Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர் தமிழ் அரசியல் கைதிகள் அநுராதபுர சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதுசெய்து அடைத்து வைக்கப்பட்டுள்ள 25 ற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளனர். http://www.virakesari.lk/article/11580

  2. வடக்கில் பல்வேறு வகையான தொழில்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமக்கு அபிவிருத்தி அவசியம். ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகள் எதுவும் விவசாயிகளைக் கூலித்தொழிலாளிகளாக மாற்றிவிடக் கூடாது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து விவசாய உள்ளீடுகளை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (20.09.2016) திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. ரூபாய் 5 மில்லியன் பெறுமதியான விவசாய உள்ளீடுகள் வழங்கி வைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்…

  3. உரிமைக்காக குரல் கொடுக்க 24ஆம் திகதி எழுக தமிழ் பேரணியில் இணையுங்கள்! சுரேஷ் பிரேமச்சந்திரன் உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு எழுக தமிழ் பேரணியை வெற்றி பெறச்செய்வோம் என்று முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் 'எழுக தமிழ்' பேரணி தொடர்பாக, அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாள் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, எமது உரிமைகளை நிலைநாட…

  4.  'நீர்க்காகம்' -பதுர்தீன் சியானா இலங்கை இராணுவத்தினரால் 7ஆவது தடவையாக நடத்தப்பட்டு வருகின்ற 'நீர்க்காகம்' என்ற விசேட தாக்குதல் பயிற்சி நேற்றுச் செவ்வாய்க்கிழமை புல்மோட்டை, அரிசி மலைப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுடன் நிறைவடைந்தது. கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகிய இப்பயிற்சி கொக்கிளாய் பிரதேசத்தில் ஆரம்பமாகியிருந்தது. இதில் 2,500 காலாட் படையினரும் 638 கடற்படையினரும் 506 விமானப் படையினரும் கலந்துகொண்டனர். அத்துடன் பங்களாதேஷ், சீனா, இந்தியா, சூடான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த படைவீரர்களும் கலந்துகொண்டனர். …

  5. அவுஸ்திரேலிய பிரதமர் ஜனாதிபதியை மைத்திரியை சந்தித்தார் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்குமிடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார். இதேவேளை, இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா…

  6. அரசாங்கத்தின் சூழ்ச்சியை தடுத்துநிறுத்த தமிழ் அரசியல்வாதிகளை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை! வவுனியா வடக்குப் பிரதேச சபையினை முழுமையாக சிங்கள மயமாக்கும் சூழ்ச்சியினை தடுத்து நிறுத்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபையினர் அனைவரும் உடன் ஆவன செய்ய வேண்டும் என பிரதேச மக்கள் ஓர் அவசர கோரிக்கையினை கிராம அபிவிருத்திச் சங்கங்கள் விடுக்கின்றனர். இது குறித்து பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கையில் , வவுனியா வடக்கு பிரதேச சபைப் பிரிவில் தற்போது சுமார் 4500 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஒரு சிங்கள மக்களும் கிடையாது. இதேபோல் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தற்போதுவரை 14 உறுப்பினர்கள் தேர்வாகின்றனர். இதன் பிரகாரம் இறுதியாக 2011ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி…

    • 2 replies
    • 396 views
  7. பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நட்ட ஈடு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம் (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சி பொது சந்தை கடந்த வெள்ளிக்கிழமை தீ விபத்தினால் முற்றுமுழுதாக சேதமடைந்தனால் வர்த்தகர்களின் நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவரச உதவிகோரிய கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் குறித்த கடிதத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட முறை மிக மோசமானதாவும் நாளாந்த சீவியத்திற்கான அவர்களின் எதிர்பார்ப்பு பரிதாபத்திற்குரியதாவும் மாறியுள்ளது. எமது மாவட்டத்தில் நிலவுகின்ற அனர்த்த முகாமைத்துவதிற்கான வளக் குறைபாடுகள் மற்றும் தீயணைப்பு படையின் சேவையினை பெறமுடியாது உள்ளமை என்பவற்றால…

