Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 62இலட்சம் வாக்குகள் பெற்ற ஜனாதிபதிக்கு ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெற்றவர் சவால்விடமுடியாது வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பேரணி செய்து அதனூடாக கோரிக்கை களை முன்வைப்பதற்கான உரிமை உள்ளபோதிலும் முதலமைச்சர் கேட்கும் அனைத்தை யும் வழங்கிவிட முடியாது என்று அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக பதவிவகிக்கும் ரஞ்சன ராமநாயக்க தெரிவித்துள்ளார். 62 இலட்சம் வாக்குகுளைப் பெற்று ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவிற்கு வெறும் ஒன்றரை இலட்சம் வாக்குகளைப் பெற்று வடமாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வ ரன் எவ்வாறு சவால் விடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக பதவிவகிக…

    • 4 replies
    • 512 views
  2. பலமான கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 8 இடங்கள் முன்னேறி 87ஆவது இடத்தை பெற்றுள்ளதாக 2016ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 39 நாடுகளுக்கு விசா பெற்றுக்கொள்ளாது இலங்கையர்கள் பயணிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கைக்கு 95ஆவது இடம் வழங்கப்பட்டிருந்தது. அதன் போதும் விசா இன்றி 39 நாடுகளுக்கு பயணிக்க கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலில் உலகின் பலமான கடவுச்சீட்டாக ஜேர்மன் கடவுச் சீட்டு பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண…

  3. முல்லை பாலிநகர் இராணுவமுகாமை அகற்றக்கோரி தீர்மானம் முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி இயல்பான கற்றல் நடவடிக்கைகளுக்கு வழி செய்யுமாறு மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்றைய அபிவிருத்திகுழுக்கூட்ட த்தில் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. பாசாலைக்கு முன்பாக இராணுவ முகாம் காணப்படுவதனால் மாணவர்கள் இயல்பான முறையில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலிநகர் மகா வித்தியாலயம், பாலிநகர் ஆரம்பவித்தியா லயம் ஆகியவற்றுக்கு முன்பாக இராண…

  4. தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு இன்று மாலையும் அஞ்சலி நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு இன்று மாலை 5.30 மணியள வில் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பி னர் விந்தன் கனகரட்னம் ஆகியோர் கலந்து கொண்டனர். பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர். விளக்கேற்றி தேவாரம் இசைத்து மலர்தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்கள். http://onlineuthayan.com/news/18129

  5. கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். ஐ.நாவில் தற்போது 33ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பலத்த எதிர்பார்ப்பினை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில், மிகவும் அமைதியான போக்கு ஐ.நா சபையின் உள்ளகத்தில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது. இவற்றுக்கு முழுமையான நீதி வெகு விரைவில் கிடைக்க வேண்டும் எனவும், இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என்றும் முழக்கமிட்டவாறு ஐ.நா முன்றலில் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். …

  6. தியாகத் தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள திலீபனின் நினைவுத் தூபியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பல அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள குறித்த நிகழ்வுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மாவை சேனாதிராஜா 9 மணியளவில் வருகைத் தந்துள்ளார். இதன்போது திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தி, தீபம் ஏற்றி வைத்து விட்டு 10 நிமிடங்களில் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார். http://www.tamilwin.com/st…

  7. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை வழங்குமாறு கோரி முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக இன்று காலை முதல் பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியினை வழி மறித்து பொகவந்தலாவ பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் முடிவடையும் தருவாயில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளத்தினை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கபடுகிறது. முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் 09 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தொழிலாளர்களுக்கான வேதனத்தினை நாள் ஒன்றுக்கு 700 ரூபா சம்பளமும் வாரத்திற்கு 03 நாள் வேலை த…

  8. “ இலங்கையின் ஜனநாயக, பொருளாதார மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா உதவும்” (ரொபட் அன்டனி) இலங்கையின் ஜனநாயக மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்யும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப் தெரிவித்தார். அமெரிக்க யுஎஸ்எய்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் கிங்கஸ்பரி ஹோட்டலில் நேற்று ஆரம்பமான அரச தனியார் ஒத்துழைப்பு தொடர்பாக ஆராயும் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரச தனியார் ஒத்துழைப்பு மாதிரியை ஏற்ற…

  9. திலீபனின் அஞ்சலி நிகழ்வுகளை மறைந்திருந்து படம்பிடித்தோர் மடக்கிப்பிடிப்பு!புகைப்படங்களும் அழிப்பு தியாக தீபம்திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நல்லூரில் உள்ள நினைவுத்தூபியில் இன்றையதினம் காலையிலும் மாலையிலும் அரசியற் பிரமுகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.இதன்போது காலைமுதல் அவர்களை இரகசியமானமுறையில் படம்பிடித்த இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு அவர்கள் எடுத்த படங்களும் அழிக்கப்பட்டன இன்று மாலை 6.00 மணியளவில் இளைஞர் ஒருவர் திலீபன் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியபோது சந்தேகத்துக்கிடமான முறையில் மூவர் அவரை புகைப்படமெடுத்தனர். புகைப்படம் எடுத்தவரை அங்கிருந்த இளைஞர் விசாரித்த…

