Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் மொரகஹாஹேன பிரதேசத்தில் புதிய பஸ் நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்படவிருந்தது. இவ்வாறான நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க சிலருடன் சென்று ரிபன்னை வெட்டி பஸ் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். மொரகஹாஹேன புதிய பஸ் நிலையம் இன்று முற்பகல் 9.30 அளவில் திறக்கப்படவிருந்தது. எனினும் அது 8.15 அளவில் திறந்து வைக்கப்பட்டது. பஸ் நிலையத்தை திறந்து வைத்து விட்டு அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய விதுர விக்ரமநாயக்க, ”மொரகஹாஹேன எனது சொந்த ஊர். இங்கு வந்து எவருக்கும் சண்டித்தனம் செய்ய முடியாது. இங்கு நாங்கள் தான் வேலை செய்வோம். அன்றும் நாங்களே வேலை செய்தோம். இன்…

  2. தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் தனது கூட்டணியை இயங்கவிடாமல் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் உறவு கொண்டிருப்பது அனுதாபம் அளிக்கும் விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று அவர் அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனநாயக கோட்பாடுகளுக்கு அமைவாகவும், அகிம்சையை கடைப்பிடித்து வந்த மிகவும் நம்பிக்கைக்குரிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை, விடுதலைப் புலிகளுடன் இணைந்து இயங்க விடாது இரா.சம்பந்தன் செய்துள்ளார். அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமை…

  3. மனித உரிமை, சிறுபான்மையினர் தொடர்பில் கூடுதல் கரிசனை வேண்டும்- அரசிடம் ரீட்டா இஷாக் நாடியா வலியுறுத்து மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென ஐ.நாவின் சிறுபான்மையினர் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை தெரிவி த்துள்ளார். நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அரசாங்கம் மதிப்பீட்டினை மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, குறிப்பாக சிறுபான்மையினரின் மதம் சார்ந்த விட யங்கள் மற்றும் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் அதிக அக்…

  4. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடான சட்டம் குறித்த உத்தேச வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடான சட்டம் குறித்த உத்தேச வரைவு அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் தலைமையிலான குழுவொன்றினால் இந்த உத்தேச சட்ட வரைவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கவும் மனித உரிமை நியமங்களை பின்பற்றவும் கூடிய வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவையில் சமர்ப்…

  5. வவுனியாவில் சிவசேனா அமைப்பு உருவானது! [Sunday 2016-10-09 16:00] வவுனியா மாவட்டத்தில் சிவசேனா என்ற புதிய அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்து மதத்தின் பாதுகாப்பு மற்றும் இந்து மக்களின் நலன்களில் கவனம் செல்லும் முகமாக இந்த அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இவ் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெருமளவான இந்து மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது இந்து மதத்தின் வளர்ச்சி, மத மாற்றங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும், இந்து மக்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் மத ரீதியான அளுகைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்றைய நிகழ்வில் கலந்துரையாட…

  6. கொடிகாமம் பிரதேத்தில் வைத்து கிராம அலுவலகரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தனின் கைக்கூலிகள் மூவருக்கு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ள 13 மாதகால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண் கிராம அலுவலகர் தனது சகோதரனுடன் பணிக்குச் செல்லும்போது இனம் தெரியாத நபர்கள் இடைமறித்து சகோதரனைத் தாக்கிவிட்டு குறித்த அலுவலகரை வாகனத்தில் கடத்திச் சென்றனர். கடத்தலில் ஈடுபட்ட வாகனம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன், மயக்க நிலையிலிருந்த குறித்த பெண் புதுக்குடியிருப்புப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வாகனத்திலிருந்து 5 பேரையும் சிறீலங்காக் காவல்துற…

  7. இந்தியாவிலிருந்து மின்சாரம் கொள்வனவு: கடலுக்கடியாக கொண்டுவரத் திட்டம் கடலுக்கடியிலான மின்வட (கேபிள்) திட்டத்தின் ஊடாக, இலங்கைக்கு மின்சார விநியோகத்தை வழங்க, இந்தியா தயாராக இருக்கின்றதென, அந்நாட்டு மின்சக்தி அமைச்சின் செயலாளர் பி.கே.புஜாரி தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டுத் தேவையை ஈடுசெய்யும் முகமாக , 500 மெகாவொட் மின்சாரத்தை இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மின்சார இணைப்பு வசதிகள் இல்லாமையால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது துணை - கடல் சக்தி இணைப்பு தொழிநுட்பத்தை பயன்படுத்துவது குறித்து, இந்திய மின்சக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட இந்…

