ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
வெளி மாவட்டத்தில் இருந்து அத்துமீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களால், வடமராட்சி கடல்பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகின்றமை தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் தலைமையில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (25) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வெளி மாவட்டத்தில் இருந்து அத்துமீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களால், வடமராட்சி கடல்பகுதியில் கரைவலை மற்றும் ஏனைய வலைகள் மூலம் தொழிலில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்களின் வலைகள் மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு வந்தன. மிக நீண்ட காலங்களாக நிலவி வந்த இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக வடமராட்சி மீனவர் சங்க சமாசம் மற்றும் சம்மேளன பிரதிநிதிகளையும…
-
- 0 replies
- 232 views
-
-
புத்தளம் பாலாவிப் பிரதேசத்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைக்க சிறீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விமானநிலையக் கட்டுமானப் பணிகளுக்கு 750 மில்லியன் ரூபா செலவிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. புதிய விமானநிலையக் கட்டுமானத்துக்கு 26 ஹெக்டயர் நிலம் அபகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் விமானநிலையங்களை புனரமைப்புச் செய்யும் நிதித் திட்டத்தின்கீழ் இந்தப் புதிய விமானநிலையம் அமைக்கப்படவுள்ளது. இதன்படி மட்டக்களப்பில் அமைந்துள்ள விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் புத்தளம் பாலாவியில் சிறிய விமானநிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனையே தற்போ…
-
- 0 replies
- 272 views
-
-
பொதுமக்கள் மீது க்ளாஸ்டர் குண்டுகள்! சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயார்!! ஜெரா இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் – க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் கார்டியன் இணையதளம் வெளியிட்ட செய்தியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தியமைக்கு வலுவான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போர் இடம்பெற்ற பகுதிகளில் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் சர்தேச மனிதாபிமான தொண்டு நிறுவனங்களை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டிருக்கும் குறித்த செய்தி பலரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இறுதிப் போரின்போது க்ளாஸ்டர் குண்ட…
-
- 0 replies
- 386 views
-
-
வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம் வடக்குக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அரச படையினரை அகற்றிக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும் என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிலிருக்கும் இராணுவத்தை வெளியேற்றும் நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் அனைத்துக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்த தூதுவர் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார். அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்குள் இராணுவம் அகற்றிக்கொள்ளப்பட்ட…
-
- 8 replies
- 848 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணரின் 12 மணித்தியால அதிநுட்பம் வாய்ந்த சத்திரசிகிச்சை மூலம் 4 வயது குழந்தை இழந்த வலது கையை மீண்டும் பெற்றுள்ளது. மன்னாரை சேர்ந்த நான்கு வயது ஆண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது, வலது கையின்மீது வீட்டு கூரைக்கு போடப்பட்டிருந்த தகரம் விழுந்துள்ளது. இதனால் குழந்தையின் வலது கரம் முழங்கையின் கீழ் துண்டாடப்படட நிலையில் பதறிப்போன பெற்றோர் துண்டாடப்பட்ட கையுடன் சிறுவனை மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். உடனடியாக துண்டாடப்பட்ட கையினை ஐஸ் கட்டியில் வைத்து மன்னார் வைத்தியசாலையிலிருந்து சிறுவன் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். நள்ளிரவில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சிறுவன…
-
- 3 replies
- 328 views
-
-
'மக்களது கருத்துக்களைக் கொண்டே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்' பெறப்பட்டுள்ள மக்களது கருத்துக்களைக் கவனத்திற் கொண்டு எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி வித்தியாலோக மகா பிரிவெனாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “பொதுமக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே அன்றி அதற்குப் புறம்பான எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாரில்லை. புதிய அரசியலமைப்பைத் தயாரிப…
-
- 0 replies
- 343 views
-
-
முன்கூட்டியே வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை! ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள வாய் மூல அறிக்கை நாளை ஐ.நா இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜெனிவாவில் தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக வரும் 28ஆம் நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது. இதன் போது, கடந்த ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்…
-
- 0 replies
- 243 views
-
-
'இந்துக்களின் நல்லெண்ணங்களை மதிக்கின்றேன்' “நான் இந்துக்களை மதிக்கின்றேன். இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் மாற்று மதத்தினர் பலாத்காரமாக சிலை வைத்துள்ள விவகாரம் தொடர்பாகவும் மட்டகளப்பு காசி லிங்கேஸ்வரர் ஆலய வரலாற்று தொல்பொருள் சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இந்துக்கள் எதிர்நோக்கும் சமகால ப…
