Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நீதிக்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பலவீனமான நிலையினாலேயே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும், இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என்றும், கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ‘மதுபோதை என்ற காலனிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் கம்பஹா, ராகம பிரதேசத்தில் நடத்தப்படவுள்ள விழிப்புணர்வூட்டும் எதிர்ப்பு பேரணி தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்பில் நடைபெற்றது. கொழும்பு – பொறளையிலுள்ள கர்த்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த ஊடக சந்திபில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந…

  2. வரிச்சுமைக்கு எதிராகப் போராடுவோம்'-யாழில் ஜே.வி.பி துண்டுப்பிரசுரம் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அசாதாரண வரிச்சுமைக்கு எதிராகப் போராடுவோம்' என்ற தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், இன்று வெள்ளிக்கிழமை , யாழ். நகரப் பகுதிகளில், மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி) வநியோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க, இந்தத் துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தார். 'மஹிந்த அரசைப் போன்று மைத்திரி – விக்கிரமசிங்க கூட்டரசும், வற் சுமையை மக்கள் மீது திணிக்கிறது' எனக் குறிப்பிடப்பட்ட இந்தத் துண்டுப் பிரசுரங்களில், 'மோசடி வற்', 'மக்களுக்கு …

    • 1 reply
    • 275 views
  3. பிரதேச செயலகத்தின் பிரதான பெயர்ப்பலகை உடைத்து நாசம் ஜவ்பர்கான் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதான பெயர்பகை விசமிகளால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த பிரதேச செயலகத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டிருந்த இப்பெயர்பலகை கடந்த வாரமே புதிதாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை பெயர்பலகை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/9007

  4. வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்படவேண்டுமென்பதை வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானிக்கும் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்புக்குழு எடுக்கும் முடிவினை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் அபேவர்த்தன யாப்பா தெரிவித்துள்ளார். வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண சபைக்கிடையிலும் கருத்து முரண்பாடு நிலவிய நிலையில் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்த் தே…

    • 0 replies
    • 207 views
  5. தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக ஜே.வி.பி போராடும்.-அநுரகுமார தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கான போராடுவோம் என்று ஜேவிபி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அநுரகுமார திஸாநாயக்க, யாழ் வணிகர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘ இந்தச் சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமானதாக அமைந்திருந்தது. இதன்போது எமக்கு தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தார்கள். குறிப்பாக காணிப் பிரச்சினை முகாம்களில் உள்ள மக்களது மீளக்குடி…

  6. போர்க்குற்ற சிறப்பு நீதிமன்ற விவகாரம் இலங்கை அரசே தீர்மானிக்கவேண்டும்.அமெரிக்கா போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது, இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலுடன் இணைந்து இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவில் நேற்றிரவு கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். போர்க்குற்றங…

  7.  'சிங்கராசா வழக்கை இரத்துச் செய்தால் சிக்கல் தோன்றும்' உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள சிங்கராசா வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் ஊடாக இரத்துச் செய்யப்படுமாயின், அது சட்டமுறைமையில் சிக்கல்களை தோற்றுவிக்கும். அவ்வாறான நிலைமையொன்று உருவாகுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமையானது, தன்னுடைய மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக கூறி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி தர்ஷன வேரவகே என்பவரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் குறிப்பிடப்பட்…

  8. கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த இலங்கை தமிழர் உட்பட இருவரை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓண்டாரியோ மாகாணத்தை நிரஞ்சன் கலைச்செல்வம்(32), ஷாகிலே ஹென்றி(20) மற்றும் ரஷீட் அஹம்த்(25) ஆகிய மூவர் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இவர்களில் நிரஞ்சன் கலைச்செல்வம் இலங்கை தமிழர் என கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 2014 முதல் டிசம்பர் 2015ம் ஆண்டு வரை மூவரும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். குறிப்பாக, நகை கடைக்காரர்களின் வீட்டு முகவரியை தெரிந்துக்கொண்டு அவர்களது வீட்டில் நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர். பொலிசார…

    • 1 reply
    • 400 views
  9. நெடுந்தீவில் நடைபெற்ற வடமாகாணசபையின் குறைநிவர்த்தி நடமாடும் சேவை வடமாகாணசபை யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் இன்று வியாழக்கிழமை குறைநிவர்த்தி நடமாடும் சேவையினை நடாத்தியுள்ளது. இக்குறைநிவர்த்தி நடமாடும் சேவையில் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் அமைச்சு,விவசாய அமைச்சு,சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மீன்பிடி அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்கள் பங்கேற்றிருந்தன. இவற்றோடு, நில அளவைத் திணைக்களம்,தொழில் திணைக்களம், நீர்ப்பாசனத்திணைக்களம்,தொல்பொருளியல் திணைக்களம்,கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்,ஆட்பதிவுத் திணைக்களம் உட்பட மத்திய அரசுக்குட்பட்ட பல்வேறு திணைக்களங்களும் கலந்துகொண்டு தங்கள் சேவைகளை வழங்கியிருந்தன…

