Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமாகாண சபை உறுப்பினர் நால்வர் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு அவரச கடிதம் வடமாகாண சபையை குழப்புகின்றார்கள் என சில உறுப்பினர்கள் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும், முற்றுமுழுதாக அரசியல் காழ்ப்புணா்ச்சியின் வெளிப்பாடே என குறிப்பிட்டு வடமாகாண சபை உறுப்பினர் நால்வர் எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான, இரா. சம்பந்தனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களான இம்மானுவேல் ஆர்னோல்ட், கேசவன் சஜந்தன், அரியகுட்டி பரஞ்சோதி, சந்தரலிங்கம் சுகிர்தன். ஆகியோர் கையொப்பம் இட்டு பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சி உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஊடாக, எதிர்கட்சி தலைவரும், தமிழ் …

  2.  விடுவிக்கப்பட்ட காணிகளின் எல்லை நிர்ணயத்துக்கு உதவுமாறு கோரிக்கை -எஸ்.ஜெகநாதன், எம்.றொசாந்த் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ள 201.3 ஏக்கர் காணிகளின் எல்லை நிர்ணயத்துக்கும் அக்காணிகளைத் துப்புரவு செய்வதற்கும் உதவுமாறு, மேற்படி காணிகளின் உரிமையாளர்கள், நேற்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்தனர். வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து, கடந்த சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர், நேற்று செவ்வாய்க்கிழமை (28) நேரில் சென்று பார்வையிட்டனர். இதேவேளை, வ…

  3. மட்டக்களப்பில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ( சசி ) மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்துக்கு முன்பாக ஆசிரியர்கள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . வருடாந்த இடமாற்றம் தொடர்பாகவும் நிர்வாக ரீதியில் வருடாந்த இடமாற்றம் கோரப்படும் கால எல்லை மீறப்பட்டுள்ளமை, அரச ஆசிரியர் சேவையில் ஒரு வருடத்தில் ஒன்றிற்கும் மேற்படட தடவை வருடாந்த இடமாற்றம், இடமாற்றம் தொடர்பாக பக்கசார்பற்ற இடமாற்றங்கள் போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8265

  4. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது பல அறிக்கைகளில் புதிய ஆதராங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான பக்கசார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது வாய்மூல அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். பலாத்கார கைதுகள் சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், இராணுவ கண்காணிப்பு போன்றன தொடர்பில் தொடரும் குற்றச்சாட்டுகள் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். நீதி விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணயாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு தொடர்பில் மிக முக்கியமான கேள்வி இன்னும் நிலுவையில் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதி…

    • 0 replies
    • 180 views
  5. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று, அமெரிக்க நாடாளுமன்றமான- காங்கிரசின்- 24 உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரிக்கு, இதுதொடர்பான 4 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இந்தக் கடிதத்தில், கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தான், அமெரிக்காவின் மேலதிக நிதி உதவிகள், வர்த்தக மற்றும் இராணுவ சலுகைகள் தங்கியிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெளிவான அறிவிப்பை விடுக்க வேண்டும் என்று கோரப்பட்டு…

    • 0 replies
    • 276 views
  6. சுதந்திரமான நடுநிலையான செற்பாட்டிற்கு சர்வதேச பங்களிப்பு அவசியம். அல் ஹுசேன் வலியுறுத்து பொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான, நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ளஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், புதிதாக எழுந்துள்ள கொத்தணிக் குண்டுக் குற்றச்சாட்டையும் இலங்கை விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்ரெம்பர் மாதம்ற்ற நிறைவேற்றப்பட்ட இலங்கைதொடர்பான தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல அறிக்கையிலேயே இந்தக் கருத்தை வெளியிடவுள்ளார்…

