ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
வவுனியா பொலிஸார் திடீரென சோதனை! பலருக்கு எதிராக வழக்கு பதிவு!! December 8, 2024 வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் பொலிஸார் திடீரென சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், டெங்கு நுளம்பு பெரும் வகையில் சூழலை வைத்திருந்த பலருக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனையடுதது வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள் என்பனவற்…
-
- 0 replies
- 177 views
-
-
புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் வீழ்ச்சி! இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த நவம்பர் மாதம் மொத்தமாக 530.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர். இந்த தொகை கடந்த ஒக்டோபர் மாதம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக 2024 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது நவம்பர் மாதம் புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பலானது நவம்பர் மாதம் சரிவினை கண்டுள்ளது. மேலும், 2023 நவம்பரில் பதிவுசெய்யப்பட்ட 537.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஒரு சிறிய வீழ்ச்சியையும் எடுத்த…
-
- 1 reply
- 367 views
-
-
உள்ளூராட்சித் தேர்தல் மார்ச்மாத இறுதிக்குள்! 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதற்கு ஏற்கனவே கோரப்பட்ட வேட்புமனுக்கள் ரத்துச் செய்யப்பட்டு புதிதாக வேட்பு மனுக்களைக் கோருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்தே, மார்ச் மாத்தின் இறுதிப் பகுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இதற்காக புதிய வேட்புமனுக்கள் விரைவில் …
-
- 0 replies
- 313 views
-
-
சட்டவிரோத மீன்பிடி: 8 இந்திய மீனவர்கள் கைது! யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய இரு படகுகளும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கசந்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 537 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 67 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2024…
-
- 0 replies
- 380 views
-
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து, எதிர்வரும் காலங்களிலாவது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் சமஷ்டி…
-
-
- 103 replies
- 6.1k views
- 2 followers
-
-
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார். Vhg டிசம்பர் 06, 2024 கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் இரத்னசேகர மாற்றம் செய்துள்ளார். மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய எம்.வை.பைசால் மாகாண முதலைமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக J.லியாகத் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நஸீர் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எச்.ஈ.எம்.டப்ளியூ.ஜி.திசாநாயக்கா விவசாய அமைச்சி…
-
-
- 13 replies
- 751 views
-
-
பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை. அத்துடன் இது விடயத்தில் கடந்த கால ஜனாதிபதிகள் இது பற்றி முஸ்லிம் தரப்புகளுடன் பேசாமல் எத்தகைய தீர்வுக்கும் வரமுடியாது என்றே கூறியுள்ளனர்.கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக அதற்குரிய அமைச்சின் செயலாளருடன் தான் பேசுவதாக ஜனாதிபதி அநுரகுமாரஇ சாணக்கியன் எம்பி உட்பட்ட தமிழ் கூட்டமைப்பு எம்பீக்களிடம் உறுதி தெரிவித்ததாக சாணக்கிய கூறியுள்ளமை பற்றி ஜனாதிபதி தரப்பு தெளிவு படுத்த வேண்டும் என உலமா கட்சித் தலைவர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார். கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னரே சாணக்க…
-
- 3 replies
- 241 views
-
-
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பு (USAID) மற்றும் அமெரிக்காவின் திறைசேரி துறை ஆகியவற்றின் அமெரிக்க பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது அமெரிக்க பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் புதிய நிர்வாகம் குறித்து வாழ்த்து தெரிவித்ததாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சந்திப்பில் இலங்கையின் நிர்வாகம், விவசாயம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், ஜனாதிபதி அநுர குமாரவுடன…
-
- 2 replies
- 180 views
-
-
ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது ஜா-எல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா-எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜா-எல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி ஒரு கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்…
-
- 0 replies
- 388 views
-
-
வெள்ளத்தினால் வவுணதீவு நல்லம்மாமடு அணைக்கட்டு சேதம் - புனரமைக்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கினால் வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட இலுப்பட்டிச்சேனை வயற்கண்ணத்தில் அமைந்துள்ள நல்லம்மா மடு எனும் அணைக்கட்டு முற்றாக சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த அணைக்கட்டில் தேக்கப்படும் நீரைப் பயன்படுத்தி நாம் இப்பகுதியில் 1,050 ஏக்கர் வயலில் வேளாண்மை செய்து வருகிறோம். இது தற்போது உடைபெடுத்துள்ளதனால் எமது வாழ்வாதாரமாக அமைந்துள்ள வேளாண்மைச் செய்கை முற்றாக பாதிப்புறும் நிலைமை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பெரிதும் சேதமடைந…
-
- 0 replies
- 137 views
-
-
இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவினருடன் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆராயப்பட்டது. அதில், தேசிய இனப்பிரச்சினை, மாகாணசபை முறைமை, காணி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டம், கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் கல்முனை வடக்கு பிரேதச செயலக தரம் உயர்த்தல் போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இதில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் புதிய அரசியலமைப்பின் மூலமாக தமிழ் தரப்பின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு தீர்வினை வழங்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும், தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறையை தொடர்ந்து நடைமுறைப்படுவதுடன், மாகாண சபைக்கான எந்…
-
- 3 replies
- 299 views
-
-
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் யாழில் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது! யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில் சென்ற சமயம் , வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி, உட்புகுந்த திருடன் வீட்டில் இருந்த ஒன்பதே முக்கால் பவுண் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளான் சம்பவம் தொடர்பில் வீட்டாரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனை பொல…
-
- 0 replies
- 464 views
-
-
