Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெலிக்கடை சிறைச்சாலையை இடமாற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பொரளை அருகே அமைந்துள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையை கொழும்புக்கு வெளியே கொண்டு செல்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இங்கு வெலிக்கடை, மெகசின், நியூ மெகசின், கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலை, மற்றும் சிறைச்சாலை மருத்துவமனை என்பனவும் சிறைச்சாலை உத்தியோகத்தர் பயிற்சிக் கல்லூரி, சிறைக் கைதிகளின் குழந்தைகளுக்கான ஆரம்பப் பாடசாலை என்பனவும் அமைந்துள்ளன. இவற்றுக்காக ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசம் வர்த்தக ரீதியாக பெரும் மதிப்பான காணிகளைக் கொண்டுள்ள பிரதேசமாகும். இதனைக் கருத்தில் கொண்டு சிறைச்சாலையை கொழும்புக்கு வெளியே கொண்டு செல்வது க…

  2. சங்குவேலியில் சன்னா என்ற பிரபல ரவுடி வீடு புகுந்து வெட்டியதில், குடும்பஸ்தர் ஒருவர் பலியானார். சங்குவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது 35) என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரபல தாதா தனக்கும்குறித்த குடும்பஸ்தருக்கும் இடையில் இருந்த முன்பகையின் காரணமாக நேற்று இரவுவீடு புகுந்து வெட்டியுள்ளார். உறவினர்களினால் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சன்னா யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும்பொலிஸ் மீதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபராவார். அவரைக் கைது செய்ய பொலிஸார்தேடுதல் …

  3. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் பாடசாலை அதிபரான அருந்தவபாலனிற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு தேசியப் பட்டியல் மூலமான நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசாவும் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் (புதன்கிழமை) முன்னாள் அதிபரான அருந்தவபாலனின் மணிவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அருந்தவபாலன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விருப்பு வாக்கில் நடைபெற்ற மோசடிமூலம் சரவணபவன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெ…

    • 0 replies
    • 374 views
  4. ஈழ தாகம் கொல்லும் விஷ ஊசிகள்... முடமாகும் இனம்! ஈழத்தில் இருந்து இழவுச் செய்தி வந்திருக்கிறது. வேறு என்ன செய்தி வரும்? அகதி முகாம்களில் இருந்தும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்படும் முன்னாள் போராளிகள், இனம் காணமுடியாத நோய் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கொடூரமான செய்தி. இப்படி 103 பேர் இதுவரை இறந்துள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை, இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை. எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்... இந்த மர்மச்சாவுகளின் மர்மம் என்ன? `முன்னாள் போராளிகளின் சாவு குறித்து சர்வதேச நாடுகளின் நடவடிக்கையும் விசாரணையும் தேவை' என, இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த…

  5. இலங்கையில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களின் நினைவாக, பலாலி படைத்தளத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அமைதிபடை நினைவுத் தூபிக்கு, யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சலேட் ஜெனரல் ஏ.நடராஜன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 70ஆவது இந்திய குடியரசு தினத்தையிட்டு பலாலியில் அமைந்துள்ள குறித்த இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு திங்கட்கிழமை (15) அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் துணைத்தூதுவர் மற்றும் இராணுவ வீரர்கள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போது,…

    • 0 replies
    • 455 views
  6. '67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை' என வடமாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, கணக்காய்வு திணைக்கள அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே வடமாகாண எதிர்க் கட்சி தலைவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடமாகாணத்தின் ஐந்து அமைச்சின் கீழ் உள்ள 28 திணைக்களங்களில் 67 கோடியே 44 இலட்சத்து 35 ஆயிரத்து 63 ரூபாய் பணம் தொடர்பில் கொடுக்கல், வாங்கலுக்கான உரிய ஆவணங்கள் எவையும் இல்லை என கணக்காய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வு திணைக்கள அறிகையிலேயே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, 2014ஆம் ஆண்டு வரவு - …