    • 0 replies
    • 487 views
  7. கூட்டமைப்பின் அழுத்தம் போதுமானதாக இல்லை : தமிழர் மனித உரிமை மையம் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து அரசாங்கம் நடத்தவுள்ளதாகக் கூறப்படும் உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கவேண்டும் என்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்கள் போதுமானதாக இல்லை என்று பிரான்ஸை தலைமையகமாகக்கொண்ட தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் ச.வி. கிருபாகரன் தெரிவித்தார். கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் மிகவும் திறமையான முறையில் உலக நாடுகளுக்கு சென்று இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக கூறிவந்தாலும் கூட்டமைப்பின் நான்கு கட்சிகளினதும் பிரதிநிதிகள் ஒன்றாக சேர்ந்து …

    • 6 replies
    • 594 views
  8. வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டகாங்கேசன்துறையில் ஒரு பகுதியில் நிலப்பரப்பில் இருந்த 2 ஆலயங்கள், பொதுச் சந்தைமற்றும் மக்களின் 30 ற்கும் மேற்பட்ட வீடுகள் ஆகியன இருந்த இடம் தெரியாதவாறுபடையினரால் இடித்தழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அப்பிரதேசத்தில் இருந்த சிறிய வீதிகளையும் இராணுவத்தினர் மூடி தமதுதேவைக்காக மாற்று வீதிகளை அமைத்துள்ளனர். இதனால் எமது காணிகளை கண்டுபிடிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது என மீள்குடியேறுவதற்காக அங்கு சென்ற மக்கள் கவலை வெளியிட்டனர். காங்கேசன்துறை பிரதேசத்தில் இருந்து 63 ஏக்கர் காணிகள் 26 வருடங்களுக்கு மேலான இராணுவஆக்கிரமிப்பில் இருந்து கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டது. குறித்த பகுதிகளில் ஏற்கனவே இருந…

  9. Brexitகுறித்து ஆராய குழுவொன்று நியமனம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியமையினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறியமை தொடர்பில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட உள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியமை இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தியா மற்றும் சீனாவுடனான உறவுகளை வலுப்பட…

  10. இலங்கை ஐ.நா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையில் ஜெனிவாவில் இன்று கூட்டம் இடம்பெறுகின்றது. இந்த கூட்டத்தொடரில் கலந்து கொண்ட இலங்கை வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர கருத்து தெரிவித்துள்ளார். கூட்டத்தொடரில் கருத்து தெரிவிக்கும் போது, கடந்த 10 வருட ஆட்சியில் பல விடயத்தை சாதித்துள்ளதாகவும், தொடர்ந்தும் மனித உரிமை மீறல், நீதி விசாரணைகளில் கண்ணும் கருத்துமாக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மற்றும் மனோ ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தொடரில், பேராசிரியர் போல் நியூமேன், செந்தில் குமரன், பொன்னம்பலம், திரு முருகன், ச.வி கிருபாகரன் உட்பட வேறு பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது…

    • 0 replies
    • 445 views
  11. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகிய முன்னாள் புலி உறுப்பினர்களில் இதுவரை 103 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவித்த விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ஒருவரின் மனைவி, சிறையில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகும் முன்னாள் போராளிகள் அனைவரையும் சர்வதேச மருத்துவர்களால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். காணாமற்போனவர்களை வெளிப்படு த்தக்கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் நேற்றையதினம் நல்லூர் ஆலய முன்றலில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,…

  12. ஈழத்தமிழர் இன அழிப்புக்குப் பின்னால் ஒரு சித்தாந்தம் இருக்கிறது : ஜெனிவாவில் அனந்தி (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையின் மூல காரணி தமிழர்களுக்கெதிரான இன அழிப்பு என்பதையும் அதற்கு ஆறு தசாப்தங்களுக்கு மேலான தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது என்பதையும் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக சர்வதேச சமூகத்திற்கு முன்வைத்து வந்திருக்கிறார்கள். இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் என்ற தேசிய இனத்திற்கு எதிராக நடாத்தப்பட்டு வருகின்ற இன அழிப்புக்குப் பின்னால் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. இந்த இன அழிப்புச் சித்தாந்தம் இலங்கை அரச இயந்திரத்தினுள் பல அடுக்குகளில் நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் …

