Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் மாற்றங்களுக்கு ஆன் சாங் சூகி ஜனாதிபதிக்கு பாராட்டு இலங்கையில் ஏற்பட்ட ஜனநாயக மாற்றங்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஆன் சாங் சூகி ஆன் சாங் சூகி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழ்க்கை தொடர்பில் தனது திருப்தியினையும் வெளியிட்டார். இந்தியாவின் கோவாவில் இடம்பெற்றுவரும் பிரிக்ஸ் - பிம்ஸ்டெக் மாநாட்டில் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான ஆன் சாங் சூகி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார …

  2. பௌத்த மதத்திற்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் சூழ்ச்சி : மஹிந்த சாடல் (லியோ நிரோஷ தர்ஷன்) நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பௌத்த மதத்திற்கு எதிராக சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இது வரையில் 48 பிக்குகள் கைது பல்வேறு விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹர பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற நிழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தனது ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட மத ரீதியான சுதந்திரம் மற்றும் புத்துணர்ச்சி என்பன தற்போது க…

  3. திருக்குமரன் நடேசன் கைது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜரான, பசில் ராஜபக்ஷவின் மைத்துனரான திருக்குமரன் நடேசன் கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அழைப்பின் பேரிலேயே, அவர், அப்பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/184107/த-ர-க-க-மரன-நட-சன-க-த-

  4. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 126 திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். அந்த வகையில், வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 24 திட்டங்களுக்கு 27 இலட்சமும் வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் 19 திட்டங்களுக்கு 31 இலட்சமும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 18 திட்டங்களுக்கு 20 இலட்சத்து எழுபத்தையாயிரமும் ஒதுக்கியுள்ளார். மேலும், செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் 27 திட்டங்களுக்கு 24 இலட்சத்தி இருபத்தையாயிரமும் மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 06 திட்டங்களுக்கு 17 இலட்சமும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 06 திட்டங்களுக்கு ஆறு இலட்சத்து ஐம்…

  5. 4 லட்சம் பெறுமதியான மரகுற்றிகள் பிடிபட்டன கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதலின் போது, 4 லட்சம் ரூபா பெறுமதியான மர ற்றிகள் கைப்பற்றப்பட்டன. கிளிநொச்சி பொலிஸாரிற்கு கிடைத்த தகவலையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெலிக்கன்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தேடுதலின் போது, ஐவரை கைது செய்த பொலிஸார், மரக்குற்றிகளையும், அதனை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றையும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றினர். மேலும், மரக்குற்றிகள் எடுத்து செல்லப்பட்ட மரக்காலை அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருந்தமையால், குறித்த மரக்காலையில் பயன்படுத்தப்பட்ட …

  6. அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படவேண்டும்-சிஹாஜினி விஜயசுந்தர வேண்டுகோள் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளுராட்சி அபிவிருத்தி தொடர்பாக சிறப்பாக செயற்படுகின்ற மன்றமாக உள்ளன. ஆனால் உள்ளு ராட்சி தேர்தலில் பெண்களின் பிரநிதித்துவம் அதிகரிக்கவேண்டும் என இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் யாழ் பிர தேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய மாற்று கொள்கை களுக்கான நிலையத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் சிஹாஜினி விஜயசுந்தர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் 1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை கொண்டுவரப்பட்டபோதே பெண்கள் அரசியலுக்கு வந்…

  7. இலங்கைக்கு தேவையான உதவியை வழங்கத் தயார் -ரஷ்யா இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்துவருவதாகக் குறிப்பிட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இலங்கைக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரி வித்தார். பிரிக்ஸ் – பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் ரஷ்ய ஜனாதி பதி விளாடிமிர் புடினுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே ரஷ்ய ஜனாதிபதி புடின் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்ற ரஷ்ய ஜனாதிபதி புடி…

