Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழந்தால் நாம் பொறுப்பல்ல - பாதுகாப்பு செயலாளர் (லியோ நிரோஷ தர்ஷன்) விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் எவ்விதமான கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுப்பட வில்லை. முன்னாள் போராளிகள் புற்று நோயாலோ அல்லது மர்மமான முறையில் உயிரிழப்பதாயின் அது தொடர்பில் புனர்வாழ்வு அமைச்சும் அதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுமே செயற்பட வேண்டும். இதில் பாதுகாப்பு அமைச்சிக்கு எவ்விதமான பங்கும் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் திடீர் மரணங்கள் தொடர்பில் வினாவிய போதே அவர் ம…

  2. “மிக்” கொள்வனவு ஆவணங்கள் அழிவு :உடனடி விசாரணைக்கு உத்தரவு மிக் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருக்கும் சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த விவகாரத்தில் சாட்சியங்களை மூடிமறைப்பதற்கு எவராவது முயற்சித்திருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்தி கைது செய்யுமாறும் கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது முன்வைக்கப்பட்டுள்ள மிக் விமான கொள்வனவு ஒப்பந்த மோசடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. …

  3. வற்வரி சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரண்;சபாநாயகர் அறிவிப்பு பொருட்கள், சேவைகளின் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் உத்தேச வற்வரி திருத்தச் சட்டமூலம் இலங்கை அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு முரணான வகையில் காணப்படுவதாக உச்சநீதிமன்றம் வியாக்கியானம் செய்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வற்வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருப்பதோடு அதனை இன்று சபாநாயகர் சபையில் அறிவித்தார். இதற்கமைய குறித்த திருத்தச் சட்டமூலம் ஸ்ர…

  4. இலங்கையில் எத்தனை ஜனாதிபதிகள் பதவியேற்றாலும் மைத்திரிபால சிறிசேனவே அதிஷ்டம்மிக்க ஜனாதிபதி என பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டு மக்களின் ஏகோபித்த அன்பும், நம்பிக்கையும் மைத்திரிக்கே காணப்படுகின்றது, சிறுபான்மை மக்களினதும், சிங்கள மக்களினதும் அன்பு மிக்கவர் இவர். இதனாலேயே நாட்டு மக்கள் மஹிந்தவை புறக்கணித்து மைத்திரியைஜனாதிபதியாக தெரிவுசெய்தனர். இந்தக் கருத்து மக்களின் கருத்துக்கணிப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. என ஆனந்த அளுத்கமகே கூறினார். இதேவேளை, சுதந்திரக்கட்சி பிளவுபடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியே கா…

  5. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் பணிமனை நடாத்தும் அனைத்துலக சிறப்பு மாநாடு பிரான்ஸ் செப்டம்பர் 11 ஞாயிறு காலை 10.30 மணிக்கு Salle Saint Michel 19,Avenu Saint ouen, 75018 Paris France என்னும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத்தலைவர் வி.சு.துரைராஜா சிறப்பு மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும் செயலாளர் நாயகமுமான திரு.துரைகணேசலிங்கம் ஐரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் பணிமனைத் தலைவர் திரு.கனகசபை அரியரத்தினம் மாநாட்டுச் செயலர் திரு.ம.இரவீந்திரநாதன் ஆகியோர் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர். அனைத்துலக சிறப்பு மாநாடு அகிலத்தலைவர் விசு.துரைராஜா அ…

  6. ராஜபக்ச யுகம் முடிந்து விட்டது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவபிரிய தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திபிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெற்றுக்கொடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிகளவு நன்மையை பெற்றுக்கொண்டார். நாட்டை ஆட்சி செய்வதற்கு 12 வருடங்கள் மக்கள் அவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கினர், ராஜபக்ச குடும்பம் தங்களது சுயரூபத்தை காட்டியது. தற்போது அவர்களின் காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது வீதிகளில் இறங்குவதால் எதுவும் நடைபெறாது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற உதய கம்ம…