  10. இழுவைபடகு தொழிலுக்கு அனுமதி தாருங்கள் அல்லது சவப்பெட்டிகளை தாருங்கள் - சமாச தலைவர் ஜோசப் பிரான்சிஸ் கிளிநொச்சி கடற்றொழிலாளர்களுக்கும் இழுவைப்படகு தொழில் மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது எங்களுக்கு சவப்பெட்டிகளை தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இணைத் தலைவர்களை நோக்கி கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர் ஜோசப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இன்று 26-09-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் உள்ளுர் அதாவது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் இழுவைப் ப…

  11. அபிவிருத்திக்காக காணிகளை உரிமையுடன் மத்திய அரசுக்கு வழங்கமுடியாது வட மாகாண முதலமைச்சர் அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை உரிமத்துடன் மத்திய அரசுக்கு வழங்க முடியாது. அது எதிர்காலத்தில் வேறு தேவைகளுக்கு பயன்படக் கூடும் என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். v கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று 26-09-2016 மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில…

  12. எமது எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் மக்கள் புரட்சி வெடிக்கும் : ஸ்ரீதரன் ( எஸ்.என்.நிபோஜன்) இலங்கையில் நீடித்த சமாதானம் நிலைபெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு இதனை அரசாங்கம் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த தவறினால், மக்கள் புரட்சி இந்த மண்ணில் வெடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்த லெப் கேணல் திலீபனின் 29 ஆவது ஆண்டு நிகழ்வு கடந்த ஏழுவருடங்களின் பின்பு கிளிநொச்சியில் நடைபெற்றது. ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்பு அகிம்சை வழியிலான போராளிகளை ந…

  13. தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி தியாக தீபம் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படும் நிலையில், நல்லூரில் திலீபனுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள்போராளிகள் மற்றும் பொதுமக்களென பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். முன்னதாக இன்று காலை நல்லூரின் வடக்குப்பக்கத்தில் திலீபன் உண்ணாவிரதமிருந்த இடத்தில் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.பின்னர் நல்லூர் பின்வீதியில் உள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சரவணபவன் மற்றும் வடக்கு மாகாணசபை அவைத்தலை…

  14. “எழுக தமிழ் ” பேரணியுடன் கூட்டமைப்பிற்கு தொடர்பில்லை-சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், தாம் அதில் கலந்துகொள்ளவில்லையெனவும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது. நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/news/18050

  15. யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கடும்போக்குவாதத்தை அனுமதிக்கின்றார் – ராஜன் ஹூல்:- யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடும்போக்குவாத்தை அனுமதிக்கின்றார் என பிரபல கல்வியியலாளர் கலாநிதி ராஜன் ஹூல் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ள அவர்இ மாணவர்கள் கடும்போக்குவாத போராட்டங்களை நடாத்த அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக எழுக தமிழ் போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதனை அல்லது மாணவர்கள் பங்கேற்பதனை துணை வேந்தர் தடுத்திருக்க வேண்டுமென அவர் கு…

  16. வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விக்­கி­னேஸ்­வரனுக்கு இனவாதத்தினை தூண்டுவதே அவசியமாக உள்ளதாக கோப் குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்­துன்­நெத்தி குற்றம் சுமத்­தியுள்ளார். நேற்று முன்தினம் (24) யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற எழுக தமிழ் பேர­ணியின் போது முன்­வைக்­கப்­பட்ட சமஷ்டி கோரிக்கை தொடர்பில் ஹந்­துன் ­நெத்தியிடம் வின­விய போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு முத­ல­மைச்சர் சீ.வி விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லா­னோ­ருக்கு தற்போது தேவை­யா­னது சமஷ்டி தீர்­வல்ல, அதற்கு மாறாக தெற்கில் இனவாதத்தை தூண்டுவதே அவ­சி­ய­மாக உள்­ளது என குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் உள்ள மக்களிடையே பிரி­வி­னை ­வ…

  17. இந்திய ரோலர்களின் வருகையே வடபகுதியில் கஞ்சா கடத்துவதற்கு முக்கிய காரணம் என முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ. மரியராசா குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் வடபகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் அச்சத்துடனேயே தொழில் செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கு மாகாண மீனவர்கள் அண்மைக்காலமாகச் சந்தித்துவரும் பிரச்சனைகள் தொடர்பான ஊடக சந்திப்பொன்று வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சந்திப்பில், வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தொழில் முறைகள், தென் பகுதி மீன…

