ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143425 topics in this forum
-
கேவலமான அரசியல் கலாசாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன் 25000 ரூபாய் பணம் ஒதுக்கி விட்டு 50,000 ரூபாய் கடன் பெற்று வரவேற்பு நடாத்தும் கேவலமான அரசியல் கலாசாரத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஏறாவூரில் பொதுச் சந்தை பெண் சந்தை அமைப்பது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்களின் சந்திப்பின் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாணத்தில் இன்று பாரிய சேவைகள் என்றும் இல்லாதவாறு நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. இச்சேவைகளைத் தங்களின் காலத்தில் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்வில் எதிராளிகள் புலம்பிக் கொண…
-
- 0 replies
- 426 views
-
-
26 முன்னாள் போராளிகள் விஷ ஊசி பரிசோதனை! முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது, விசஊசி ஏற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்வதற்காக, நடத்தப்பட்ட முதற்க ட்ட பரிசோதனைகளில், 26 முன்னாள் போராளிகள் பங்கேற்றதாக கூறப்படுகின்றது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் இந்த சிறப்பு மருத்துவ பரி சோதனைகளுக்கு முதற்கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 முன்னாள் போராளிகளும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 7 முன்னாள் போராளிகளும், வவுனியா மாவட்டத்தில் 3 முன்னாள் போராளிகளும் மருத்துவ பரி…
-
- 1 reply
- 451 views
-
-
சர்வதேச அமைதிகாக்கும் பணிக்கு இலங்கையின் ஒத்துழைப்பை பாராட்டுகிறார் மூன் சர்வதேச அமைதிகாக்கும் பணிக்கு இலங்கை வழங்கியுள்ள ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு லண்டனில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் மைக்கல் பலோனின் தலைமையில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைப் பிரிவுக்கு இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் வழங்கும் ஒத்துழைப்…
-
- 1 reply
- 283 views
-
-
முல்லை நந்திக்கடல் கிழக்கு கடற்பகுதியிலிருந்த படையினர் வெளியேற்றம் முல்லைதீவு பரந்தன் A35 பிரதான வீதி அருகே நந்திக்கடல் கிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்தபடையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். வட்டுவாகல் பாலத்தின் அருகே அமைந்துள்ள சிறிய இராணுவ முகாமைத்தவிர நந்திக்கடல் தரைப்பக்கம் இரட்டைவாய்க்கால் வரை குறைந்தது 8 சதுரகிலோ மீற்றர் தூரம் வரை இராணுவ முகாம்கள் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 கிலோமீற்றர் நந்திக்கடல் மேற்குப் பகுதியை இராணுவத்தினர் விடுவித்த நிலையில் அங்குள்ள விவசாயிகள் வயல் மற்றும் காய்கறித்தோட்டங்கள் அமைத்துப் பயனடைகின்றனர். எனினும் A35 வீதிக்கு மறுபக்கம் உள்…
-
- 0 replies
- 275 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 3030 ஏக்கர் வரையான காணிகளை அடுத்த வருடத்திற்குள் விடுவிப்பதற்கு எண்ணியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். குறித்த காணிகளை இரண்டு கட்டங்களாக விடுவிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மேலும் கூறியுள்ளார். வடக்கில் பொது மக்களின் 21,659 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தின் வசமும், 7022 ஏக்கர் வரையான காணிகள் தனியார்த் துறையினரிடமும் உள்ளன. கிழக்கு மாகாணத்தில் சுமார் 21519 ஏக்கர் காணிகள் அரச துறையிடமும், 504 ஏக்கர் காணிகள் தனியார் துறையினரிடமும் காணப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01/11699…
-
- 0 replies
- 322 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினரால் செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது கடந்த காலத்தில் இலங்கை இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதல்கள் மற்றும் ஏனைய யுத்த காரணங்களால் தங்களுடைய தங்களுடைய கால்களை இழந்த முன்னாள் போராளிகள் மற்றும் சில பொது மக்களுக்கு இராணுவத்தினரால் செயற்கை கால்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழவு இன்று வெள்ளிக்கிழமை 09-09-2016 கிளிநொச்சியில் ஒத்துழைப்பு மையத்தில் இடம்பெற்றது. அமெரிக்காவின் யுஎஸ் எய்ட் உதவியுடன் கண்டி குண்டகசாலை மாற்று வலுவுள்ளோர் நிலையத்தின் அணுசரனையில் கிளிநொச்சி இராணுவத்தினரால் 28 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருடன் நேரடி யுத்தத…
-
- 0 replies
