ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143409 topics in this forum
-
‘சிங்களவர்களுக்கு நாம் எதிரிகள் அல்லர்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “இந்த நாட்டின் வடக்கு - தெற்கு மக்களுக்கிடையே இந்தளவு பிரச்சினை ஏற்பட, மூன்றாம் தரப்பினரின் தவறான மொழிபெயர்ப்பே காரணம். நாம் ஒன்று சொன்னால் மற்றொன்றைக் கூறுகின்றனர். சிங்கள மக்களுக்கு நாங்கள், ஒருபோதும் எதிரிகள் அல்லர். ஆனாலும், சமஷ்டி முறையே எமக்கு வேண்டும்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். எழுக தமிழ் தொடர்பில் தெற்கில் ஏற்பட்டுள்ள தவறான கருத்துகளுக்கு விளக்கமளிக்கும் வகையில், தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்த, “வடக்கு- தெற்குக்கான கலந்துரையாடல்” எனும் ஊடகவியலாளர் சந்திப்பு, இலங்கை மன்றக் கல்லூரியில், நேற்றுச் செவ்வாய்க்கிழம…
-
- 1 reply
- 331 views
-
-
"இன முறுகல்களுக்கு இனி ஒரு போதும் சந்தர்ப்பம் அளிக்கப் போதில்லை" இன முறுகல்களுக்கு இனி ஒரு போதும் சந்தர்ப்பம் அளிக்கப் போதில்லை. வடக்கு மற்றும் கிழக்கின் பொது மக்களின் அமைதியான வாழ்விற்கு தேவையான அனைத்து விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊள்ளுராட்சி மன்றங்களின் அனைத்து நிர்வாகப் பொறுப்புக்களும் மாகாண முதலமைச்சரின் கண்காணிப்பில் கீழ் இடம்பெற வேண்டும். 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்தம் இதன் போது ஜனாதிபதியின் கவனத்திற்பு முதலமைச்சர்கள் கொண்டு வந்ததுடன் அதற்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி…
-
- 0 replies
- 167 views
-
-
"எழுக தமிழ் பேரணி" மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்யும் இரண்டாவது "எழுக தமிழ் பேரணி" எதிர்வரும் ஜனவரி மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் உருவரான வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவை நேற்று மாலை கொழும்பு மன்றக்கல்லூரியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சூழ்நிலைகளாலும் நிர்பந்தங்களாலும் அழுத்தங்களாலும் எமது மக்களின் நீதிக்கான பயணம் மழுங்கடிக்கப்படலாம் என்ற ஐயப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக நிலவி வந்தது. எனவே அதனைத்தடுக்கும் வகையில…
-
- 0 replies
- 308 views
-
-
'நீலப்படையணி இளைஞனே முஸ்லிம்களை தீண்டுகின்றார்' அழகன் கனகராஜ் 'சிங்கள, முஸ்லிம் உறவை சீர்குலைத்து, இருதரப்புகளுக்கும் இடையில் மோதலை உருவாக்குவதற்கு சூழ்ச்சி வகுக்கப்படுகின்றது. இதன் ஓர் அங்கமாகத்தான் கண்டியில் பள்ளி வீதி பெயர்பலகை உடைக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்;வின் நீலப் படையணியில் இருந்த இளைஞர் ஒருவரே, முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறார்' என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 'முஸ்லிம் மக்களுக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை இல்லை என்ற பயங்கரமான செய்தியை வழங்குவதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது. நீலப்படையணின் சூத்திரதாரி தற்போது கைது செய்யப்பட்…
-
- 0 replies
- 217 views
-
-
இன, மதவாதம் பேசினால் விசேட பொலிஸ் பிரிவு தேடிவரும் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் செயற்படும் மற்றும் கருத்துகளை வெளியிடுபவர்களைக் கைது செய்து, அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக, விசேட பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொலிஸ் பிரிவு, பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் தலைமையில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், இனவாத மற்றும் மதவாதக் கருத்துக்கள் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கு எதிராக அரசாங்கமும் பொலிஸாரும் செயற்படுவதில்லை என்ற விசனமும் கவலைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. …
-
- 0 replies
- 304 views
-
-
‘முஸ்லிம் வரலாற்றுக்கு ஆப்பு; தமிழர்களின் வரலாறு அழிப்பு’ அழகன் கனகராஜ் “ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் ஒன்றுமே இல்லை. அதேபோல, பூர்வீகத் தமிழர்களின் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகை…
-
- 0 replies
- 163 views
-
-