  8. 'இரந்துண்ணும் ஏதிலிகளாக மாற்றப்பட்டுள்ளனர்' 'முன்னைய அரசியல் தலைமைகள், தமது அரசியல் சுயலாபங்களுக்கும் தமது நாடாளுமன்ற இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், அப்பாவிச் சிங்கள மக்களை பிழையான வழிகளில் நெறிப்படுத்தி, அவர்களிடையே பொய்ப்பிரசாரங்களையும்; இனவாதத்தைத் தூண்டக்கூடிய பிரசாரங்களையும் முடுக்கிவிட்டமையால் தான், இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின' என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்றுத் திங்கட்கிழமை (19) கூறினார். 'இந்த நாட்டில் ஏற்பட்ட நீண்டகால யுத்தம், இங்கிருக்கும் எமது அனைத்து இருப்புக்கள், கல்வி நடவடிக்கைகள், பொருளாதாரம், பண்பாடு, அடிப்படை உரிமைகள் அனைத்தையும…

  9. யாழ் கலாசார நடுவண் நிலைய கட்டட பணிகள் ஆரம்பம் யாழ்ப்பாணம் கலாசார நடுவண் நிலையத்திற்கான கட்டட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக புல்லு க்குளம் மற்றும் யாழ் பொதுநூலகத்திற்கும் இடைப்பட்ட வைத்தியலிங்கம் வீதி நிரந்தரமாக மூடப்பட்டது. எதிர்வரும் காலங்க ளில் அவ் வீதி நடைபாதையாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசினுடைய நிதி உதவியில் யாழ் கலாசார நடுவண் நிலையம் யாழ் பொது நூலகத்திற்கு அருகில் அமைக்கப்படவுள்ளது. இலங்கை மதிப்பில் 1.7 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் கடந்த மாதமே யாழ்.மாநகர சபையினால் விடுக்கப்பட்டுள்ளது. கட்டட வேலையாட்கள் தங்குவதற்குரிய கூடாரங்க…

  10. புலி ஆதரவாளர்ளுக்கு அரசாங்கம் செலவிடுகின்றது – விமல் வீரவன்ச தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்காக அரசாங்கம் செலவு செய்வதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பினது பத்து உறுப்பினர்கள் அமெரிக்காவின் நியூயோர்க்கில் விடுமுறையை கழித்து வருகின்றனர் எனவும் இந்த பத்து உறுப்பினர்களும் அமெரிக்காவில் விடுமுறையை கழிப்பதற்கான செலவுகளை அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் பொறுப்பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். வொஸிங்டனின் ஹில்டன் ஹோட்டலில் இந்த பத்து உறுப்பினர்களும் தங்கியிருப்பதாகவும் இந்த ஹோட்டல் செலவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து ச…

    • 2 replies
    • 529 views
  11. வட மாகாண மக்கள் தமது பிரச்சினைகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் வட மாகாணத்தில் வசிக்கும் மக்கள் தமது பிரச்சினைகளை தாய்மொழியில் தெரிவிப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த தொலைபேசி அழைப்புக்களை கையாள்வதற்கான காரியாலயம் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வட மாகாண மக்கள் 0766226363 அல்லது 076 6224949 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தமது தாய்மொழியில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என பொலிஸ் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அந்த இலக்கங்கள் 0766226363 அல்லது 076 6224949 சமாதானம்…

  12. அவுஸ்ரேலியாவில் நடத்தப்படும் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பில்,பிறந்த நாடு என்ற கேள்விக்கு அளிக்கப்பட்டிருந்த தமிழீழம் என்ற தெரிவு விடை, சிறிலங்கா தூதரகத்தின் அழுத்தத்தின் பேரிலேயே நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இணைத்தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பிறந்த நாடு என்ற கேள்விக்கான பதில்களில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. அதில் தமிழீழமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனால் அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் தமிழீழம் என்று தமது பிறந்த இடத்தை குறிப்பிடத் தொடங்கினர். இதையடுத்து, கடந்த 6ஆம் ,7ஆம் நாள்களில், கன்பராவில் உள்ள சிறி…

