ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம். தற்போது இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்தக் காணிகளிலேயே அந்த 1000 ஏக்கரும் அடங்கியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அத்துடன் வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், இராணுவத்தினரிடமிருந்த 500 ஏக்கர் காணிகளை தாம் விடுவிக்குமாறு கோரியதற்கிணங்கவே இராணுவத்தினர் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் மக்களின் மீள்குடி…
-
- 6 replies
- 546 views
-
-
தேசத்துரோகியாக நான் செயற்படப்போவதில்லை (எம்.சி.நஜிமுதீன்) நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளோம். அவை தேசத்துரோக செயல்கள் அல்ல. நான் தேசத்துராகியாக ஒருபோதும் செயற்படப்பேவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்தார். தனது தேர்தல் வெற்றிக்காக விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்தவர் தேசத்துரோகியா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்தார். கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், …
-
- 6 replies
- 671 views
-
-
அண்மையில் மலேசியாவில் சிறீலங்காத் தூதுவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இத்தாக்குதல் நடாத்தப்பட்டதற்கான காரணங்கள் பற்றி மலேசிய துணைப் பொதுச் செயலாளர் இராமசாமியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அண்மையில் சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பயணம் செய்திருந்தார். சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மலேசிய வாழ் தமிழ் மக்களால் 500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் காவல்துறையில் பதியப்பட்டுள்ளதால் ஏற்பாட்டாளர்களை மகிந்த ராஜபக்ஷவை மலேசியாவுக்கு அழைக்கவேண்டாமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மலேசிய அரசாங்கமோ தமிழ்…
-
- 2 replies
- 557 views
-
-
மீன்பிடிமூலம் நாட்டை முன்னேற்ற மயிலிட்டிக்கு விடுங்கள் -இராணுவத்திடம் கோரிக்கை மூதாதையர் சொல்லித் தந்த முறையில் நாம் இப்போதும் மீன் பிடிக்கத் தயாராக இருக்கி ன்றோம்.எங்கள் மயிலிட்டித் துறைமுகத்தை முதலில் விடுங்கள். நாம் மயிலிட்டிக்குச் செல்வதற்காகக் கேட்டோமா அல்லது மீன்பிடியில் நாட்டை உயர்த்துவதற்குக் கேட்டோமா என்பது பின்னர் உங்களுக்குப் புரியும். இவ்வாறு மயிலிட்டி மீள்குடி யேற்றக் குழுவின் தலைவரும் வலி. வடக்குமீள்குடியேற்றப் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவருமான அ.குண பாலசிங்கம்தெரிவித்தார். மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்குமாறு கோரும் தற்போதைய தலைமுறையினருக்கு ஆரம்பகால மீன்பிடி முறைகள் தெரியாது என்றும், மயிலிட்டியை விடுவிப…
-
- 0 replies
- 287 views
-
-
தாயும் மகளும் அடித்துக் கொலை : ஏறாவூரில் அதிர்ச்சி சம்பவம் மட்டக்களப்பு - ஏறாவூர் முகாந்திரம் வீதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 56 வயதுடைய பெண்ணும் அவரது மகளும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். நூறுமுகம்மது ஹ{சைரா மற்றும் அவரது திருமணமான மகளான 30 வயதுடைய முகம்மது யூசுப் ஜெனீரா பாணு ஆகியோரே கொல்லப்பட்டவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளது. பாரிய ஆயுதம் ஒன்றினால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகி;க்கின்றனர். கொலையாளிகள் வீட்டின் சமயலறையின் கூரை ஓடுகளைக் கழற்றி உள்ளே நுழைந்து வீட்டிலிருந்தவர்களை அடி…
-
- 0 replies
- 480 views
-
-
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததும், இயற்கைத் துறைமுகத்தைக் கொண்டதுமான தமிழர் தாயகப் பிரதேசமான திருகோணமலை துறைமுக நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலையை திருகோணமலை வரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த நெடுஞ்சாலையானது தம்புள்ள, ஹபரண ஊடாகவும், மத்திய அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து, கிளையாக, இந்த வடக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த நெடுஞ்சாலையானது ஹபரணை வரை சீன அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை, திருகோணமலை வரை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://thuliyam.com/?p=40885
-
- 0 replies
- 562 views
-
-