  8. யுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாட முடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் விசேட செயற்திட்டமொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்திட்டம் கிளிநொச்சியில் சம்பிரதாய பூர்வமாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது உரையாற்றிய சுகாதார அமைச்சர், இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாகாணம் எதிர்நோ…

  9. தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி இன்றும் தமது எதிர்ப்பினை தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். அந்தவகையில் மலையகத்தில் வெலிமடை கட்டுகல்ல தோட்ட தொழிலாளர்கள் வெலிமடை – ஊவா பரணகம பிரதான வீதியில் கட்டுகல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதன்போது காட்டிக் கொடுக்காதே தொண்டா, வடிவேலா, எமக்கு 1000 ரூபா வேண்டும் என பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியமை குறிப்பிடதக்கது. http://www.virakesari.lk/article/12349

  10.  அப்துல் கலாமின் 85ஆவது பிறந்த தினம் -சொர்ணகுமார் சொரூபன் இந்திய முன்னாள் ஜனாதிபதி, மறைந்த டொக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 85ஆவது பிறந்த தின நிகழ்வு, இன்று சனிக்கிழமை (15) யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது. http://www.tamilmirror.lk/183988/-அப-த-ல-கல-ம-ன-ஆவத-ப-றந-த-த-னம-

    • 4 replies
    • 570 views
  11. யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிலைய பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார். இவர் சென்றகிழமை வாகனவிபத்து ஒன்றில் சிக்கி யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையின் 15 ஆம் திகதி இரவு மரணமடைந்தார். இவரது மனையிவியும் இவ் விபத்தில் காயமடைந்து கோமா நிலையில் உள்ளார். பல்லாயிரக்கணக்கான மாணவர்களை கற்பித்து மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். ஈழத்தில் அரசபதவிகளில் உயர் நிலை வகிக்கும் பலரும் புலம்பெயர் தேசத்தில் தலைநிமிர்ந்து நிற்பவர்களில் பலரும் இவரது மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இழப்பு யாழ். கல்விச் சமூகத்திற்கு பேரிழப்பாகும். http://thuliyam.com/?p=44882

    • 10 replies
    • 779 views
  12. இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையிலே என்னுடைய பார்வையிலே இது ஒரு இழுத்தடிப்புக்கான முன் னெடுப்பாகவே நான் பார்க்கின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கோட்டத்தில் ஐந்தாந்தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 74 மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம் பெற்றபோது முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இலங்கை வரலாற்றில் தொடர்ந்து தீர்வின்றித் தொடர்ந்து வருகின்ற ஒரு துரோகமாகும். இதுவரை காலமும் நடந்த பேச்சுவார்த்தைகள…

  13. புதிய அரசியல் யாப்பில் தமிழரின் அபிலாசைகள் தீர்க்கப்படாதுவிடின் அதிலிருந்து வெளியேறுவோம் -சுமந்திரன் தமிழ் மக்களது அபிலாசைகளை எய்தக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாவது சாத்தியமாகாது என்று அறிந்த மறு நாள் முதல் அரசியல் யாப்புச் சபையில் அங்கம் வகிக்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறு ப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே சும ந்திரன் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை குறிப்பிட்டார். புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலை மையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல…

  14. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பல பெண்கள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பல பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாக நாடளாவிய ரீதியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, நாமலிடம் ஏமாற்றப்பட்ட 3 பெண்கள் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் ஆராய்வதற்காக கண்டியில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல்களுக்கு பொலிஸார் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஹோட்டல்களில் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய நாமல் ராஜபக்ச, மாதமொன்றுக்கு 4 நாட்கள் பெண்களுடன் ஹோட்டல்களுக்கு வருவதாக தகவல் வழங்கியு…

  15. இலங்கையுடன் உயர்மட்ட தொடர்புகளைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இலங்கையுடன் உயர்மட்ட தொடர்புகளைப் பேண விரும்புவதாக சீனா அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இலங்கை மற்றும் சீனா தலைவர்கள் இந்த மாநாட்டிற்கு சமாந்திரமாக சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளனர். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கிற்கும் இடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆரோக்கியமானதும் சாதகமானதுமான வகையில் அமைந்துள்ளது எனவும் இரு தரப்பிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள தொடர்ந்தும் நடவ…

