Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு - பதுளை வீதியில் உள்ள புத்தம்புரி பகுதியில் விடுதலைப்புலிகளினால் பராமரிக்கப்பட்ட கொய்யாத்தோட்டம் இன்றும் காய்த்து கொண்டுதான் இருக்கின்றது. கொய்யாத்தோட்டம் என்று அழைக்கப்படும் மேற்படி இடமானது விடுதலைப்புலிகளின் காலத்தில் மிகப்பெரிய தோட்டமாக இருந்துள்ளது. விடுதலைப்புலிகளின் காலத்திற்குப் பின்னர் குறித்த தோட்டத்தை அரசாங்கமோ அல்லது நிறுவனங்களோ பொறுப்பேற்று நடத்த தவறியதால் குறித்த பிரதேசத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகின்றது. Go to Videos விடுதலைப் புலிகளின் கொய்யாத்தோட்டம்! தற்போது கச்சான்…

  2. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் ஜூலை 04 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் வாகனத்தை பயன்படுத்தி அரசாங்கத்தின் ரூபா 62 இலட்சம் பணத்தை முறையற்ற விதத்தில் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்காகவே அவர் நேற்று கைது செய்யப்பட்டார். பொது சொத்துகள் தொடர்பான கட்டளைச் சட்ட இலக்கம் 05, பண மோசடி தொடர்பான 03 இலக்க சட்டம், இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் இல. 300, 386, 389 மற்றும் 400 இன்கீழ் அவர் மீது மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை, பொலிஸ் நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவினால் முன்வைக்கப்பட்டிருந்தது. சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான எவ்வித சிறப்புக் காரணம் இல்லை என்பதாலும்…

  3. லசந்த விக்கிரமதுங்க, பிரகித் எக்னளிகோடா குறித்த ஆவணங்கள் மாயம் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப் பட்டது மற்றும் பிரகித் எக்னளிகோடா காணாமல் போனது ஆகிய சம்பவங்கள் குறித்த போலிஸ் விசாரணைகளுக்கு அவசியமான ஆவணங்கள் காணாமல் போயுள்ளமை சம்பந்தமாக ஆராய்வதற்கு இரண்டு ராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. ராணுவ தளபதி இந்த இரண்டு ராணுவ நீதிமன்றங்களை நியமத்துள்ளதாக இலங்கை ராணுவம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் கொலை செய்யப்பட்ட 'சண்டே லீடர்' பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் ஊடகவியலாளர் பிரகித் எக்னளிகோடா காணாமல் போனமை தொடர்ப்பாக தற்போது போலிஸ் குற…

  4. ராஜித இராஜினாமா? “மருந்தின் விலை குறைப்பு தொடர்பில் நடைபெற்று வரும் ஊழல் மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டால், தான் பதவியிலிருப்பதில் பயனில்லை” என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவராக பேராசிரியர் அசித டீ சில்வா பதவியேற்கும் நிகழ்வு, திங்கட்கிழமை (20) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையபற்றிய அவர், “மேலும், மூன்று மாதங்களில் குறைந்த விலையில் சிறந்த ஒளடதங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்றிட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். மக்கள் உணரும் சேவையொன்றை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டமொன்றை த…

  5. இலங்கை அரசியல்வாதிகளில் பேஸ்புக்கில் புதிய சாதனைப் படைத்த ஜனாதிபதி..! இலங்கை அரசியல்வாதிகளில் பேஸ்புக்கில் 10 இலட்சம் லைக்ஸை பெற்ற முதலாது அரசில்வாதி என்ற பெருமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுள்ளார். இந்த இலக்கை கடந்த சனிக்கிழமை பெற்றுள்ளார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்றைய தினமே பத்து இலட்சம் லைக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ 10 இலட்சம் லைக்களை பெறுவதற்கு 9 வருடங்கள் ஆகியுள்ளதோடு, மைத்திரிபால சிறிசேன 18 மாதங்களில் 10 இலட்ச லைக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7781

  6.  நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு? நாடாளுமன்ற வளாகத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கைகலப்புச் சம்பவமொன்று இடம்பெற்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. ஆளுங்கட்சியின் பிரதியமைச்சர் ஒருவருக்கும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இடையிலேயே இந்த கைகலப்பு இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/175215/ந-ட-ள-மன-ற-வள-கத-த-ல-க-கலப-ப-#sthash.LnOsVxUO.dpuf

