Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மஹிந்தவின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக, அவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மஹிந்த கதைத்தாரா? என்று, சில அமைச்சர்களிடம் விசாரணை நடத்தப்படுவதிலிருந்தே, தனக்கு அந்தச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், இன்று வெள்ளிக்கிழமை (30), அவன் காட் ஆயுத கப்பல் தொடர்பான வழக்கு இடம்பெற்றது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த போது, மஹிந்த ராஜபக்ஷவும் வந்திருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு…

  2. கைதடி நவீல்ட் பாடசாலையில் முதியோருக்கு விளையாட்டுபோட்டிகள் சர்வதேச முதியோர் தின விளையாட்டு விழா கைதடி நவீல்ட் பாடசாலை மைதானத்தில் நேற்று இடம்பெற்றது சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்துக்குட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.இப் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற முதியவர்கள் நேற்று நடைபெற்ற விளையாட்டு விழாவில் பங்குபற்றினர். இவ் விளையாட்டு விழாவில் பிரதமவிருந்தினராக சமூகசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நளாயினி இன்பராஜ், கௌரவ விருந்தினர்களாக யாழ் மாவட்ட முதியோர் சங்க செயலாளர் கைலைநாதன் கமலாதேவி , சமூகசேவை அலுவலர் செல்வம் , கைதடி முதியோர் இல்ல கிருபாகரன் …

  3. 42வது தேசிய விளையாட்டு விழா நாளை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. நாளை மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் 2ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. நாளை ஆரம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாகாண விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், விருந்தினர்களாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன், விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும…

  4. பேரூந்தில் மரக்குற்றி கடத்தல் ; மூவர் கைது (எஸ்.என்.நிபோஜன்) பேரூந்து ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளுடன் மூவர் இன்று அதிகாலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கிளிநொச்சி, முல்லைத்தீவு பொலிஸாருக்கு ரகசிய தகவான்று கிடைத்தது. இதையடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின்படி உதவிப்பொலிஸ் பரிசோதகர் இந்து பிரதீபன், லால் குமார, சிறி ஏக்கநாயக்க, சோமரட்ன, சியாம், சிவஐங்கரன் ஆகியோர் கொண்ட சிறப்புக் குழுவினர் சோதனை நட…

  5. தயா மாஸ்டரின் குற்றப்பத்திரிகையில் ‘குற்றம் பிழையாக சொல்லப்பட்டுள்ளது’ -க.அகரன் “தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரிடம் கையளிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையிலே சொல்லப்பட்டுள்ள குற்றம், 7ஈ என்ற குற்றமாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அது பிழை” என அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்ததாக தயா மாஸ்டர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா மேல் நீதிமன்றத்தில், தயா மாஸ்டருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையை அடுத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துரைத…

  6. நம்பிக்கையின் நாயகர்களாக தமிழர்களை பார்க்கும் சபாநாயகர் நம்பிக்கையின் நாயகர்களாக தமிழ் மக்களை தான்பார்ப்பதாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய 76 ஆவது பிறந்த தினத்தினை நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநரின் வாசஸ்தலத்தில் கொண்டாடினார். இதன்போது கரு ஜயசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நம்பிக்கையின் நாயகர்களாக தமிழ் மக்களை நான் பார்க்கின்றேன். அந்த வகையில் நாங்கள் எடுக்கும் பல்வேறு செயற்றிட்டங்களை தமிழ் மக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் பல்வேறு நல்லிணக்க புரிந்துணர்வுகளை எற்படுத்துகின்றது. குறிப்பாக அவ்வாறான நல்லிணக்க புரி…

  7.  வடக்கில் 2,291 டெங்கு நோயாளர்கள்: யாழில் உச்சம் -ரொமேஸ் மதுசங்க “2016ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், வடக்கிலிருந்து 2,291 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” என்று, வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதில் அதிகளவான நோயாளர்கள், யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களின் எண்ணிக்கை, 1,753ஆகப் பதிவாகியுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார். “அத்துடன், வவுனியாவில் 212, முல்லைத்தீவு மாவட்டத்தில் 150, மன்னாரில் 108, முல்லைத்தீவில் 68 பேர் என, டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” எனவும…

