ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
அன்று பாதுகாப்புப் படையினரால் நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி குடிமக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட போது கொக்கட்டிச்சோலை பிரதேசமே இரத்த வெள்ளத்தில் படிந்தது. காலங்கள் எத்தனை கடந்து போனாலும் பிரதேசமக்கள் இப்படுகொலை நடந்த நாளை கரிநாளாக பிரகடனம் செய்து வருடாந்தம் துக்கதினமாக அனுஸ்டித்து வருகின்றனர். இன்று கொக்கட்டிச்சோலை படுகொலையின் 26வது ஆண்டு நினைவு நாள். இறந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி படுவான்கரை பிரதேசங்களில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் விசேட பூசைகளும், மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் நினைவுக்கோபுர முன்றலில் உறவினர்களால் தீபமேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தலைமையில்…
-
- 1 reply
- 436 views
-
-
அறிவியல் நகர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீட, விவசாய பீட மாணவர்களினால் மழை மற்றும் வெயில் காலங்களில் பேரூந்திற்கு காத்திருக்கும் பொழுது பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும், வீதியின் இருமருங்கிலும் பஸ் தரிப்பிடம் அமைத்து தரும்படி கடந்த வருடம் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் பஸ் நிலையங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று முன்தினம் (10.06.2016) நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரனோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார், பல்கலைக்கழக பொறியியல், விவசாய பீட பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், கிளிநொச்சி விவசாய கல்லூர…
-
- 0 replies
- 327 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச விசாரணை என்ற தீர்மானம் பின்னர் உள்ளக விசாரணையாகி இப்போது அது கூட இல்லையென்ற நிலையாகிவிட்டது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எந்த விசாரணையையும் இலங்கை அரசு நடத்தாது என முதலிலேயே தெரிந்தும் காலத்தை விரயமாக்கும் அரசின் செயற்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடந்தையாக இருந்துள்ளது எனவும் ஆரம்பம் முதல் இறுக்கமாக இருந்திருந்தால் இந்த நிலைவந்திருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 29ந்திகதி ஐ.நாவில் புதிய கதையைச் சொல்ல இருக்கிறார். இதைக் கேட்டு அமெரிக்கா வாய்மூடி மௌனமாக இருக்கப்போகின்றதா? அல்லது பேசுமா? என…
-
- 1 reply
- 304 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் மாநாடு நாளை, இலங்கைப் பிரச்சினை சிக்கலில்! இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு ஹய்ப்ரிட் நீதிமன்றமா? உள்ளக விசாரணையா? என்ற நெருக்கடி நிலைமையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நீதிபதிகள் கொண்ட ஹய்ப்ரிட் நீதிமன்றத்தை வேண்டி பேர் கொண்ட சர்வதேச சட்டத்தரணிகள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்த் ராத் ஹுஸைனைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, இலங்கை அரசாங்கம் உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையொன்றை அமைக்குமாறு ஆணையாளர் செய்த…
-
- 0 replies
- 326 views
-
-
News Articles 2015ம் ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டு அறிக்கை – வடமாகாண சபை மேற்படி விடயம் தொடர்பாக 2015ம் ஆண்டின் வடமாகாண சபைக்கான நிதிச் செலவீனங்கள் தொடர்பான முன்னுக்கு பின் முரணான செய்திகள் பொதுமக்களிடையே வேண்டுமென்றோ அல்லது புரியாமலோ பரவவிடப்பட்டுள்ளது. அதாவது வடமாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பெருந்தொகையான பணம் செலவழிக்கப்படாது மீள அனுப்பப்பட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உண்மை நிலையை பொது மக்களுக்கு அறியத்தர வேண்டியது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்கள் தலையாய கடம…
-
- 3 replies
- 704 views
-
-
க.பொ.த உயர்தரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொறியியல் தொழிநுட்ப(ENGINEERING TECHNOLOGY) துறையில் ஏறாவூர் பற்று மீராகேணியைச் சேர்ந்தஅப்துல்லாஹ் என்ற மாணவன் மாவட்ட மட்டத்தில் ஐந்தாவது இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 224 வது இடத்தையும் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார். Index Number : 6799248 Stream : ENGINEERING TECHNOLOGY Z-Score : 1.8562 District Rank : 5 Island Rank : 224 மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்த இம்மாணவன் தான் தெரிவு செய்த பொறியியல் தொழிநுட்ப பாடப்பிரிவு ஏறாவூர் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படாத காரணத்தினால் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு சென்று குறித்த துறையினை தெரிவு செய்ததுடன் தனது கல்விக்கு தேவையான…