- 412 views
-
-
கிளிநொச்சி பூநகரி மட்டுவில் நாடு பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள தமது காணிகளை விடுவித்து அதில் தங்களை மீள்குடியேற்றுமாறு 18 குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மட்டுவில் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அதிகளவான காணிகள் இராணுவத்தினர் வசம் உள்ளன. இந்த நிலையில் இப்பகுதியில் தங்களது காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளதால் தாங்கள் தற்போது கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உறவினர் நண்பர் வீடுகளிலும் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் தங்களை தமது சொந்தக்காணிகளில் மீள்குடியேற்றுமாறு கோரி ஏழு தனியார் காணிகளில் 6 குடும்பங்கள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இதே…
-
- 0 replies
- 299 views
-
-
கணவனால் தீ மூட்டப்பட்ட இளம் மனைவி மரணம் -செல்வநாயகம் கபிலன் கணவனால் தீ மூட்டப்பட்டு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (08) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான கிரிசாந்தன் கல்பனா (வயது 21) என்பவரே உயிரிழந்தார். கடந்த 28ஆம் திகதி இரவு 9 மணியளவில், மதுபோதையில் வந்த மேற்படி பெண்ணின் கணவன், வழமைபோன்று தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீட்டின் வெளிக்கதவினைப் பூட்டிவிட்டு, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத…
-
- 0 replies
- 376 views
-
-
'ஜனாதிபதித் தேர்தல் பிற்போடப்படாது' -பாநூ கார்த்திகேசு 'உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமையால், ஜனாதிபதித் தேர்தலும் பிற்போடப்படும் என்ற பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவின் கருத்தை, நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கான காரணம், எல்லை நிர்ணயங்கள் ஒழுங்காக இன்னமும் நிர்ணயிக்கப்படாமையே என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, பகிரங்கமாக ஊடகங்களில் அறிவித்திருந்தார். எமது தலையில் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய எண்ணக்கருவில்லை' என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். ஸ்ரீ லங…
-
- 0 replies
- 288 views
-
-
யாழில் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, இன்று வெள்ளிக்கிழமை (09) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தார். பலாலிக்கு விமானம் மூலம் வந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தைச் சென்றடைந்தார். யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெறும், போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கின்றார். - See more at: http://www.tamilmirror.lk/181490/ய-ழ-ல-ஜன-த-பத-#sthash.GUHQCL5D.dpuf
-
- 0 replies
- 355 views
-
-
எதிர்காலத்தை கட்டியெழுப்பும் நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் இரு தசாப்தங்களில் இலங்கை, உயர்ந்த வருமானம் பெறும் ஒரு நாடாக மாற்றப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ‘நிலையான தேசிய அபிவிருத்திக்கு விஞ்ஞான தொழில்நுட்பத்தையும் புதிய உற்பத்திகளையும் பயன்படுத்தல்’ என்ற எண்ணக்கருவுடனான, விஞ்ஞான தொழில்நுட்ப மாநாடு நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையா…
-
- 0 replies
- 242 views
-
-
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் கடந்த 1990.09.09 அன்று இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையே வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990.09.09. அன்று நடைபெற்ற இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.. அவர்கள் மேலும் கூறுகையில் 26 வருடங்களாக எமது கிராமத்தில் நடைபெற்ற இந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. எமது உறவுகள் படுகொலை செய்த காரணத்தையும் அதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டிருந்தும், அது குறித்து கடந்த 26 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த எந்த அரசாங்கங்களும் விசாரணைகளை நட…
-
- 3 replies
- 626 views
-
-
