ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143423 topics in this forum
-
மக்கள் தமது கருத்தை வெளிப்படுத்துவது தெற்கில் இனவாதமாக சித்தரிக்கப்படுகிறது.முதல்வர் விக்கி மக்கள் தங்களுடைய அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவது இனவாதம் ஆகாது என வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வ ரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் குறை நிவர்த்தி நடமாடும் சேவை இன்று காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி, மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்புரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது நீண்டகாலமாகவே அதிகாரங்கள் மேலிருந்து கீழாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் தங்களு…
-
- 1 reply
- 383 views
-
-
மனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ கைது ! மனித உரிமைகள் தொடர்பாக நடக்க உள்ள மாநாடு ஒன்றுக்கு வெளிநாட்டுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற மனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ குற்ற புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/11952
-
- 0 replies
- 495 views
-
-
நியூசிலாந்து, இலங்கையில் உயர்ஸ்தானிகரகங்கள் நிறுவப்படும் ; ஜோன் கீ இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நியூசிலாந்திலும் இலங்கையிலும் உயர்ஸ்தானிகரகங்கள் நிறுவப்படுமென நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை நியூஸிலாந்து சென்றுள்ளார். இந்நிலையில் நியூஸிலாந்தின் ஆக்லாந்திலுள்ள அரச மாளிகையில் இன்று அவருக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பு நிகழ்வு நடைபெற்றதுடன் அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது. பேச்சுவார்த்தையையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் இணைந்…
-
- 0 replies
- 290 views
-
-
கிளிநொச்சியில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று அதிகாலை (01-10-2016) புகையிரதத்துடன் மோதுண்டு ஆறு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.அதிகாலை ஐந்து மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரத்துடன் கிளிநொச்சி பாரதிபுரம் 155 ஆம் கட்டைப் பகுதியில் காளி கோவிலுக்கு அருகில் புகையிரத பாதையில் இச்சம்பவம் இடம்பெற்று ள்ளது. இதில் முதலாம் குறுக்குத் தெரு பாரதிபுரத்தைச்சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இதற்கு முன்னரும் ஒரு தடவை விபத்து இட…
-
- 1 reply
- 251 views
-
-
திடீர் விபத்தால் நாமல் வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக காயமடைந்த நாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார். இன்றைய தினம் அவர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைப்பகுதியில் ஏற்பட்ட சிறு காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்க ளில் பரவி வருகின்றது. AddThis Sharing Buttons Share to FacebookShare to T…
-
- 0 replies
- 369 views
-
-
வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட அனுமதியோம்-ஞானசாரதேரர் வடக்கு எமக்கே உரியது இலங்கையில் 2500 வருட பழமையான இனம் சிங்கள இனமே அதனால் வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என பொதுபலசேனாவைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். வவுனியா நகரில் நேற்று பொதுபல சேனா ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகெதண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தமிழர்கள் இலங்கையை அல்லது வடக்கை சொந்தம் கொண்டாட முடியாது பெரும்பான்மை இனத்தனவரான சிங்களவர்களுக்கே வடக்கு சொந்தம். மேலும் வடக்கில் விகாரைகள் அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது அவை அனைத்தும் மு…
-
- 2 replies
- 330 views
-
-