  7. விவாதப் போட்டியில் யாழ். இந்து சம்பியன் மொறட்டுவப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தால், அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சொற்கணை விவாதப் போட்டியின்;, யாழ். மாவட்ட மட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி சம்பியனாகியது. 17 பாடசாலைகள் பங்குப்பற்றிய இப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலிடத்தையும், சென்.ஜோன்ஸ் கல்லூரி இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. இதில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இந்துக் கல்லூரி அணி, தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளது. (எஸ்.குகன்) - See more at: http://www.tamilmirror.lk/175179/வ-வ-தப-ப-ட-ட-ய-ல-ய-ழ-இந-த-சம-ப-யன-#sthash.bRH3Q5JY.dpuf

  8. கேரள கஞ்சா மற்றும் உள்நாட்டு கஞ்சாவுடன் நால்வர் கைது.! கேரளா கஞ்சாவை விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த மூவரையும், உள்நாட்டு கஞ்சாவை விற்பனை செய்த ஒருவருமாக நால்வரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மதுவரி திணைக்கள சிரேஷ்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார். இன்று காலை நடாத்திய சுற்றிவளைப்பில், காத்தான்குடி முதியோர் இல்ல வீதியில் வீடொன்றில் கேரளா கஞ்சாவை பொதி செய்து விற்பனைக்காக தயாராக வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கர்பலா வீதியில் உள்நாட்டு கஞ்சாவை விற்பனை செய்த ஒருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்…

  9. "எங்களுடைய பொலீஸ்மா அதிபர் என வடக்கு மக்கள் அச்சமின்றி கூறவேண்டும்" பூஜித ஜயசுந்தர இவர் எங்களுடைய பொலீஸ்மா அதிபர் என வடக்கு மக்கள் அச்சமின்றி கூறவேண்டும் என்று பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அவர் மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளர். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்தில் பிரதி பொலீஸ்மா அதிபராக கடமையாற்றியிருக்கின்றேன். எனவே இந்தப் பிரதேசத்தின் நிலைமைகளை நான் நன்கறிவேன், பல தடவைகள் இதற்கு முன் சிவில் அமைப்புக்களை சந்தித்திருக்கிறேன் எனவே வடக…

    • 1 reply
    • 451 views
  10. தேர்தலில் மஹிந்த அணி தனித்து போட்டியிட போவதாக சற்றுமுன்னர் அறிவிப்பு லியோ நிரோஷ தர்ஷன் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி தனித்து போட்டியிட போவதாகவும் எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய போவதில்லை எனவும் கூட்டு எதிரணி சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது. கொழும்பில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு எதிரணி இதனைத் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/7855

  11. கடந்த ஆட்சிக்காலத்­தின்­போது 20 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் வெளிநாட்­டில் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­து : அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க கடந்த பத்து வருட ஆட்­சிக்­கா­லத்தின் போது சுமார் 20 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் சட்­ட­வி­ரோதமாக வெளி­நாட்டில் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது. இது புள்­ளி­வி­பர ரீதி­யாக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் இது தொடர்­பி­லான பனாமா ஆவணம் விரைவில் வெளி­வரும் என மாந­கர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். இது தொடர்பில் நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினால் மாத்­திரம் விசா­ரணை செய்து கண்­டு­பி­டிக்க முடி­யாது. இதற்கு சர்­வ­தேச உத­வியும் மிக அவ­சி­ய­மாகும் என்றும் அவர் குறிப்­…

  12. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 32 ஆவது கூட்டத் தொடரில் எதிர்­வரும் 29 ஆம் திகதி இலங்கை விவ­காரம் குற­ித்த வாய்­மூல அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் இலங்கை அர­சாங்­கமும் தமி­­ழ்த் தேசி­யக் கூட்­­ட­மைப் பும் ஜெனி­வாவிலும் வேறு பல இடங்­க­ளிலும் பல்­வேறு சந்­திப்­புக்­களை நடத்­த­ி­வ­ரு­கின்­றன. குறிப்­பாக ஜெனி­வாவில் தங்­கி­யுள்ள இலங்­கை­யின் வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆர­ி­ய­­சிங்க உறுப்பு நாடு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளி­டன் இலங்­கை அர­சாங்கம் முன்­னெ­டுக்­கும் வேலைத்­திட்­டங்கள் குறித்து விளக்­க­ம­ளித்­து­வ­ரு­கி­ன்­றார். குறிப்­பாக அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையின் வடிவம் குறித்தும் அதன் கட்­ட­மைப்பு தொடர்­பா­கவும் அவ…