    • 2 replies
    • 382 views
  18. பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் பயிலும் மாணவிகள் இரு குழுக்களுக்கிடையில் இன்று முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கங்களூடாக இடம்பெற்ற இந்த முறுகல் நிலைமை கல்லூரி மாணவிகளின் உள்ளகப் பிரச்சினையாக கருதப்படுவதாக கல்லூரியின் பீடாதிபதி திருமதி.ரமணி அபேநாயக தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கல்வியியற் கல்லூரியில் கற்றல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள இரண்டு இனங்களுக்கான மாணவிகள் நேற்று மாலை முதல் அவர்களின் இருப்பிடங்கள் மற்றும் மாணவிகளுக்கிடையிலான பகிடிவதைகள் தொடர்பிலேயே இந்த வாய்த்தர்க்கமும் முறுகல் நிலைமையும் ஏற்பட்டிருப்பதாக பீடாதிபதி தெரிவித்தார். இது …

  19. தற்போது வட பகுதியில் நடைபெறும் இந்து நிகழ்ச்சிகளில், யாழ் காவாலிகள் ஆட்டம் போட்டு அதனை களியாட்ட நிகழ்வுகளாக மாற்றி வருகிறார்கள். இந்து ஆலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற புனிதமான நிகழ்வுகளில், இரவு நிகழ்வாக இசைக்குழு போடப்பட்டால் இதற்கு என்று ஒரு களியாட்ட காவாலிகள் குழுவினர் மது போதையில் தங்களை மறந்து ஆலயம் தோறும் துள்ளிக் குதித்து நடனம் ஆடும் நிகழ்வாக இடம் பெற்று வருவதனால் இவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை என்கிறார்கள் மக்கள். இவர்களுக்கு அந்தத்த பகுதி பொலிசார்களும் இவர்களுக்கான தண்டனைகள் வழங்காமல் ஒத்தாசை வழங்குவதனால் இவர்களின் களியாட்டம் அதிகரித்து வருவதனால் ஆலயத்திற்கு வழிபட வரும் பக்தர்கள் இடைநடுவில் இவர்களின் அட்டகாசம் தாங்கமுடியாமல் வழிபாட்டினை நிறுத்த…

  20. இந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது – தேர்தல் ஆணையாளர் இந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால் தேர்தலை உரிய நேரத்தில் நடாத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Arti…

  21. மேஜர் கமால் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - சரத் பொன்சேகா ஓய்வு பெற்ற மேஜர் கமால் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையை கொழும்பில் ஒப்படைக்குமாறு தாம் உத்தரவிட்டிருந்ததாகவும் எனினும், இந்த அடையாள அட்டை குணரட்னவிடம் இருப்பது அண்மையிலேயே தமக்கு தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடையாள அட்டையை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் அவர் எவ்வாறு அடையாள அட்டையை வைத்திருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அ…

  22. இலங்கையின் அரசியல் தளத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வாத பிரதிவாதங்கள் தலைதூக்கியுள்ளன. 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது யார்,? வெற்றி பெறப் போவது யார்? என்ற கேள்வி அரசியல்வாதிகளுக்கு அப்பால் பிராந்திய நாடுகளின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாறான நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க கூடிய வாய்ப்புள்ள மூன்று பேரின் பெயர்கள் பரவலாக பேசப்பட்டுள்ள வருகின்றன. அந்த மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் …

  23. விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றிற்கு பரிந்துரை தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Eleanor Sharpston பரிந்துரை செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கான உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் அமைப்பினை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஆலோசகரின் இந்த பரிந்துரை கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில்லை. எவ்வாறெனினும், மிக நீண்ட காலமாக ஐரோப்பிய நீதிமன்றங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகியன தம்மை பயங்கரவாத பட…

  24. 20இலட்சத்தை திரட்டி இராணுவ அதிகாரியை காப்பாற்றிய கூட்டு எதிர்க்கட்சி விடுதலைப் புலி உறுப்பினரைச் சுட்டுக் கொன்ற இராணுவ மேஜர் விமல் விக்கிரமவை சிறைத்தண்டனையில் இருந்து காப்பாற்றத் தேவையான 20 இலட்சம் ரூபாவை கூட்டு எதிர்க்கட்சியினர் திரட்டியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் தப்பிச் செல்ல முயற்சித்த போது சுட்டுக்கொலை செய்தமைக்காக அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடாக 20 லட்சம் வழங்குமாறு ஓய்வு பெற்ற மேஜர் விமல் விக்ரமகேவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. புலி உறுப்பினரை சுட்டுக் கொன்றதற்காக ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் குடும்ப உறுப்பினர்களுக்கு 20 லட்சம் ரூபா நட்டஈடும் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்…

  25. யாழ்.பல்கலையிலும் திலீபனின் நினைவுதினம் அனுஷ்டிப்பு யாழ். பல்கலைக்கழகத்திலும் தியாகி திலீபனின் 29ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு அருகில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் திலீபனின் படம் வைக்கப்பட்டு மாணவர்களால் அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக சூழலில் தீபமேற்றியும் மெழுகுதிரி ஏற்றியும் நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது http://onlineuthayan.com/news/18117

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.