ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143434 topics in this forum
-
கசினோ சூதாட்டத்துக்கு எந்தவொரு முதலீட்டாளருக்கும் இனியொரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசு இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை சிங்கப்பூரில் வைத்து அறிவித்திருக்கிறார். சிங்கப்பூர் உட்பட சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்த பிரதமர், கசினோ போன்ற சூதாட்டங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்ற உறுதியான நிலைப்பாட்டையும் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது. சூதாட்டத்தின் மூலம் நாட்டில் ஏற்படக் கூடிய கலாசார சீரழிவுகளுக்குள் நாம் சிக்கி விடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்புக்கு …
-
- 0 replies
- 302 views
-
-
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களான மகாலிங்கம் சசிகுமார், மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர் நேற்று அவரது தாயாரின் இறுதிக் கிரியைகளில் மூன்றடுக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கலந்து கொண்டனர். மேற்படி இரு சந்தேக நபர்களும் நேற்றுக் காலை 8.30 மணி அளவில் சிறையிலிருந்து அவர்களது தாயாரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த ஓட்டுமடத்திலுள்ள மலர்சாலை ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். கடந்த ஜுன் மாதம் 17ம் திகதி சிறைச்சாலை அனுமதியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கம் சசிகுமாரது (சுவிஸ் குமார்) தாயார் மரணமானார். மரணமான மகாலிங்கம் தவநிதி என்ற குறித்த பெண்மணி மேற்படி வழக்கில் நீதிமன்ற தவணைக்காக வந்திருந்த படுகொல…
-
- 0 replies
- 265 views
-
-
வடக்கில் வளர்ந்து வரும் இனவாத மனோபாவத்தின் வெளிப்பாடாகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக மோதல் சம்பவம் அமைந்திருப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை சாதாரண பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான மோதலாக எடுத்துக் கொள்ள முடியாது. பொதுவாகவும், அரசியல் ரீதியாகவும் முரண்பாடான நிலைப்பாடுகளைக் கொண்ட இரு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையிலான மோதலாகப் பார்க்கவேண்டும். சமூகத்தால் கண்டிக்கப்படவேண்டிய இனவாதத்தைப் பின்னணியாகக் கொண்டதாக இது காணப்படுகிறது. சிங்கள மாணவர்கள் மீதான தாக்குதலானது வடக்கில் அதிகரித்துவரும் இனவாதத்தின் தொடர்ச்சியாகும். உடனடியாக ஏற்பட்ட பிரச்சினையல்ல. படிப்படியாக …
-
- 0 replies
- 262 views
-
-
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறும் தமிழக மீனவர்களை தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்துவதே ஒரே வழி என்று மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர, தெரிவித்துள்ளார். “இலங்கை அரசாங்கம் அதனை ஒருபோதும் அமுல்படுத்தாது என்ற தைரியத்திலேயே இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அடாவடித் தனத்தை கைக்கொள்கின்றனர். இந்திய மீனவர்களை கைதுசெய்வதிலும் பார்க்க அவர்களை சுடுவது எமக்கு இலகுவான விடயம். இலங்கை கடற்படையினருக்கு இந்திய மீனவர்களை சுடுவதற்கான அனுமதியை மட்டும் நாம் வழங்கியிருந்திருந்தால் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு என்றோ தீர்வு கண்டிருக்கலாம். ஆனாலும், துப்பாக்கியால் சூடு நடத்தி யுத்தம் ஒன்றை தொடுக்கும் நோக்கம் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. அத…
-
- 0 replies
- 215 views
-
-
வடமாகாணத்தில் மாற்று வலுவுள்ளோர் கொடுப்பனவில் புறக்கணிப்பு -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா கடந்த காலங்களில் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து, அம்மாகாணங்களில் மாற்று வலுவுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, அதில் வட மாகாணத்தைச் சேர்ந்தோருக்கான கொடுப்பனவில் புறக்கணிப்புக் காணப்படுவதாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மொழிமூல விடைக்கான வினாக்கள் நேரம் நிறைவடைந்ததும், நிலையியற் கட்டளை 23/3இன…
-
- 0 replies
- 198 views
-
-