-
- 0 replies
- 274 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துக் கூறுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை அமெரிக்க காங்கிரஸ் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளது. அமெரிக்க காங்கிரஸின் இலங்கை சம்பந்தமான ஆர்வக் குழு நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் விசேட கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளது. இதில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நேற்றிரவு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் இலங்கை அரசு சார்பில்,…
-
- 0 replies
- 319 views
-
-
சாலாவ வெடிப்பை வீடியோ செய்தார் மஹிந்த கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அலைபேசியில் வீடியோ செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், தல்தென ஞானசார தேரர் சிகிச்சைப் பெற்றுவருகின்றார். அவரை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார் அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் சென்றிருந்தனர். தல்தென ஞானசார தேரரிடம் நலன்விசாரித்தவர்கள…
-
- 0 replies
- 243 views
-
-
சலாவ ஆயுதக் கிடங்கு அழிவு 500 கோடிக்கு மேல் இழப்பு! கொஸ்கம-சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்தினால், இராணுவத்துக்கு, 500 கோடி ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இனிமேல், அந்தப் பகுதியில் ஆயுதக் கிடங்குகள் அமைக்கப்படாது என்றும், எஞ்சியுள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள் சன அடர்த்தி குறைந்த பகுதிகளுக்கு மாற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘தேவைக்கு அதிகமாக இருந்த பெருந்தொகையான ஆட்லறி, பல்குழல் பீரங்கிக் குண்டுகள் அழிந்து போனவற்றுள் அடங்கியுள்ளன. இவை வழங்குனரிடமே திருப்பி விற்கப்படவ…
-
- 0 replies
- 281 views
-
-
ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.! ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலா ளர் காங்கிரஸ், ஸ்ரீ ரெலோ, தேசிய காங்கி ரஸ் உட்பட 12 கட்சிகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மறுசீரமைப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அனைத்து சுதந்திரக் கூட்ட…
-
- 0 replies
- 300 views
-
-
கொஸ்கம சாலாவ முகாம் வெடிப்பு சம்பவம் : புது கதை வெளியானது.! கொஸ்கம சாலாவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சீனாவுக்கு அனுப்பப்பட விருந்த வெடி பொருட்களே வெடித்துச் சிதறியுள்ளதாக சிங்கள வார இதழான ராவய, செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிக் கட்டப் போரின் போது, சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள், பயன்படுத்தப்படாமல் இருந்ததாகவும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட வெடி பொருட்களை இலங்கையில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் வசதிகள் இல்லாமையினால், கொள்வனவு செய்த நாட்டிடமே அவற்றை திரும்பவும் கையளிக்கப்படவிருந்ததாக…
-
- 0 replies
- 393 views
-
-
சாலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈட்டுத்தொகையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) வழங்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார். சேதமடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீடு நாளைய தினம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் குறித்த மதிப்பீடுகளின் அடிப்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் தற்போதுள்ள மதிப்பீட்டின்படி முழுமையாக சேதமடைந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எண்ணிக்கை 654 ஆக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மதீப்பீடுகள் நிறைவடைந்ததன் பிறகு சீதாவாக்கை பிரதேச சபைக்குட்பட்ட வீட்டு உரிமையாளர்களுடன் கலந்துரையாடி சேதமடைந்த வீடுகளுக்கு ரூபா 50,000 வீதம் மூ…
-
- 0 replies
- 463 views
-
-
