிருந்து திருகோணமலைக்கு சென்ற ஒருவர் வவுனியாவில் இறங்கியபோது தன்னுடைய கைப்பையை தவற விட்டார். அதில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியிலான பொருட்கள் , சில ஆவணங்கள் மற்றும் பணம் ஆகியன இருந்துள்ளன. திருகோணமலைக்கு சென்றதன் பின்னரே கைப்பையை தவற விட்டதை அவர் தெரிந்து கொண்டார். தவற விடப்பட்ட கைப்பைக்குள் இருந்த தொலைபேசிக்கு அவர் அழைப்பு எடுத்தார். மறுமுனையில் சிவநேசன் என…
-
- 2 replies
- 383 views
-
-
வடமாகாண சபையில் 337 பிரேரணைகள் நிறைவேற்றம் -எம்.றொசாந்த் வடமாகாண சபையில் இதுவரை 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின், இவ்வருடத்தின் இறுதி அமர்வாக இன்றைய அமர்வு இடம்பெற்றது. “வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு முதலாவது அமர்வு 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி இடம்பெற்றதிலிருந்து இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற அமர்வுகள் வரை 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என தெரிவித்தார். மாகாணசபையின் ஆட்சிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதன்படி வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் 3 வருடங்கள் நிறைவு…
-
- 2 replies
- 407 views
-
-
நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தொகுப்புரைகள் நிறைவடைந்துள்ளன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தொகுப்புரைகள் இன்றையதினம் நிறைவடைந்துள்ளன. தொகுப்புரைகள், இன்று காலை முதல் எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன . கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க,, ஜூரிகளுக்கு தெளிவுரைக்க உள்ளார். விசேட சிங்கள ஜூரிகள், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி நியமிக்கப்பட்டனர். 23 ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியமளிப்புகள் இடம்பெற்றன. சாட்சியமளிப்பு நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவ…
-
- 25 replies
- 2.3k views
- 1 follower
-
-
சுதந்திரக் கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பு ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் வட்டாரத் தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன. அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற கூட்ட எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் அரசியல் ரீதியான காரணிகள் பற்றி பேசியுள்ளனர். இதன் போது சுதந்திரக் கட்சியில் பிளவு இன்றி முன்நோக்கி நகர்த்தப்பட வேண்டுமென இரு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொகுதிவாரி அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் …
-
- 0 replies
- 176 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு அவசியம் ; ராஜித (ஆர்.யசி ) நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றி வருகின்றது. அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் நகர்வுகள் மிகச்சரியாக உள்ளது. அதேபோல் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் விடத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிய அரசியல் அமைப்பின் மூலம் ஜனாதிபதி முறைமையையே இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களின் கருத்தறிந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டது. அரசியல் அமைப்பு உருவாக்கம் மற்றும் அரசாங்கதின் நகர்வுகள் தொடர்பில்…
-
- 0 replies
- 301 views
-
-
'சி.வி சொன்னது உண்மைக்கு புறம்பானது' “வடமாகாண முதலமைச்சர் முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது" என வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவித்துள்ளார் “வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முதல்வர் முன்வைக்கும் கருத்துக்கள் தரவுகள் அனைத்துமே மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படல் அவசியமாகும். வடக்கு மாகாணசபையில் முழுநாள் விவாதமொன்று நடாத்தப்பட்டு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான நிலைப்பாடுகளும் கருத்துக்களும் தெளிவுபடுத்தப்படல் அவசியமாகும் என்று நான் வலியுறுத்துகின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் முஸ்லிம்களுக்…
-
- 0 replies
- 754 views
-
-
தமிழர்களின் அரசியல் என்பது இன்று பொழுது போக்குக்காகப் பேசப்படும் விடயமாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் உணர்வுபூர்வமாக, எங்களின் சொந்த விடயமாக, உள்ளுணர்வுடன் பேசப்பட்ட அதே அரசியல் விடயம் இன்று நலினப்பட்டு நேரம் கிடைக்கும்போது மேலோட்டமாகப் பேசப்படுவதாயிற்று. எதிர்காலத்தில் இதன் நிலைமை எப்படியாகும் என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும். இருந்தும் எம்மினத்துக்கு செய்யப்படுகின்ற வஞ்சகத்தனத்தை தமிழ்ப் பற்றுக் கொண்ட ஒரு பகுதியினரால் ஜீரணிக்கவே முடியவில்லை. எங்கள் அரசியல் எவ்வாறாகும்? தீர்வு எப்படி அமையும்? எங்களை ஏமாற்றிவிடப் போகிறார்களோ? எங்கள் இனத்தின் எதிர்காலமும் எங்களுக்கான எதிர்கால அரசியல் தலைமையும் எப்படியாகும்? என்ற ஏக்கத்துடன் தான் அவர்களுக்கான பகல்…
-
- 1 reply
- 318 views
-
-
வடக்கு மாகாண மக்களுக்கு பொருந்தாத பொருத்து வீட்டினை மக்கள் மீது திணிக்கும் நாசகார வேலையை இந்த அரசாங்கம் முன்னெடுக்குமென தாம் எதிர்பார்க்கவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இருபற்றி அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாண மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்காத ஒரு வீட்டினை மக்களுக்குத் திணிப்பது தொடர்பாக கூறவேண்டிய கட்டாய கடப்பாடு அமைச்சருக்கு உண்டு. எமது மக்களுக்கு வீடு வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் கூறி வருகின்றோம். அது கல்வீடாக இருக்கவேண்டுமே தவிர தொங்கும் வீடாக இருக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். பொருத்து வீடு தொடர்பாக தனிப்பட்ட விருப்பில் இருந்து அகன்று அதாவது தனிநபர் விருப்பு மற்றும் தனிநபர் அரசியல் என்பவ…
-
- 0 replies
- 458 views
-