சிங்களவர்களை சிறுபான்மையினராக்கும் சதி நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.முல்லைத்தீவு மணலாற்று பகுதியிலுள்ள விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் மக்கள் சந்திப்பை மேற்கொள்வதற்கும் என நேற்று விஜயம் செய்த போதே மகிந்த இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அங்கு மகிந்த மேலும் கருத்து தெரிவிக்கையில், வடக்கிலுள்ள சிங்கள மக்களான நீங்கள், சிறுபான்மையினராக இன்று மாற்றப்பட்டுள்ளீர்கள். அதுவே உண்மை, வடக்கு கிழக்கு முழுவதையும் வேறுபடுத்தி அதை தமிழர்களின் இரசதானியாக்கும் நடவடிக்கையையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. புதிய அரசியலமைப்பில் சமஷ்டி ஆட்சிமுறையை கொண்டு வருவது தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது. கூட்டு எதிர்க…
-
- 4 replies
- 429 views
-
-
வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நோர்வே முன்வந்துள்ளது வட மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிதி உதவியை வழங்க நோர்வே அரசாங்கம் முன்வந்துள்ளது. நோர்வே அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியன இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளன. 200 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இதன் மூலம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக நோர்வே தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினூடாக விவசாயம…
-
- 2 replies
- 349 views
-
-
21 அகதிகள் நாடு வந்தடைந்தனர் -கனகராசா சரவண இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் 21 பேர் யு. என். எச். சி. ஆர் அமைப்பினால் இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை 10 மணிக்கு, விமான மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்துவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/186672/-அகத-கள-ந-ட-வந-தட-ந-தனர-#sthash.ghxVxn0c.dpuf
-
- 2 replies
- 397 views
-
-
மாவை, சிவாஜிலிங்கம் இன்று சாட்சியம் (ரி.விரூஷன்) ஊர்காவற்றுறையில் 2002 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியமை, இருவர்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரனையில் இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராசா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர். 2002 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் பரப்புரைக்காக ஊர்காவற்றுறைக்கு சென்ற போது இவர்கள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 20பேர…
-
- 1 reply
- 258 views
-
-
மன்னாரில் அமைக்கப்படவுள்ள பாரிய அளவான கடல் உயிரின வளர்ப்புப் பண்ணை மூலம் 4000 பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்கமுடியும் என வடக்கு மாகாண கடற்றொழில் அமைச்சர் ப.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்திற்கென 4000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் இத்திட்டத்தினூடாக தமிழ் மக்களின் வாழ்வாதாரமும் உயரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். குறித்த நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பண்ணைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் அனுமதிக்காக நேற்றையதினம் இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட அதிகாரியா…
-
- 3 replies
- 497 views
-
-
அமெரிக்காவின் ஸ்ரேலிங் ஹைட்ஸ் நகரசபை. யாழ்ப்பாணத்துடன் சகோதர நகர பங்குடமை தொடர்பில் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இந்த யோசனை நவம்பர் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாண நகரம் 88ஆயிரம் குடியிருப்பாளர்களை கொண்ட பல நூற்றாண்டு கலாச்சார நகரமாகும். அமெரிக்காவின் ஸ்ரேலிங் ஹைட்ஸ் நகரம், 129ஆயிரத்து 699 பேரைக்கொண்ட நகரமாக காணப்படுகின்றது. இந்த நகரம், அமெரிக்காவின் மிச்சிக்கன் பிரதேசத்தின் புறநகர் பகுதியான அந்த பிரதேசத்தின் நான்காவது பெரிய நகரமாகும். குறித்த நகரத்துக்கு 1991ஆம் ஆண்டு ஐரோப்பிய இனத்துவக்குழு மக்கள் குடியேறினர். கடந்த 2010ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி ஸ்ரே…
-
- 2 replies
- 309 views
-
-
'வடக்கு-தெற்கிற்கான உரையாடல்': முதலமைச்சர் சி.வி. தலைமையில் கொழும்பில் இடம்பெறும் தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது ஊடக மாநாடு : நேரடி ஒளிபரப்பு http://www.virakesari.lk/
