Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைத் தூதரங்களிலிருந்து சாட்சியமளிப்பது மிகவும் ஆபத்தானது-எச்சரிக்கிறார் சூகா போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மிகமோசமான மனித உரிமைகள் மீறல்கள் குறித்த சாட்சியங்களை வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரங்களிலிருந்து வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று இலங்கை தொடர்பான விசாரணைகளை நடத்திய ஐ.நா நிபுணர் குழுவின் உறுப்பினரும், சர்வதேச மனித உரிமை சட்டத்தரணியுமான யாஸ்மின் சூகா எச்சரிக்கை விடுத்துள்ளார். போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களுக்கான சாட்சியங்களை வெளிநாடுகளிலிருந்தே வழங்குவதனை வகைசெய்யும் சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இவ்வருடம் மே மாதத்தில் அமுலுக்கு வந்த …

  2. கிளிநொச்சி கரைச்சி பிரதேச கிளிநகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் மக்கள் தங்களது காணிகள் விடுவிக்கப்படும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை பத்து பரவிபாஞ்சான் பிரதான வீதியின் ஆரம்பத்தில் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தாங்கள் இன்றும் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களாக அகதி வாழ்வு வாழ்ந்து வருவதாகவும், நண்பர்கள் உறவினர்கள் மற்றும் வாடகை வீடுகளில் தங்களது வாழ்க்கை பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்வதாக பரவிபாஞ்சான் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தங்களுக்கு தங்களுடைய உறுதிக்காணிகள் மீளவும் கிடைக்க வேண்டும் அதுவரைக்கும் இந்தக் …

    • 2 replies
    • 653 views
  3. வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் முயற்சி-ஜனாதிபதி 26 ஆண்டு காலமாக அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக, சுதந்திரத்தின் பின்னர் எந்தவோர் அரசாங்கமும் மேற்கொள்ளாத ஒரு பணியினைத் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் ஊடகங்களின் பொறுப்பு, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்வதே தவிர அவர்களை வழிகெடுப்பது அல்ல எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பேராதனை ஸ்ரீ சுபோதிராம விகாரையில், நேற்று (09) பிற்பகல் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், …

  4. அர்ஜூன் மகேந்திரனுக்கு அமைச்சு ஒன்றில் பதவி? மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு அமைச்சு ஒன்றில் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார விவகார அமைச்சில் முக்கிய பதவியொன்று அர்ஜூன் மகேந்திரனுக்கு வழங்கப்பட உள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் பதவி அர்ஜூன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்டதாகவும் அதனை அவர் நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. பிரதமரின் கீழ் இயங்கி வரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் அர்ஜூன் மகேந்திரனுக்கு உயர் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  5. பூப்புனித நீராட்டு வைபவத்துக்கு சென்றிருந்தவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்த பிரிவில், நேற்று (08) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த அறுவரும், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரும், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பட…

  6. இவ்வாரம் வருகிறார் நிஷா தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால், இலங்கை மற்றும் பங்காளதேஷுக்கு இவ்வாரம், விஜயம் செய்யவுள்ளார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் மன்பிரீட் சிங்கும் நிஸா பிஷ்வாலுடன் விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது, அரசாங்கத் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஆகியோரைச் சந்திக்கவுள்ள பிஷ்வால், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஜனநாயக ஆட்சி, நல்லிணக்கம் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  7. ஜனாதிபதி-பிரதமர் முரண்பாடு சமரச முயற்சியில் ராஜித தலைமையில் குழு? இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நியமனத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டைத் தீர்க்க முடியாமல் அமைச்சர்கள் திண்டாடுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜுன மகேந்திரனை மீண்டும் அப்பதவிக்கு நியமிப்பதில் ஏற்பட்டிருந்த சிக்கல் இன்று பூதாகரமான பிரச்சினையாக மாறியுள்ளது. மத்திய வங்கியின் புதிய ஆளுநராக சரித ரத்வத்தவை நியமிக்க பிரதமர் தீர்மானித்திருந்திருந்தார். எனினும், ஜனாதிபதியின் பணிப்புரையில் இந்திரஜித் குமாரசுவாமி புதிய ஆளுநராக நியமிக்கப்ப…