டயர் எரித்து போராட்டம்: பொலிஸ் அதிகாரிக்கு தீ காயம் சம்பள உயர்வை வலியுறுத்தி பத்தனை மவுண்ட்வேர்ணன், திம்புள்ள ஆகிய தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள், பத்தனை சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, தொழிலாளர்கள் பிரதான வீதியில் டயர்களை எரிக்க முற்பட்டபோது, பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுதுடன் எரியூட்டப்பட்ட டயரை அணைக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரி தீ காயங்களுக்கு உள்ளானார். - See more at: http://www.tamilmirror.lk/182981/டயர-எர-த-த-ப-ர-ட-டம-ப-ல-ஸ-அத-க-ர-க-க-த-க-யம-#sthash.heRsgcsq.dpuf டயரை அணைக்க முயற்சி 01-10-2016 01:44 PM Comments - 0…
-
- 0 replies
- 349 views
-
-
சிறுவர் தின நிகழ்வுகள் உலக சிறுவர், முதியோர் தினத்தை முன்னிட்டு, நாட்டில், இன்று பல்வேறுப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. மலையகத்தில்: -எஸ்.கணேசன், திருகோணமலையில்: எஸ்.சசிக்குமார், ஏ.எம்.ஏ.பரீத் அம்பாறையில்: -எஸ்.எல். அப்துல் அஸீஸ், வி.சுகிர்தகுமார் மட்டக்களப்பில்: -எஸ். பாக்கியநாதன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன் - See more at: http://www.tamilmirror.lk/182965/ச-ற-வர…
-
- 0 replies
- 278 views
-
-
விக்கியின் கருத்துகளுக்கு அரசியல் ரீதியாக பதிலளியுங்கள் -அமைச்சர் மனோ வேண்டுகோள் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்கப்பட வேண்டும். விக்னேஸ்வரனின் கருத்து க்கள் பின்னால் சென்று தெற்கில் சிலர் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்.எனவே தெற்கில் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் கோரியுள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் கருத்துக்களினால் எவரேனும் அசௌகரியத்திற்கு உள்ளாகியிருந்தால் இனவாதத்தை தூண்டுவதனை விடுத்து, விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்க…
-
- 0 replies
- 251 views
-
-
தேசிய விளையாட்டுவிழாவில் வடக்கு முதல்வர் பங்குபற்றாமைக்கு வயிற்றுக் கோளாறு காரணமாம்-அமைச்சர் ஹரிசன் கண்டுபிடிப்பு வடக்கு முதலமைச்சர் தேசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்ளாமைக்கு வயிற்றுக் கோளாறு காரணமாக இருந்திருக்கலாம் என அமைச்சர் பி. ஹரிஸன் தெரிவித்தார். வடக்கு முதலமைச்சர் தேசிய விளையாட்டு விழாவைப் புறக்கணித்திருந்தார். இது அரசாங்கத்தைப் புறக்கணித்ததாக கொள்ள முடியும் அல்லவா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். வடக்கிலுள்ள மாணவர்கள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு இந்த விழாவுக்குச் செல்லக் கூடாது என முதலமைச்சர் …
-
- 1 reply
- 267 views
-
-
தமிழ் மக்கள் இராணுவத்துக்கோ, சிங்கள மக்களுக்கோ எதிரானவர்கள் அல்லர். அவர்களை அவ்வாறு பார்ப்பதற்கு தூண்டுபவர்கள் விக்னேஷ்வரன் போன்ற இனவாத அரசியல் பேசுபவர்களே என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார். விக்னேஷ்வரனுக்கு அரசியல் செய்யத் தெரியாது. பிரபாகரன் சென்ற வழியில் விக்னேஷ்வரனுக்கு நீண்ட தூரம் செல்ல முடியாது எனவும் சரத் பொன்சேகா மேலும் கூறினார் http://onlineuthayan.com/news/18350
-
- 0 replies
- 351 views
-
-
கோத்தபாய உட்பட எட்டு பேர் நீதிமன்றில் ஆஜர் அவன்கார்ட் விசாரணை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட எட்டு பேர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர். இதில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி மற்றும் கடற்படையின் முன்னாள் கட்டளைத் தளபதிகள் மூவர் உள்ளடங்குகின்றனர். http://www.virakesari.lk/article/11914
-
- 3 replies
- 465 views
-
-
மாங்குளத்தில் புத்தர்சிலை உடைப்பு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் விலகல் கனகராயன்குளம் மாங்குளம் பிரதேசத்தில் பௌத்த சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த .பௌத்த சிலை உடைப்பு வழக்கு விசாரணை களிலிருந்து பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் விலகிக் கொண்டுள்ளார். இந்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் விலகிக்கொண்டுள்ளார். பிரதம நீதியரசர் கே.ஸ்ரீப வன், நீதியரசர்களான புவனக்க அலுவிஹார மற்றும் கே.ரீ. கித்சிறி ஆகியோர் இந்த மனுவை விசாரணை செய்தனர்.வடமாகாண முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், வடமாகாண ஆளுனர், பௌத்த சாசன அமைச்சர…