-
- 4 replies
- 390 views
-
-
நாடாளுமன்ற நீர்த்தடாகத்தில் தத்தளிக்கிறது கார் நாடாளுமன்ற கட்டடத்தொகுதிக்கு முன்பாக இருக்கின்ற, நீர்த்தடாகத்துக்குள் காரொன்று விழுந்துவிட்டது. அக்கார் அரைவாசி மட்டுமே மூழ்கியுள்ளது. கடும் மழை பெய்துகொண்டிருப்பதனால், அக்காரை மீட்டெடுப்பதில் பாதுகாப்பு தரப்பினர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற அரும்பொருட்காட்சியத்தின் பணிப்பாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ வாகனமே, இவ்வாறு நீர்த்தடாகத்துக்குள் விழுந்துள்ளது.பணிப்பாளர் நாயகத்தை நாடாளுமன்ற வளாகத்தில் இறக்கி விட்டு, திரும்பிச் செல்லும் போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த நீர்த்தடாகம் ஆழம் குறைந்தது என்பதனால் எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை. - See more a…
-
- 0 replies
- 238 views
-
-
இலங்கையில் இனவாதம் தூண்டும் செயற்பாடுகளுக்கு பின்னணியில் நாமல் ராஜபக்ச இருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் இனவாத செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் நாட்டில் வாழ முடியாது என அச்சுறுத்தல் விடப்பட்டு வருகின்றது. இனவாதச் செயற்பாடுகளை தூண்டிவிட்டு அதன் மூலம் நாட்டை குழப்பவும், சர்வதேசத்தில் இலங்கைக்கு இருக்கும் நற்யெரை கெடுக்கவும் சில சதியாளர்கள் முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோன்று,…
-
- 0 replies
- 381 views
-
-
தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் மழையினால் உருத்திரபுரம் கிராமத்தின் பிரதான வீதிகள் முதல் உருத்திரபுரத்தினை சூழவுள்ள அனைத்து வீதிகளும் வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளது. இதனால் குறித்த கிராமத்தில் வசிக்கின்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் உட்பட அனைவரும் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கி வருகிறார்கள். கிளிநொச்சி உருத்திரபுர கிராமத்தில் 60 வருடத்திற்கு மேலாக மாற்றம் எதுவும் பெறாத பௌதீக கட்டுமானங்களோடு அபாயசோதனயைத் தரும் கழிவாற்று உடைப்பானது அண்மைக்கால மழையினால் சிறு மழை வந்தவுடனேயே மக்களின் குடியிருப்பை மூடுமளவிற்கு குடிமனையினுள்ளே புகுந்து விடுகின்றது. பெரியளவிலான நான்கு கிராம சேவகர் பிரிவினை கொண்டுள்ளதுடன் அதிகளவான கிராமங்களுக…
-
- 0 replies
- 378 views
-
-
ஞானசாரர் - நீதியமைச்சர் முக்கிய பேச்சு -அழகன் கனகராஜ் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கும் நீதியமைச்சர் விஜேதாச ராஜிபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், தற்போது முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/186674/ஞ-னச-ரர-ந-த-யம-ச-சர-ம-க-க-ய-ப-ச-ச-#sthash.bqhCi8CN.dpuf
-
- 1 reply
- 521 views
-
-
கிழக்கு தொண்டர் ஆசிரியர்களின் நியமன பிரச்சினை : இரு வாரத்தில் தீர்வு கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமன பிரச்சினைக்கு இரு வார காலத்தில் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவாசம் உறுதியளித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் கடந்த இருபது வருட காலமாக பணியாற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே அவர் இவ்வுறுதி மொழியை …
-
- 0 replies
- 340 views
-
-
புலனாய்வு அதிகாரிகளை சந்தித்தார் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் பிரதானியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, புலனாய்வு அதிகா ரிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். அண்மையில் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சுரேஸ் சாலி, இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலை மையகத்துக்கு மாற்றப்பட்டிருந்தார். அதேவேளை, இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் பிரதானியாக இருந்த, மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இராணுவத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், இராணுவப் பு…
-
- 0 replies
- 242 views
-
-
