Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மோட்டார் சைக்கிள் விஷமிகளால் தீவைத்து எரிப்பு ; முல்லைத்தீவில் சம்பவம் (கே.குமணன் ) முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று இரவு இனம் தெரியாதநபர்களால் திணைக்கள வளாகத்தில் வைத்து தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரின் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளை அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு விடுதியில் தூக்கத்தில் இருந்த வேளையில் நள்ளிரவில் வந்த இனம்தெரியாத நபர்கள் காவோலைகளை மோட்டார் சைக்கிளின் மேல் போட்டு தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். …

  2. “மாவீரர்தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கிடையாது” : பாதுகாப்பு அமைச்சு இறந்த உறவினர்களை நினைவுக்கூர்ந்து அஞ்சலி செலுத்துங்கள். ஆனால் விடுதலை புலிகளை மையப்படுத்தி வடக்கில் மாவீரர்தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 3 தசாப்த கால போரில் உயிர்நீத்த விடுதலைப் புலிகளை நினைவுகூறும் நாளான மாவீரர் தின நிகழ்வுகள் கார்த்திகை 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. http://www.virakesari.lk/article/13871

  3. துயிலுமில்லத்தை சிரமதானம் செய்யும் மக்கள்..! (நிபோஜன்) யுத்தத்தில் உயிரிழந்த தனது உறவுகளை நினைவு கூறுவதற்காக கிளிநொச்சி துயிலுமில்லம் பகுதியை மக்கள் சிரமதானம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/13847

  4. மங்களராம விஹாராதிபதியின் இனவாதத்தை கண்டித்து சபையில் தீர்மானம்.! மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அடாவடித்தனங்களைக் கண்டித்து இன்று இடம்பெற்ற வட மாகாண சபையின் 66 வது அமர்வில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தால் இந்தப் பிக்குவின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி, நாட்டின் நல்லிணக்கத்தையும் இன ஐக்கியத்தையும் சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது. …

    • 2 replies
    • 285 views
  5. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் தெருவிளக்குகளை பொருத்துமாறு மக்கள் கோரிக்கை (கே.குமணன்) முல்லைத்தீவு நகரம், புதுக்குடியிருப்பு உப நகரம் என்பவற்றில் தெருவிளக்குகள் கூடுதலாகப் பொருத்தப்பட வேண்டுமென மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நகரம் கடற்கரையில் கூடுதலான மின்விளக்குகள் போட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கை, மாவட்டச் செயலரிடம் கிராம மக்கள் பிரதிநிதிகளினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவிற்கு சுற்றுலாப் பயணிகள் கூடுதலாக படையெடுப்ப்பதன் காரணமாக கடற்கரையில் கூடுதலான மின்வெளிச்சங்கள் தேவைப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் ஏனைய சமூகவிரோத செயல்கள் இடம்…

  6. மூன்று மணி நேரங்களுக்குள் மட்டு. வைத்தியசாலையை நாடினால் பாரிசவாத தாக்குதலை அவசர சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் - விசேட நரம்பியல் நிபுணர் வைத்தியர் திவாகரன் 2016-11-25 11:30:53 (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) மூன்று மணி நேரங்­க­ளுக்குள் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையை அணு­கினால் பாரிச வாத தாக்­கு­தலை அவ­சர சிகிச்சை மூலம் குணப்­ப­டுத்­தலாம் என மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் விசேட நரம்­பியல் நிபுணர் வைத்­தியர் ரீ. திவா­கரன் தெரி­வித்தார். தற்­ச­மயம் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் சரித்­தி­ரத்தில் முதன்முறை­யாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள இரத்தக் கட்­டியைக் கரைக்கும் சிகிச்சை முறை­மூலம் பாரிசவாத தாக்­கு­த­…