    • 0 replies
    • 301 views
  13. அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு பிரதிநிதித்துவ அரசியல் முறையிலிருந்து ஒதுங்குவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் திங்கட்கிழமை (20) விடுத்துள்ள அறிக்கையில், '1981ஆம் ஆண்டு தொடங்கிய எனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளதாகவும் எதிர்காலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற, மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. பிரதிநிதித்துவ அரசியல் முறையிலிருந்து விலகுவதுடன், இனி எந்தவொரு கட்சியிலும் தேசியப்பட்டியலின் மூலமோ, எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது வேறு ஏதேனும் முறையில் நாடாளுமன்றத்துக்கோ, மாகாண சபைக்கோ மக்கள் பிரதிநிதியாகச் செல்லப்போவதில்லை' என்றார். 'சமகால அர…

    • 0 replies
    • 393 views
  14. மொஹமட் முஸம்மில் கைது தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில், நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/175110/ம-ஹமட-ம-ஸம-ம-ல-க-த-#sthash.dFzQEAL7.dpuf

  15. படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதனை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது. அரசாங்கத்தின் பொறுப்புணர்ச்சியற்ற செயற்பாடுகளின் காரணமாக அரசாங்கம் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை அரசாங்கம் வாசித்து புரிந்து கொண்டதா என்பதில் சந்தேகம் உள்ளது. ஏனெனில், அரசாங்கப் படையினர் சிவிலியன்களை கொலை செய்ததாகவும் சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டதாகவும் நம்புவதற்கு போதியளவு ஏதுக்கள் காணப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்…

  16. ஜெனீவா ஊடக மையத்தியில் நடைபெறும் ஈழத்தமிழர்கள் தொடர்பான பத்திரிக்கை மாநாடு சற்று முன் ஆரம்பித்தது. இப் பத்திரிக்கை மாநாட்டில் தாயகத்தில் இருந்து சின்னமணி கோகிலவாணி , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தென் ஆபிரிக்காவில் இருந்து பிரபல சட்டத்தரணி கிஸ்டன் கோவிண்டோர் , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக திரு திருச்சோதி அவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு பரிகார நீதியை தேடியும் தாயகத்தில் " நல்லாட்சி அரசின் " கீழ் உள்ள இன்றைய உண்மை நிலைமையையும் எடுத்துரைக்கும் முகமாக உரையாடிக்கொண்டிருகின்றார்கள். http://www.tamilwin.com/living/01/108346

    • 2 replies
    • 526 views
  17. தற்போது ஜெனீவாவில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள் இலங்கை அரசின் நிலையால் மாற்றப்பட்டிருக்கின்றதா? என்பது தொடர்பிலும் இந்திய ஏகாதிபத்திய அரசியலில் இலங்கையின் நலன் எப்படி இருக்கின்றது என்பது தொடர்பிலும் இந்த வார வட்ட மேசையில் ஆராயப்பட்டுள்ளது. அவிஸாவளை பகுதியில் கொஸ்கம பிரதேசத்தில் அமைந்துள்ள சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பிரதேசம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்ததுடன் சாலாவ பிரதேசத்தை சுற்றி சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இந்திய ரோ இருப்பதாக சந்தேகம் உள்ளதாக சட்டவாளரும் சிரேஸ்ர அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் இந்த வாரம் அரசியல் க…

  18. காலி முகத்திடலில் 20 இளைஞர்கள் கைது : 5000 ரூபா தண்டம் கொழும்பு, காலி முகத்திடலில் பகிரங்கமாக கஞ்சா போதைப்பொருளை புகைப்பிடித்துக் கொண்டிருந்த 20 இளைஞர்கள் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களை இன்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, ஒவ்வொருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. குறித்த நபர்களில் 16 வயதுடைய சிறுவன் ஒருவனும் இருந்துள்ளதோடு குறித்த சிறுவனுக்கு 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/7825

  19. 12 வயது மாணவி துஷ்பிரயோகம்: அதிபர், ஆசிரியர்களுக்கு விளக்கமறியல் -செல்வநாயகம் கபிலன், கி.பகவான் வரணி பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயது மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய அப்பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட 5 பேரை எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் ஞாயிற்றுக்கிழமை (19) உத்தரவிட்டார். அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர், இந்தச் சம்பவத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்த அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் 3 ஆசிரியைகள் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி பாடசாலையில் கற்…