  8.  வட மாகாண சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம் க. அகரன் வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக செ. மயூரன், இன்று சனிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின், சுழற்சி முறை ஆசனத்துக்கான உறுப்பினராக இதுவரை பதவி வகித்து வந்த எம். பி. நடராசா, கடந்த மாதம் முதலாம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் அடுத்த சுழற்சி முறை ஆசனத்துக்காக செ.மயூரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ அமைப்பின் உறுப்பினரான இவர், அக் கட்சியின் தலைவரும்; நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்…

  9. போரில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் கையூட்டு: பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பினர் குற்றச்சாட்டு இலங்கையில் காணமால் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்களிடம் கையூட்டு மற்றும் பாலியல் கையூட்டு கோரப்பட்டுள்ளதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பைச் சேர்ந்த ஸ்றீள் ஸரூர் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார். ஆவணப்படம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறும் விடயத்தில் காணமால் போயுள்ளவர்கள் பற்றி நம்பகமான விசாரணை நடத்துவதற்காக, அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் குறித்து பொது அமைப்புக்களிடம் கருத்துக்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இதற்காக நடத்தப்பட்ட அமர்வொன்றில் காணாமல் போயுள்ள தமது உறவுகளைக் கண்டுபிடிப்பதற்கான…

  10. சுவிட்ஸலாந்தின் முதன்மை நிறுவனத்தினால் விற்கப்படவுள்ள இலங்கை ஹோல்சீம் சீமெந்து நிறுவனத்தை வாங்குவதற்காக இலங்கையின் வர்த்தகர் ஒருவர் முன்வந்துள்ளார். நந்தசேன லொகுவிதாரண என்ற குறித்த வர்த்தகர் இலங்கையின் பிரபல தனவந்த அரசியல்வாதி ஒருவரின் நிதி நிர்வாகங்களை கவனித்து வந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வர்த்தகர் 5800 கோடி ரூபாய்களை வழங்கி குறித்த சீமெந்து நிறுவனத்தை வாங்குவதற்கு முன்வந்துள்ளதோடு, குறித்த நபர் டுபாய் நாட்டின் மெரியட் ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு தொழிநுட்ப அதிகாரியாக பணிபுரிந்தவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த …

  11. நாடு பூராகவும் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 60,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் இலங்கையின் பிரதான நகரங்களில் இருப்பதாகவும், இவர்கள் 17 தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமை காரணமாகவே அதிகமானோரர் இந்த தொழிலில் ஈடுபடுவதாகவும், பாடசாலை மாணவிகளும் இதில் இணைவதாகவும் பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பல்கலைக்கழகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பாலியல் தொழில் தொடர்பான ஆய்வறிக்கை மூலமும் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகையின் அதிகரிப்பும் இதற்கான பிரதான காரணம் என்றும், அதிகமாக ஹப்புத்தளை,…

  12. கண் எதிரில் தமிழர்கள் கொல்லப்பட்டது எப்படி: பெண் சாட்சியம் தனது கண் எதிரிலேயே தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு சுட்டுக்கொன்றனர் என்று இலங்கை திருகோணமலை குமாரபுரம் தமிழர்கள் படுகொலை வழக்கு விசாரணையில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். அதே நேரத்தில் தான் தப்புவதற்கு இராணுவ வீரர் உதவியதாகவும் கூறியுள்ளார். இலங்கையில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இரு வாரங்களாக தொடர்ந்தும் இடம் பெற்று வரும் குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையில் பெண்கள் உட்பட சுமார் 40 பேர் இதுவரை சாட்சியம் அளித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள் மற்றும் நேரில் கண்டவர்கள் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களே இதுவரை சாட்சியம் அளித்துள்ளனர். மேலும், 18 …