  7. யுத்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களை நினை­வு­கூர அனு­ம­திக்­க­வேண்டும் யுத்­தத்­தின்­போது உயி­ரி­ழந்­த­வர்­களை நினை­வு­கூரும் விட­யத்தில் தொடர்ந்தும் பெரும் சர்ச்­சை­யான நிலை நீடித்து வரு­கின்­றது. இறுதி யுத்­தத்­தின்­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இவ்­வாறு படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களை நினை­வு­கூரும் வகையில் மே மாதம் 18ஆம் 19 ஆம் திக­தி­களில் அஞ்­சலி நிகழ்­வு­களை நடத்­து­வ­தற்கு கூட முன்­னைய அர­சாங்­க ­கா­லத்தில் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதே­போன்று விடு­த­லைப்­பு­லிகள் வடக்கு, கிழக்கில் நிலை­கொண்­டி­ருந்த காலத்தில் நவம்பர் மாதத்தில் 21 ஆம் திகதி முதல் 28 ஆம்­ தி­க­தி­வரை மாவீரர் வார­மாக அனு…

  8. புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு -கூட்டமைப்புடனான சந்திப்பில் ஜனாதிபதி உறுதியளிப்பு புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டட தொகுதியில் உள்ள ஜனாதிபதியின் செயலகத்தில் நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் 16 பேரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவா தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் அரச தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே கலந்து கொண்டார். சுமார் இரண்டு மணிநேரம் இந்தச…

  9. 200 கோடி ரூபா பெறுமதியான கொக்கைன் மீட்பு ஒருகொடவத்தை கொள்கலன் தளத்திலிருந்து 200 கோடி பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தேடுதல் வேட்டையின் போது 200 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/13812

  10. ஆவா குழு­வினர் என்ற சந்­தே­கத்தில் கைதானோர் மீது குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை மனோவின் அதி­ருப்­தியை அடுத்து முடி­வு (நமது நிருபர்) வடக்கில் ஆவா குழு உறுப்­பி­னர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 11 பேருக்கும் குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி நீதி விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கூட்­டத்தில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கூட்டம் நேற்­றி­ரவு அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது. இந்தக் கூட்­டத்தில் முன்­ன­ணியி…

  11. யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் மாவீரர்நாள் சுவரொட்டிகள் ( ஆர்.வி.கே., ரி.விரூஷன் ) யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது புகைப்படங்களுடன்கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. பல்கலைகழகத்திற்கு இன்று காலை வந்த மாணவர்களாலேயே குறித்த துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டிருந்தது. இதன்படி இத் துண்டுப்பிரசுரங்களில் மாவீரர் நாள், தேசிய தலைவரது பிறந்தநாளிற்கு வாழ்த்துக்கள் போன்ற வசனங்கள் அச்சிடப்பட்ட நிலையில் பல்கலைகழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பீடங்களின் நுழைவாயில்களிலும் ஒட்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். குறித்த துண்டுப்பிரசுரங்களை யார் ஒட்டியதென்பது…

  12. இலங்கையின் இயற்கை எழிலை வெளிப்படுத்த கனடா நகரில் "சர்வதேச சுற்றுலா பயணக் கண்காட்சி 2016" இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு சபை மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியவற்றுடன், கனடாவின் ஒட்டாவா நகரிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரகம் கூட்டாக இணைந்து மொன்ரியால் நகரில் "சர்வதேச சுற்றுலா பயணக் கண்காட்சி 2016" இனை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை தொடர்பாக கனடாவில் நடைபெற்ற மிகப் பெரிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். 400 விற்பனை நிலையங்களைக்; கொண்டிருந்த இந்த கண்காட்சியகத்தை பயண முகவர்கள் உட்பட 2000 பேர் வரையில் நேரில் பார்வையிட்டுள்ளனர். இலங்கையின் இயற்கை அழகை வெளிப்படுத்துவதில் பெருமுயற்சியை மேற்கொண்டிருந்த குறித்த விற்பனை ந…

  13. மாவீரர் தின பிரேரணையை விலக்கி கொண்டது வடமாகாணசபை மாவீரர் தினத்தை நினைவு கூருவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என கோரி வடமாகாண சபையில் முன்மொ ழியப்படவிருந்த பிரேரணை சமகால சூழலை காரணம் காட்டி விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