யாழ்ப்பாணம் 22 மணி நேரம் முன் யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்காகரம்! யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 04) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 23ஆம் திகதி குறித்த சிறுவன் அயல்வீட்டு சிறுவனுடன் விளையாடி விட்டு வாளியைக் கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கை கழுவியுள்ளான்.இதன்போது சவர்க்காரம் கீழே விழுந்த நிலையில் சவர்க்காரத்தின் மீது கால் மிதிபட்டதில் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளான்.இந்நிலையில், குறித்த சிறுவனை மீட்டு யாழ்ப…
-
- 0 replies
- 431 views
-
-
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பில் ஊடக அறிக்கையிடலில் கவனம் தேவை. இவை சித்திரக் கதைகள் அல்ல, ஆனால் வாழ்க்கை! - பிரதமர் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக 1938 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுங்கள் - பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் "பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற வாசகம் தாங்கிய கைப்பட்டி பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக…
-
-
- 2 replies
- 285 views
-
-
இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் யஸ்மின் சூகா விடுத்திருக்கும் வலியுறுத்தல் இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் அனுப்பி வைத்திருக்கின்றது. ஜொஹனஸ்பேர்க்கை தளமாகக் கொண்டு யஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கி வரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான உண்…
-
- 3 replies
- 255 views
-
-
வடக்கு-கிழக்கு பல்கலை மாணவர்கள் இந்திய அரசாங்கத்தின் புலமைப் பரிசிலுக்கு தெரிவு December 6, 2024 இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசேட நிதியுதவித் திட்டத்திற்காக பொருளாதார ரீதியாக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்தும் அதேபோல பொருளாதார ரீதியாக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த ஏனைய 100 மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்தும் இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு வருடம் முழுவதும் மாதாந்த நன்கொடை உதவி வழங்கும் இந்தத் திட்டமானது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு புலமைப் பரிசில் திட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவால் வருடாந்தம் 710 புலமைப்பரிசில்கள் இலங்கை மாணவர்களுக்காக வழங்கப்படு…
-
- 0 replies
- 153 views
-
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ரஸ்ய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரான்ஸ் பெல்ஜியத்திற்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான செய்தி குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கவனம் செலுத்தியது. இவ்வாறான தகவல்கள் ஆதாரமற்றவை அடிப்படையற்றவை என்பதை தூதரகம் வலியுறுத்த விரும்புகின்றது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நாங்கள் உன்னி;ப்பாக அவதானித்து வருகின்றோம்,இந்த தகவல்களின் நோக்கம் இலங்கை ரஸ்யா இடையிலான பாரம்பரிய நட்புறவை சீர்…
-
-
- 12 replies
- 635 views
-
-
பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக ஜீவன் தெரிவு ! ShanaDecember 7, 2024 பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக நேற்றைய தினம் (06) ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க இன் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதில் 46,438 விருப்பு வாக்குகளை பெற்ற, இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார். அந்தவகையில் ஐ.தே.க இன் பாராளுமன்றத்திற்கான தலைவராக ஜீவன் தொண்டமான் நேற்றைய தினம் (06) தெரிவு செய்யப்பட்டுள்ளார். https://www.batti…
-
- 0 replies
- 480 views
-
-
ஜனநாயகத்தில் பலதரப்பட்ட குரல்களின் பங்களிப்பு இன்றியமையாதது - சஜித்துடனான சந்திப்பில் அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு 07 Dec, 2024 | 01:02 PM (எம்.மனோசித்ரா) ஜனநாயகத்தில் பலதரப்பட்ட குரல்களின் இன்றியமையாத பங்களிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது. நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் பொருளாதார செழிப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமையளித்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்…
-
- 0 replies
- 143 views
-
-
மாவீரர் வாரம் – யாழில் தொடரும் விசாரணைகள் ; நேற்றும் இருவரிடம் விசாரணை! adminDecember 7, 2024 யாழ்ப்பாணத்தில். மாவீரர் வார நிகழ்வுகளை முன்னெடுத்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவீரர் வார கால பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன் கோவிலடியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பில் நேற்றைய தினம் இரு இளைஞர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன. மாவீரர் நாள் தொடர்பில் முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் கடந்த 29ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்…
-
- 0 replies
- 193 views
-
-
யாழுக்கு குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை. குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான சேவையினை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் சேவையினை வழங்கி வந்த கடுகதி ரயில் , தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் 30ஆம் திகதி வரை தனது சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட புகையிரதமானது 11:15 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடைந்து பின்னர் காங்கேசன் துறையிலிருந்து மதியம் 12.34 க்…
-
- 0 replies
- 370 views
-
-
அதிகரிக்கவுள்ள மழை வீழ்ச்சி. கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ந…
-
- 0 replies
- 403 views
-
-
தரமற்ற மருந்துகள் தொடர்பாக வெளியான உண்மை. தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறிப்பிட்ட அமைச்சர், ” தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள்தான் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக விநியோகிக்கப்படுகின்றன. குறித்த அதிகார சபையில் வினைத்திறனற்ற நிலை காணப்படுகின்றது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறு கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக செல…
-
- 0 replies
- 357 views
-
-
வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள இடர் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயற்பட்ட உள்ளூராட்சிமன்றங்களின் முன்களப் பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது யாழ். மாவட்டத்திலுள்ள …
-
- 5 replies
- 424 views
- 2 followers
-
-
அரச கட்டடங்களாக மாறும் வாடகை நிறுவனங்கள். அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இயங்கும் அலுவலகத்தின் மாதாந்த வாடகை ஐம்பது இலட்சம் எனவும், இதற்கு மேலதிகமாக வர்த்தக அமைச்சின் மாத வாடகை 65 இலட்சம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 24 பேரும் விலையுயர்ந்த வீடுகளுக்குச் செல்லாமல் மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் போன்றவற்றைச் சேமித்துள்ளதாக சுனி…
-
-
- 5 replies
- 460 views
-