Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பண்டிதர் பரந்தாமன் கவின்கலை கல்லூரியும் யோகர் சுவாமிகள் நற்பணி மன்றமும், காவேரி கலாமன்றமும் இணைந்து நடத்திய முழுநிலவுக் கலைவிழாவின் நிலவின் முற்றம், பாகம் மூன்று பண்டிதர் பரந்தாமன் கவின்கலை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு நேற்று மாலை ஆறு மணியளவில் ஆசிரியர் ஈ. மயூரன் தலைமையில் இடம்பெற்றது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் வரவேற்பு நடனம், வரவேற்புரை ஆசியுரை தலைமையுரை நிலவின் முற்றம் பாகம் இரண்டின் இறுவெட்டு வெளியீடு மற்றும் கரகாட்டம், இசைப்பாடல் போட்டி, நாடகம், கர்நாடக சங்கீத இசை விருந்துகள் என்பனவும் நடைபெற்றது. இதில், விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கப்பெருந்தலைவர் வே. இறைபிள்ளை, மூத்த நாடகக் கலைஞர் அண்ணாவியார் அ.…

    • 0 replies
    • 384 views
  2. மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் உள்ள 25 வீட்டுத்திட்ட கிராம மக்களின் காணிகளில் கடந்த பல வருடங்களாக முகாம் அமைத்துள்ள கடற்படையினருக்கு குறித்த வீட்டுத்திட்டத்தில் உள்ள காணிகளை நில அளவை செய்து மீண்டும் சொந்தமாக வழங்க மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் தலையீட்டினால் இன்று காலை கைவிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் உள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட கிராமத்தில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மக்களின் காணிகளில் படையினர் நிலை கொண்டிருந்தனர். குறித்த காணியின் சொந்தக்காரர்கள் தற்போது வரை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வாடகை…

    • 0 replies
    • 356 views
  3. நம்பிக்கை இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம் : சிறீதரன் தெரிவிப்பு என்னால் முடியும் என்கின்ற நம்பிக்கையும் எண்ணமும் இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம், வெற்றி பெறலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் முதலாவது மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வுகள் இன்றைய தினம் கல்லூரி மண்டபத்தின் நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் அங்கு உரையாற்றும் போதே மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில், கிளிநொச்சி இந்துக் கல்லூரியானது வரலாற்றில் தடம் பதித்த …

  4. அளித்த வாக்குறுதிகள் யாவும் நிறைவேற்றப்பட்டாலேயே ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டம் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இலங்கையின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வரா உள்ளிட்ட பிரதிநிதிகள் பிரசல்ஸிற்கு விஜயம் செய்துள்ளனர். இதில், இலங்கை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்த…

  5. யாழ் பல்கலைக்கலக மோதல் குறித்து பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து வடமாகாண முதலமைச்சர் மற்றும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து ஒப்பமிட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை மேலே படத்தில் காணலாம். http://tamil.adaderana.lk/news.php?nid=81828

  6. 60 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது - எஸ்.கர்ணன் மாதகல் கடலில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை, இன்று புதன்கிழமை (20) அதிகாலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/177477/-க-ல-க-ர-ம-கஞ-ச-வ-டன-ஒர-வர-க-த-#sthash.ZRRAwQl4.dpuf

  7. பூகோள சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டியில் (Environmental performance index) சிறிலங்கா 108ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டி,180 நாடுகளை உள்ளடக்கியதாக அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது. 2015ஆம் ஆண்டுக்கான இந்த பட்டியலில், சிறிலங்கா 108ஆவது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் சிறிலங்காவே முன்னிலையில் உள்ளது. இந்தப்பட்டியலில், பின்லாந்து, ஐஸ்லாந்து. சுவழுீடன், டென்மார்க், சுலோவேனியா, ஸ்பெய்ன், போர்த்துக்கல், எஸ்தோனியா, மால்டா, பிரான்ஸ், ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. பிரித்தானியா 12 ஆவது இடத்திலும், அமெரிக்கா 26ஆவது இடத்திலும் உள்ளன. அதேவேளை சீனா 109ஆவது இடத்திலும…

  8. யாழ். பல்கலைக்கழகத் தாக்குதலுக்கு தன்னுடைய சூழ்ச்சிதான் காரணம் என்று பல செய்திகள் வெளிவருவதாகவும், அவை முற்றிலும் பொய்யான விடயம் எனவும் வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், யாழ். பல்கலைக்கழகத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியாது. இவ்வாறிருக்க பொய்யான சம்பவங்களைக் கூறி மாணவர்களுக்கிடையில் சிலர் இனவாதத்தை தூண்டுவதாக குற்றம் சுமத்தினார். Go to Videos யாழ். பல்கலைக்கழகத் தாக்குதல் ஆளுநரின் சூழ்ச்சியா? …

  9. ஐரோப்பிய நாடுகளின் தேவைக்கு ஏற்றளவு, மீன்களை விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் 1000 மெட்ரிக் தொன் மீன்களை கோரியுள்ளன. ஆனால் உள்ளூரில் மீன்களின் கையிருப்பு குறைவாக இருப்பதால், 200 மெட்ரிக் தொன் மீன்களே இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன அந்த நாடுகளின் தேவையை நிறைவு செய்ய முடியாதிருப்பதாக, இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர கவலை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர், 200 மெட்ரிக் தொன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மீன் ஏற்றுமதி நிறுவனங்களால் 1000 மெட்ரிக் தொன் மீன்கள் கோரப்பட்ட போதும், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில்…