  8. வடமாகாண மீன்பிடித்துறைக்கு ‘எட்கா’வால் ஆபத்து? -ரொமேஸ் மதுசங்க இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான பொருளாதார மற்றும் ஒத்துழைப்புக்கான (எட்கா) ஒப்பந்தம், இவ்வருட இறுதியில் கைச்சாத்திடப்படுமாயின், இந்திய மீனவர்களுக்கு, வருடத்தில் 85 நாட்கள், இலங்கையின் வடக்குக் கடற்பரப்பில், எவ்வித அனுமதியின்றியும் மீன்பிடிப்பதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்றுத் தெரிவித்த வடமாகாண கடற்றொழிலாளர்கள், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு, கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடக்கு ஐக்கிய மீனவர் சங்க சமாசத்தின் தலைவர் எஸ்.எமிதியாஸ் பிள்ளை, “தற்போது, வாரத்தில் மூன்று தினங்கள், வடமாகாணக் கடற்பரப்புக்கு வரும் இந்த மீனவர…

  9. சி.வியின் பாதுகாப்பு: அமைச்சிடமே முடிவு -வி.நிரோஷினி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில், பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும் என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில், முதலமைச்சரின் பாதுகாப்புத் தொடர்பான கேள்வியொன்று எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறைப் பதில் அமைச்சர் கருணாரத்ன பரணவிதான, “நாட்டு மக்களுடைய பாதுகாப்புக்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு, பாதுகாப்பு அமைச்சுக்கும் உள்ளது. அந்த வகையில், வட மாகாண முதலமைச்சர் ச…

  10.  CTA தொடர்பான தேசிய பாதுகாப்பு குறித்து துறைசார் மேற்பார்வை -வி. நிரோஷினி தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் (PTA) பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) சம்பந்தமான கொள்கை மற்றும் சட்ட வரைவுகளுக்கு, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையன்று, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ள நிலையில், குறித்த செயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை மற்றும் சட்ட வரைவுகள், தேசியப் பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைச் செயற்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கொள்கை மற்றும் சட்ட வரைவுகளின் அங்கிகாரத்துக்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், …

  11. மத்திய வங்கியின் இரகசிய தகவல்கள் கசிந்தமை குறித்து விசாரணை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மத்திய வங்கியின் தகவல்கள் கசிந்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோரியுள்ளார். மத்திய வங்கியின் முக்கியமான தகவல்கள் எவ்வாறு கசிந்தது யார் இவ்வாறு கசியவிட்டது என்பது குறித்து விரிவான அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. வங்கியின் தகவல்களை பாதுகாத்துக் கொள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுனர் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார். தகவல்கள் கசிந்த விவகாரம் …

    • 0 replies
    • 221 views
  12. இலங்கை அகதிகளின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவது கடினமாகவுள்ளது. தென்னிந்தியாவிலிருந்து தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வாறு திரும்பி வரும் மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான அவசியமான திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு நிதி காணப்படவில்லை என இந்தியாவின் அகதி முகாம் ஒன்றில் 10 ஆண்டுகளாகத் தங்கியிருந்து தற்போது இலங்கைக்குத் திரும்பியுள்ள 42 வயதான வெள்ளச்சாமி ஜேசுராஜா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து கூறியதாவது, இவ்வாண்டு இதுவரை 550 இற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்த …

  13. த.தே.கூ மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை 2016ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் பெற்றுத்தருவதாக கூறியே தமிழ் மக்களின் வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட போதும் அதற்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? என டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார். காலத்துக்குக் காலம், தேர்தலுக்குத் தேர்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலே காலாவதியாகிப் போயிருக்கின்றது. இந்த நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதாகக் கூறியும், வடக்கு மாகா…

    • 4 replies
    • 351 views
  14. நான் ஜனாதிபதியானது நாட்டை துண்டாடுவதற்கல்ல : ஜனாதிபதி சிலர் குற்றம்சாட்டுவது போன்று தான் ஜனாதிபதி பதவிக்கு வந்தது நாட்டை துண்டாடுவதற்கோ பிரிப்பதற்கோ, பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்தவோ அல்லது பௌத்த மதத்துக்குரிய இடத்தை அரசியலமைப்பிலிருந்து அகற்றுவதற்கோ அல்ல. மாறாக நாட்டின் சுதந்திரம் இறையாண்மை மற்றும் வரலாற்று மரபுரிமைகளை உயர்ந்த பட்சம் பாதுகாத்து சுதந்திர ஜனநாயக நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்காகவேயென ஜனாதிபதி தெரிவித்தார். வரலாற்றினால் தமக்கு அளிக்கப்பட்ட பல பொறுப்புகள் இருப்பதுடன் காலத்தின் தேவையாக அந்தப் பொறுப்புக்களை மனசாட்சிக்கு அமைய மக்களுக்காக நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டார். நேற்று ஹம்பாந்தோட்டை சர்வதேச…