  13. முல்லைத்தீவு- நாயாறு கிராமத்தை அண்மித்த பகுதியில் ”மாயாபுர” என்ற சிங்கள குடியேற்றமொன்றை அமைக்க மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைரசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும். நிரந்தர அமைதியை ஏற்படுத்தவும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுவது இன்றியமையாத ஒரு விடயம் என தொடர்ச்சியாக கூறிவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டிலேயே மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையே உள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு நகரிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கரையோரக் கிராமமான நாயாற்றிலுள்ள நீராவியடி ஏற்றம் என்றழைக்கப்படும் பகுதியிலேயே மாயாபுர சிங்கள குடியேற்றத்தை அமைக…

  14. தனதும்,தனது சகோதரர்களுக்கும் சொந்தமான ஹெலிகொப்டர்,லம்போகினி,தங்கக் குதிரைஎன்பவற்றை கூடிய சீக்கிரம் அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று களுத்துரையில் இடம்பெற்ற மக்கள் ஒன்று கூடல் நிகழ்வின் போதே அவர்இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இன்று வரை தனது தாய் மீது கூட முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது இளைய சகோதரர் மீது மட்டுமே இதுவரை வழக்கு தொடரப்படவில்லை என்றும்தெரிவித்துள்ளார். தன்னுடைய இளைய சகோதரர் போன்ற இளையவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலோ, உயர்நீதி மன்றிலோ வழக்கு தொடர்வது அவர்களுக்கு அகௌரவமான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இ…

  15. விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச பங்களி;ப்பு அவசியமானது – பிரித்தானியா இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச பங்களிப்பு அவசியமானது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் அந்நாட்டு வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் இதனைத் தெரிவித்துள்ளார். விசாரணைப் பொறிமுறைமை நம்பகமானது என சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு, சர்வதேச பங்களிப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச மூலகம் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்து…

  16. ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க வேண்டும்: வடக்கு மீனவர்கள் இருநாட்டு மீனவர்களது, 4ஆம் கட்ட பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தாங்கள் சந்திக்க வேண்டும் என்று வடபகுதி மீனவர்கள் கோரிக்ககையை விடுத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது உள்ளிட்ட வடபகுதி மீனவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாகவே இவ்விருவருடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, வடப்பகுதி மீனவ கூட்டுறவு சங்க தலைவரும் இலங்கை மீனவப்பிரதிநித…

  17. மட்டக்களப்பில் வெளிநாட்டுப் பறவைகள் தற்போது மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் உள்ள வட்டிக்குளம் வாவியில் வெளிநாட்டுப் பறவைகளின் நடமாட்டத்தைக் காணக்கூடியதாக உள்ளது. இப்பறவைகள் இந்தோனேஷியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக அப்பிரதேச வாசியொருவர் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/176004/மட-டக-களப-ப-ல-வ-ள-ந-ட-ட-ப-பறவ-கள-#sthash.Mtxkg6MA.dpuf

  18. சாலாவ சம்பவம் : 800 மெற்றிக்தொன் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டது சலாவ வெடிப்புச் சம்பவத்திற்கு பின்னர் குறித்த பகுதியிலிருந்து 800 மெற்றிக் தொன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதென உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. வெடிப்பு சம்பவத்தின் பின்னர் குறித்த பகுதியிலுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறித்த பகுதியில் உள்ள மேலதிக கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு 8 நாட்கள் வரையிலான காலப்பகுதி தேவையென தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு மேல் மாகாண நிர்வாக திணைக்களம் 22 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது. இதேவேளை …