 வடமாகாண சபையின் 66 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன் போது சபையில் முன்மொழிவதற்காக மாகாணசபை உறுப்பி னர் து.ரவிகரன் பிரேரணை ஒன்றை சபைக்கு முன் மொழிய திட்டமிட்டிருந்தார். மாகாண சபை அமர்வுக்கு முன்னர் நடைபெற்ற மாகாணசபை உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தில் குறித்த பிரேரணை சமகால சூழலுக்கு பொருத்தமற்றது என கூறியதை தொடர்ந்து பிரேரணை சபையில் எடுத்துகொள்ளப்படமால் விலக்கப்பட்டுள்ளது.…

  14. கொட்டாஞ்சேனை தமிழர்களின் கடத்தல் குறித்து தற்போதைய கடற்படை தளபதியும் அறிந்திருந்தார் - குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றில் தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொட்­டாஞ்­சேனை பகுதியில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட இரு தமி­ழர்­களின் கடத்தல் மற்றும் அவர்களது உடை­மை­களைக் கொள்­ளை­யிட்­டமை தொடர்பில் தற்­போ­தைய கடற்­படை தள­ப­தியும் அறிந்­தி­ருந்­த­மைக்­கான சான்­றுகள் தம்­மிடம் உள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு தெரி­வித்­து­ளள்து. இது தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணை­க­ளுக்கு தேவைப்­படும் பல்­வேறு ஆவ­ணங்­களை கடற்­ப­டை­யிடம் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக கோரிய போதும் அவை…

  15. மாதத்தில் ஒருதடவை மட்டும் குளிக்கும் அமைச்சரால் சிரிப்பு அழகன் கனகராஜ் ஒரு மாதத்தில் ஒரு தடவை மட்டுமே குளிக்கும் அமைச்சரொருவரின் பெயரை அறிந்துகொள்வதற்கு ஜனாதிபதி, அமைச்சர்கள் மட்டுமன்றி அவையே காத்திருந்த போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், அந்த அமைச்சரின் பெயரைக் கூறாமலேயே, தனதுரையை நிறைவு செய்துகொண்டார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, கமத்தொழில், பெருந்தோட்டக் கைத்தொழில், மகாவலி மற்றும் சுற்றாடல் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதனும், உரையாற்றினார். மகாவலி அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபா…

  16. சர்வதேச மட்டத்தில் வடக்கு மக்களின் பிரச்சினை பேசப்படுகின்றது : மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட உணரப்படவில்லை வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் சர்வதேசம் வரையில் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட உணரப்படவில்லை என கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் கவலை வெளியிட்டார். பாராளுமன்றத்தில் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கமத்தொழில், பெருந்தோட்ட கைத்தொழில், மகாவலி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன மற்றுமு; நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான செலவுத்தலைப்புக்கள் மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், …

  17. லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியருக்கு சர்வதேச பிடியாணை நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியிரான சந்தருவான் சேனாதீரவுக்கு சர்வதேச பிடியாணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை கம்பஹா நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. http://www.virakesari.lk/article/13846

  18. மலையக மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுங்கள் : சபையில் கூட்டமைப்பு எம்.பி. க்கள் வலியுறுத்து பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் மலையக மக்களுக்கு சொந்த நிலம் வழங்கப்படவேண்டும். தேசிய அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் வலியுறுத்தினர்கள். பாராளுமன்றத்தில் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கமத்தொழில், பெருந்தோட்ட கைத்தொழில், மகாவலி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன மற்றுமு; நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான செலவுத்தலைப்புக்கள் மீது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். த…

  19. பேரின்பராஜா திபான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் மீது, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டபோது, செனவிரத்ன என்ற சந்தேகநபர், கறுப்புநிறப் பையினுள் ரி-56 ரகத் துப்பாக்கியை வைத்து எவ்வாறு சுட்டார் என்பதை, முதலாவது சாட்சியாளரான மனம்பேரிகே பிருதிவிராஜ் சம்பத், கொழும்பு மேல்நீதிமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை செய்துகாட்டினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் எம்.பியின் படுகொலை தொடர்பான சாட்சியமளிப்பு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், விசேட சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய ஜூரி சபை முன்ன…