    • 2 replies
    • 203 views
  16. கடந்த சனிக்கிழமை இரவு கேளிக்கை விடுதிமீது சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹ்ராம் சிறிசேனவின் தலைமையில் தாக்குதல் நடாத்தப்பட்டமை, சிசிரிவி காணொளிமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில், மைத்திரியின் மகன் தஹ்ராம் மற்றும் அவரது நெருங்கிய உறவினரான டயஸ் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலரும் இரவுநேர கேளிக்கை விடுதிக்குள் நுழைவதற்குத் தடைசெய்யப்பட்டனர். உடனே அந்தக் குழு அங்கிருந்து சென்று மீண்டும் பொல்லுகளுடன் உள்நுழைந்து தாக்கத் தொடங்கினர். அதில் ஒருவர் அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரின் தலையில் பூச்சாடியால் தாக்கியுள்ளார். பின்னர் வெறிபிடித்த அந்தக் கூட்டம் அங்கிருந்த குவளைகள், தட்டுக்கள், கண்ணா…

  17. சர்­வ­தேச வர்த்­தக அபி­வி­ருத்தி அமைச்சின் அலு­வ­ல­கத்தில் நேற்­றைய தினம் நடை­பெற்ற தோட்டத் தொழி­லாளர் சம்­பள உயர்வு தொடர்­பி­லான கூட்டு ஒப்­பந்த பேச்­சு­வார்த்தையில் தொழிலாளர்களுக்கு 300 நாள் வேலை வழங்கும் விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. அமைச்­சர்­க­ளான மலிக் சம­ர­விக்­ரம, ஜோன் சென­வி­ரத்ன, நவீன் திஸா­நா­யக்க ஆகியோர் தலை­மையில் முத­லா­ளிமார் சம்­மே­ளனம் மற்றும் தொழிற்­சங்­கங்­க பிரதிநிதிகளின் பங்­கேற்­புடன் கொழும்பு வர்த்­தக மைய கட்­டிட தொகு­தியில் அமைந்­துள்ள சர்­வ­தேச வர்த்­தக அபி­வி­ருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இப்­பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. இதன்­போது கூட்டு ஒப்­பந்தத்தில் கைச்சாத்­திடும் தரப்­புக்­க­ளான இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ…

  18. சன்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது தானே கூறி, கேகாலை கரடுபான பிரதேசத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 51 வயதான நபரின் புகைப்படத்தையும், லசந்தவை கொலை செய்தவர் என கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி பொலிஸ் சித்திர கலைஞர்கள் வெளியிட்ட அடர்த்தியான மீசையுடன் கூடிய நபரின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. லசந்த விக்ரமதுங்கவின் சாரதி மற்றும் சாட்சியாளர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பொலிஸ் சித்திர கலைஞர்கள் இரண்டு வரைப்படங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர். பொலிஸார் வெளியிட்ட அடர்த…

  19. அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீதான தாக்குதல் மற்றும் இளைஞர் மீதான வாள் வெட்டுச் சம்பவத்துக்கு நீதி கோரி, அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தை நேற்று மக்கள் முற்றுகையிட்டனர்.இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. தாக்குதல் குறித்து நீதி பெற்றுத் தரப்படும் எனப் பொலிஸார் உறுதியளித்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது கடந்த 11 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆலயத்தின் அம்மன் சிலைகள் உடைக்கப்பட்டன. ஆலயத்தின் மூல அறையினுள் வைத்து இளைஞர் ஒருவர் வாளால் வெட்டப்பட்டார். தாக்குதலில் தலையில் காயமடைந்த இளைஞர் அநுராதபுரம் வைத்தியசாலையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்துடன…