    • 3 replies
    • 601 views
  13. கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உட்பகுதியில் சி.சி.டி.வி கமெரா பொருத்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிவரவு - குடியகழ்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/175751/கட-ட-ந-யக-க-வ-ம-ன-ந-ல-யத-த-ல-ஆர-ப-ப-ட-டம-#sthash.FwXBCbyz.dpuf

  14. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிறுத்தம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் 331 மாணவர்கள் நேற்று (27) இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தரும், விரிவுரையாளரமான எம்.எம்.எம். நஜீம் தெரிவித்துள்ளார். குறித்த மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களுக்கு மேற்கொண்ட பகுடிவதை காரணமாக இடைநிறுத்தம் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புதிய மாணவர்களை பகுடிவதை செய்யக்கூடாது என்ற பல்கலைக்கழகத்தின் முடிவை பல்கலைக்கழகத்தின் 5 பீடங்களில் 4 பீட மாணவர்கள் ஏற்றுக்கொண்டபோதும் முகாமைத்துவ பீட மாணவர்கள் மாத்திரம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. புதிய மாணவர்ளை பகுடிவதைக்கு உட்…

  15. தமிழ் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் இலங்கை, அதன் இராணுவ படைகளை கட்டுப்படுத்துவதோடு, போர்க்காலத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழ் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்களாக ஒரு பயனுள்ள இடைக்கால நீதி பொறிமுறையின் கீழ், சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும், என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் ரால் அல் ஹுசைனின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில், இன்று இலங்…

  16. கொழும்பு, கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியில் கடந்த 2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத் தாக்கதல் நடாத்தப்பட்டது. இதன்போது கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 9 உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் தொடர்பில் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் பொன்னுசாமி கார்த்திகேசு சிவாஜி, சிவலிங்கம் ஆருரன், பத்மநாதன் ஐயர்அல்லது ஸ்கந்தராஜ சர்மா, சந்திரபோஸ் செல்வராஜா, சாள்ஸ் தயாளன் ஆகியோர் எதிராளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டதுடன், 13 தடயப் பொருட்களும் 41 சாட்சிகளும், பெயர் குறிப்பி…

  17. யுத்த காலத்தில் இடம்பெற்ற தமிழீழ படுகொலைகளுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே காரணம் எனவும், இவர் ஒரு துரோகி எனவும் சிறுவர் பாதுகாப்பு மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் லங்காசிறியின் மக்கள் பிரதிநிதியில் தெரிவித்துள்ளார். இதன்போது விஜயகலா ஐ.தே.கட்சியா? அல்லது த.தே.கூட்டமைப்பா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கும், தொடர்ந்து கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் இதன்போது விஜயகலா பதில் கூறியுள்ளார். மேலும், பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை அவர் கேட்டதற்கான காரணம் என்ன? விஜயகலாவின் கணவருடைய DNA அறிக்கை கிடைக்கப்பெற்ற நிலையிலும் ஏன் இதுவரை எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை? போன்ற பல கேள்விக…

  18. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எக்டா உடன்படிக்கையை செயற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும், திருட்டுத்தனமாக இதில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். மேலும், இந்தியாவுடன் திறந்த பொருளாதார கொள்கை என்று கூறிக்கொண்டு நாட்டை பாதாள குழியில் தள்ளுவதற்கு இந்த அரசு முடிவெடுத்துள்ளதாக கூறினார். பிரதமரின் தனிப்பட்ட தேவைகளுக்காகவே எக்டா உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்டால் தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல் போகும் எனவும், நம் நாட்டில் முதலீடு செய…