சிங்களம் படித்து அபிலாஷைகளைக் கூறுங்கள்: சி.வி -எஸ்.ஜெகநாதன் 'தமிழ் மக்கள், சிங்கள மொழியைப் படித்து, தங்களின் உணர்வுகளையுந் தேவைகளையும் அபிலாஷைகளையுந் நேரடியாக சிங்கள மக்களிடம் தெரிவியுங்கள். இதன்மூலம் இரு இனங்களுக்கிடையே இருக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரிந்துணராமை போன்றவை இல்லாமல் செய்யப்படுகின்றது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் மத்திய கல்லூரியின் 200ஆவது வருட நிறைவு கொண்டாட்டம், கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையா…
-
- 18 replies
- 1.3k views
-
-
உடுவில் மாணவிகளின் போராட்டத்தின் போது பொலிஸாரின் செயற்பாடு குறித்து விளக்கம் வேணடும் யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது, சுன்னாகம் பொலிஸாரின் அசமந்தப் போக்கு மற்றும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் என்பன தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தினால், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. 3 ஆம் திகதி முதல் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள், பாடசாலை நிர்வாகத்துக்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். பாடசாலை வளாகத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வந்த பொலிஸ் உத்தியோகத்தர், போராடத்தில் ஈடுபட்ட மாணவிகள்…
-
- 1 reply
- 365 views
-
-
ஒழுக்கசீலர்களாக மாற சாரணியம் கைகொடுக்கும் 'சாரணியத்தின் மூலம் மாணவர்கள் கட்டுக்கோப்பானவர்களாக மாறவேண்டும்' என வட மாகாண சபையின் விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சாரணியம் உருவாக்கப்பட்டதன் 100ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற ஜம்போறியின் இறுதி நிகழ்வு வவுனிக்குளத்தில், சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றும்போது இதனைக் கூறிய அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், “சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பேர்டன் பவுல் கூட ஒரு இராணுவ அதிகாரியாக இருந்து அதன் விளைவாக சாரணியத்தை உருவாக்கி இருக்கின்றார். ஆகவே நீங்கள் கட்டுக்கோப்பானவர்களாக மாறவேண்டும். ஏனெனில் நீங்களும் சிப்பாய…
-
- 0 replies
- 337 views
-
-
பழைய அதிபரே வேண்டும்: உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இன்று முதல் நிகழ்வாக யாழ். சுப்ரமணியம் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதியை அங்கு வந்து சந்தித்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் அவரிட…
-
- 23 replies
- 1.7k views
-
-
மலேசியாவுக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்ச்சையில் சிக்கியுள்ள போதிலும், தனது குடும்பம் சார்ந்த நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமகால அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவருடன் நிதி மோசடிகளை மறைக்கும் திட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மலேசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே மஹிந்த சென்றிருந்ததாக கூறப்பட்டது. அரசாங்கத்தின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நிதி பங்களிப்பாளரான அமைச்சர் தயாகமகே மற்றும் அவரது மனைவி ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தயா கமகே மற்றும் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடலில் ஈடுபட்ட…
-
- 1 reply
- 302 views
-
-
உடுவில் மகளிர் கல்லூரி சர்ச்சை இன்று கலந்துரையாடலுக்கு அழைப்பு உடுவில் மகளிர் கல்லூரியில் எழுந்துள்ள அதிபர் மாற்றம் தொடர்பான பிரச்சினை குறித்து, பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கிடையிலான கலந்துரையாடலொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது. அதிபர் மாற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும், மாணவிகளின் கல்வி செயற்பாடுகளை அமைதியான முறையில் தொடர்வதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பா கவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. இக்கலந்துரையாடலில் உடுவில் மகளிர் கல்லூரியில் தரம் ஒன்று முதல் உ…
-
- 1 reply
- 359 views
-
-
கோமரங்கடவெல காட்டு வழியூடாக திருகோணமலை நகருக்கு 62 முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற இரண்டு சிறியரக லொறிகளையும் முச்சக்கரவண்டியொன்றையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த குச்சவெளிப் பொலிஸார், இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கோமரங்கடவெல காட்டு வழியூடாக இரண்டு லொறிகளில் 62 முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்செல்வதாக பொலிஸாருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (11) கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அவ்வீதியினூடாக சென்ற இரண்டு லொறிகளை நிறுத்தியுள்ளனர். இதன்போது, ஒரு லொறியின் சாரதி லொறியை நிறுத்திவிட்டு சாவியுடன் தப்பியோடியதாகவும் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், வீதிகளில் நடைபெறுகின்றவற்றைத் தகவல்களாக வழங்கிச் ச…