  20. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக விசேட பிரிவு இலங்கை அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக விசேட பிரிவொன்றை ஏற்படுத்தவுள்ளது. மேலும் அரசாங்கம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை பயங்கரவாத பட்டியலிற்குள் சேர்ப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் அரசாங்கம் பயங்கரவாதம் என்பதற்கான பல புதிய வரைவிலக்கணங்களை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளது. அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச சட்டத்தின் நகல்வடிவில் இதனை காணமுடிகின்றது. இலங்கை…

  21. இலங்கை கடற்படையின் அவசர உதவியைப் பெற்ற அமெரிக்க ஏவுகணை நாசகாரி அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஹொப்பர் என்ற ஏவுகணை நாசகாரி கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழை ந்து, இலங்கை கடற்படையின் அவசர உதவியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க கடற்படையின் முன்னோடித் தளபதிகளில் ஒருவரான, அட்மிரல் கிரேஸ் ஹொப்பர் நினைவாக, யுஎஸ்எஸ் ஹொப்பர் என்று பெயரிடப்பட்ட, வழிகாட்டல் ஏவுகணை நாசகாரியே இலங்கை கடல் எல்லைக்குள் கடந்த மாதம் 30ஆம் திகதி நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ரொமஹோக், ஹார்பூன் ரக ஏவுகணைகளை ஏவக்கூடிய, நீருக்கடியில் செலுத்தப்படும் டோபிடோஸ் எனப்படும் ஏவுகணைகளை செலுத்தக் கூடிய வசதிகளைக் கொண்டது இந்…

  22. மீண்டும் வாள்வெட்டு கலாசாரம் : இரவுவேளையில் பதற்றத்தில் மக்கள் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக மீளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் இரவு யாழ்.குடாநாட்டி நகரப்பகுதிகளில் மூகமுடி அணித்த கும்பலொன்று வாள்வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டிருந்ததையடுத்து யாழ்.நகரில் பதற்றமான சுழல் ஏற்பட்டது. இந்நிலையில் இவ் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் யாழ்.நகரப் பகுதியான நாவலர் கலாச்சார மண்டபப்பகுதி இராசாவின் தோட்டச் சந்தி ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களுடன் கும்பலொன்ற…

  23. முக்கியஸ்தர்களை கைது செய்ய முன் ஆராய்வதற்காக உப குழு? (எம்.எப்.எம்.பஸீர்) அரசியல்வாதிகள்,முப்படை அதிகாரிகள் முன்னாள் உயர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரபுக்களை கைது செய்ய முன்னர் அது குறிந்து ஆராய பாராளுமன்ற உப குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்கான ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முன்மொழிவு அல்லது பத்திரம் ஒன்றினை முன்வைக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன. http://www.virakesari.lk/article/12422

  24. இலங்கையர்கள் 800 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை இலங்கையர்கள் 800 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களுக்கான இரட்டைபிரஜாவுரிமைக்கான சான்றிதழ் நாளை (17) வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரஜைகள் பிரிவின் பிரதி கட்டளையாளர் ஷாமிக கமகே தெரிவித்துள்ளார். பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியம், சுவி்ட்ஸர்லாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுவரை ஆயிரக்கனக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், கட்டம் கட்டமாக அவர்களுக்கான இரட்டை பிரஜாவுரிம…

  25. கள்வர்களை பாதுகாப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறவில்லை என தொழில் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மெய்யான படைவீரர்களை பாதுகாக்க வேண்டும் என்றே ஜனாதிபதி கூறியிருந்தார். கள்வர்களை பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறவில்லை. நாட்டின் அபிவிருத்திக்கு அரசியல் ஸ்திரதன்மை மிகவும் அவசியமாகின்றது. அரசியல் ஸ்திரத்தன்மையின் அடிப்படையிலேயே பொருளாதார சமூக ஸ்திரத்தன்மை கட்டியெழுப்பப்படும். போரின் பின்னர் எமது படையினர் சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கு ஜனாதிபதி இடமளிக்கவில்லை. நாட்டுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.