  13. நல்லாட்சி அரசாங்கத்திற்குள் புலிகள் வட - கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை : அஸ்வர் சூளுரை தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது போன்று வடக்கையும் கிழக்கையும் இணைக்க கிழக்கு முஸ்லிம்கள் இடமளிக்க மாட்டார்கள் என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், அரசாங்கத்திற்குள் புலிகள் உள்ளனர் அவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன ? எனவும் கேள்வி எழுப்பினார். பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஏ.எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/artic…

  14. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் மனோ திடம் வலுவிழந்துள்ளது – கமால் குணரட்ன இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் மனோ திடம் வலுவிழந்துள்ளதாக ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் சிலர் நடத்தப்பட்ட விதம் ஒட்டுமொத்த புலனாய்வுப் பிரிவினரையும் நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு குறுகிய காலத்தில் சரி செய்து விட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவப் புலனாய்வு பிரிவில் பொருத்தமற்றவர்கள் கடமையாற்றியிருந்தனர் என தெரிவித்துள்ள அவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினை…

  15. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகள் இனம் காணக்கூடிய நிலையில் விசாரணை அறிக்கை புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் குற்றவாளிகள் ,இனம் காணப்பட கூடிய நிலையில் குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை உள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளபப்ட்டது. அதன் போது குறித்த வழக்கில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள 12 பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் போது, வழக்…

  16. சிறைக்கூண்டுகளுக்கு புதிய காவலாளி -யொஹான் பெரேரா சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவங்கள் மற்றும் வேறு சில சம்பவங்களையடுத்து, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சி.சி.டி.வி கமெரா பொருத்தப்படவுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைப்பு, நேற்றுத் திங்கட்கிழமை (19) அறிவித்துள்ளது. இவ்வாறு அனைத்து சிறைச்சாலைகளிலும் சி.சி.டி.வி கமெரா பொருத்துவதன் மூலம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நடவடிக்கை குறித்து பொலிஸாரால் அவதானமாக இருக்க முடியும் என்று குறித்த அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இவை சிறைக்கூண்டுக்குள்ளேய…

  17. தமிழ்த் தேசியப் பற்றாளர் செல்வராஜாவுக்கு அஞ்சலி சுதேசத்திலும் தமிழ்த் தேசியத்திலும் அசையாத பற்றுறுதி கொண்டு பணியாற்றிய தமிழ்த் தேசியப் பற்றாளர், மனிதநேயர் செல்லத்துரை செல்வராஜாவின் அஞ்சலிக் கூட்டமும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அளவெட்டி மகாஜன சபை சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலிக் கூட்டத்தில் செல்வராஜாவின் உறவினர்கள், அளவெட்டியிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். ஈழத்தமிழ் மக்களில் அக்கறைகொண்டு செயற்பட்ட செல்லத்துரை செல்வராஜா கடந்த 11 ஆம் திகதி லண்டனில் காலமானார். இவர் லண்ட…

  18. முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்படவே இல்லை-பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவிப்பு முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி எவையும் ஏற்றப்படவில்லை என முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்ட போது, புனர்வாழ்வு மையத்தின் பொறுப்பாளராக தான் பதவி வகித்ததாகவும், அவர்களுக்கு எந்தவிதமான விஷ ஊசியும் ஏற்றப்படவில்லை என்பதை உறுதியாகத் கூறுவதாக சுசந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை திரியாய் அரிசி மலையில், முப்படைகளின் கூட்டுப் பயிற்சியான ‘நீர்க்காகம்’ பயிற்சி இன்று காலை இடம்பெற்ற போது, இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் புனர்வாழ்வு…

  19. போதைப் பொருள் விழிப்புணர்விற்கு யாழில் இப்படியும் சுவரொட்டிகள் மது சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் யாழ்ப்பாணத்தில் தற்பொழுது அனைவரின் பார்வையிலும் தென்படக் கூடிய வேடிக்கையான சுவரொட்டி ஓன்று அனைவரின் கவனத்தினையும் பெற்றுள்ளது. மேற்படி சுவரொட்டியானது கஸ்தூரியார் வீதி, பெருமாள் கோயில் வீதி, ஸ்ரான்லி வீதி ஆகிய வீதிகளின் சுவர்களில் காணக் கூடியதாகவுள்ளது. http://onlineuthayan.com/news/17860