-
- 0 replies
- 550 views
-
-
ஒரு வாரத்துக்கு சபை மூடப்படும் நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாத சபையமர்வுகளை, ஒருவாரத்துக்கு ஒத்திவைப்பதற்கு கட்சித் தலைவர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபையில், தொழிற்நுட்ப கட்டமைப்பு தொகுதியை மறுசீரமைக்கும் நடவடிக்கைக்காகவே, சபையமர்வு ஒருவார காலத்துக்கு ஒத்திவைக்கப்படவுள்ளது. ஒலி அமைப்பு , மின்னணு வாக்கு முறைமை, எலக்ட்ரிக் ஒலிவாங்கிகள் ஆகியவற்றை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளுக்காகவே சபையமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையிலும் இடம்பெறவிருந்த சபையமர்வுகள் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையிலும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பை செய்வதற்கு 17 நாட்கள் தேவை…
-
- 0 replies
- 267 views
-
-
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், இந்த வழக்கில் பொறுப்புக் கூறவேண்டியவர் மீது சட்டம் திரும்பியுள்ளதாக பொலிஸ் தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துமிந்த சில்வாவின் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயம் இருப்பதாக கூறி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக கூறப்படும் நரம்பியல் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் மகேசினி விஜேரத்னவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. துமிந்த சில்வா துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளதாக போலி மருத்துவ அறிக்கையை வழங்கி, சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அனுப்புமாறு மருத்துவர் மகேசினி விஜேரத்ன பரிந்துரை ச…
-
- 0 replies
- 311 views
-
-
மேலும் 1700 பேருக்கு இரட்டைக் குடியுரிமை மேலும் 1700 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டளர் நாயகம் நிஹால் ரணசிங்க கூறினார். இரட்டைக் குடியுரிமை வழங்கும் திட்டத்தை மாதாந்தம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புதிய கட்டடத் தொகுதியில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அத்துடன் கடந்த வருடத்தின் மார்ச் மாதம் முதல் தற்போது வரை 1400 இற்கும் மேற்பட்டவர்களு…
-
- 0 replies
- 368 views
-
-
வடமாகாண பாடசாலைகளுக்கு உணவு வழங்க ஜப்பான் நிதியுதவி இலங்கையின் வடமாகாண பாடசாலைகளுக்கு ஜப்பான் உலகஉணவு நிகழ்ச்சி நிரலின் உணவுதவித் திட்டத்தின் மூலம் 230 மிலிலியன் யென்( சுமாராக 330மி.ரூபா) வழங்கத் தீர்மானித்துள்ளது. இந்தப் பணம் பாடசாலை மாணவர்களுக்கு உணவு அளிக்கப் பயன்படும். 2012இலிருந்து 2015வரை ஜப்பானிய அரசு 740மி.யென் தொகையை பாடசாலைப் பிள்ளைகளுக்கான உணவுக்காக இதே திட்டம் மூலம் வழங்கியிருந்தது. வடக்கிற்கு புதிதாக உணவு வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம் செப்டெம்பர்9இல் கைச்சாத்திடப்பட்டது இதத் தருணத்தில் ஐ.நா உலக உணவுத் திட்டப் பிரிவிலிருந்து ஒரு அதிகாரியும், ஜப்பானின் பிரதிநிதி ஒருவரும் இலங்கைக…
-
- 0 replies
- 342 views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கொன்றில் பின் கதவால் ரிக்கற் விற்றவர்களிடம் நியாயம் கேட்ட சில இளைஞர்களை அங்கிருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல திரையரங்கொன்றில் புதிதாக வந்த படமொன்று காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. சனிக்கிழமை காலை திரைப்படத்தைப் பார்ப்பதற்காக நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு பலர் வரிசையில் காத்திருந்தபோது ரிக்கற் விற்பவர் பின்பக்க வாசலால் ரிக்கற்றை விற்கத் தொடங்கினார். இதனால் கோபமடைந்த சில இளைஞர்கள் அது தொடர்பில் ஊழியர்களுடன் வாக்குவாதப்பட்டனர். அதன் பின்னர், ஊழியர்கள் பின் கதவால் நுழைவு சீட்டு விற்பதனை நிறுத்தினர். இதன்பின்ன…
-
- 0 replies
- 334 views
-
-