சிங்கள கலை வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.கண்டிய நடனம் உட்பட பல சிங்கள கலை கலாச்சாரங்களுக்கு மூலம் தமிழ் கலாச்சாரங்களே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கலைகலாச்சாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது இதன் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பில் பல வகையான கருத்துகளையும் முன்வைத்தார். இலங்கையில் சிங்கள கலைகள் வளர்ச்சியடைய பல வகையிலும் முன்னுதாரணமாகவும், உதவியாகவும் அமைந்தது தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு பாரம்பரியங்களே. மேலும் இலங்கை பாட புத்தகங்களில் தமிழ் மன்னர்களுடைய வரலாறுகள் வலுக்கட்டாயமாக மறைக்கப்படுகின்றன, அதற்கு…
-
- 7 replies
- 568 views
-
-
விஜயம்... அண்மையில் தலைமன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர்களான றிஷாத் பதியுதீன் மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர், தலைமன்னாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான குறுந்தீவுகளைப் பார்வையிட்டதுடன், அங்கு காணப்படக்கூடிய அரிய வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் மன்னாரின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடினர். http://www.tamilmirror.lk/181367/வ-ஜயம-
-
- 5 replies
- 596 views
-
-
துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. - See more at: http://www.tamilmirror.lk/181441/த-ம-ந-த-ச-ல-வ-உள-ள-ட-ட-ப-ர-க-க-மரண-தண-டன-#sthash.fgzbXQLg.dpuf
-
- 4 replies
- 714 views
-
-
சுன்னாக பொலிசாருக்கு எதிராக , சுன்னாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு குளோபல் தமிழ்ச் செய்தியாளா் யாழ்ப்பாணம் சுன்னாக பொலிசாருக்கு எதிராக சுன்னாக பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலளர்கள் இருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அது தொடர்பில் தெரியவருவதாவது , உடுவில் மகளீர் கல்லூரியில் அதிபர் மாற்றத்திற்கு எதிராக கடந்த 3ம் திகதி தொடக்கம் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீள ஆராம்பமானது. அதன் போது பாடசாலைக்கு வருகை தந்த மாணவிகளை பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து புதிய அதிபரின் தலைமையில் , அவருக்கு ஆதரவான ஆசிரியர்கள் கலந்துரையாடல்களை நடாத…
-
- 1 reply
- 436 views
-
-
இராணுவத்தினர் வசமிரு்ந்து கிளிநொச்சி துயிலுமில்லம் விடுவிப்பு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறு ப்பினர் ஒருவரால் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமாதானம் செய்ய வேண்டும் என்ற தீர்மா னம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட மறுநாள் இராணுவத்தினர் துயிலு மில்லத்தில் இரவோடு இரவாக இரண்டு அடுக்கு வேலிகள் அமைத்து முகாம் அமைத்தி ருந்தனர். இந்த நிலையில் மாவீரர் துயிலுமில்லம் அன்று தொடக்கம் இன்று வரை கல்லறைகளுக்கு மேல் கழிப்பறைகளும், சமையலறைகளும், அமைக்கப்பட்டு இராணுவத்தினர்…
-
- 0 replies
- 521 views
-
-
'புனர்வாழ்வு பெறாத 275 போராளிகள் உள்ளனர்' -பலாலியிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ் 'பாதுகாப்புத் தரப்பினரின் எவ்வித புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படாத முன்னாள் போராளிகளில் 275 பேர், வடக்கில் உள்ளனர் என்று இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள், தாமாக முன்வந்து சரணடையாத போதிலும், அவர்களால், தேசிய பாதுகாப்புக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை' என்று, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கூறினார். இதேவேளை, யாழ்ப்பாணம் - நாவற்குழி பிரதேசத்தில், 270 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. தொழில்நிமித்தமும் வர்த்தகங்களை மேற்கொள்ளும் நோக்கிலுமே, இந்த …
-
- 1 reply
- 491 views
-
-
யாழ்ப்பாணத்தில் வருகிறது கிரிக்கெட் மைதானம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் புதிதாக இரண்டு கிரிக்கெட் மைதானங்களை அமைக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, கிரிக்கெட் அதிகம் பரவியிருக்காத இலங்கையின் பகுதிகளில், கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. மேற்கூறப்பட்ட இரண்டு மைதானங்களும் அமைக்கப்படுவதற்கான அனுமதியை, இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுச் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. அண்மைய எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள மேற்படித் திட்டங்களுக்கு, 200 மில்லியன் ரூபாய் செலவிடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்…
-