-
- 0 replies
- 328 views
-
-
வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் மரணம் ரி.விரூஷன் வடமாகாண சபையின் பிரதி அவை தலைவரான அன்ரனி ஜெகநாதன் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் காலை முல்லைதீவு முள்ளியவளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு இருதய நோய் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவரான இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். http://www.virakesari.lk/article/11…
-
- 0 replies
- 359 views
-
-
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் வெள்ளிக்கிழமை (30) இரவு சகோதரர் உட்பட மூவர் மீது கும்பலொன்று மேற்கொண்ட வாள்வெட்டில், மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். இராசாவின் தோட்டப் பகுதியைச் சேர்ந்த சகோதரர் இருவர் உட்பட மூவரும் படுகாயமடைந்துள்ளார். ஸ்ரான்லி வீதியில் உள்ள கடையொன்றின் முன்னால் நின்று உரையாடிக்கொண்டிருந்த சமயம் மோட்டார் 3 சைக்கிளில் வந்த குழு இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/182956/சக-தரர-உட-பட-ம-வர-ம-த-வ-ள-வ-ட-ட-
-
- 0 replies
- 297 views
-
-
நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதும் எம் தமிழ் மக்களின் உரிமைப் போர் இன்னும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமாகாண அரசாங்க நிர்மாண நிர்மாணிகள் சங்கத்தின் கூட்டம் நேற்றுக் காலை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கில் பல அபிவிருத்தித்திட்டங்கள்இ கட்டட நிர்மாணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக …
-
- 0 replies
- 331 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலேயே அவர்கள் இன்று வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனால் நாட்டின் ஒழுக்கம் கெட்டுப்போயுள்ளதாகவும், அரசாங்கம் தமக்கு எதிரான அரசியல்வாதிகளை அவ்வப்போது கைதுசெய்து வருவதாகவும் குறறம் சுமத்தினார். நாட்டில் தற்போது காட்டுச் சட்டமே அமுலில் உள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடுவதால், அரசாங்கத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது. எதிர்க்கட்சியினரை திருடர்கள் எனக்கூறி வழக்குத் தொடர்ந்தாலும், இதுவரைக்கும் எந்தவொரு திருடரையும் பிடிக்கவில்லை. நல்லாட்சி அமைச்சர்கள் பட்டப்பகலில் கொள்ளையடிக்கும்போது அரசாங்கம் …
-
- 0 replies
- 254 views
-
-
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர்கள் இருவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர். லசந்த கொலை தொடர்பிலான தகவல்களை மூடிமறைத்தல், சாட்சியங்களை அழித்தல், விசாரணைகளை முன்னெடுக்காமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த இரண்டு காவல்துறை மா அதிபர்கள் மற்றும் ஒரு பிரதிக் காவல்துறை மா அதிபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த மூன்று முன்னாள் உயர் காவல்துறை அதிகாரிகளும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர். லசந்தவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்திய நபர்கள் தொடர்பில் குறிப்பிட்டு வைத்திருந்த இரகசிய கு…
-
- 0 replies
- 257 views
-
-
யாழில் நடக்கும் தேசிய விளையாட்டு விழா பற்றி மனோ மனம் திறக்கிறார். 1)ஒன்பது மாகாணங்களில் இருந்தும் விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்கேற்ற, இந்நிகழ்வில் நான் கலந்துக்கொள்வதாக இருக்கவில்லை. விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறியின் வலியுறுத்தல் காரணமாகவே கலந்துக்கொண்டேன்.2)ஆரம்ப வரவேற்பில், முதலில் தமிழ் பாரம்பரிய உடையில் தமிழ் பெண்கள் நடனமாடி அணிவகுத்து தமிழில் உரையாடி வரவேற்றார்கள். அதன் பிறகே கண்டிய நடனம் வந்தது. ஆரத்தி இருக்கவில்லை. ஆனால் அது எல்லா சந்தர்பங்களிலும் இடம்பெற வேண்டும் என்பதுமில்லை. கண்டிய நடனத்துடன் மட்டுமே வரவேற்பு நிகழ்த்தப்பட்டது என்பது உண்மைக்கு மாறான தகவலாகும். 3) வெளியிடப்பட்ட மலரில் தமிழ் இருந்தது, ஆனால் உரிய சம இடம் வழங்கப்படவில்லை. 4) நிகழ்சி முழு…