  15. கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள நாடாளுமன்றத்தில் இனி ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக அறிவித்தபோது கைதட்டி ஆரவாரம் செய்த உறுப்பினர்கள். இந்தியாவில் ஹிந்தி மற்றும் இதர பிராந்திய மொழிகளுக்கிடையே மொழிப் போர் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தைத் தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாடப் போவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கனடா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் பட்ட தீர்மானத்துக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் (283) அமோக ஆதரவு அளித்தனர். ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அனைவரது கை தட்டல்களுக்கு நடுவே இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறை வேறியது. எம்-24 என்று பெயரிடப…

  16. இரவு விடுதி மோதலில் ஜனாதிபதியின் மகனுக்கு தொடர்பு ? மூடிமறைக்க அரசு பகீரத முயற்சி கொழும்பில் வார இறுதியில் இடம்பெற்ற இரவுவிடுதி மோதலில் ஜனாதிபதியின் மகன் தொடர்புபட்டிருப்பதை மறைப்பதற்காக இரகசிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டு ள்ளது. இதன் தொடர்ச்சியாக யூனியன்பிளேசில் உள்ள குறிப்பிட்ட இரவுவிடுதியின் நிர்வாகம் தனது பணியாளர்களிற்கு இறுக்கமான உத்தரவுகளை வழங்கி வாய்ப்பூட்டு போட்டுள்ளது. பொலிஸாரை தவிர வேறு எவருடனும் பேசக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்றிரவு இடம்பெற்ற சம்பவங்களை மூடிமறைப்பதற்கு ஏற்கனவே அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது,இதன் காரணமாக…

  17. இலங்கை தனது பொருளாதாரதிறனை அதிகரிப்பதற்காக, தனது உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக மிகவும் பாரதூரமான கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதுடன் வங்குரோத்து நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதுசர்வதேச நாணய நிதியத்தை கடனிற்காக நாடவேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. இலங்கை தற்போது செலுத்தவேண்டிய கடன் 64.9 பில்லியன் டொலர் என அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். அதில் 8 பில்லியன் டொலர்களை சீனாவிற்கு செலுத்தவேண்டிய நிலை காணப்படுகின்றது. நாட்டின் மொத்த தேசிய வருமானத்துடன் கடன் வீதத்தை ஒப்பிட்டால் அது 75 வீதமாக காணப்படுகின்றது. அரசாங்கத்தின் வருவாயில் 95.4 வீதம் கடனை செலுத்துவதற்காகவே செலவாகின்றது. கடன் நிலை என்பது தொடர்ந்து தாங்கமுடியாதவொன்று. ஆனால்,…

  18. வயதானவர்களை அச்சுறுத்தி திருடர்கள் கைவரிசை ; முரசுமோட்டையில் சம்பவம் (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சி முரசுமோட்டை பழையகமம் பகுதியில் உள்ள வீடொன்றில் முகத்தினை மறைத்துக்கட்டியவாறு வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த வயதான தம்பதியர்களை பொல்லுகளால் அடிப்போம் எனப்பயமுறுத்தி வீட்டிலிருந்த இருபதாயிரம் பணம் மற்றும் ஐந்தரைப் பவுன் நகைகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக சம்பவத்தில் பாதிக்ப்பட்ட வயதான பெண் தெரிவிக்கையில், அதிகாலை பன்னிரண்டு நாற்பது மணியளவில் நாய்கள் குறைத்ததாகவும் அதனை தான் வெளியில் வந்து பார்வையிட்டபோது திடீர் என கைகளில் பொல்லுகளுடன் நுழைந்த மூவர் தனது…

  19. விளம்பர படத்தில் காணாமல் போன மகள் : நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது : தாய் கதறல் (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றில் காணாமல் போன எனது மகள் உள்ளிட்ட இன்னும் நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் காணாமல் போயுள்ளனர். அவர்களது பெற்றோர்களும் பல இடங்களில் பிள்ளைகளை தேடி திறிகின்றனர். ஜனாதிபதியை சந்தித்து நான் எனது மகள் தொடர்பான தகவல்களை கூறிய சந்தர்ப்பத்தில் ஒரு மாதத்திற்குள் தீர்வை பெற்று தருவதாக உறுதியளித்தார். ஆனால் இது வரை தீர்வு கிடைக்கவில்லை என வவுனியாவைச் சேர்ந்த ஜெயவனிதா என்ற தாய் கண்ணீர்மல்க தெரிவித்தார். மருதானையில் அமைந்துள்ள சீ.எஸ்.ஆர். நிலையத்தில் இன்று புதன்கி…

  20. மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளருக்கு பிடியாணை (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம் சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்றைய தினம் இவ் வழக்கானது விசாரனணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் மேற்கண்டவாறு உத்தரவிட்டிருந்தார். மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளரை மன்றில் ஆஜர்படுத்துமாறு அவருக்கு பிடியாணை பிறப்பித்து கடந்த வழக்கு தவனையின் போது நீதிவான் உத்தரவிட்டிருந்தார். …