யாழ். மாவட்டத்தில் கஞ்சா விற்பனையின் மத்திய இடமாக பருத்தித்துறை கற்கோவளம் புனிதநகர் காணப்படுவதாகவும் இதனைப் பொலிசார் கட்டுப்படுத்தவேண்டும் என பருத்தித்துறை சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்தனர். பருத்தித்துறை பொலிசார் நடாத்திய சிவில் பாதுகாப்புக் கூட்டம் பருத்தித்தறை பொலிஸ் நிலையித்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போதே பொதுமக்களால் மேற்படிவேண்டுகோள் பொலிசாரிடம் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாவது புனிதநகர் மீன் சந்தைக்கு அருகாமையில் தினமும் மாலை வேளையில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இரவு 9மணிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் பகுதிகளில் ஆட்டோக்களில் வருபவர்கள் கஞ்சா வாங்கிச் செல்வதாகவும் தெர…
-
- 8 replies
- 546 views
-
-
தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல் சி.சி.டி.வி. காணொளி வெளியாகியுள்ளது. குறித்த கைக்குண்டுத் தாக்குதலில் இறந்த 41 வயதுடைய பெண் தவறான காதல் உறவில் ஈடுபட எதிர்ப்புத் தெரிவித்தமையாலே, 54 வயதுடைய நபர் கைக்குண்டை வெடிக்கச் செய்துள்ளார். கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்ட நபருடன் சம்பவ இடத்தில் இருந்த மேலும் ஒரு பெண்ணும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கைக்குண்டு தாக்குதலில் தவறான காதல் உறவில் எதிர்ப்புத் தெரிவித்த பெண் மற்றும் 9 வயது சிறுமி காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையிலேயே குறித்த சி.சி.டி.வி. காணொளி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/art…
-
- 0 replies
- 289 views
-
-
கொஸ்கம இராணுவ முகாம் ஆயுத கிடங்கில் எற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்கு, இராணுவத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஆயுதக்கிடங்கு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், ‘நான் பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போது இந்த சம்பவம் நடந்திருந்தால் இராணுவத் தளபதி இராஜினாமா செய்திருப்பார் அல்லது தன்னால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பார்’ என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கே இராணுவத்தினர் மத்தியிலிருந்து பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் கேணல் தரத்தில் செயற்பட்ட கோத்தாபய …
-
- 1 reply
- 448 views
-
-
இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியுள்ளது. இதில் ஏற்கனவே தமது கண்காணிப்பகம் வெளியிட்ட கருத்தை வலியுறுத்தியே இன்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் யோசனைப்படி இலங்கை ஏற்றுக்கொண்ட விடயங்களில் காணாமல் போனோர் அலுவலகமும் அடங்குகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் இலங்கையின் அமைச்சரவை இவ்வாறான ஒரு அலுவலகம் அமைக்கப்படுவதற்கு தமது அனுமதியை வழங்கியிருந்தது. இந்தநிலையில் குறித்த அலுவலகம் நிறுவப்படுமாக இருந்தால் அது காணாமல் போனோரின் உறவினர்களின் கருத்துக்களையும் உள்வாங்கவேண்டும் என்று கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது. இதனை நிரா…
-
- 0 replies
- 283 views
-
-
புலிகளிடம் இருந்து தப்பியவர் சாகும்வரை உண்ணாவிரதம் -கனகராசா சரவணன், வசந்த சந்திரபால, வி.சுகிர்தகுமார் விடுதலை புலிகளினால் 290 பொலிஸார் கொல்லப்பட்ட திருக்கோவில் ரூபஸ்குளம் காட்டுப்பகுதியில், அந்தசம்பவத்துக்கு முகங்கொடுத்து அதிலிருந்து தப்பிவந்த பொலிஸ் சார்ஜன், தனது மனைவி பிள்ளைகள் மூவருடன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் இன்று காலை 9 மணியிலிருந்து ஈடுபட்டுள்ளார். மனோஜ் பிரியந்த சிறிவர்தன எனும் பெயர் கொண்ட இந்த அதிகாரி 1990ஆம் ஆண்டு கல்முனை பொலிஸில் சேவையாற்றியவர் ஆவார். 1990ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் திகதி புலிகள் அமைப்பினரால் கடத்தப்பட்டு கொலை…
-
- 2 replies
- 567 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் சொந்த விமான நிறுவனமான மிஹின்லங்காவை மூடிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பணியாளர்களை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்கீழ் மிஹின் லங்காவின் பல அதிகாரிகள் ஏற்கனவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். சில சிரேஸ்ட அதிகாரிகள் பணிகளில் இருந்து விலகவேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர். எனினும் இந்த நிறுவனம் மூடப்படுவதால் வேலையிழக்கும் 330 பேரின் நிலை தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. http://www.tamilwin.com/statements/01/107392
-
- 0 replies
- 369 views
-
-