பூர்வீக இடங்களிலேயே மீள்குடியமர்த்தப்படவேண்டும்-வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் தெரிவிப்பு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை வேறு இடங்களில் மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாச்சலம் குணபாலசிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக இடம்பெயர்ந்த நிலையில் மீளக்குடியமர முடியாதிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் மயிலிட்டி மற்றும் அதனை அண்டிய 12 கிலோ மீற்றர் கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கும் மீள்குடியேற்றக் குழுவின் தலைவர், குறித்த பிரதேசத்தை இராணுவமும், கடற்படையினரும் கையகப்படுத்தி வைத்துக்கொண்டு அவற்றை விடுவிக்க மறுத்து வ…
-
- 0 replies
- 219 views
-
-
முல்லை மாணவர்களுக்கு இந்துவின் மைந்தர்கள் உதவி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 2005 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 55 துவிச்சக்கர வண்டிகளை வழங்கி மாணவ சமுதாயத்துக்கே முன்னுதாரணமாக திகழ்கின்றனர். தொடர்ந்து மூன்று வருடங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேச மாணவர்களின் கல்வி கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு உதவிச் செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து வந்துள்ளனர். முதற் கட்டமாக கடந்த பெப்ரவரி மாதம் தெரிவு செய்யப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கடந்தகால வினாத்தாள்களை (Past Papers) மொத்தமாக 19 பாடசாலைகளுக்கு …
-
- 0 replies
- 309 views
-
-
உச்ச அதிகாரம் இருந்தும் பிரச்சினைகளைத் தீர்க்காத மகிந்த தற்போது கத்துகிறார் அதி உச்ச நிறைவேற்று அதிகாரம் தன்வசம் இருந்த சந்தர்ப்பத்தில் கூட நாட்டில் காணப்பட்ட எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு வழங்காத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தற்போது நாட்டில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு அருகதையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய அரசாங்கத்தின் இரு பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது. இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அரச, தொழில்முயற்சிகள் அபிவிருத்தி…
-
- 0 replies
- 316 views
-
-
யுத்தத்தில் சிதைந்த கிளிநொச்சியிலும் 600லட்சத்தில் 99 அடி உயரத்தில் கனகாம்பிகைக்கு இராஜகோபுரமாம்:- ராஜ கோபுர அடிக்கல் நாட்டு விழாவும் விமரிசையா நடந்தேறியது.. வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜ கோபுர அடிக்கல் நாட்டு விழா வியாழ்கிழமை 14-07-2016 அன்று நடைபெற்றது காலை விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் அடிக்கல் நாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சி . சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு ,சந்திரகுமார் நீர்ப்பாசன பிரத…
-
- 40 replies
- 2.1k views
-
-
225 எம்.பிக்களை '30ஆல் அதிகரிக்க ஆலோசனை' பாநூ கார்த்திகேசு '225ஆக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255ஆக அதிகரிப்பதற்கான தேவை ஒன்றுள்ளது. பெரும்பான்மை ஆட்சி பலத்துடன் ஒரு கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு, தற்போதுள்ள முறைமை சிக்கலானதாக உள்ளது. எனவே, இதனை மாற்றியமைப்பதற்கான ஏற்பாடு விரையில் முன்னெடுக்கப்படும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்;தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பிலான ஆலோசனையைப் பெறுவதற்கு நோர்வே நாட்டைச் சேர…
-
- 1 reply
- 328 views
-
-
யாழ். நலன்புரி முகாம்களில் உள்ளவர்களுக்கு புதிய வீடுகள் -மேனகா மூக்காண்டி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில், யாழ்ப்பாணம் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக, அரசாங்கத்தினால் 971 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனால், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு, அங்கிகாரம் கிடைத்துள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள அனைத்து இடம்பெயர…
-
- 0 replies
- 298 views
-
-
யாழ் பல்கலைக்கழக நிகழ்வுகளுக்கு செனட்டின் அனுமதி தேவை – லக்ஸ்மன் கிரியல்ல: யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கு செனட்டின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். மாணவர்கள் ஏதேனும் நிகழ்வுகளை நடத்த வேண்டுமாயின், பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடன் அவற்றை நடத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இது பற்றி மாணவர்களுக்கு அறிவித்துள்ளது. பாராளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ம…
-
- 0 replies
- 246 views
-
-