  21. சொத்துகளோடு எமது கலைகளையும் அழித்தவர்கள் படையினர் - அமைச்சர் சாடல் எமது பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் எமது சொத்துகளை மட்டும் அபகரிக்கவில்லை எமது கலைகளையும் இணைத்தே அழித்தனர். என்பது கடற்படை அதிகாரி கப்டன் பொயோகொடாவால் அண்மையில் எழுதப்பட்ட புத்தகமும் அதற்கு ஓர் சாட்சி என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற யாழ் முத்து கலைவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கல்வி அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழர் பிரதேசத்தில் நிலைகொண்டு…

  22. 7ஆம் நாளாக தொடரும் நடைபவனி மாங்குளத்தில் ஆரம்பமாகி புளியங்குளம் நோக்கி நகர்கிறது புற்று நோய்ச்சிகிச்சைப் பிரிவிற்கான நிதி சேர்க்கும் 7ஆம் நாள் நடைபவனி. இன்று ஏழாம் நாளாக மாத்தறை - கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்கு நிதி சேர்க்கும் நடை பவனியானது காலை 5.30 மணிக்கு மாங்குளம் விகாரையில் வழிபாடுகளுடன் மாங்குளத்திலிருந்து ஆரம்பமாகி புளியங்குளத்தை சென்றடையவுள்ளது. சுமார் 5 மில்லியன் டொலர்களை திரட்டும் நோக்கில், முதல் கட்டமாக கடந்த வியாழக்கிழமை காலை பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கத…

  23. கெப்பிட்டியாவ பிரதேசத்தில் மிகப் பழைமை வாய்ந்த சுரங்கப் பாதை கண்டு பிடிப்பு; 300 மீற்­றர்கள் தூரம் நடந்து சென்­ற­வர்கள் அதிக வெப்பம், சுவாசப் பிரச்­சி­னை­களால் தொடர்ந்தும் முன்­னேற முடி­யாமல் திரும்­பினர்: கண்டி யுகத்தின் ஹங்­கு­ராங்­கெத்த வரை செல்­வ­தற்­கான இர­க­சிய பாதை என சந்­தேகம் 2016-10-12 11:53:48 (ரெ.கிறிஷ்­ணகாந், வத்துகாம நிருபர்) கண்டி, கந்­த­ஹந்­திய, கெப்­பிட்­டி­யாவ பிர­தே­சத்தில் மிகப் பழை­மை­வாய்ந்த சுரங்கப் பாதை ஒன்று கண்­டு பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. கெப்­பிட்­டி­யாவ கிரா­மத்­துக்­கான நீர் வழங்கல் வேலைத்­ திட்­டத்­துக்­காக வாய்க்­காலை வெட்டிக் கொண்­டி­ருந்த போதே இந்தச் சுரங்கம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தே­வா­சிகள் தெரி…

  24. டயர்களை எரித்து கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் : சந்தாவை நிறுத்தவும் ஏற்பாடு : வடக்கு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு (க.கிஷாந்தன்) தமக்கு உடனடியாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குமாறும் தமக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்தும் ஹட்டன் எபோட்சிலி பிரதேச தொழிலாளர்கள் டயர்களை எரித்து கறுப்பு கொடி ஏந்தி இன்றுகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இத்தோட்ட தொழிலாளர்கள் அங்கவகிக்கும் மலையக கட்சிகள் அனைத்துக்கும், மாதாந்தம் சம்பளத்தில் சந்தாபணத்தினை தற்காலிகமாக அறவிட வேண்டாம் என தொழிலாளர்கள் தோட்ட அதிகாரியிடம் கையொப்பமிட்ட கடிதமொன்றினை வழங்கியுள்ளதாக போராட்டத்தில் …

  25. அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட கெஹலியவின் மகன் : 29 ஆயிரம் ரூபா அபராதம் 2016-10-12 10:16:14 (எம்.எப்.எம்.பஸீர், ரெ.கிறிஷ்­ணகாந்) மது போதையில் வாகனம் செலுத்தி, கறு­வாத்­தோட்டம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தாமரைத் தடாகம் அருகே மதில் ஒன்­றுடன் தான் பய­ணித்த காரை மோதச் செய்­த­மையின்மூலம் விபத்தை ஏற்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்பில் முன்னாள் ஊட­கத்­துறை அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்­லவின் மக­னான கிரிக்கெட் வீரர் ரமித் ரம்­புக்­வெல்­ல­வுக்கு 29,000 ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்­டது. கொழும்பு போக்­கு­வ­ரத்து நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ரங்க கலன்­சூ­ரிய முன்­னி­லையில் ஐந்து குற்­றச்­சாட்­டு­களின் கீழ் ரமித் ரம்­புக்­வெல்­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.