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியில் நேற்று இரவு 9.00 மணியளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதில் வீடுகளுக்கும் கட்டிடங்களுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டதுடன் நிலங்களிலும் சிறு,சிறு வெடிப்புக்களையும் காணக் கூடியதாகவுள்ளது . இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. சிறிது நேரத்தில் பொலிஸாரும் அப்பகுதிக்கு வந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர். இதேவேளை, பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று 6.1 ரிச்டர் அளவில் பயங்கர பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11206
-
- 0 replies
- 331 views
-
-
பாதாள உலகக்குழுவின் உதவியுடன் இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் வழிநடத்தியதாகவும் அந்நாட்டு பாதாள உலகக்குழுவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பினாங் மாநிலத்தின் முதலமைச்சர் பீ.ராமசாமியின் ஆதரவாளர்களான ஸீரோ தெர்டீன்ஸ் என்னும் பாதாள உலகக்குழுவினரின் ஒத்துழைப்புடன் உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நட…
-
- 0 replies
- 334 views
-
-
தமிழ்மொழியில் பொலிஸாருடன் தொடர்பு கொள்ள வவுனியா,மன்னார் மக்களுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தமிழ் மொழியில் அவசர பொலிஸ் அழைப்புகளை மேற்கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கைள அறிமுகப்படுத்தும் நிகழ்வு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் நேற்று வவுனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்ந நிகழ்வில் வவுனியா மாவட்ட பொதுமக்கள் 0766224949 என்ற இலக்கத்துடனும் மன்னர்ர் மாவட்ட பொதுமக்கள் 0766226363 என்ற இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு 24 மணிநேரமும் தமிழ் மொழியில் உதவிகளையும் முறைப்பாடுகளையும் செய்துகொள்ளமுடியும்…
-
- 2 replies
- 387 views
-
-
கோத்தாபாய கடற்படைமுகாமுக்குள் 500 கடற்படையினர் -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் ஊடாக 500க்கு மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர், கோத்தாபாய கடற்படைமுகாமுக்கு இன்று சனிக்கிழமை (10) சென்றுள்ளனர். காலை 10 மணியளவில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களும் 500க்கு மேற்பட்ட கடற்படையினரும் அணி அணியாக குறிப்பிட்ட முகாமுக்குள் சென்றுள்ளனர். குறித்த கடற்படையினருக்குச் சிறப்புக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் கடற்படையினர் உறவினர்களுடன் மதியபோசன விருந்து உபசாரத்தை மேற்கொள்வதற்காகவும் கோத்தாபாய கடற்படைமுகாமுக்…
-
- 2 replies
- 538 views
-
-
நான் வேலைப்பளு காரணமாக யுத்த வெற்றி தொடர்பான புத்தகம் எழுதுவதற்கு இதுவரை முயற்சிக்கவில்லை. சிலர் யுத்த வெற்றி தொடர்பாக புத்தகம் எழுதுவதாகக் கூறி யுத்த வெற்றியைச் சிதைக்கின்றனர் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ‘நந்திக் கடலுக்கான பாதை’ எனும் 800 பக்கங்களைக் கொண்ட நூலொன்றை எழுதி வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலடியாகவே சரத்பொன்சேகா தானும் யுத்த வெற்றி தொடர்பாக நூல் ஒன்றை எழுதப்போவதாகத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவும் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பல யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துக்குற்றச்சாட்டினையும் மூடி மறைத்தே இந்த நூ…
-
- 2 replies
- 557 views
-
-
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களை மூடப்போவதாக கிளிநொச்சி தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார். 09-09-2016 வெள்ளிக்கிழமை மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஒரு பாடசாலையில் இருக்கின்ற அளவுக்கு அடிப்படை வசதிகளை தனியார் கல்வி நிலையங்கள் கொண்டிருக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ச்சியாக நிர்பந்தித்து வருகின்றார். இது தொடர்பில் அவரினால் தயாரிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அடங்கிய ஒப்…
-
- 1 reply
- 643 views
-
-
“போதையற்றதேசம்“ ஜனாதிபதி தலைமையில் யாழில் நிகழ்வு மூன்று வெவ்வேறு நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் 10.45 மணியளவில் யாழ் முற்றவெளியில் நடைபெற்ற 'போதையற்ற தேசம்' என்ற நிகழ்வில் பங்கேற்றார் நிகழ்வில் மீளும் போதை புகையிலை மதுபாவனையை முற்றாக ஒழிக்க அனைவரும் ஒன்று சிறந்து போதையில் இருந்து விடுதலையக்குவோம் என நம்மை முழு பலத்துடன் செயற்படுத்துவோம் என வந்து இருந்த அனைவரும் உறுதி மொழி எடுத்துகொன்டனர். இதனை தொடர்ந்து வாழ்க்கை அழகானது போதையை ஒழித்தால் என்ற பாடலுக்கு பாடசாலை மாணவிகள் நடனம் ஆடினர். பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால …
-
- 5 replies
- 860 views
-