அரசுக்கு எதிராக வட மாகாண முதலமைச்சர் கண்டனம்.! வட மாகாணத்தில் இயங்கிவரும் உப்பளங்கள் தனியார் மயப்படுத்தல் சம்பந்தமாக மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்தமைக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டனம் தெரிவித்ததுடன் இது சம்பந்தமாக எங்களுடனும் பேசியிருக்க வேண்டும் என தெரிவித்தார். இவை எக்காரணம் கொண்டும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதன்போது உறுதிமொழி வழங்கினார். இணைத் தலைவர்களான வட மாகாண சபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், எம்.எம்.மஸ்தான் ஆகியோர் தலைமையில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மன்னாரில் நடைபெற்றது.…
-
- 0 replies
- 280 views
-
-
முல்லையில் 11 பாடசாலைகள் அபிவிருத்திக்கு 11 கோடி ஒதுக்கீடு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 11 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.இதற்காக 11 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதிபர் விடுதி, ஆசிரியர் விடுதி, ஆய்வு கூடம், வகுப்பறை கட்டடம் என்பன அபிவிருத்திசெய்யப்படவுள்ளன. பாலி நகர் மகாவித்தியாலயம், பாரதி வித்தியாலயம், யோகபுரம் வித்தியாலயம், குமுழமுனை வித்தியாலயம், மாங்குளம் மகாவித்தியாலயம், இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலயம், புதுக்கு…
-
- 0 replies
- 188 views
-
-
இளம் சமுகத்திடையே வேகமாக பரவிவரும் எச்.ஐ.வி. இலங்கையில் அண்மைக்காலமாக இளம் சமூகத்தினர் மத்தியில் எச்.ஐ.வி. எயிட்ஸ் வைரஸ் பரவி வருவது அதிகரித்துள்ளது.15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இளம் வயதினர் மத்தியில் இந்த வைரஸ் அதிக ளவில் பரவி வருகிறது. பாதுகாப்பற்ற உடல் உறவு காரணமாகவே இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு எச்.ஐ.வி எயிட்ஸ் வைரஸ் பரவியுள்ளதாக சமூக மருத்துவம் தொடர்பான விசேட நிபுணர் ஜானகி வித்தியா பத்திரண தெரிவித்து ள்ளார். நாட்டில் உள்ள அனைத்து தேசிய மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் இயங்கும் பாலியல் நோய் தொட ர்பான பிரிவில் எச்.ஐ.வி. தொற்று இருக்கின்றதா என்பது அறிய பரிசோதனைகளை மேற்கொள்ள லாம் என அவர் …
-
- 1 reply
- 423 views
-
-
ஜேர்மனில் இருந்து வந்தவர் சடலமாக மீட்பு -க.அகரன் வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீட்டிலிருந்து 59வயது ஆண், சடலமாக செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார். ஜேர்மனியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய விக்கிரமரட்ன குணசிறி, என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனுக்கு சென்றிருந்த இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், கொழும்பில் சத்திரசிகிச்சை செய்துக்கொண்டுள்ளார். அதனையடுத்து, மீண்டும் ஜேர்மனுக்கு சென்றுவிட்டார். எனினும், அங்குள்ள காலநிலை ஒத்துக்கொள்ளாததால் நாடு திரும்பிய அவர், பத்தினியார் மகிழங்குளத்தில்…
-
- 1 reply
- 351 views
-
-
வெள்ளத்தில் மிதக்கும் பொம்மைவெளி -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் பொம்மைவெளி கிராம மக்கள், மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மழை வெள்ளம் காரணமாக இப்பிரதேசத்தில் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே இதற்கு முக்கிய காரணம்' என யாழ். பொம்மைவெளி பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் எம்.றிஸ்வான், குறிப்பிட்டார். மேலும், வெள்ள நீர் பாதிப்புக்குள்ளாக மக்களின் நிலமையை கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் …
-
- 3 replies
- 378 views
-
-
தையிட்டியில் வெடிபொருள் மீட்பு. மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட தையிட்டி கிழக்கில் இரண்டு மிதிவெடிகளும் , வெடிக்காத நிலையில் மண்ணில் புதையுண்ட நிலையில் எறிகணை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட தையிட்டி கிழக்கில் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட காவலரண் ஒன்றில் இருந்தே மேற்படி வெடி பொருட்கள் கண்டெடுக்கப் பட்டு உள்ளது. குறித்த பகுதியில் மக்கள் மீள் குடியேறி தமது காணிகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குறித்த பகுதிகளில் வெடி பொருட்கள் காணப்படும் அபாயம் இருப்பதனால் அவதானமாக தமது காணிகளை துப்பரவு செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுகொண்ட…
-
- 0 replies
- 376 views
-