- 7 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வழங்கிய எட்வேட் ஸ்நோடனுக்கு கொங்கொங்கில் வைத்து ஈழத்து அகதிகள் சிலர் அடைக்கலம் வழங்கியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர் அமெரிக்காவிலிருந்து தப்பி வந்து பல முக்கிய புலனாய்வுத் தகவல்களை வெளியிட்டார். இதனால் அமெரிக்கா மற்றைய நாடுகளின் வலையமைப்புக்குள் புகுந்து எவ்வாறு தகவல்களை திருடியது என்பது பற்றிய மற்யை நாடுகளை உசார் நிலைக்குக் கொண்டுவந்தது. இவர் தப்பிச்சென்று 2013ஆம் ஆண்டு கொங்கொங்கில் இலங்கை அகதிகள் தங்கியிருந்த பகுதியொன்றில் மறைந்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் கொடுத்த நான்கு ஈழத்து அகதிகளை அமெரிக்க ஊடகங்கள் செவ்வி கண்டுள்ளன. குறி…
-
- 2 replies
- 754 views
-
-
ஊடகவியலாளர் யமுனி ரஸ்மிகா பெரேராவிற்கு சர்வதேசவிருது இலங்கை ஊடகவியலாளரான பெண்மணி யமுனி ரஸ்மிகா பெரேரா என்பவருக்கு சர்வதேசரீதியிலான தங்க விருதுகள் இரண்டு கிடைத்துள்ளன. இவருக்கு சிறந்த படப்பிடிப்புச் செய்தியாளருக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது. இப் போட்டி பல்கேரியாவில் இடம்பெற்றது. 50 நாடுகளிலிருந்து 1220 படப்பிடிப்பு செய்தியாளா்கள் இந்தப் போட்டியில் பங்குபற்றி யிருந்தார்கள். இவர் ஏற்கனவே சைபீரியாவில் இந்த ஆண்டு இடம்பெற்ற சர்வதேசரீதியிலான படப்பிடிப்பாளர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றெடுத்திருந்தார். http://onlineuthayan.com/news/17314
-
- 0 replies
- 414 views
-
-
வடக்குமுதல்வருடன் அமெரிக்க பிரதித்தூதுவர் சந்திப்பு இலங்கைக்கான அமெரிக்க பிரதி தூதுவர் றொபேட் ஹில்டன் தலைமையிலான குழு இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வர னைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இன்று காலை 10.45 மணியளவில் அமெரிக்க குழுவினர், கைதடியில் முதலமைச்சரை சந்தித்தனர். சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக சந்திப்பு நீடித்தது. சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், மத்திய அரசு வடமாகாண பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை மேற்கொண்டால், எமது நிர்வாகத்தினை நல்ல முறையில் நடாத்த முடியும். மேலெழுந்தவாரியாக கொ…
-
- 1 reply
- 567 views
-
-
உடுவில் மாணவர் போராட்டம்: பலவந்தமாக இடைநிறுத்தம் -குணசேகரம் சுரேன் உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் ஷிரானி மில்ஸை, அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்லூரி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், பாடசாலை நிர்வாகத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டு, பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 மாணவிகள் தற்போது மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யச் சென்றுள்ளனர். எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டே, பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 445 views
-
-
வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த எழுவர் கைது வவுனியா பிரதேசவாசிகளை கிலிகொள்ளச் செய்துவந்த கொள்ளைக்காரக் கும்பலின் ஏழு அங்கத்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளார்கள். இவர்களால் உபயோகிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல ஆயுதங்களையும், இவர்களால் கொள்ளை யடி க்கப்பட்டதாகக் கருதப்படும் தங்க நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளார்கள். வேப்பங்குளத்திலுள்ள பெரியகுளம் என்னுமிடத்தில் சந்தேக நபர்கள் கைதசெய்யப்பட்டுளளார்கள். ஏற்கனவே இந்த மாதம் 2ஆம் திகதி சி.ஐ.டி. பொலிஸார் பூந்தோட்டம், வவுனியாவில் ஒரு சந்தேகநபரை கைதுசெய்திருந்தார்கள். இவரிடம் விசாரணை மேற்கொண்டதன் பயனாகவே இக் கொள்ளைகள் சம்பந்தமாக புதிதாக அறுவரைக் கைது செய்ய முடிந்துள்ளத…
-
- 0 replies
- 377 views
-
-
உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீது தாக்குதல்? உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் சிரானி மில்ஸ்சை, பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மாணவிகளின் போராட்டம் தொடர்ந்து வருகின்ற நிலை யில், வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையில் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்ற பின்னர் புதிய அதிபர் இன்று பாடசாலைக்கு வந்துள்ளார். அப்போது மாணவிகள் அவரை பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்காது வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது புதிய அதிபருக்கு ஆதரவான சிலர், மாணவிக ளைத் தாக்கியதாக கூறப்படுகிற…
-
- 3 replies
- 1.7k views
-