-
- 0 replies
- 322 views
-
-
விடுதலைப் புலிகளை தோற்கடிக்க சீன அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பினை மறந்துவிட முடியாது -மைத்ரி
-
- 0 replies
- 161 views
-
-
விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா வவுனியாவில் போராட்டம் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு நாளைய தினம் வவுனியாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளது. அண்மையில் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வாழும் சிறுபான்மை சிங்களவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படக் கூடாது எனவும், பௌத்த விஹாரைகள் அமைக்கக…
-
- 13 replies
- 971 views
-
-
யாழில் இந்தியத் தூதரகம் மறைமுகமாக தன் நாச வேலையை ஆரம்பித்துள்ளது அக்டோபர் மாதம் 9 ம் திகதி யாழ்ப்பாணம் 2016 யாழ் மண்ணில் சிறீலங்கா அரச தொலைகாட்சி வசந்தம் டிவி ( ITN) இலங்கை அரச வானொலி வசந்தம் FM ( ITN ) மற்றும் மகிந்த ராஜபக்சேவின் மகிந்த சிந்தனையில் உருவான ஒரே குரல் ஒரே தேசம் அரச தொலை தொடர்பு நிறுவனம் (SRILANKA TELECOM) ஆதரவில் தென்னிந்திய இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகன் ஹரி பாஸ்கர் மற்றும் மலையகத்தை பின்னணியாக கொண்ட ஐங்கரன் மீடியா நிறுவனத்திற்க்கு பணம் கொடுத்து பொருத்தமற்ற சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சியை இந்தியத் தூதரகம் மறைமுகமாக நடாத்த உள்ளனர் இந்நிகழ்வானது செப்டம்பர் 24 ம் திகதி மிகவும் வெற்றிகரமாக யாழில் இடம்பெற்ற எழுக தமிழ் மாபெரும் எழுச்சி பேரணிக்க…
-
- 4 replies
- 573 views
- 1 follower
-
-
யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சி! யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்திசேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வரும் 02 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ள ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சியாகும். காந்தி தேசத்திற்கு காந்திய மொழியில் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாட்டினை உணர்த்துவதற்காக தன்னையே உருக்கி பன்னிரு நாட்கள் ஒரு துளி நீரேனும் அருந்தாது உண்ணாநோன்பிருந்து வீரமரணமடைந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவானது பாரத தேசத்தின் தமிழினத்துரோகத்தின் சாட்சியாகவே காலமுள்ளவரை நினைவுகொள்ளப்படும். அந்த துரோக வ…
-
- 3 replies
- 438 views
-
-
கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு முழுமையான இழப்பீடு-அமைச்சர் சுவாமிநாதன் கிளிநொச்சி மாவட்டத்திற்கான வர்த்தக சந்தைக்கு நிரந்தர கட்டடமொன்றை அமைப்பதற்கு அடுத்த வருடம் நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்ற புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார். கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதி தீக்கிரையானதை அடுத்து, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும், வர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான உதவிகளை மேற்கொள்ளவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் வடமாகாண முதலமைச்சர் மற்றும் பிரதேச பிரதிநிதிகள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதற்கமைய இது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்ற…
-
- 2 replies
- 556 views
-
-
உவையளுக்கு சம்பந்தனும் பிரிவினைவாதி! விக்கியும் பிரிவினைவாதி!! வடக்கு மாகாண முதல்வர் இனவாதத்தை தூண்டிட்டார் எண்டு சிலபேர் சொல்லுறினம். அவையளிலை கணபேரைப் பாத்தால் வடகிழக்குக்கு சம்பந்தம் இல்லாத ஆக்கள். அதோட வடகிழக்கை இணைக்க விடமாட்டம் எண்டும் சொல்லுறினம். ஆரு. அவையள்தான். இஞ்ச பாருங்கோ. வடகிழக்கை இணைக்கிறதும் இணைக்காமல் விடுறதும் வடகிழக்கு மக்களின்டை உரிமை. அதை அவையள் தீர்மானிப்பினம். காலம் காலமாய் இணைஞ்ச தாயகத்திலை இணைஞ்சு வாழுற உரிமை மக்களுக்குரியது. இதை மக்கள்தான் தீர்மானிக்க வேணும். வேற ஒருத்தரும் இல்லை. இந்த நாட்டிலை ஒரு பிரச்சினை இருக்குது, இந்த நாட்டிலை தமிழ்சனங்கள் ஏன் ஆயுதம் …
-
- 0 replies
- 280 views
-