-
- 8 replies
- 719 views
-
-
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்து விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ மேஜர் ஒருவர் தொடர்ந்தும் இராணுவ சேவையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ லெப்டினன் ஒருவருடைய 13 வயதான மகளை குறித்த இராணுவ மேஜர் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவ மேஜரை கைது செய்த கஹாதுடுவ பொலிஸார் அவரை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விளக்க மறியலில் வைத்திருந்தனர். இந்த இராணுவ மேஜரை தொடர்ந்தும் சேவையில் வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பேபுஸ்ஸ சிங்க ரெஜிமன்ட் முகாமில் இந்த இராணுவ மேஜர் கடமையாற்றியுள்ளார். மனைவியின் சகோதரரின் மகளையே இவ்வாறு துஸ்பிரயோகம்…
-
- 3 replies
- 362 views
-
-
தெல்லிப்பளை பிரதேசத்தில் 5, 100 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவுள்ளன [ Sunday,26 June 2016, 05:22:35 ] யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட 5 ஆயிரத்து 100 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது 201.3 ஏக்கர் காணிகள் நேற்று சனிக்கிழமை மீளக்கையளிக்கப்பட்டன. இந்தநிலையில் தெல்லிப்பளை பிரதேசசெயலர் பரிவுக்குட்பட்ட பகுதிகளில் 5100 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வல்லை, தெல்லிப்பளை, அராலி வீதியை அண்மித்த 126.18 ஏக்கர் காணிகளும், காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை அண்மித்த 63 ஏக்கர் க…
-
- 0 replies
- 400 views
-
-
2020இலும் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியை போட்டியிட கோரிக்கை எதிர்வரும் 2020ம் ஆண்டிலும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் நிறுத்தக்க…
-
- 3 replies
- 383 views
-
-
பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்று பதிவுகளைக் கொண்ட நூல் இன்று காலை மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 18 வருடங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஓர் போராளியாக செயற்பட்டு தற்போது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி வெற்றிச் செல்வி எழுதிய ஏழாவது நூலான பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்று பதிவுகளைக் கொண்ட 'ஆறிப்போன காயங்களின் வலி' எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது. ஆசிரியை தனலெட்சுமி கிருஸ்துராஜன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், சிறப்பு விருந்தினராக மருத்துவ போராளி திருமதி தனேஸ்குமார் சத்திய…
-
- 0 replies
- 435 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் மனகசப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த சில கோரிக்கைகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதகமான பதில்களை வழங்காமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற சோபித தேரரின் 74வது ஜனன தின வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் பேசிக்கொள்ளவில்லை என்பது இதற்கு உதாரணம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. http://www.tamilwin.com/politics/01/108899
-
- 0 replies
- 351 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 20 பில்லியன் அமெரிக்க டொலர் பணம் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். தகவல் அறியும் சட்டம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் போதே நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஆட்சிக்கு வரும் முன்னதாக அளிக்கும் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நிறைவேற்றப்படுவதில்லை. நாட்டை அபிவிருத்தி செய்ய 20 பில்லியன் டொலர் பணம் மஹிந்த காலத்தில் நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேவேளை, தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி நாம் …
-
- 0 replies
- 418 views
-
-
பாதுகாப்பிற்கு தேவையான காணிகள் தவிர்ந்த ஏனைய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பு தேவைக்குரிய காணிகளைத் தவிர ஏனைய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படுமென பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். குடநாட்டில் மூவாயிரம் ஏக்கர் காணிகளே தற்போது படையினர் வசம் உள்ளதாக குறிப்பிட்ட அவர் 2018ஆம் ஆண்டுக்குள் காணிவிடுவிப்பு செயற்பாடுகள் நிறைவடையும் எனவும் உறுதிபடத்தெரிவித்தார். யாழ்குடாநாட்டில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளின் உறுதிப்பத்திரங்களை மக்களிடத்தில் கையளிக்கும் நிகழ்வு இன்று (25) காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்க…
-
- 2 replies
- 475 views
-
-
இராணுவத்தினரின் பேருந்துக்களில் ஏற்றி செல்லப்பட்ட மீள் குடியேற்ற மக்கள்:- 25 ஜூன் 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- இராணுவத்தினரின் பேருந்துக்களில் ஏற்றி செல்லப்பட்ட மீள் குடியேற்ற மக்கள் வலி.வடக்கில் இன்றைய தினம் காணி கையளிப்பு நிகழ்வுக்கு சென்ற காணி உரிமையாளர்களை இராணுவத்தினர் தமக்கு சொந்தமான பேருந்துகளிளையே ஏற்றி சென்றனர். வலி.வடக்கில் இன்றைய தினம் 201 ஏக்கர் காணி அதன் உரிமையாளரிடம் மீள கையளிக்கும் நிகழ்வு காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் நடைபெற்றது. அந்நிகழ்வுக்கு சென்ற காணி உரிமையாளர்களை தமது சொந்த வாகனங்களில் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கு இராணுவத்தினர் அன…
-
- 2 replies
- 282 views
-
-