  19. மலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை ஆரம்பம் காதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். மலையகத்தின் மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ ஆகிய தோட்டப்பகுதிகளிலுள்ள பக்தர்கள் 7ஆவது ஆண்டாக நேற்று இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். ஒரு நாளைக்கு 35 கிலோ மீற்றர் பாதயாத்திரையாக பயணிக்கும் இவர்கள் நுவரெலியா, பண்டாரவளை, வெல்லவாய, புத்தள, வழியாக கதிர்காமத்தை சென்றடைவார்கள். இவர்கள் பாதயாத்திரையாக செல்லும் பிரதான நகரங்களிலுள்ள கோவில்களிலும் விகாரைகளிலும் தங்குவதாகவும் அங்கு அவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்…

  20. சர்வதேச நீதிபதிகள் விவகாரத்துக்கு நாளை பதிலளிக்கவுள்ள அரசாங்கம் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நாளை புதன்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் தனது அறிக்கையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டதும் இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமாகும். அதன் பின்னர் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்பான தமது கருத்துக்களையும் யோசனைகளையும் வெளியிடவுள்ளன. அதன் பின்னர் இலங்கையின் சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமை பேரவையில் உரையாற்றவுள்ளார். இதன்போது ஏற்கனவே உத்தியோகப…

  21. ஜெனிவாவில் சர்வதேச நீதிபதிகளின் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தும் தமிழர் பிரதிநிதிகள் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தை முன்னிறுத்திய உப குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் இலங்கை நிலைமை தொடர்பாக ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெற்ற உபகுழுக் கூட்டத்தில் இலங்கையிலிருந்து ஜெனிவா சென்றுள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ள…

  22. மக்கள் நம்பிக்கை வைக்காவிடின் விசாரணையில் அர்த்தமில்லை ;எஸ்.ஜே. இம்மானுவேல் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறவேண்டியது அவசியமாகும். அதாவது எவ்வாறான விசாரணை பொறிமுறையாக இருப்பினும் அது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவில் அமையவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்காவிடின் எதனையும் செய்ய முடியாது. அது தீர்வாகவும் அமையாது என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் எஸ்.ஜே. இம்மானுவேல் தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள டாக்டர் இம்மானுவேல் வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்து பகிர்கையிலேயே மேற…

  23. போரின் தாக்கமே வடக்கில் கல்வி நிலை வீழ்ச்சியடைய காரணம் என்றும் இந்த தாக்கமானது இன்னும் 15 வருடங்களுக்கு தொடரும் எனவும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்திற்கான புதிய கட்டடம் நேற்று ஜப்பானிய தூதுவரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=160392&category=TamilNews&language=tamil

  24. தனக்கு இன்னமும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதால், தொடர்ந்தும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “ குறிப்பிட்ட தரப்புகளினால் எனது உயிருக்கு இன்னமும் அச்சுறுத்தல் இருப்பதாக நம்புகிறேன். எனவே, எனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்குப் பதிலாக, காவல்துறையினரை ஈடுபடுத்த வேண்டாம் என்று பாதுகாப்புச் செயலரை கேட்டுக் கொள்கிறேன். என் மீது குண்டுத் தாக்குதல் நடத்த உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை மன்னிப்பதற்கு நான் தயாராக இல்லை. நான்கு கைதிகளையும், பொதுமன்னிப்பில் விடுதலை செய்வது அரசாங்கத்தின் வேல…

  25. இலங்கைக்கு சொந்தமான கடல் வலயம் 2020ம் ஆண்டளவில் மேலும் அதிகரிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச கடற்பரப்பிற்கு சொந்தமான மேலும் ஒரு கடல் பகுதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு தற்போது சொந்தமாக உள்ள கடல் பரப்பு இலங்கையை போன்று 60 மடங்கு பெரியவை. எதிர்காலத்தில் மேலும் 23 மடங்கு கடற்பரப்பு இலங்கைக்கு சொந்தமாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு தொடர்புடைய பல நிறுவனங்களுடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.