  7. பிரித்தானிய தூதுவர் பதவிக்கு அமாரி விஜேவர்தனவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி வெற்றிடமாக காணப்படுகின்றது. அமாரி விஜேவர்தன உயர்ஸ்தானிகராக பதவி ஏற்கும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பில் அனுபவ முதிர்ச்சியுடைய அமாரி விஜேவர்தன, பல தனியார் நிறுவனங்களின் தலைமைப் பதவியை வகித்து வருகின்றார். இறுதியாக பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கிறிஸ் நோனீஸ் கடமையாற்றியிருந்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய சஜி…

  8. பிரபல றக்பி வீரர் வசிம் தாஜூதீன் படுகொலை தொடர்பான சீ.சீ.டி.வி காணொளிகளை பரிசோதனை செய்வதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி கனடாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த காணொளிகளில் உள்ள காட்சிகள் தெளிவற்று இருப்பதாக, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே, கனடாவில் அமைந்துள்ள கணினி தொழில்நுட்ப நிறுவனத்துக்கு இந்தக் காணொளிகளை எடுத்துச் செல்வதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த சீ.சீ.டி.வி காணொளிகளை, உதவி பொலிஸ் அத்தியட்சகர் அடங்கிய குழுவினர் கொண்டு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வெள்ளவத்தை முருகன் வீதியை வசி…

  9. வடமாகாண முதல்வரின் செயற்பாடுகளால் அதிருப்தியில் அரசு இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் நோக்கில் தேசிய அரசாங்கம் சிந்தித்து, அவதானத்துடன் முன்னேறிச் செல்லும் நிலையில், வடமாகாண முதல்வரின் செயற்பாடுகளும், அவர் முன்வைக்கும் கருத்துக்களும், மிகவும் பாரதூரமானது என அமைச்சர் ராஜித சேனாரத்ன விகனம் தெரிவித்துள்ளார்.. வடக்கு-கிழக்கு இணைப்பு மற்றும் சரவதேச விசாரணை அவசியம் என வடமாகாண முதலமைச்சர் கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அடுத்த ஆண்டு இலங்கை தொடர்…

    • 2 replies
    • 460 views
  10. கல்விமான்கள் அமைதி காப்பது நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தடையாகவுள்ளது : ஜனாதிபதி நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை எதிர்காலத்தில் பிறக்கவுள்ள பிள்ளைகளின் நன்மை கருதி அவற்றைத் தீர்ப்பதற்கு கல்விமான்களும் புத்திஜீவிகளும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். நேற்று பத்தரமுல்ல வோட்டஸ் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்ற ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பழைய மாணவர்கள் சங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். மானிட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இன்று முக்கிய தடையாக போலியான மனிதர்களின் கோசங்களும் கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளின் மௌனமும் விளங்…

  11. யாழ்ப்பாண பல்கலையில் ‘பசுமையான எதிர்காலத்தை நோக்கி’ யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள, 2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆய்வு மாநாடு ‘பசுமையான எதிர்காலத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்படுவதுடன்,சவால்களுக்கு உள்ளா க்கப்பட்டிருக்கும் ‘சூழல்’ குறித்த இந்த ஆய்வு மாநாடு, எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில், தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் பசுமைச் சூழலிலிருந்து விலகிச் சென்றமைக்கான காரணங்களைத் தேடும் அதேவேளை, இன்றைய நிலையில் பசுமைத் தேவையின் அவசியங்களை நோக்கி மானுட சமூகத்தை நகர்த…

  12. சிறைச்சாலை மருத்துவமனை ஊசியால் மனநலம் பாதிக்கப்பட்ட கைதி அநுராதபுர சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் ஏற்றப்பட்ட ஊசிகளால் தமிழ் அரசியல் கைதியொருவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேற்று (08)அநுராதபுர சிறைச்சாலையில் சென்று பார்வையிட்டுத் திரும்பியபோதே அவர் இதனைக் கூறினார். சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள குறித்த கைதியை சந்தித்து கதைத்தபோது, தனக்கு இரண்டு ஊசிகள் ஏற்றப்பட்ட பின்னரே உடல்நிலை மோசமடைந்ததாக கூறியதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி குறிப்பிட்டார். …