காலி திக்குவளை பிரதேசத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் மதகுரு ஒருவர் 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வார நாட்களில்இந்த தேவாலயத்தில் ஆங்கில வகுப்பு நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆங்கில வகுப்புக்கு வரும் சிறுமியை தேவாலயத்தில் இருக்கும் அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று இந்த நபர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி வந்துள்ளார். சிறுமியின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த தாய், சிறுமியை மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்று சோதித்துள்ளார். இதன்போது குறித்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார். இதனையடுத்து தாய், திக்குவளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார். திக…
-
- 6 replies
- 706 views
-
-
பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டொரிஸ் இன்று காலை வலி. வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து வட மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தையும் பார்வையிட்டார். இன்னும் மீள்குடியேற்றப்படாது முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரித்தானிய தூதுவர் அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=159291&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 298 views
-
-
கழிவுநீர் குழாய் ஊடாக தொடர்மாடிக்குள் நுழைந்தவர் சிக்கினார் வெள்ளவத்தையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பின் 6ஆவது மாடிக்கு, கழிவுநீர் குழாய் ஊடாக நுழைந்து, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் 250,000 ரூபாய் பணம் ஆகியவற்றைத் திருடிய நபரைக் கைதுசெய்துள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கொஹுவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் மூன்று மாடிகளைக் கொண்ட ஆடம்பர வீடு, நவீன மின்சாரப் பொருட்கள், தளபாடங்கள் மற்றும் ஆடம்பர வான் ஆகியவற்றின் உரிமையாளர் எனவும் வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர். வீடுகள் பலவற்றில் திருடிய குற்றச்சாட்டின் பேரில் சிறைவாசம…
-
- 2 replies
- 548 views
-
-
சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ள முதலாவது, ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. வாஸ்கோவில் உள்ள கோவா கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடந்த இந்த நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன மற்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். ‘சயுரால’ என்று சிறிலங்கா கடற்படையினரால் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலை, சிறிலங்கா கடற்படையின் மரபுகளுக்கு அமைய, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவியான வசந்தா குணவர்த்தன, வைபவ ரீதியாக இயக்கி வைத்தார். இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் …
-
- 4 replies
- 362 views
-
-
இலங்கை கிழக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளும் விடுவிக்கப்படும் - ரணில் இலங்கையில் வட மாகாணத்தில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்திலும் விடுவிக்கப்படும் என பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அபிவிருத்தி தொடர்பாக உரையாற்றினார். அதன் பின்னர் மாகாண சபை உறுப்பினர்களுடன் இடம் பெற்ற சந்திப்பொன்றில் இதனை அவர் தெரிவித்திருக்கின்றார். இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்திலும் தனியார் காணிகளில் தொடர்ந்து படையினரும் போலிஸாரும் நிலை கொண்டிருப்பது பற்றி தமிழ் - முஸ்லிம் உற…
-
- 0 replies
- 327 views
-
-
தெற்கு அதிவேகப்பாதையில் போலி வாகனத்தகடுகளுடன் சொகுசு வாகனத்தை செலுத்திச்சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் டச்வூட் மரநிறுவனத்தின் பிரதானியான லங்கா கிவ்லேகெதர என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் செலுத்தி வந்த வாகனத்தையும், அதிலிருந்த 3 போலிவாகனத்தகட்டினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனடிப்படையில், பிரதமருக்கு நெருக்கமானவருடையது என அடையாளங்கண்டுக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அரசியல் நடவடிகைகளுக்காக பயன்படுத்துவதற்காகவே குறித்த போலி தகடுகளை வைத்திருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து பி…
-
- 0 replies
- 327 views
-
-
மஹிந்த ஜப்பானில்... முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று வெள்ளிக்கிழமை காலை, ஜப்பானை நோக்கி பயணமானார். அவருடன் விமல் வீரவன்ச, ரோஹித அபேகுணவர்தன, லொஹான் ரத்வத்த உள்ளிட்டவர்களும் சென்றுள்ளனர். அங்கு விகாரை ஒன்றில் இடம்பெற்ற பூஜை நிகழ்விலும் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=2172&mode=head
-
- 0 replies
- 320 views
-