    • 0 replies
    • 353 views
  7. தாயகம், தேசியம், சுயாட்சி என்ற கோஷங்களால் ஒருபோதும் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படமாட்டாது என ஆசிரியர் சிவசோதி தெரிவித்துள்ளார். தமிழர் பகுதிகளில் தமிழ் பேசும் காவல்துறையினரைக் கூட நியமிக்கமுடியாதநிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது கடினம் எனவும், தமிழர் பகுதிகளில் சிங்களக் காவல்துறையினர் சிங்களத்தில் கதைத்து மக்களிடமிருந்து பணம் பறிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான கருத்துப்பெறும் அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில், ஒரு நாடாக ஒன்றிணைந்து செயற்படுவதன்மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். அத்துடன…

    • 0 replies
    • 298 views
  8. தமிழினிக்கோ அல்லது சிவரதிக்கோ இயக்கத்திற்கு வெளியில் வந்து புற்றுநோய்வரவில்லை. அவர்களுக்கு இயக்கத்தில் இருக்கும் போதே புற்றுநோய்தான் என தமிழீழவிடுதலைப்புலிகளின் மூத்த போராளியான தமிழ்கவி தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள்கருத்தறியும் செயலணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறுதெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், புனர்வாழ்வு முகாமுக்கு போனார்கள், அங்கு எதையோ கொடுத்தார்கள். அதனால் இறந்துவிட்டார்கள் என சொல்கின்றர்ர்கள். ஆனால் நாங்கள் இயக்கத்தில் சிவரதி என்றபிள்ளையை பாரிய வேலைகளுக்கு எடுப்பதே இல்லை. அவருக்கு இலகுவான வேலையேகொடுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அவர் ஏற்கனவே நோயாளிதான…

    • 9 replies
    • 1k views
  9. முன்னாள் பேராளிகளின் மர்மமான உயிரிழப்புகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டிருப்பது தான் காரணம் என வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை என நான் கூறவில்லை, அதே நேரம் உண்மை என்றும் கூறவில்லை. முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனையினை சரியான முறையில் விரைவாக செயற்படுத்த வேண்டும். அந்தப் பொறுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிதீவிரமாக செயற்படுகின்றது.இச் சூழலில் இவற்றை விவாதித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. இதனால் முன்னாள் போராளிகள் உளவியல் ரீதியாக பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கின்றது என்றார். பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் சந்திப்பு தொடர்பகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மேற்க…

  10. முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் பரிசோதிப்பதற்காக அமெரிக்க டாக்டர்களின் சேவை எமக்கு அவசியமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போது கருத்து வெளியிட்ட அவர், 'யாழ்ப்பாணத்தில் 80 சதவீதமான தமிழ் டாக்டர்கள், வைத்திய நிபுணர்கள் உள்ளனர். அவர்களுக்கு மொழியும் தெரியும் வைத்திய தகைமைகளும் உள்ளது. எனவே, விஷ ஊசி தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக வைத்திய பரிசோதனைகளை எமது நாட்டு டாக்டர்களினாலேயே நடத்த முடியும். அதில் உண்மையுள்ளதா? …

  11. முல்லைத்தீவு - கொக்குளாய் பிரதேசத்தில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ அல்லது வேறு எவருக்கோ கிடையாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொக்குளாய் பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் அப்பிரதேச மக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் நிலையிலேயே அரசா ங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்க ளத்தில் இன்று பகல் நடபெற்றது. இதன்போது கொக்குளாய் பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் எழுந்துள்ள எதிர்ப்பு கள் மற்றும் சர்ச்சைகள் குறித…

  12. அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பின் யாழ்ப்பாண பயணம், வட மாகாண மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தவில்லை என்று, வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. வடக்கு மாகாணசபை, பொது அமைப்புகள், உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்,“அமெரிக்கத் தூதுவரின் யாழ். வருகை, வடக்கு மாகாண மக்களுக்கு நன்மை தருவதாக இல்லை. அவருக்கு எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறிய போது. அதற்கான நிவாரணங்களை அளிப்பதாக எந்த வாக்குறுதியையும் அளிக்கவி…

  13. கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 104 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களில் சமூக மருத்துவ வைத்தியர்கள் 70 பேரும் வைத்திய அதிகாரிகள் 34 பேரும் அடங்குவதாக அம்மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார். கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள பாண்டிருப்புப் பிரதேசத்தில் 5.5 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம்மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வெளிமாகாணங்களைச் சேர்ந்த சுமார் 60 வைத்தியர்கள் இடமாற்றம் கோரியுள்ளனர். இவர்களுக்கு இடமாற்றங்களை வழங்குவதில் சிரமம் காணப்பட்டது. ஆனால், தற்ப…