  10. முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கு கடற்கரை பகுதியில் கடற்றொழில் செய்வதற்காகவாடிகளை அமைத்த தமிழ் மீனவர்களை சிங்கள மீனவர்கள் மற்றும் பொலிஸார், பௌத்த பிக்கு ஆகியோர் இணைந்து விரட்டியடித்துள்ளதுடன், தமிழ் மீனவர்கள் அமைத்த வாடிகளையும் பிடுங்கி எறிந்து அட்டகாசம் புரிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட கொக்கிளாய் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதேவேளை முல்லைத்தீவு பொலிஸாருக்கு சிங்கள மீனவர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி கொக்கிளாய் கிழக்கு கடற்கரையில் வாடி அமைத்துக் கொண்டிருந்த 19 தமிழ் மீனவர்கள் மற்றும் 2 கிறிஸ்தவ பாதிரியார்களை முல்லைத்தீவு பொலிஸார் இன்று பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு எழுத்து மூலம் அழைப்பாணைவிடுத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். …

    • 0 replies
    • 332 views
  11. அரசாங்கத்துக்கு எதிராக மஹிந்த ஆதரவு அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாத யாத்திரைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காதென கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். கண்டியிலிருந்து 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரைக்கு ஸ்ரீ.ல.சு.க. ஆதரவு வழங்குமா என அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். பாதயாத்திரையில் பங்குபற்றுபவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அது குறித்து இன்னமும் தீர்மானிக்க வில்லையென்றும் சரியான தருணத்தில் இவ்விடயங்கள் கலந்துரையாடப்படுமென்றும் தெரிவித்தார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன…

  12. நாமல் மற்றும் ரஞ்சித் பாராளுமன்றில் விசேட உரை அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் பாராளுமன்றத்தில் இன்று (20) விசேட உரை வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நிதிக்குற்றப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டமை தவறானது என தெரிவித்து பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ளதுடன், அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சர்ச்சைக்குரிய நிலக்கரி ஒப்பந்தம் தொடர்பில் உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/9196

  13. கிழக்கு மற்றும் யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு சிங்கள மாணவர்களை பெரும்பான்மையாக உள்வாங்குவது உடனடியாக நிறுத்தப்படாவிடின், மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தூபம் போடும் நடவடிக்கையாக அது அமையும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் எச்சரித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 'யாழ்.பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்தை அடுத்து சில தமிழ்- சிங்கள இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் மிகமோசமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், " சிங்கள மாணவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்ட…

  14. யாழ். பல்கலைக்கழக மோதல் சம்பவத்துக்கு பல்கலைக்கழக அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எனஅமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “யாழ். பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டமைக்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் நான் மிகவும் வருத்தமடைகின்றேன். இவ்வாறான சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. இனவாதம், கடும்போக்குவாதம் என்பவற்றை பரப்பி மீளவும் பீதியை ஏற்படுத்த நாம் இடமளிக்க கூடாது.இவ்வாறான சம்பவங்களினால் தேசிய ஒற்றுமைக்கோ, நல்லிணக்கத்திற்கோ பாதிப்பு ஏற்பட இடமளிக்க முடியாது.குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடமும், பொலிஸ் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு ச…

  15. புலம்பெயர் தமிழர்களுக்கான விழா மீளவும் ஒத்திவைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் தமிழ் புலம்பெயர் மக்களுக்கான விசேட விழா ஒன்றை நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும் பின்னர் இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியிலும் விழா நடத்துவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் அந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் புலம்பெயர் தமிழர் விழாவை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இலங்கையின் 70ஆம் சுதந்திர தின நிகழ்வுகளுக்கு சமாந்திரமாக தமிழ் புலம்பெயர் விழாவினை வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.இந்த நிகழ்வு பிரமாண்டமான முறையில் நடத்தப்பட உள்ளது. இதற்காக உலகின் பல பாகங்களிலும் வாழும…

  16. பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம் குறித்து இலங்கைக்கும் EUவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்குவது குறித்து இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. வடக்கு கிழக்கில் இயல்பு நிலைமையை ஏற்படுத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நிலைமாறு நீதிப் பொறிமுறைமை உருவாக்கம், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இ…

  17. யாழ். பல்கலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் திட்டமிட்ட செயல் ; விக்கிரமபாகு (எம்.ஆர்.எம்.வஸீம்) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் திட்டமிட்ட செயலாகவே இருக்க வேண்டும். அரசாங்கம் இது தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் அடிக்கடி ஏதாவது சம்பவங்கள் இடம்பெற்று …