  13. மைத்­தி­ரிக்கும் சம்பந்­த­னுக்கும் அக்­கினிப்பரீட்­சையான "வற்" வரி (க.கம­ல­நாதன்) ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மக் கள் மீது அதிக சுமையை செலுத்தும் "வற்" வரி ­வி­திப்பை அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என தெரி­வித்­துள்ளார். அவ்­வா­றாயின் அவரின் தலை­மைத்­து­வத்தின் கீழ் இருக்கும் சுதந்­திர கட்­சி­யி­னரும் "வற்" வரி­வி­திப்­புக்கு ஆத­ர­வாக கையு­யர்த்த கூடா­தென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார். அதே­நேரம் "வற்" வரி விதிப்பு தொடர்­பி­லான வாக்­கெ­டுப்பின் போது எதிர்­கட்­சியும் மக்­களின் நலன் கருதி அர­சாங்­கத்­திற்கு சார்­பாக வாக்­க­ள…

  14. மூன்று சகோதரிகள், ஒரு சகோதரரைக் கொண்ட குடும்பத்தில் டெல்றொக்‌ஷன் மூத்தவராவார். 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புனித பெற்ரிக் கல்லூரியில் கலைப்பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய டெல்றொக்‌ஷன் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பல்கலைக்கழக அனுமதியை பெறத் தவறியிருந்தார். டெல்றொக்‌ஷனின் தந்தை கிறிஸ்தோபர் மறியதாஸ் மீன்பிடித் தொழிலை செய்துவருபவர். விடுதலைப் புலி சந்தேகநபர் என்ற அடிப்படையில் 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி இராணுவத்தினரால் வவுனியாவில் வைத்து டெல்றொக்‌ஷன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் வரை டெல்றொக்‌ஷனைக் காண அவர்களது பெற்றோர் பல பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர். பல தடவைகள் 4ஆவது மாடி…

    • 0 replies
    • 337 views
  15. நாட்டில் உருவாக்கப்படவுள்ள அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வில் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு பாதிப்பை தோற்றுவிக்கும் சமஷ்டி தீர்வையும் வழங்கக்கூடாது என கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையினால் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி 24 மணி நேரத்திற்குள் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனம் இந்த பிரகடனத்தை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கல்முனையில் ஒன்றுகூடி தங்க…

    • 0 replies
    • 351 views
  16. இலங்கை கடற்படையினரால் நான்கு தமிழக மீனவர்கள் கைது.! நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை கடற்படையினர் இன்று காலை கைதுசெய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த வைரக்கண்ணு மகன் கணேஷ்குமார் (30), பிச்சைபாண்டி (46), முகமதுகான் (48) மற்றும் ஒருவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவார். இந்நிலையில் குறித்த மீனவர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசன் துறைமுக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே 4 மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் கைதுசெய்யப்ப…

  17. இலங்கை வருகிறார் துருக்கி ஜனாதிபதி சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யுப் அர்தூகான் இலங்கை வரவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்க ளிலி ருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்ட பத்தில் நடைபெறவுள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்ளவே அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த மாநாட்டில் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பிரதிநிதித்து வப்படுத்தி 17 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/ne…

  18. 1991ஆம் ஆண்டு மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 21 இளைஞர்களை இராணுவம் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 21 பேரும் இராணுவத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றில் புதைக்கப்பட்டுள்ளதாக இந்திய அகதிமுகாமில் வசிக்கும் இலங்கை அகதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தார்மலிங்கம் என்ற இலங்கை அகதி கூறுகையில், தாம் உள்ளிட்ட11 பேர் அகதிகளாக இந்தியா செல்ல முற்பட்ட போது தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டோம் கைது செய்யப்பட்ட அனைவரையும் இரவோடு இரவாக இராணுவத்தினர் அடித்துக் கொலை செய்து கிணற்றில் புதைத்தனர். தான் விடுதலைப்புலிகளின் அமைப்பில் செயற்பட்டதாக கூறினேன். அதன் காரணமாக ஏனையவர்களை காட்டித்தரும் எ…