  14. இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி - பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாகவும் இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில், இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் தமது காணிகளைத் தம்மிடமே வழங்குமாறு கோரி கடந்த ஐந்து நாட்களாகப் அவர்களது வாழ்விடங்களிலுள்ள இராணுவ …

    • 1 reply
    • 387 views
  15. முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்படவில்லை என மருத்துவப் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டால், சர்வதேசம் முழு தமிழர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை அற்றுப்போகும்' என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக - வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் உள்ள வடமாகாண பேரவைக் கட்டடத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, 'முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டுள்ளது என அனைவரும் வாதம் புரிகின்றார்கள். அதனடிப்படையில், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அது பொய் என நிரூபிக்கப்படுமாயின், அதன் பின்னர் தமிழர…

  16. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வலுவான உறவு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் அமெரிக்கா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பொன்னான வாய்ப்பு உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நட்பு நாடாக தொடர்ச்சிhயக அமெரிக்கா செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்து http://globa…

    • 0 replies
    • 189 views
  17. இந்து சமுத்திரத்தைச் சூழ உருவாகும் புதிய சந்தையைக் கைப்பற்றுவதற்கு இலங்கையின் பூகோள அமைவிடம் மற்றும் பொருளாதார உபாய மார்க்கம் அதி முக்கியத்துவம் மிக்கது எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இவை அனைத்திலும் பயன் பெற்றுக்கொள்ள முன்வருமாறு சீன தொழில் முயற்சியாளர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். சீனாவின் ஷேன்சன் நகரிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற தொழில் முயற்சியாளர்களின் மாநாட்டில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அவர் மேலும் உரையாற்றுகையில், தெற்காசிய அபிவிருத்தியுடடான பொருளாதாரம் மற்றும் பாரிய சந்தைக்கு உரிமை கோருவதை இலக்குவைத்து கைத்தொழில், உற்பத்தி மற்றும் சேவை வழங்குவதற்கு ஆசியாவின் பொருளாதார பலம்மிக்க நாடுகள் தற்போதே திட்டங்களை வகுக…

    • 0 replies
    • 320 views
  18. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் மூலம் முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனை நடாத்தலாம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் கோரிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளார். வடக்கு மாகாண சபையின் 58ஆவது அமர்வு இன்று கைதடியிலமைந்துள்ள வடக்கு மாகாணசபைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக பரிசோதனை நடாத்த சர்வதேசத்தின் உதவியைக் கோரியிருக்கும் நாம் தற்போது யாழ்.குடாநாட்டில் மருத்துவ முகாம்களை நடத்த வந்திருக்கும் அமெரிக்க விமான படை மருத்துவர்கள் ஊடாக முன்னாள் போராளிகளை பரிசோதித்தால் என்ன? என மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்…

    • 6 replies
    • 581 views
  19. கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக சூழலில் கட்டப்படும் புத்த சிலை மற்றும் விகாரை ஆகியவறின் கட்டட பணிகளை நிறுத்த உத்தரவிட கோரி வடமாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளையால் பிரேரணை கொண்டுவரப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. கைதடியில் உள்ள வடமாகாண சபையின் பேரவைக் கட்டடத்தில் வடமாகாண சபையின் அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போதே இந்த பிரேரணை முன் மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளபட்டது. குறித்த பிரேரணையை முன் மொழிந்து பசுபதிப்பிள்ளை உரையாற்றுகையில் , தம்புள்ளையில் பழமை வாய்ந்த காளி கோவிலை இருந்த இடமே தெரியாத வாறு தடயமின்றி , இடித்தழித்து உள்ளனர். நாங்கள் சிங்கள மக்களுக்கோ , பௌத்த மதத்திற்கோ எதிரா…