  19. சீனா இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திரமாக்கும் சீனாவின் கடற்போக்குவரத்துத் துறையுடன் இலங்கை இணையும் பட்சத்தில் இந்து சமுத்திரத்தின் பிரதான கேந்திர நிலையமாக இலங்கை உருவாகும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேன் யு தெரிவித்தார். நேற்று (08) வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இடம்பெற்ற சந்திப்பு நிறைவுபெற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதனை வேன் யு தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் 5 வருடங்களில் கடல் போக்குவரத்தின் அபிவிருத்தியை சீனா முன்னெடுக்கவுள்ளதாகவும், அதனால் இலங்கையை இந்து சமுத்திரத்தின் கடல் போக்குவரத்து கேந்திரமாக மாற்றுவதற்கு சீனா தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குமென அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/ar…

  20.  இந்தியக் கடவுச்சீட்டில் சென்றோர் கைது இந்தியா கடவுச்சீட்டை பயன்படுத்தி, ஓமான் ஊடாக துருகிக்கு சென்று நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்தே அவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக்கொண்ட இருவரும், துருக்கியில் வைத்து 1,000 யூரோக்களை வழங்குவதற்கு உறுதியளித்திருந்ததாகவும் அதனடிப்படையிலேயே, இந்தியக் கடவுச்சீட்டுகள் மற்றும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/176603/இந-த-யக-கடவ-ச-…

  21. Topics : #Chanrika Bandaranayake Kumarathuge#Maithripala Sirisena முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசும் போது எச்சரிக்கை ஒன்றை விடுத்ததாக தெரியவருகிறது. மத்திய வங்கியின் ஆளுநரை தெரிவு செய்வது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். “ நீங்கள் ரணிலுடன் இணைந்து அரசியல் விளையாட்டை விளையாட முயற்சிக்க வேண்டாம். அப்படி நடந்தால், ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைத்து கொள்வார்” என சந்திரிக்கா எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. You may like this.. Sportex E…

  22. கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்றுமுன்தினம் நிறுவிய நிழல் அமைச்சரவை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த நிழல் அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சுக்களிலிருந்து தன்னை நீக்குமாறும் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. நிழல் அமைச்சரவை ஒன்றை அமைக்காமல், அமைச்சரவையை மேற்பார்வை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்குமாறே மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிர்கட்சிக்கு ஆலோசனை வழங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, நிழல் அமைச்சரவையில் நீர்வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட லொஹான் ரத்வத்த, தனக…

  23. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவிகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முறையாக முதலிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கத் தாம் தயார் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் Wencai Zhang உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக கிடைக்கும் உதவிகளை ஊழல் மோசடிகளின்றி சரியாக முதலிடுவதற்கு தமது அரசாங்கத்தினால் நடவடிக்கை எட…

  24. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதூங்க, தனது ஆட்சிக் காலத்தில் நடந்த நவாலி தேவாலயப் படுகொலைக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். நவாலி தேவாலயப்படுகொலையின் இருபத்தோராவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இது தொடர்பில் எழுதியுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நவாலி தேவாலயப் படுகொலை ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடு என்றும் அதில் கூறியுள்ளார். குறித்த படுகொலை இடம்பெற்றபோது இராணுவத்தையும் விமானப்படையையும் நோக்கி உரத்துக் கத்தியதாக சந்திரிக்கா இருபது ஆண்டுகளுக்குப் பின்னரே கூறியுள்ளார் என்றும் அதுவும் ஒரு தேர்தல் காலத்திலேயே இப்படிப் பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆலயங்கள், மரு…

  25. கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த காலத்தில் ரணவிரு ரியலிட்டி ஸ்டார் என்ற பெயரில் தொலைக்காட்சி போட்டி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் போட்டியாளர்ளாக கலந்து கொண்ட விமானப்படையினருக்கு வாக்களிக்க குறுஞ் செய்தி அனுப்புவதற்காக இரண்டு கோடி ரூபாவுக்கும் மேலான விமானப்படையின் பணத்தை கோத்தபாய செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அரச பொதுகணக்கு தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள விமானப்படையின் கணக்காய்வு அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. செலவிட்டுள்ள பணத்தை சம்பந்தப்பட்ட பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகளிடம் அறவிடுமாறு அரச கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில…

    • 0 replies
    • 168 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.