  18. யாழ். பல்கலைக்கழக விவகாரத்தை தெற்கு இனவாதிகள் தூக்கிபிடிப்பது கவலைதருகிறது : டிலான் யாழ்ப்பாணம், பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாம் வேதனையடைகிறோம். குறிப்பாக இந்த சம்பவத்தை தெற்கு இனவாதிகள் தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதை பார்க்கும்போது கவலையாக இருக்கின்றதென இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா மேலும் தெரிவிக்கையில், இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையில் இந்த நாட்டில் யாரும் செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது. குறிப்பாக பல்கலைக்கழகங்கள் இந்த விடயத்தில்…

  19. உள்ளூராட்சி மன்றதேர்தல் தொகுதிவாரியாகவே நடைபெறும் : ஜனாதிபதி உள்ளூராட்சி மன்றதேர்தல் தொகுதிவாரி தேர்தல் முறைமைக்கு அமையவே நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அமைப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளார். குறித்த தேர்தல் எதிர்வரும் வருடம் ஆரம்ப பகுதியில் நடைபெறும் என இதன்போது தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அமைப்பாளர்கள் நேற்றிரவு இலங்கை மன்றக் கல்லூரியில் ஜனாதிபதியை சந்தித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார் http://www.virakesari.lk/article/9190

  20. 'உள்ளக விசாரணையை ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்காது' எம்.றொசாந்த் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில், உள்ளக விசாரணை தான் நடத்தப்படும் என்றால், அதனை ஒரு போதும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளாது என, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உள்ளக விசாரணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை. இராணுவத்தினருக்கு எதிராக செயற்படமாட்டோம், இராணுவத்தினை தண்டிக்கமாட்…

  21. சயனைட் குப்பி மீட்பு எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு, சேதமடைந்த நிலையிலான அடையாள அட்டை, கைக்குண்டு, பழுதடைந்த நிலையிலான சயனைட் குப்பி என்பவை செவ்வாய்க்கிழமை (19) மாலை மீட்கப்பட்டுள்ளன என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். மாவிலங்குதுறை கிராமத்திலுள்ள காளிகோவில் வீதியில் தங்கரசா தவேந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில் சுற்று வேலி அமைப்பதற்காக குழி வெட்டிக் கொண்டிருந்த போது, மேற்கண்ட பொருட்கள் காணப்பட்டுள்ளன. இதுதொடர்பில், பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அ…

  22. முஸ்லிம்களை நாம் பிரித்து நோக்குவதில்லை : மாவை தெரிவிப்பு முஸ்லிம் மக்களும் எங்களுடைய மக்களே, அவர்களை நாங்கள் ஒருபோதும் பிரித்து நோக்கவில்லை. ஆரம்பகாலத்தில், எமக்கிடையேயான உறவுகள் சிறப்பாக இருந்தன. ஆனால், பிற்காலத்தில் அதில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன' என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முஸ்லிம்களுடனான உறவுகள் தொடர்பில் முற்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்தமைக்குப் பதிலளிக்கையிலேயே மாவை எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  23. நாவல் எழுதும் ஒரு நாவராசிரியர். இலங்கையின் இலக்கிய விருது பெற்றவரம், சர்வதேச எழுத்தாளர்கள் திட்டத்தின் உலகின் இளம் தேசிய வேட்பாளருமான அரசியல் பொருளாதாரம் மற்றும் கல்வி சீர்திருத்த கல்வி கற்றுவருபவருமான கொழும்பை சேர்ந்த திருச்சி வன்னியாராச்சி என்ற 22 வயதுடைய பெண்னே இந்த கட்டுரையை எழுதியுள்ளார். எனக்கு தெரிந்த உரிமை குறித்து நான் இதை எழுதுகின்றேன். நான் நன்மைகள் குறித்து நன்கு அறிவேன்.நான் சாதாரண சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்தவர். தாய்நாட்டை விட்டு சற்று வெளியில் சென்று பார்போமாயின்,சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை விவாதங்கள் பற்றி கேள்ளவிப்பட்டிருக்கேன் ஆனால் இது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள பயமாக உள்ளது. …

    • 1 reply
    • 557 views
  24. யாழ். பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்க முடியாது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் திசிதரன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது ஒருசில மாணவக்குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு காரணமாகவே ஏற்பட்ட ஒன்றாகும். திட்டமிடப்படாத ஒரு நிகழ்வின் சார்பாகவும் ஏற்பட்ட குழப்பமாகவுமே நாங்கள் இதனை கருதுகின்றோம். மேலும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு என தனியான தொரு கலாச்சார பகிர்வு உண்டு அதனை நாம் எந்த வகையிலோ தனிக்கை செய்யவோ, விடுக்கொடுக்கவோ முடியாத ஒரு சூழ்நிலை காணப…

    • 2 replies
    • 385 views
  25. தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழத்தேசியம் தடுமாறக்கூடாது என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்’ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் நடைபெற்ற “தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்” எனும் தொனிப்பொருளில் கருத்தாய்வுநிலை, கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது. ஏனென்றால், ஆரம்பத்தில் அகிம்சை என்ற தடத்தில் சென்றோம். பின்னர் ஆயுதப்போராட்டம் என்ற நிலையில் சென்றோம். தற்போது ஜனநாயகம், அகிம்சை என்ற தடத்திற்கு வந்திருக்கின்றோம். ஆனால் நி…

    • 2 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.