  8. வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தினை இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்திட்கு எவ்வாரு மாற்றுவது என்பது சம்மந்தமாக பார்போம். இந்த பதிவு இலங்கை போக்குவரத்து தினைக்களத்தினால் 4 ஆம் திகதி மார்ச் மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டக்கோவையை அடிப்படையாக கொண்டது. வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளல். இதன் கீழ் இலகு ரக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும். தேவையான ஆவணங்கள் : ஆகக் குறைந்தது அடுத்துவரும் 06 மாதங்களுக்கேனும் செல்லுபடியானதாக உள்ள வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரம். விண்ணப்பதாரர் வெளிநாட்டவராயின் ஆகக் குறைந்தது ஒரு மாதகாலப் பகுதிக்கான வீசா அனுமத…

  9. அரசியல் இருப்புக்காக இனவாதத்தையும் விஷங்களையும் கக்கிவரும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து, எதிர்காலத்தையும் நலன்களையும் வீணடிக்க வேண்டாம் என்று, மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். அமைச்சின் ஒதுக்கீட்டில், வடபிராந்திய தேசிய இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர் முனவ்வரின் தலைமையில், மன்னார் மாவட்ட இளைஞர் கூட்டுறவுச் சங்கத்தினால் (நிஸ்கோ), இளைஞர்களுக்கு சுயதொழில் திட்டங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மன்னார் நகரமண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்ற இந்நிகழ்வில், அவர் தொடர்ந்து கூறியதாவது, “அபி…

  10. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மற்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில் என்ன நடந்தது என்பதை அறிவது ஆர்வத்தைத் தூண்டியது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்காவின் உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் ஜோன் கெரிக்கு தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தத் தகவலை வாசித்த கெரி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான தற்போதைய நிலவரம் தொடர்பாக மைத்திரியிடம் வினவினார். ஜோன் கெரிக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் சிறிலங்காவின் தேசிய அரசாங்கம் தொடர்பாக வினவுமாறு நிஷா பிஸ்வால் கேட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் மைத்திரி சந்தேகம் கொண்டிருந்தால் அது நிய…

  11. திருகோணமலை கடற்படைத் தளத்தில் பாரிய கப்பல்களை நிறுத்துவதற்கு புதிய இறங்குதுறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. புதிய இறங்குதுறைமுகத்தைக் கட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார். இதற்கமைய, திருகோணமலை டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் 220மீற்றர் நீளமும் 20 மீற்றர் அகலமும் கொண்ட இறங்குதுறையை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய கப்பல்கள் தங்கும் வசதி ஏற்படுத்தப்படும். டொக்யார்ட் கடற்படைத் தளமானது சிறீலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகமாகச் செயற்படுகின்றது. இங்கு பாரிய கப்பல்கள் தரித்து நிற்பதற்கான இறங்குதுறையை…

  12. வவுனியா மாவட்டம் கொக்குவெளிக் கிராமத்தில் வசிக்கும் சிங்களவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு தமிழ் இளைஞர் குழுவொன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அக்கிராமத்து சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொக்குவெளிக் கிராமத்தைச் சேர்ந்த சின்னவன் என்ற நபரும் அவரது நண்பர்களும் இணைந்து தம்மை வெளியேறுமாறு கோரியுள்ளதாக அப்பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் தெரிவித்தனர். இதனால் அங்கே வசித்த 30 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் ஏ-9 வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் வெளியேறச் சொன்ன நபர்களைக் கைது செய்வதாக வழங்கிய வாக்குறுதியை அடுத்தே போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து, அப்பிரதேசத…