அரச படையினரை காட்டிக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, படையினரின் கௌரவத்தைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு மாநாடு ஒன்று நடைபெற்றது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி, பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். …
-
- 1 reply
- 402 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வது தொடர்பில் ஆளும் கட்சியின் இருதரப்பினருக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராஜபக்ச கட்டளை நிதி மோசடி, ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம், தாஜுடின், லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலை உள்ளிட்ட விடயங்களைசுட்டிக்காட்டி கோத்தபாய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சிவலியுறுத்தி வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட அமைச்சர் ஒருவர்சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். எனினும் கோத்தபாயவை கைது செய்வதற்கு ஆளுங்கட்சியின் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுவருவதாக…
-
- 0 replies
- 373 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழீ விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகளின் தற்போதைய வாழ்வியல் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த எஸ்என்.கோகிலவாணி வழங்கிய நேர்காணல். - புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலைப்பாடு எவ்வாறு காணப்படுகின்றது? முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலைப்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதற்கான பதிலை ஒற்றை வசனத்திலோ அல்லது ஒற்றை விடயத்திலோ அடக்கி விட முடியாது. அது ஒற்றைபரிமாணம் கொண்டதல்ல. புனர்வாழ்வு என்ற பெயரில் நடத்தப்பட்ட போராளிகளை அரசியல் நீக்கம் செய்யும் நடவடிக்கை அவர்கள் தொடர்ந்து சமூகத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை வழங்கவில்லை. முழு நேர அரசியல் …
-
- 0 replies
- 489 views
-
-
தான் டுவிட்டர் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதில்லை என்றும், தனது புகைப்படத்துடன் போலி டுவிட்டர் வலைத்தளம் ஆரம்பித்துள்ளது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளினுடனான யுத்தத்தை வெற்றிக்கொள்ள 9 இராணுவத் தந்திரோபயங்களை பயன்படுத்தியதாக அவரது வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அது பல வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செய்தி சேவை ஒன்றிற்கு தான் வழங்கிய செவ்வி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நேற்று டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தகவலுக்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். http://ww…
-
- 0 replies
- 227 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது நான்கு சிங்கள மாணவர்கள் தன்னை தாக்கியதாக, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.சிசீந்திரன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். நேற்று டி.சிசீந்திரன் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜரான போது இரண்டு லட்சம் ரூபா இரண்டு ஆட்பிணையில் செல்ல நீதிபதி சி.சதீஸ்வரன் உத்தரவிட்டார். இந்தநிலையில் டி.சிசீந்திரன் இன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=161992&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 314 views
-
-
யானைக்கால் நோய் அற்ற நாடாக இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. இன்று இது குறித்த நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆசிய வலயத்துக்கான பணிப்பாளர் பூனம் கேத்ரபால் சிங், இலங்கை யானைக்கால் நோயை ஒழித்த நாடு என்ற சான்றிதழை அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளித்தார். ஆசியாவிலேயே இந்த பெருமையைப் பெற்ற இரண்டாவது நாடு என்ற பெயரை இலங்கை தக்கவைத்துக் கொண்டுள்ளது. மாலைதீவு இதற்கு முன்னதாக இந்த சான்றிதழைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http:…
-
- 0 replies
- 258 views
-
-
சிறை நிரப்புவதில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களா நீதிபதி இளஞ்செழியன் கேள்வி? சிறைச்சாலையை நிரப்பும் செயற்பாட்டில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களோ என கேள்வி எழுப்பி கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ஆசிரியரோ மாணவரோ எவரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் மாணவர்கள் மீது குற்றச் செயல்கள் புரிவதாக தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாடசாலைகள், பாடசாலை வளாகங்கள், கல்லூரி வளாகங்கள் என்பன குற்றச் செயல் புரிவதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசமல்ல. சட்டத்தைக் கையில் எடுத்துச் செயற்படுபவர்கள் சட்டவாட்சிக்க…