  10. 'கேட்டது என்ன? நீங்கள் கொண்டு வந்தது என்ன?' -நடராசா கிருஸ்ணகுமார், சண்முகம் தவசீலன் வட்டுவாகலில் சரணடைந்தோர் விவரத்துக்குப் பதிலாக புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டவர்களின் விவரங்களைக் கொண்டு வந்த முல்லைத்தீவு 58ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தனவை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் கோபமடைந்து ஏசினார். இறுதி யுத்தத்தில் காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் (சின்னத்துரை சசிதரன்) உள்ளிட்ட 05 பேரின் உறவினர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, இன்று வியாழக்கிழமை (14) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இறுதி யுத்தத்தின் போது 58ஆவது படைப…

  11. ஒற்­றை­யா­ட்­சியை ஏற்­ப­டுத்­தவே இரா­ணு­வத்­தினர் உயிரை தியாகம் செய்து போரா­டினர். நாட்டை துண்­டாக பிரிக்கும் சமஷ்டி முறை­யை ஒரு­போதும் அனு­ம­திக்கமாட்டோம் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­கர தெரி­வித்­தார். தாய்நாடு எமது என்ற அமைப்பு இன்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கை­யில்,அர­சாங்கம் ஆட்­சிக்­கு வந்­தது முதல் யுத்­தத்தை வெற்­றி­கொண்ட இரா­ணு­வத்­தி­னரை காட்­டிக்­கொ­டுக்கும் செய­லையே மேற்­கொண்டு வரு­கின்­றது. நாட்டில் ஒற்­றை­யாட்சி இடம்­பெ­ற­ வேண்டும் என்­ப­தற்­கா­கவே இரா­ணு­வத்­தினர் 30 வருடகாலம் போராடி யுத்­தத்…

  12. பிரித்தானியாவின் புதிய பிரதமர் திரேசா மே விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். மிக முக்கியமான தருணத்தில் திரேசா மே பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் நாட்டை வழிநடத்த சக்தி கிடைக்க வேண்டுமென பிரார்த்தனை செய்வதுடன், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=161502&category=TamilNews&language=tamil

  13. பள்ளி, கோயிலுக்கு சென்ற ஜனாதிபதி விகாரைக்கு வராத காரணம் எனக்கும் ஜனாதிபதிக்கும் தெரியும் : கண்ணீர் மல்கிய தேரர்.! ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தும் கிழக்கின் பிரதான விகாரையான மட்டக்களப்பு மங்களராம விகாரைக்கு விஜயம் செய்யாதது முழு கிழக்கு மாகாண பௌத்த மக்களையும் அவமானப்படுத்திய செயலாகும். ஜனாதிபதி விகாரைக்கு விஜயம் செய்யாதமைக்கான காரணம் என்னவென்று எனக்கும் தெரியும். அவருக்கும் தெரியும் என சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள போதும் மட…

  14. 10 நாட்களில் 1 இலட்சத்து 52 ஆயிரம் கிலோ மீன்கள் ஏற்றுமதி ஜுலை முதலாம் திகதி தொடக்கம் ஜுலை 10 ஆம் திகதிவரை 1 இலட்சத்து 52 ஆயிரம் கிலோகிராம் மீன்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதியின் தடையினை கடந்தமாதம் 21 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதை தொடர்ந்து மீன் ஏற்றுமதி வலுவடைந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதியின் தடையின் காணமாக வருடாந்தம் 18 ஆயிரம் மில்லியன் ரூபாவரை இலங்கை இழந்திருந்த நிலையில், இந்த வருடம் 20 ஆயிரம் மில்லியன் ரூபா வருவாயை எதிர்பார்த்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. http://www.v…

  15. கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனா? சுமந்திரனா? : சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது அரசாங்கம் (ஆர்.யசி) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா அல்லது சுமந்திரனா என்பதில் அரசாங்கத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். சம்பந்தனின் கருத்துகளை மீறி சுமந்திரன் கருத்துக்களை முன்வைப்பது ஒருபோதும் செல்லுபடியாகாது எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை நியமிக்க இலங்கை அரசாங்கம் இடமளிக்கும் எ…

  16. வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை இல்லாது செய்ய முயற்சிக்கிறார்கள் பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைய வேண்டும் என்பது தொடர்பில் நடாத்திய வாக்கெடுப்பானது, மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதாக இருக்க முடியாது என வடமாகாண சபையின் எதிர்கட்சியின் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ் யூரோவில் மண்டபத்தில் நடைபெற்ற வடமாகாண மக்கள் செயற்றிட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். வவுனியா பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைப்பது என்பது தொடர்பில் நடத்திய வாக்கெடுப்பு படி ஓமந்தையில் அது அமைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே வடமாகா…

  17. கொத்தணி குண்டு விவகாரம் : சரத் பொன்சேகா கூறும் புதுதகவல் விடுதலை புலிகளுக்கு எதிராக யுத்ததின் போது கொத்தணி குண்டு பிரயோகம் செய்யவில்லை. அதற்கான தேவையும் எமக்கு இருக்கவில்லை. அதுமாத்திரமின்றி கொத்தணி குண்டு போன்ற பாரதூரமான ஆயுதங்கள் எம்மிடம் இருக்கவும் இல்லை. விமான படை பிரயோகம் செய்வதற்கான வாய்ப்பு ஒருபோதும் இருந்ததில்லை. கொத்தணி குண்டு பிரயோகத்தாக கூறுவது மாயையாகும் என முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அத்துடன் போர் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணையின் போது எக்காரணம் கொண்டும் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்க கூடாது. அரசியலமைப்பில் அதற்கான ஏற்பாடுகள் இல்லை. மாறாக உள்ளக விசாரணையின…