  13.  கொழும்பு துறைமுகத்தில் கார் மழை... பெருந்தொகையான கார்களுடன், இந்தியாவின் இனோரா பிராந்தியத்திலிருந்து, “ஸ்பிரிங் ஸ்கை” என்ற கப்பல், கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 1,539 கார்கள், பயன்பாட்டுக்கமைவாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கைத் துறைமுகங்கள் அதிகாரசபையில், ECTக்குச் சொந்தமான துறைமுகப் பகுதியில் நங்கூரமிட்டிருக்கும் 165 அடி நீளமுள்ள இந்தக் கப்பலே, இவ்வருடத்தில் கொழும்புத் துறைமுகத்துக்கு கார்களை ஏற்றிவந்த விசேட கப்பலாகும் என, இலங்கைத் துறைமுகங்கள் அதிகார சபையின் இயக்குநர் ஜயந்த பெரேரா தெரிவித்தார். - See more at: http://www…

  14. பிரதமர் நியூசிலாந்தை சென்றடைந்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியூசிலாந்தை சென்றடைந்துள்ளார். இலங்கைப் பிரதமர் ஒருவர், நியூசிலாந்திற்கு விஜயம் செய்வது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பயணத்தின், பிரதமரின் மனைவி, அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும் பயணமாகியுள்ளனர். http://www.virakesari.lk/article/11909

  15. தேசிய செயற்பாடுகளிலிருந்து வடக்கு மக்கள் புறக்கணிப்பு தேசிய செயற்பாடுகளிலிருந்தும் தேசிய நீரோட்டத்திலிருந்தும் வடக்கு மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தேசிய கலந்துரை யாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இதனாலேயே தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு 60 ஆண்டுகள் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். ஒதுக்கி வைத்தால் ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள் சேர்த்துக் கொண்டால் சேர்த்துக் கொள்ளுங்கள் என்ற செய்தியை வடபகுதி தமிழ் மக்கள் தற்போது வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார…

  16. “உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும்” வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் தெற்கின் இனவாதத்தை மேலும் பலபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களுக்கு உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உருப்பினரும் அமைச்சருமான நிலம் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைக்கவும் முதலமைச்சர்களின் அதிகாரங்கள் ஒரு எல்லைக்கும் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் நல்ல உதாரணமாகும். ஆகவே உடனடியாக அவர்களின் அதிகாரங்களை…

  17. கிளிநொச்சியில் டிரக்டர் சாரதியை சங்கிலியால் தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கிளிநொச்சியில் டிரக்டர் சாரதி ஒருவர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்படும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். ஏ9 வீதியில் 156 ஆம் மைல்கல் பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தக் காட்சிகளைப் பதிவு செய்ததாக சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்தவர் நியூஸ்பெஸ்ட்டிற்குக் கூறினார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, வாகன விபத்து தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யவே பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. வேன் ஒன்றை மோதிவிட்டு …

    • 15 replies
    • 1.2k views
  18. வடக்கு முதல்வர் தொடர்பில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசைக் கே்ட்கிறார் மகிந்த இனவாதம் பேசிய வடமாகாண முதலமைச்சர் சி.வி தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்காது ஏன்? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 57ஆவது நினைவுதின நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ‘மீண்டும் இந்த நாட்டில் விசித்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடக்கு கிழக்கினை இணைத்து இரண்டு மாகாண சபைகளையும் ஒன்றாக்கும் முயற்சிகள் இடம்பெறு கின்றன. அதற்காக அரசியலமைப்பினை மாற்றி அந்த இரண்டு ம…

  19. அதிகளவு இராணுவமுகாம்கள், புத்தர்சிலை அமைப்பிற்கெதிராக போராட வடக்கு மக்களுக்கு உரிமையுண்டு வடமாகாணத்தில் அளவுக்கு அதிகமாக இராணுவ முகாம்கள் அமைத்துள்ளதற்கும், பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு வட மாகாண முதலமைச்சர் மற்றும் அங்குள்ள மக்களுக்கு முழு உரிமையும் இருப்பதாக நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அவருக்கும் வட பகுதி மக்களுக்கும் உரிமை இருப்பதாகவும் இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய கலாநிதி விக்கிரமபாகு கரு…