    • 3 replies
    • 557 views
  20. மட்டக்களப்பில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு.! மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் வளவொன்றில் இருந்து நேற்றிரவு பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வளவினுல் வீடு கட்டுவதற்கு குழிகள் தோண்டியபோது பைகளில் சுற்றப்பட்;ட நிலையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, ரி 56 துப்பாக்கிகள் நான்கும் மகசின்கள் எட்டும் ரி-56 துப்பாக்கிகளுக்கான ரவைகள் 210வும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு பிரதிப்பொலிஸ் மா அதிபர் டபிள்யு ஜெ.ஜாக்கொட ஆராய்ச்சி, மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பதில் பொறுப்பதிகாரி அஜித் க…

  21. சாலாவ இராணுவ வெடிப்பு சம்பவத்தின் போது முகாமினுள் இருந்து எடுக்கப்பட்ட காணொளி வெளியாகியது (வீடியோ இணைப்பு) அவிசாவளை கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் கடந்த 5 ஆம் திகதி ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது இராணுவ முகாமினுள் இருந்து எடுக்கப்பட்ட காணொளி தற்போது வெளியாகியுள்ளது. குறித்த சம்பவத்தின் போது பிரதேச வாசிகள் இராணுவ முகாம் அமைவிடத்திலிருந்து 6 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் செல்லுமாறு பணிக்கப்பட்டிருந்ததோடு ,மின்சாரம் துண்டிக்கப்பட்டு மற்றும் கொழும்பு அவிசாவளை வீதியும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இராணுவ முகாமிற்கு அருகில் வசித்த 7500 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். குறித்த சம்பவத்தில் இராணுவ வீரர் ஒ…

  22. கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திலுள்ள கொத்மலை மகாவெலிசாய ஜனாதிபதியால் திறந்து வைப்பு 1983 ஆம் ஆண்டு கொத்மலை நீர்தேக்கம் அமைக்கும் போது கட்டுமான பணிகள் ஆரம்பிக்கபட்டு சுமார் 33 வருடங்களுக்கு பின்னர் வேலைத்திட்டங்கள் பூர்த்தியாக்கபட்ட கொத்மலை மகாவெலிசாய விகாரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு திறந்து வைக்கபட்டது. இலங்கையில் காணப்படும் மிக உயரமான ருவன்வெலிசாய விகாரையை விட 02 அடி உயரம் குறைவானதாகும். இந்த விகாரை இலங்கையில் காணப்படும் 02 வது உயரமான விகாரையாகும். முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவரத்தன ஆட்சி காலத்தில் மாகாவலி செயற்திட்டத்தின் அமைச்சராக இருந்த காலம் சென்ற காமினி திசாநாயக்க அவர்களின் எண்ண…

  23. அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியது இந்தோனேசியா இந்தோனேசிய கடற்கரையில் தத்தளித்த 44 இலங்கை அகதிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்க, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு இந்தோனேசிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இம்மாதம் 11ஆம் திகதி இலங்கை அகதிகள் 44 பேர் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக தஞ்சம் புக முயற்சி செய்துள்ளனர். இதன்போது இவர்கள் சென்ற படகு இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இதை அவதானித்த இந்தோனேசிய கடற்படை வீரர்கள் அகதிகளின் படகை இந்தோனேசிய கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர். அகதிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், தரையிறங்க கடற்படை அனுமதியளிக்…

  24. இன அழிப்பு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க காலம் வந்துள்ளது (ஆர்.யசி) இராணுவத்தின் மீது படிந்துள்ள கரைகளை அகற்றவும், வடக்கில் இன அழிப்பு ஒன்று நடைபெறவில்லை என்பதை நிரூபிக்கவும் இப்போது காலம் வந்துள்ளது. இந்த விவகாரத்தில் காலம் தாமதிப்பது பொய்களை உண்மையாக்கிவிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா தெரிவித்தார். யுத்த குற்ற விசாரணைகளை தாமதப்படுத்துவது நாட்டுக்கு மேலும் அழுத்தமாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை தொடர்பிலான விவாதம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது. இநிலையில் இலங்கையின் செய…

  25. 3 பதில் பொலிஸ் மா அதிபர்களை கோரும் பூஜித மூன்று பதில் பொலிஸ் மா அதிபர்களை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளார் . இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே, குறித்த பதவிக்கு ஏற்கனவே 12 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 7 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை(23) இடம்பெறவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் சந்திப்பின் போது பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றார். http://www.virakesari.lk/article/7796

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.