  18.  நிஷா பிஸ்வால் - கிழக்கு ஆளுநர் சந்திப்பு (VIDEO) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால், இன்று வியாழக்கிழமை (14) திருகோணமலைக்கு விஜயம் செய்து, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை தரிசம் செய்தார். பின்னர், கிழக்கு மகாண ஆளுநரைச் சந்தித்தார். - See more at: http://www.tamilmirror.lk/177037/ந-ஷ-ப-ஸ-வ-ல-க-ழக-க-ஆள-நர-சந-த-ப-ப-VIDEO-#sthash.cN39BIfI.dpuf

  19. அமெரிக்க டொலர் 133 மில்லியன் முதலீட்டுடன் புதிய ஹோட்டல் நிர்மாணவேலைத்திட்டம் 7 ற்காக அமெரிக்கா இலங்கையில் முதலீடு செய்துள்ளதாக இலங்கைமுதலீட்டு சபை தெரிவித்துள்ளது. சமர் சீசன், சோபியா கொழும்பு, த கோல்டன், கிரவுன் ஹோட்டல், கோல் ஹெரிடேஜ்லங்கா, மெரின் ட்ரைவ் ஹோட்டல் போன்றவையே இலங்கையில்அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தங்கள் இலங்கையின் முதலீட்டு சபையுடன்ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த ஹோட்டலிற்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் வருடங்களில்ஆரம்பிக்கப்படும் எனவும் இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர் சுற்றுலா வியாபாரம் அதிகம்வளர்ச்சியடைந்துள்ளதாகவும…

  20. சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு அழுத்தம்! அனைத்துலக சமூகத்துக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்நிலை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் , நாடாளு…

  21. 16 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது 16 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சினால் இது பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாளைய தினம் முதல் இந்த புதிய விலை நிர்ணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கோழி இறைச்சி ஒரு கிலோ கிராம் தோலுடன் 410 ரூபா, தோல் உரித்து 495 ரூபா சிகப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 169 ரூபா நெத்தலி ஒரு கிலோ கிராம் 495 கடலை ஒரு கிலோ கிராம் 260 பயறு ஒரு கிலோ கிராம் 220 டின் மீன் 480 கிராம் 140 ரூபா வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 95 ரூபா மாவு ஒரு கிலோ கிராம் 87 ரூபா இறக்குமதி செய்யப்ப…

  22. யாழ்.பொம்மைவெளியில் கைக்குண்டுகள் மீட்பு யாழ்.பொம்மைவெளி பகுதியில் 6 கைக்குண்டுகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில், வீட்டு உரிமையாளர்கள் இன்று (வியாழக்கிழமை) துப்பரவு பணியினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, குறித்த கிணற்றில் 6 கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்த வீட்டார், யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனடிப்படையில் விசேட அதிரடிப்படையினரின் துணையுடன், யாழ்.பொலிஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். http://onlineuthayan.com/news/15014

  23. அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார். இன்று (14) காலை 9.45 மணியளவில் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்ததாக அறியமுடிகின்றது. இதன்போது திருக்கோணேஸ்வரம் கோயிலின் சிறப்பு வழிபாடுகளில் நிஷா பிஸ்வால் கலந்துகொண்டுள்ளார். மேலும், இந்த வழிபாடுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்நாண்டோ உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/statements/01/110893

    • 1 reply
    • 436 views
  24. இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்வுத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். இதன் மூலமாகவே நிரந்தர சமாதானத்தை பேணமுடியும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் வலியுருத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலை நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்க உதவிச் செயலாளர் டொம் மலி நவ்ஸ்கியும் பங்கேற்றியமையும் குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை இனப்பிரச்சினை காரணமாக முஸ்லிம் சமூகமும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தலைவர்கள் ப…

    • 0 replies
    • 164 views
  25. பௌத்த பிக்குகள் இவ்வாறு ரவுடிகளைப் போல் நடந்துகொள்வதற்கு மஹிந்த ராஜபக்சவும் அவரது சகாக்களுமே காரணம் என ஊழலுக்கு எதிரான தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்ம மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் தலைமை பௌத்த பிக்குவான அம்பிட்டியே சுமனரத்தன தேரரின் செயல்கள் தொடர்பில் கடும் ஆத்திரம் அடைந்த ஊழலுக்கு எதிரான தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா ஊடகங்களுக்கு பின்வருமாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியால் அனுசரணை வழங்கப்பட்டு போஷிக்கப்பட்ட பௌத்த பிக்குகள் தலைமையிலான இனவாத மற்றும் அடிப்படைவாத குழுக்களுக்கு சுதந்திரமாக செயற்பட நல்லாட்சி அரசாங்கம் அனுமதி அள…

    • 0 replies
    • 231 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.