  20. மேற்குலகில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள அகதிகள் பிரச்சினை-ஜனாதிபதி புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் பிரச்சினைகள் தற்போது மேற்குலக நாடுகளில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து ள்ளார். இலங்கையிலும் தாக்கம் செலுத்தும் அந்த மோசமான நிலையை தவிர்ப்பதற்காக புதிய திட் ங்களுடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார். குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம் ஆகியவற்றை கொழும்பின் புறநகரான பத்தரமுல்லையில் அமைந்துள்ள “சுகுறுபாய” புதிய கட்டடத்தில் நிறுவும் நிகழ்வில் இன்று பங்கேற்று உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பி…

  21. சரணடைந்த புலிப்போராளிகளின் பெயர்ப்பட்டியல் தொடர்பில் இராணுவம் முரண்பட்ட கருத்து இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்ப்பட்டியல் தொடர்பில் இராணுவம் தொடர்ந்தும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி நீதிமன்றில் எடுத்துரைத்துள்ளார். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் யுத்த வலயத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரி…

  22. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனந்தி சசிதரனிடம் விசாரணைக்கு உத்தரவு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் வியாழனன்று புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அனந்தி சசிதரன் (கோப்புப்படம்) விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவியான அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் காணாமல் போயுள்ளவர்கள் என கூறப்படுபவர்கள் தொடர்பில் பொய்யான ஆவணம் ஒன்றை …

  23. இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்தினர் மற்றும் எதிர் தரப்பு அரசியல்வாதிகளை தண்டிக்கும் செயற்திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணி இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது. முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக்க தேரர் இந்தக்குற்றச்சாட்டை ஊடகங்களிடம் முன்வைத்துள்ளார் நாட்டில் இரண்டு விதமான பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலாவது பொலிஸ் பயங்கரவாதம். இரண்டாவது நீதிமன்றமயப்படுத்திய பயங்கரவாதமாகும் என்று தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு பயங்கரவாத செயற்பாடுகளிலும் இராணுவத்தினர் மற்றும் எதிர் தரப்பு அரசியல்வாதிகள் தண்டனைக்கு உட்படு…

  24. மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலத்தடி நீர் வேகமாக மாசடைந்து வருவதால் இன்னும் 25 ஆண்டுகளில் மட்டக்களப்பின் பல பிரதேசங்களில் குடிநீரைப் பயன்படுத்தமுடியாத நிலை உருவாக்கும் ஆபத்து உருவாகியுள்ளதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மாமாங்கேஸ்வர மகா வித்தியாலயத்தில் நேற்று(புதன்கிழமை) குழாய் மூலமான குடிநீர்த் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், மட்டக்களப்பு வலயத்திற்குட்பட்ட மாமாங்கேஸ்வரர் வித்தியாலத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த குடிநீர்ப்பிரச்சனையை மட்டக்களப்பு மாவட்டத்தின் வர்த்தகர்கள் மூன்றுபேர் இணைந்து நிவர்த்த…

  25. யாழில் பெருமளவு தனியார் நிறுவனங்கள் சேமலாபநிதியை கட்டுவதில்லை-ஆய்வில் தகவல் யாழ்ப்பாணத்தில் அண்மையில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவ ர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் சேமலாப நிதியத்திற்கோ, தொழிலாளிகள் நம்பிக்கை நிதியத்திற்கோ எந்தப் பணமும் செலுத்துவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. 85 வீதமானவர்களுக்கு யாழ் பிராந்தியத்தில் ஆகக்குறைந்த ஊதியமாக 10,000 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதுகூட தெரியாமல் இருக்கின்றது என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. வட பிராந்தியத்தில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியாக பின்தள்ளப்பட்டு மோசமான சூழலில் தமது தொழிலகங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.