-
- 0 replies
- 215 views
-
-
கிளிநொச்சியில் கண்காட்சி வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட மாதர்கிராம அபிவிருத்தி குழுக்களின் கண்காட்சி இன்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கண்காட்சி கூடத்தினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நாடா வெட்டி திறந்து வைத்தார். இன்று இடம்பெற்ற கண்காட்சியில், கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய மாதர் கிராம அபிவிருத்தி குழுக்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட …
-
- 1 reply
- 289 views
-
-
யாழ். பல்கலைக்கழக மோதல் : சபையில் சம்பந்தன் கோரிக்கை (ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் போன்று ஏனைய பல்கலைக்கழகங்களிலும் சில சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அவற்றின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்குமாயின் அவற்றுக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் சபையில் கோரிக்கை விடுத்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கருத்து வெளியிடுகையி…
-
- 2 replies
- 545 views
-
-
மத்தி , மாகாணத்தை புறக்கணிப்பதனை ஏற்க முடியாது. சி.வி. எங்கள் மத்தியில் எவ்வாறான அரசியல் ரீதியான அல்லது வேறு காரணங்களுக்கான வேற்றுமைகள் இருப்பினும் வடமாகாணத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எமது சபையை நிராகரித்து அல்லது ஓரங்கட்டி மத்தியானது தனக்குத் தகுந்தவாறு காரியங்களை எடுத்துச் செல்வதை நாம் எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டோம்.என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் இன்று காலை நடைபெற்றது. அதன் போது சபையில் உரையாற்றிய போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எமது பிரதம செயலாளர் ஒரு முக்கியமான விடயமொன்றை எனது கவனத்த…
-
- 1 reply
- 294 views
-
-
கொழும்பு - புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலயம் ஒன்றில் திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வர்த்த நிலையத்தில் இன்று ஏற்பட்ட தீயினால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுகின்றது. இந்த இடத்தில் 5 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதோடு, தீயணைப்புப் பிரிவினர் குறித்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதனால் கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதோடு, சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த தீ விபத்தினால் உயிராபத்துக்கள் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்…
-
- 1 reply
- 437 views
-
-
ஹெரொயின் மற்றும் கஞ்சா வைத்திருந்த 19 பேர் கைது பேராதனிய பகுதியில் ஹெரொயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸ் தலைமையக குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 19 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெரொயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 14 பேரும், கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேரையும் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகனும், பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மகனும் அடங்குவதாக குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். இதேவ…
-
- 1 reply
- 371 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தென் கொரிய விஜயத்திற்கு அனுசரணை வழங்கவிருந்த அந்நாட்டில் உள்ள பௌத்த விகாரை ஒன்று தனது அனுசரணையை விலகிக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. மகிந்த மற்றும் அவரது குடும்பத்தினரது கொள்ளை, கொலை சம்பவங்கள் தொடர்பில் இலங்கையின் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வரும் நிலையில், குறித்த பௌத்த விகாரை மகிந்தவின் தென் கொரிய விஜயத்திற்கு அனுசரணை வழங்குவதை தவிர்த்து கொண்டுள்ளது. இந்த நிலையில்,மகிந்த ராஜபக்சவின் தென் கொரிய விஜயத்திற்கு அங்கு இயங்கும் வேற்று மதம் ஒன்றின் அடிப்படைவாத மத்திய நிலையம் ஒன்று அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. படுகொலைகள், பில்லியன் கணக்கில் மக்களின் பணத்தை கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்படும…
-
- 0 replies
- 274 views
-