  20. புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் எம்.றொசாந்த் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானோரில் பட்டதாரிகளாக வெளியேறியுள்ள 35 பட்டதாரிகளுக்கும், முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கவேண்டும் எனக் கோரிய பிரேரணை, வடமாகாண சபையில் ஏகமனதாக, இன்று (24) நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இப்பிரேரணையைக் கொண்டு வந்தார். இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த, கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட 35 பேர், பட்டதாரிகளாகத் தற்போது வெளியேறியுள்ளனர். இவர்கள், பல்கலைக்கழகத்துக்குத் தகுதியான போதும் ஒருசில காரணங்களால் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முடியாதிருந்தனர். தற்போது புனர்வாழ்வின் பின்னர் மேற்படிப்பை முடித்து வெளி…

  21. சிறிலங்காவில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடி வருவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பிரதி சக்தி, மின்சக்தி அமைச்சர் அஜித் பெரேரா, தகவல் வெளியிடுகையில், “அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடம் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை. அனைத்துலக அணுசக்தி முகவர் அமைப்புடன் இணைந்து, இந்த அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தை தெரிவு செய்யும் பணியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்யும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தாலும், அணுமின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இறுதி முடிவை இன்னமும் எடுக்கவில்லை. சுற…

    • 4 replies
    • 435 views
  22. கருணா தரப்பிற்கு துப்பாக்கி வழங்கி ரவி ராஜை கொலை செய்த முறை தொடர்பில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அது தொடர்பிலான பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்காக அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறியுள்ள நபர் கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சாரதியாக செயற்பட்டுள்ளார். ரவிராஜ் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்த நபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றவர் என தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும் அவர் தற்போது அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறியுள்ளார். …

  23. தண்­டப்­பண அதி­க­ரிப்பு விபத்­துக்­களை குறைக்­குமா? எதிர்­வரும் 2017 ஆம் ஆண்­டுக்­கான வர­வு–செ­ல­வுத்­திட்டம் தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை மீறு­வது தொடர்­பான தண்­டப்­பணத் தொகை பாரிய அளவில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு போக்­கு­வ­ரத்து விதி­களை மீறு­வது தொடர்­பான தண்­டப்­பணம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது மக்கள் மத்­தியில் ஒரு­வ­கை­யான சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. விசே­ட­மாக ஏழு­வ­கை­யான போக்­கு­வ­ரத்து விதி­முறை மீறல்­க­ளுக்கு 25 ஆயிரம் ரூபா தண்­டப்­பணம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது அதற்­க­மைய காப்­பு­று­தி­யின்றி வாகனம் செல…

  24. வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் எட்டு பேர் வெளிநாட்டுகளுக்கு பயணம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எட்டுப்பேருக்கு அடுத்து வரும் வாரங்களில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு வடமாகாண அவைத்தலைவர் அனுமதி அளித்துள்ளார். வடமாகாண சபையின் 66 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் எட்டு பேர் தாம் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதனால் தமதுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என அவைத்தலைவரிடம் விண்ணப்பித்து இருந்தனர். அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் விடுமுறை விண்ணப்பம் அவைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுப்பினர்களுக்கு விடுமுறை அளிக்க அவைத்தலைவர் சம்மதம் தெரிவித்தார். வடமாகாண…

  25. லசந்தவை இராணுவ புலனாய்வுப் பிரிவினரே சுட்டுக் கொலை செய்தனர் : சி.ஐ.டி. மன்றில் அதிர்ச்சி தகவல் (எம்.எப்.எம்.பஸீர்) சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களே கொலை செய்துள்ளனர் என சி.ஐ.டி.யினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதேவேளை லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலான விசாரணைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் கூட்டங்களின் அறிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரியுள்ளது. இது தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரிக்கை முன்வைத்த போதும் அவர் அதனை நிராகரித்துள்ளதாகவும் பாதுகாப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.