  19. ஹனுமான் பாலம் அமைத்தால் இந்தியாவின் 30 ஆவது மாநிலமாக இலங்கை மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. தூய்மையான ஹெல உறுமயவின் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் போதே எமது நாடு இந்தியாவின் கீழ் செயற்பட வேண்டிய நிலையை தோன்றிவிட்டது. எமது நாட்டின் சுயாதீன தன்மையும் இல்லாது போய்விட்டது. எனவே தற்போது ஹனுமான் பாலம் அமைத்தால் இந்தியாவின் 30 ஆவது மாநிலமாக இலங்கை மாறிவிடும் அச்சுறுத்தலான நிலைமை தோன்றியுள்ளது. இவ்வாறு எமது நாட்டின் தேசிய பாதுகாப்பின் மீது கை வைக்காமலும் இந்தியாவினால் எமது நாட்டின் மீது முன்னெடுக்கபடும் ஆக்கிரமிப்புக்…

  20. அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் பின்வாங்கிச் செயற்படுவது துரதிஸ்டவசமானது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளைய உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று யாழ். பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து வௌியிடுகையிலேயே சித்தார்த்தன் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில், அதனைச் செய்வதாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு உறுதிய…

  21. செஞ்சோலை படுகொலை 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு யாழில்! செஞ்சோலை படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்வுகள், எதிர்வரும் 14ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு யாழ்.முனியப்பர் கோவிலடி (யாழ் கோட்டைக்கு அருகில்) நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு படுகொலைக்கு நீதி கோரியும், உயிரிழந்த மழலைகளின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கு மாறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோ லை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், பாட சால…

  22.  'முன்னாள் போராளிகளின் மரணம் தொடர்பில் ஆராய வேண்டும்' புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் மரணமடைந்து வருகின்றனர் என ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்ற நிலையில், அதன் பின்னணி தொடர்பில் முழுமையானதும், பகிரங்கமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் இவர்கள் உரிய உடல் மற்றும் உள ரீதியிலான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்பட வேண்டுமென்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில்அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, …

  23. தனது சொந்த சகோதரியை கப்பம் கோரிக் கடத்திய குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முதல் பிள்ளையான குறித்த 17 வயதுடைய சிறுவன், தனது சகோதரியைக் கடத்திச் சென்று மாற்றுக் குரலில் தந்தையிடம் சுமார் 700,000 ரூபாய் கப்பம் கோரியதாகக் கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனின் தாயார், மூன்று பிள்ளைகளையும் அவர்களின் தந்தையின் பராமரிப்பில் விட்டு, வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். தனது மூத்த மகன், இசைக் குழுவொன்றை அமைப்பதற்காக தன்னிடம் 500,000 ரூபாய் கோரியிருந்ததாகவும் தனது 15 வயதுடைய மகள் திடீரெனக் காணாமல் போனதையடுத்து அயலவர்களுடன்…

  24. இலங்கைக்கு எதிரான எல்லா சர்வதேச அழுத்தங்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்து விடும். ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்துடன் சர்வதேச கடிவாளத்தில் இருந்து இலங்கை விடுபட்டுவிடும். ஏனெனில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா விவகாரங்கள் ஆரம்பமாகும் முன்னர் நாம் சகல பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவோம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் தீர்வு தொடர்பில் சிந்தித்து அதற்கமைய நகர்ந்துகொண்டுள்ள நிலையில் வடமாகாண முதல்வரின் செயற்பாடுகளும் கருத்துக்களை முன்வைப்பதும் மிகவும் பாரதூரமான விடயமாகும். எவ்வாறு இருப்பினும் தேசிய பிரச்சினைகளை தீர்வு காணும்போதும் புதிய நகர்வுகளை கையாளும் போதும் தேசிய பாதுகாப்பிற்கு அமை…

  25. பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தமது கட்சியின் பெயரை தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக மாற்றம் செய்துள்ளது. வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் திருகோணமணமலையில் நேற்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். திருகோணமலை கடல்முக வீதியில் அமைந்துள்ள கட்சியின் காரியாலத்தில், மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் சுகு சிறீதரன் மற்றும் நிர்வாகச் செயலாளர் சிவராஜா மோகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த, வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், நாட்டில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இது நல்லாட்சிதான் என உ…

    • 6 replies
    • 595 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.