  20. தென்மராட்சி கேரதீவில் அமைக்கப்படவிருக்கும் உப்பளத்தினை தடுத்துநிறுத்துமாறு தென்மராட்சி மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடாத்தியுள்ளனர். இன்று அதிகாலை தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இம்மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேரதீவு அறுகுவெளியில் உப்பளம் அமைப்பதால் மீனவர்களின் தொழில் பாதிப்படையும் எனவும், இதனால் 1000 வரையிலான மீனவ குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேலும், இந்த இடத்தில் உப்பளம் உருவாக்கப்பட்டால், அண்மையில் உள்ள விவசாய நிலங்களும் உவர்நிலமாக மாறும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு, பிரதேச ஒருங்கிணைப்புக்…

  21. பள்ளிமுனைப் பிரதேசம் தமிழக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கேந்திர மையமாக அமைந்துள்ளதால் அக்காணிகளை மக்களிடம் கையளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இலங்கைக்கு போதைப்பொருள் தருவிக்கும் முக்கிய கேந்திர நிலையங்களுள் பள்ளிமுனையும் ஒன்றாகக் காணப்படுகின்றது. பள்ளிமுனைப் பிரதேசத்தில் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். பள்ளிமுனைப் பிரதேசம் தமிழக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முக்கிய கேந்திரமையம் என கடற்படையினர் அடையாளம் க…

  22.  '27,603 மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகினர்' 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியுள்ள நிலையில், 27,603 மாணவர்கள், இவ்வருடம், பல்கலைக்கழகத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட இது 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/182254/-ம-ணவர-கள-பல-கல-க-கழகத-த-க-க-த-த-ர-வ-க-னர-#sthash.vFY386RG.dpuf

  23. யாழ்.திருநெல்வேலி கலாசாலை வீதியில் ரவுடிகள் நாள்தோறும் அட்டகாசம்-கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த இரு தினங்களாக இரு குழுக்களுக்கிடையே மோதல்களும் இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது பற்றி அவர்கள் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலி கலாசாலைவீதி பாரதி விளையாட்டு மைதானத்தில் ஓன்று கூடும் இளைஞர்களால் பாரிய தொல்லை கள் ஏற்பட்டு வருகின்றது. ஒரு பெண்பிள்ளை கூட அவ்வீதியால் தனியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இரவில் ஒன்று கூடும் இளைஞர்கள் மது பாவனைகளிலும் போதைவஸ்து பாவனைகளிலும் ஈடுபட்டு வ…

  24. கிளின்டன் பூகோள அமையத்தின் வருடாந்த மாநாட்டின் விசேட அழைப்பாளராக ஜனாதிபதி நியூயோர்க் Sheraton New York Times Square ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற கிளின்டன் பூகோள அமையத்தின் 2016 வருடாந்த மாநாட்டின் விசேட அழைப்பாளராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டார். 'சமநிலையைக் கடந்து நிலையான அபிவிருத்திக்காக பெண்களுடைய வலுவைப் பாதுகாத்தல்' என்பதை இவ்வருடத்தின் பிரதான தொனிப்பொருளாக கிளின்டன் பூகோள அமையம் கொண்டுள்ளது. 12 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். கிளின்டன் மன்றத்தின் உப தலைவர் செல்ஸியா கிளின்டன் இக்கூட்டத்தின் ஆரம்ப உரையினை நிகழ்த்தினார். உலகலாவிய ஒற்றுமையினை உறுதிப்படுத்துவதற்கு…

  25. போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க யாழ்.குடாவைச்சுற்றியுள்ள கடலில் தீவிர ரோந்து போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர் தொடர்ச்சியாக நடவ டிக்கைகளை மேற்கொண்டுவருவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே கடற்படை அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.