  20. -எஸ்.றொசேரியன் லெம்பேட் கொழும்பு - தலைமன்னார் அதிவிரைவு (எக்ஸ்பிரஸ்) ரயிலில் மோதி 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டன. தலைமன்னாரில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(16) இரவு கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இவை மோதியுள்ளன. தலைமன்னாரில் இருந்து இரவு 10.30 மணியளவில் புறப்பட்ட ரயில், இரவு 11.45 மணியளவில் செட்டிக்குளம் மெனிக்பாம் ரயில் பாதையில் கூட்டமாக நின்ற யானைளுடன் மோதியுள்ளது. ரயில் மோதியதால் தூக்கி வீசப்பட்ட யானைக் குட்டி உட்பட நான்கு யானைகள் அங்கேயே பலியாகியுள்ளன. இந்த விபத்து காரணமாக ரயில் பாதை சிறிதளவு சேதமடைந்ததுடன் யானைக் குட்டிகளின் உடலை அங்கிருந்து அகற்றும்வரை ரயில் தாமதித்து பின்னர் புறப்பட்டுச் சென்றுள்ளது. - See more at: http://www.…

  21. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிரான 90 வீதமான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக முன்னாள் இராணுவத்தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிரான இரண்டு முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் கோதபாய ராஜபக்ஸ குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான விளைவுகளை எதிர்நோக்குவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். 7 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதயிhன மி;க் ரக விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் மற்றும் டி.ஏ.ராஜபக்ஸ நினைவுத் தூபி அமைத்தல் தொடர்பில் 90 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் கோத…

  22. இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் சந்தைகளில் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் தாம் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை சந்தைகளில் 40 தொடக்கம் 50 ரூபாயிற்கு விற்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் தற்போது பெரிய வெங்காயம் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு வெங்கா யமானது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியின் கேள்வி குறை ந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே தேசிய விவசாயிகளை பாதுகாப்பதன் பொருட்டு இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காய த்திற்கான இறக்குமதி வரியினை அதிக…

  23. முஸ்லிம் மக்கள் மதுபானம் அருந்துவது குறைவு என்றும், எமது நாட்டில் இவர்கள் மதுபானம் பாவிப்பது குறைந்தளவிலேயே காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் ஹலால், ஹராம் காரணங்களால் இவர்கள் மது அருந்துவதை தவிர்ப்பதாகவும் இதனால் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர்குறிப்பிட்டுள்ளார். எனவே நாட்டில் உள்ள அனைவரையும் மது பாவனையில் இருந்து மீட்டெடுக்கவும்,மது பாவனையற்ற நாடாக இலங்கையை மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு மகாசங்கத்தினருக்கு அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். நாட்டிலிருந்து மது பாவனையை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டம் …

  24. யாழ் குருநகர் பகுதியில் காணப்படும் வாய்க்கால்களில் குப்பைகள் வீசப்படுவதால் ஏற்படும் துர்நாற்றங்களினால் தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக கரையோர மக்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியும் கடற்கரை வீதியும் சந்திக்கும் இடத்தில் அதிகளவான குப்பைகள் தேங்கி இருப்பததை அவதானிக்ககூடியதாக இருகிறது. இப் பிரதேசத்து வாய்க்கால் கழிவு நீர் கடலோடு கலக்கும் பிரதேசத்தில் அதிகளவில் கழிவுகள் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இந் நிலையில் வீடுகளில் குடியிருப்பது கூட அசௌகரியத்தை தருவதாகவும் அப் பகுதியை அண்டிய மக்கள் தெரிவித்தனர். எனவே குறித்த பகுதியையும் வாய்க்காலையும் சுத்திகரிப்புச் செய்து தருமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.on…

  25. கோவிலுக்கு வாகனங்களில் வருபவர்கள் வீடுகளின் வாயில் கதவுகளுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக ஆலய சூலலில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். வாகனங்களை நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தாது வீடுகளின் வாயில் கதவுகளுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனை தவிர்பதற்காக "பாதைக் கதவுகளுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்தத்தாதீர்" எனும் அறிவுறுத்தற் பலகையை மக்கள் தங்களின் வீடுகளுக்கு முன்னால் வைத்துள்ளனர். இந் நிலையில் அதனை பொருட்ப்படுத்தாது வாகனங்களை நிறுத்துவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே யாழ் மாநகர சபையும் வீதி போக்குவரத்துக்கு பொலிசாரும் இணைந்து இது தொடர்பில் உரிய கவனம் எடுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.