இராணுவத்துக்குள் இருக்கும் பாஸிசவாத கொள்கையுடையவர்களின் துணையுடன், அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக நாட்டுக்குள் சதி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 'அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் பொய் வதந்திகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சதி நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. இந்த சதித்திட்டங்களுக்குள் கடந்த அரசாங்கத்தில் இராணுவத்துக்குள் இருந்து பாஸிசவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களும் இருக்கின்றனர். அவர்கள்தான் அரசாங்கத்துக்கு எதிரான சதி நடவடிக்கைகளுக்…
-
- 1 reply
- 473 views
-
-
இலங்கையர் ஒருவர் உட்பட்ட 45 பேர் அமரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டத்தின்கீழ் இன்டர்போல் அறிவுறுத்தலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த நபர்கள் அமரிக்காவின் அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே கைதுசெய்யப்பட்டனர். கடந்த 21ஆம் திகதியில் இருந்து 23ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அமரிக்க குடிவரவு அதிகாரிகள் மற்றும் அமரிக்காவின் மார்சல்ஸ் சேவையினர் இணைந்து குறித்த நபர்களை கைதுசெய்துள்ளதாகவும் அமரிக்கா உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அமைச்சின் அறிக்கையின்படி 38 வயதான பொதுவிலாகே உசான் …
-
- 0 replies
- 504 views
-
-
5 கிலோகிராம் ஹெரோய்னுடன் பாகிஸ்தான் பிரஜை கைது 5 கிலோகிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை, கட்டுநாயக்க பண்டாராநாயக்க விமான நிலையத்தில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த ஹெரோய்ன் போதைபொருளின் பெறுமதி சுமார் 5 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/175510/-க-ல-க-ர-ம-ஹ-ர-ய-ன-டன-ப-க-ஸ-த-ன-ப-ரஜ-க-த-#sthash.j4CBvNVR.dpuf
-
- 1 reply
- 331 views
-
-
சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ! சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. வவுனியா பேரூந்து நிலையம் முன்பாக இன்று காலை 10 மணியில் இருந்து 11 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘சம்மந்தன் ஐயாவே! சம்பூருக்கு தீர்வென்ன, சோற்றையும் தந்து நஞ்சையும் தருவதா, நிலக்கரி மின் நிலையம் மக்களின் வாழ்வுக்கு நாசம், வள…
-
- 0 replies
- 262 views
-
-
வவுனியாவில் வாள்வெட்டு - நான்கு பேர் படுகாயம் வவுனியா வைரவபுளியங்குளம் புகையிரத நிலையவீதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி திருத்தும் நிலையத்தில் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த வாள்வெட்டுச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டி திருத்தும் நிலையத்தில் வேலையில் இருந்த நான்கு பேரை சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு முச்சக்கரவண்டியினை அதே இடத்தில் நிறுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார். மேலும் முச்சக்கர வண்டியை வவுனியா பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்க…
-
- 0 replies
- 242 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது எனப் பிரசாரம் செய்வதற்காக இலங்கை அரசு அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை அனுப்பியிருந்த நிலையிலும், அந்த முயற்சி தோல்வியடைந்து இன்று டேவிட் கமரூன் தனது பதவியை இராஜினாமா செய்யும் நிலை உருவாகியுள்ளது என்று மஹிந்த ஆதரவு அணி எம்.பியான தினேஸ் குணவர்தன தெரிவித்தார். இதனால், அவருக்கும் பிரதி வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் சபையில் நேற்று கடும் சொற்போர் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் அறியும் சட்டமூலம்மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது மேற்படி சர்ச்சை உருவாகியது. தனது உரையின்போது தினேஷ் குணவர்தன எம்.பி., "ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்பதற்காக அந்நாட்டு பிரதமர் டேவ…
-
- 0 replies
- 396 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை அமெரிக்க தூதுவர் அடுல் கெசப் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் ஊடக பணியகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்தார். இலங்கை தொடர்பான வாய் மூல அறிக்கை அடுத்த வாரமளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்ட தொடரில் சமர்ப்பிக்கபடவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், குறித்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதுவித விபரங்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01/10885…
-
- 1 reply
- 340 views
-
-
பிரிட்டன் விலகியதால் இலங்கைக்கு சிக்கல் பிரிட்டனை பாதுகாப்பதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதிக்கான ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதுமே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது என வெளிவிவகார பிரதியமைச்சன் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சபையில் தெரிவித்தார். பிரிட்டனுடன் விரைவில் வர்த்தக உடன்படிக்கையொன்றை கையெழுத்திட இருப்பதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இவ்வாறு தெரிவித்தார். பிரதியமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில், உலகில் மிக விரைவில…
-
- 1 reply
- 466 views
-
-
போதைபொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 3 முக்கிய புள்ளிகள் சிக்கினர் கொழும்பு நகரத்தில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிகளில் இடம்பெறும் பாரியளவிலான போதைபொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து எல்.எஸ்.டி போதைபொருள் அடங்கிய 200 முத்திரை மற்றும் 49 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர், பிரபலமான துணி உற்பத்தி நிறுவனத்தின் முகாமையாளர் என தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/175513/ப-த-ப-ர-ள-வர…
-
- 1 reply
- 279 views
-